Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu
En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu
En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu
Ebook238 pages1 hour

En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதை செயல்படுத்த ஆட்சியாளர்கள் தயங்கினர். அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய தலைவர்கள் பலரும் பின்வாங்கியபோது, தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தனி ஆளாக நள்ளிரவு வரை போராடி உயர்கல்வியில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்."

- பதிப்புரையிலிருந்து
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580121302371
En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu

Read more from Dr. S. Ramadoss

Related to En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu

Related ebooks

Reviews for En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu - Dr. S. Ramadoss

    http://www.pustaka.co.in

    என் கடன் பணி செய்வதே!

    (தொகுதி-1)

    சமூக நீதியும் தமிழும் என் உயிர் மூச்சு

    En Kadan Pani Seivathey!

    (Thoguthi – 1)

    Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu

    Author:

    மருத்துவர் ச. இராமதாசு

    Dr. S. Ramadoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/dr-ramadoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    அரசியல்

    1. சமூக நீதிக்குத் துக்க நாள்

    2. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு

    3. சமூக நீதிக்கு சம்மட்டி அடி!

    4. இட ஒதுக்கீட்டைக் காக்க முயற்சி

    5. சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி!

    6. நீதிபதி பணித் தேர்வுக்கு வயது வரம்பு தளர்வு!

    7. சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி!

    8. இடஒதுக்கீட்டிற்குக் கொல்லைப்புற ஆபத்து!

    9. மின் வாரியத்தைக் காக்க வேண்டும்!

    10. சாதிவாரிக் கணக்கெடுப்பு: சரித்திரத் தீர்ப்பு!

    11. வன்னியர்களுக்கு நீதி வழங்குங்கள்

    12. பெரியார் இல்லை; நாம் போராடுகிறோம்!

    13. தமிழக அரசின் கடமைகள்!

    14. மகளிர் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு!

    15. 2011 ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு

    16. இடஒதுக்கீடு வினாக்களுக்கு

    ஒரே விடை - சாதிவாரிக் கணக்கெடுப்பு!

    17. சாதிவாரிக் கணக்கெடுப்பு:

    வாய்ப்பை நழுவ விடக்கூடாது!

    18. இடஒதுக்கீட்டு ஆபத்தைத் தடுத்து நிறுத்துங்கள்!

    19. தமிழகத்தில் தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு

    20. 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து!

    21. இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்!

    22. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்!

    23. சாதிவாரிக் கணக்கெடுப்பு - பெயரளவில் இருக்கக் கூடாது!

    24. உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு தேவை!

    25. 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தீர்வு!

    26. தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும்!

    கல்வி

    27. நுழைவுத் தேர்வு - மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு!

    28. திசை திருப்பும் உயர்கல்வித்துறை அமைச்சர்

    29. மருத்துவ மாணவர்களை காக்க வேண்டும்!

    30. கடமை தவறிய காவல்துறை!

    31. மக்களை ஏமாற்ற மோசடி நாடகம்?

    32. கண்டுகொள்ளப்படாத கல்விக் கட்டணக் கொள்ளை புகார்கள்

    33. மருத்துவ மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்!

    34. தாய் மொழிக்குத் துரோகம் செய்யும் சமச்சீர்க் கல்வி

    35. சமச்சீர் கல்வியும் தமிழ்வழிக் கல்வியும்

    36. கால் கிணறு கூட தாண்டாத தமிழக அரசு

    37. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக!

    38. பொதுப்பாடத்திட்டம் கூடாது?

    39. தமிழ்வழி பொறியியல் படிப்பை விரிவுபடுத்த வேண்டும்!

    40. பொது நுழைவுத் தேர்வு கூடாது!

    41. மருத்துவ நுழைவுத் தேர்வு கூடாது!

    42. ஒன்றுபடுவோம் - வெற்றி பெறுவோம்!

    43. தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும்!

    44. சமூக நீதிக்கு வேட்டு வைக்க வேண்டாம்!

    45. சமச்சீர்க் கல்வி தொடர வேண்டும்!

    46. கட்டணக் கொள்ளையை கண்டித்துப் போராட்டம்!

    47. சமச்சீர் கல்வி: முட்டுக்கட்டை வேண்டாம்!

    48. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு!

    49. சமச்சீர்க் கல்விப் போராட்டம்!

    50. சமச்சீர்க் கல்விக் குழுவில் மாற்றம் வேண்டும்!

    51. தமிழக அரசு குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யவேண்டும்

    52. சமச்சீர்க் கல்வி மேல்முறையீடு கூடாது!

    53. சமச்சீர் பாடநூல்களை உடனே வழங்கவேண்டும்!

    54. சமூக நீதிக்கு வெற்றி!

    55. பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது!

    56. பதிவு மூப்பு முறைப்படி ஆசிரியர் தேர்வு!

    தமிழ் மொழி

    57. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்!

    58. தமிழ் வழிக்கல்வி - கட்டாயத் தேவை!

    59. தமிழில் தேவாரம் பாட அனுமதி

    60. தலையெடுக்கும் இந்தித் திணிப்பு பூதம்!

    61. தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்!

    62. அமெரிக்க உதவி துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்!

    63. தமிழைக் காக்க வேண்டும்

    64. தமிழ்ப் புத்தாண்டை மாற்றக்கூடாது

    ***

    அரசியல்

    1. சமூக நீதிக்குத் துக்க நாள்

    நாட்டில் பெருவாரியாக வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த உயர் கல்வியில், ஓரளவு வாய்ப்பு வழங்கும் வகையில் நாடாளுமன்றம் இயற்றிய 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் முடக்கி வைத்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பாட்டதுதான். ஏனெனில் சமூக நீதிக்காக எந்தவொரு சட்டத்தையும் உச்சநீதிமன்றம் உடனடியாக ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை.

