Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dalit Ilakkiya Arasiyal…
Dalit Ilakkiya Arasiyal…
Dalit Ilakkiya Arasiyal…
Ebook197 pages1 hour

Dalit Ilakkiya Arasiyal…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மீறல்களுக்குள்ளான தலைமுறை சோகம்

தலித் இலக்கியத்தின் செயல்பாடும் அதன் வளர்ச்சியும் எதிர்பார்தது போலவே தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இன்னும் கூடுதலாய்க் கவனம் பெற்றிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சிக்கானப் பாதையில் சிவகாமி, இரவிக்குமார். புனிதப் பாண்டியன், கிறித்துதாசு காந்தி, இந்திரன், ராஜ்கவுதமன்... என ஒரு நீண்ட பட்டியலை நாம் தரமுடியும். இவர்களோடு நூற்றுக்கனாக்கான தலித் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் இப்போது தலித் இலக்கியத்தை தலித்துக்களுக்கான ஆயுதமாய்க் கையிலெடுத்திருக்கிறார்கள். தலித் ஆர்வலர்களும் தலித் ஆதரவாளர்களும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அது அவரவர்களின் வாழ்வின் இலட்சியமாக மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக ரீதியான முன்னேற்றம் மற்றும் நாட்டின் அனைத்து பொருளாதார, அரசியல் நிலைகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பதை உள்ளடக்கியதாக இத்தகைய எழுச்சிக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட மக்களுக்குச் சென்று சேர்கிறதோ இல்லையோ அது அறிவிக்கப்பட்டதும் ஓரளவேணும் பயனடைய ஒரு தலைமுறையாவது நாம் காத்திருக்க வேண்டிய நிலை இங்குவுள்ளது. மாறாக அரசு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு சலுகையை அறிவித்தவுடனே சாதி அமைப்பிலான மேல்சாதி ஆதிக்கப் பற்றுடையவர்கள் வழக்கம் போல் ‘தலித்துக்கள் சலுகைகள் பெற்று சீக்கிரம் பிற சாதியினரைவிட முன்னேறி விடுவார்கள்' எனும் வறட்டுப் புலம்பல்களை முன் வைப்பதை நாம் பார்க்க முடிகிறது.

நிகழ்வில் அது சாத்தியமா?

தலித் மக்களுக்கான அரசின் பல்வேறு சலுகைகள் முழுவதும் தலித்துக்களால் அனுபவிக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை. தலித்துக்களின் பெயரால் பலர் அரசின் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பெறுவதையும் தலித்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடுகள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த இயலாமல் திரும்பவும் மத்திய அரசிற்கே திருப்பப்படுவதையும் புள்ளி விவரங்களாக நமக்குக் கிடைக்கின்றன.

“குந்த குடிசையின்றி
கூழ்குடிக்க வழியுமின்றி
பாழுக்குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா”

எனும் தோழமை வரிகளுக்கேற்ப உண்ண உணவின்றி வாழ வழியின்றி உழலும் தலித் மக்களை குதிரை வளர்க்கவும், ஒட்டகம் வளர்க்கவும் ஊக்கம் தரும் திட்டங்கள் பல வந்து கொண்டிருப்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. பிற உயர் சாதியினர் தொடங்கி இன்று தலித் மக்கள் வரை ஊடுருவத் தொடங்கி இருக்கின்றன. பார்ப்பனியத்தைவிட தலித் பார்ப்பனியம் என்பது கொடியதும் மிகக் கொடூரமானதுமாகும். தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக் கொள்கிற நிலையை தலித் மக்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தலித்துக்களின் அறிவுப் பூர்வமான வளர்ச்சி என்பது ஒரு சிலரிடம், தலித்துக்கான விடுதலையை மையப்படுத்தாமல் சொந்த சாதிக்கு துரோகம் செய்வதோடல்லாமல் சாதியில் பிறந்ததே ஒரு தீட்டுப்பட்ட சம்பவம் போல் எண்ணத் தொடங்கியிருப்பது வெட்கப்பட வேண்டியவையாகும்.

இவற்றால் தலித்தியம் தோற்பதில்லை;
இவர்களை மட்டும் நம்பி இல்லை தலித்தியம்.