    எனவே உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு வியப்பு அளிக்கவில்லை. ஆனால் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நமது நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையையும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் மாநிலங்களவையையும் கொண்டது. இந்த இரண்டு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்குத் தடைவிதித்ததோடு, இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய செயல், வாக்கு வங்கி அரசியல் என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. சனநாயகத்தின் ஒரு அங்கமான நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ள செயல்பாட்டை வாக்கு வங்கி அரசியல் என்று சனநாயகத்தின் இன்னொரு அங்கமான நீதிமன்றம் வருணித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

    எனவே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்ட இன்றைய நாள் இந்திய சனநாயகத்திற்கும், நாடாளுமன்ற சனநாயகத்திற்கும் ஒரு கருப்பு நாள். பெருவாரியாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை பொறுத்தவரையில் இது ஒரு துக்க நாள். ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு திருத்தப்பட்டே ஆக வேண்டும்.

    தில்லியல் பேரணி

    பிற்படுத்தப்பட்ட மக்களின் உள்ளக்கொதிப்பை வெளிப்படுத்தும் வகையில் மார்ச் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் பாட்டாளிமக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெரும். பேரணியில் பங்கேற்கும் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள். தலைநகர் தில்லியிலும், பா.ம.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

    (27% இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு கருத்து தெரிவித்தும், இது தொடர்பான உள்ளக் பொதிப்பபை வெளிப்படுத்தும் வகையில் பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தும் வெளியிட்ட அறிக்கை 29.3.2007)

    ***

    2. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு

    சிறுபான்மையின மக்களான இசுலாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரப் பாடுபடுவோம் என்று சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனைத் தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் சட்டப்பேரவையிலும், வெளியிலும் இந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

    இப்போது இசுலாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முடிவை முதலமைச்சர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்படியான முடிவுகள் தோழமைக் கட்சிகளுடன் கலந்தாய்வு செய்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சிறுபான்மை மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்திவரும் கட்சி என்ற முறையில் தமிழக அரசின் இந்த முடிவையும், முதலமைச்சரின் அறிவிப்பையும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

    69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக் கிடைத்ததற்குப் பின்னர் சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டப்படியான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நமது மாநிலத்திற்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது மிகமிக முக்கியம். எனவே நாட்டிலுள்ள தலைசிறந்த சட்ட வல்லுநர்களை அமர்த்தி இந்த இட ஒதுக்கீட்டு வழக்கில் வெற்றி பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதால் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி அரசுக்குத் துணையாக வாதாட இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    (தமிழ்நாட்டில் இஸ்லாமியருக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் முடிவை வரவேற்று வெளியிட்ட அறிக்கை 5.4.2007)

    ***

    3. சமூக நீதிக்கு சம்மட்டி அடி!

    இந்தியா குடியரசு ஆனதற்குப் பின்னர் 56 ஆண்டுகளாக உயர்கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அந்த வாய்ப்பினை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் புதிதாக அறிவித்திருக்கிறது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்திருக்கும் இந்தப் புதிய ஆணையால் சமூகநீதிக்குச் ‘சம்மட்டி அடி’ விழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் நடவடிக்கைத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

    சனநாயகத்தில் நாடாளுமன்றம் தான் முதன்மையானது. மற்ற அமைப்புகள் அனைத்தும் அதனைச் சார்ந்தே செயல்பட வேண்டும். இதில் நீதித்துறை விதிவிலக்காக இருக்க முடியாது. அதே போன்று சனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்; மற்ற எல்லோரும் அவர்களது ஊழியர்கள்தான். நீதிபதிகளும் இதில் அடங்குவர். மக்களுக்காக மக்களின் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. அதனை இந்த ஆண்டு செயல் படுத்தமுடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள 60 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாட்டில் பெருவாரியாக உள்ள அந்த மக்களுக்கு உயர்கல்வி உரிமையை வழங்கும் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எப்படி நிலைநிறுத்துவது என்பதில் மட்டுமே அனைவரது சிந்தனையும் இருக்க வேண்டும். குறிப்பாக அரசின் முழு கவனமும் இதில் தான் இருக்க வேண்டும்.

    ஏனெனில், இட ஒதுக்கீடு விவகாரத்தை ‘பத்தோடு பதினொன்று’ என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய விவகாரமே இதுதான். எனவே இடஒதுக்கீடு சட்டத்திற்கு வந்துள்ள ஆபத்தை எப்படிக் களைவது என்பது குறித்து அரசும், நாடாளுமன்றமும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். நாடாளுமன்னறத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் இதற்காக மட்டுமே கூட்டப்பட வேண்டும். இட ஒதுக்கீடு விவகாரத்தில் இனிமேல் எந்தவொரு நீதிமன்றத்தின் தலையீடும் இல்லாதவாறு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் 93-ம் அரசியல் சட்டத் திருத்ததை 9-ம் அட்டவணையில் சேர்த்தால் சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படலாம். ஆனால் அதற்குத் தடை ஆணை எதுவும் விதிக்க முடியாது.

    அதுவரையில் நடுவண் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கவேண்டும். இன்னும் ஓரிரு வாரங்கள் அதனை நிறுத்தி வைப்பதால் வானம் இடிந்து விழுந்துவிடாது. கடந்த 56 ஆண்டுகளாக ஏக போகமாக அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் ஏன் இன்னும் ஓரிரு வாரங்கள் காத்திருக்கக் கூடாது?

    சமூக நீதியின் தாய் வீடு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழகம் இந்த விவகாரத்தில் மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று காத்திருக்காமல் உடனடியாகச் செயல்பட

    Enjoying the preview?
    Page 1 of 1