தலித்தியம் பேசுவது மார்க்சிய விஞ்ஞானத்தின் அடிப்படையைப் பேசுவதாகும். பரந்துபட்ட மக்கள் ஒன்றிணைவதை இலட்சியமாகக் கொண்டு தலித் மக்கள் ஒருங்கிணைவதும் அரசியல் பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுதலை பெறத் துடிப்பதுமாகும். இவற்றின் இலக்கிய அரசியலும் இவ்வாறாகத்தான் இருக்கும்.

இத்தகைய தலித் அரசியல் போக்கினோடேதான் தலித் இலக்கியம் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகையப் புரிதல்களோடுதான் இந்நூலின் பல கட்டுரைகள் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு தளத்திலும் வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. தலித் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மட்டுமின்றி பிற கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள் எனவும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நூலாக்கம் சிறப்புற வெளியிட உதவிய சென்னை திரு. மு. நடராஜசுந்தரம் அவர்கட்கும், தொகுப்பின் கட்டுரைகள் வெளியான இதழ்களுக்கும், சிநேகமாய் நின்று எனது படைப்பை அணுகும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் மிகுந்த குடும்ப சிரமத்திற்கிடையே எழுதவும், இயங்கவும், நூலாக்கவும் அனுமதித்த துணைவியார் அ. விசயலட்சுமி மற்றும் குழந்தைகள் அ.வி. அஜிதா பாரதி, அ.வி. சூரியதீபன், அ.வி. சாருமதி ஆகியோருக்கும் படித்துவிட்டுத் தோழமையோடுத் தொடர இருக்கும் உங்களுக்கும் நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- விழி.பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127404454
Dalit Ilakkiya Arasiyal…

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Dalit Ilakkiya Arasiyal…

Related ebooks

Reviews for Dalit Ilakkiya Arasiyal…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dalit Ilakkiya Arasiyal… - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    தலித் இலக்கிய அரசியல்...

    Dalit Ilakkiya Arasiyal…

    Author:

    விழி. பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    மீறல்களுக்குள்ளான தலைமுறை சோகம்

    1. தலித் இலக்கியம்: எனது அனுபவம்

    2. தலித் இலக்கியங்கள் முன் வைக்கும் அரசியல்

    3. தமிழ்க் கதைப் புனைவுகள் - ஒரு பார்வை

    4. தமிழ்க் கவிதைகளில் அரசியல்

    உதவிய நூல்கள் / இதழ்கள் :

    5. 'உயிர்வதைத் தடைச்சட்டம்' - யாருக்கு?

    6. தமிழ் தலித் இலக்கியம் : எதிர்பார்ப்பும் சவால்களும்

    7. பல்கலைப் பாடம் யாருக்கு?

    8. அருவருப்பும் அதற்கெதிரானப் போராட்டமும்

    9. கடைசியாய்க் காளப்பட்டி...

    10. புதுவைத் துளிப்பாக்களில் சமூக நோக்கு

    11. மும்பய் : உலக சமூக மாமன்றம் - 2004

    12. சமூக ஆய்வாய் கவிதைகள்

    13. 'நிறுவப்பட்ட எல்லாவற்றுக்கும் எதிராக...'

    14. வித்தியாசமான மொழியில் விடுதலைக் குரல்கள்!

    15. மண்ணும் மக்களும் சார்ந்த சிறுகதைகள்

    16. தேநீர் இடைவேளை

    17. அடிமையின் கலகக் குரல்?

    18. பன்முகம் கொண்ட கவிதை வானவில்

    நன்றிகள்

    பதிப்புரை

    'தலித் கலை இலக்கியம்' என்ற நூலை சென்ற ஆண்டு வெளியிட்டோம். ஊக்குவித்த வாசகர்களுக்கும், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறைக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு 'தலித் இலக்கிய அரசியல்' என்ற நூலை வெளியிட்டுள்ளோம். இந்த நூலை வெளியிட எங்களுக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் திரு.விழி.பா. இதயவேந்தன் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

    'தலித் இலக்கிய அரசியல்' என்ற இந்நூலை தமிழ்கூறும் நல்லுலகம் போற்றி வரவேற்று எழுத்தாளரை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.

    தலித் சமூக விடுதலையில்

    உயிர்நீத்த தியாகிகளுக்கும்

    தலித் அரசியலை

    இலக்கியத்தில் உயர்த்திப் பிடிக்கும் அனைத்து

    தோழர்கட்கும்.

    மீறல்களுக்குள்ளான தலைமுறை சோகம்

    தலித் இலக்கியத்தின் செயல்பாடும் அதன் வளர்ச்சியும் எதிர்பார்தது போலவே தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இன்னும் கூடுதலாய்க் கவனம் பெற்றிருக்கிறது.

    இத்தகைய வளர்ச்சிக்கானப் பாதையில் சிவகாமி, இரவிக்குமார். புனிதப் பாண்டியன், கிறித்துதாசு காந்தி, இந்திரன், ராஜ்கவுதமன்... என ஒரு நீண்ட பட்டியலை நாம் தரமுடியும். இவர்களோடு நூற்றுக்கனாக்கான தலித் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் இப்போது தலித் இலக்கியத்தை தலித்துக்களுக்கான ஆயுதமாய்க் கையிலெடுத்திருக்கிறார்கள். தலித் ஆர்வலர்களும் தலித் ஆதரவாளர்களும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

    அது அவரவர்களின் வாழ்வின் இலட்சியமாக மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக ரீதியான முன்னேற்றம் மற்றும் நாட்டின் அனைத்து பொருளாதார, அரசியல் நிலைகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பதை உள்ளடக்கியதாக இத்தகைய எழுச்சிக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

    ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட மக்களுக்குச் சென்று சேர்கிறதோ இல்லையோ அது அறிவிக்கப்பட்டதும் ஓரளவேணும் பயனடைய ஒரு தலைமுறையாவது நாம் காத்திருக்க வேண்டிய நிலை இங்குவுள்ளது. மாறாக அரசு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு சலுகையை அறிவித்தவுடனே சாதி அமைப்பிலான மேல்சாதி ஆதிக்கப் பற்றுடையவர்கள் வழக்கம் போல் ‘தலித்துக்கள் சலுகைகள் பெற்று சீக்கிரம் பிற சாதியினரைவிட முன்னேறி விடுவார்கள்' எனும் வறட்டுப் புலம்பல்களை முன் வைப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    நிகழ்வில் அது சாத்தியமா?

    தலித் மக்களுக்கான அரசின் பல்வேறு சலுகைகள் முழுவதும் தலித்துக்களால் அனுபவிக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை. தலித்துக்களின் பெயரால் பலர் அரசின் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பெறுவதையும் தலித்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடுகள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த இயலாமல் திரும்பவும் மத்திய அரசிற்கே திருப்பப்படுவதையும் புள்ளி விவரங்களாக நமக்குக் கிடைக்கின்றன.

    "குந்த குடிசையின்றி

    கூழ்குடிக்க வழியுமின்றி

    பாழுக்குழைத்தோமடா - என் தோழனே

    பசையற்றுப் போனோமடா"

    எனும் தோழமை வரிகளுக்கேற்ப உண்ண உணவின்றி வாழ வழியின்றி உழலும் தலித் மக்களை குதிரை வளர்க்கவும், ஒட்டகம் வளர்க்கவும் ஊக்கம் தரும் திட்டங்கள் பல வந்து கொண்டிருப்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.

    தலைமுறை தலைமுறையான தலித் மக்களின் சோகங்கள் வெறும் புலம்பல்களாக அல்லாமல் இப்போது மீறல்களுக்குள்ளாகி இருக்கின்றன. இலக்கியத்தில்தான் என்பதில்லை தலித் மக்களின் விழிப்புணர்விற்காய் அரசியல் தளத்திலும் இத்தகைய போக்குகள் இயல்பாய் தவித்துக்களை எழுச்சி கொள்ள வைக்கின்றன.

    சாதிப் பற்றுடைய தலித் படைப்பாளிகள் பலர் உயர் சாதியினரின் எழுத்தில் புளகாங்கிதங்கொண்டு வாழ்வெல்லாம் வசந்தமாய்ப் புகழ்பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மார்கழி மாத பஜனையைப் போல் இவர்களை அடியொற்றி பல முற்போக்கு சக்திகளும் தங்களின் சாயம் வெளுத்துப் போனது அறியாதபடி நிறங்களை இழக்கத் துணிந்துவிட்டனர். இவர்களைப் பொருத்த வரையில் இழப்பது தலித்தியம். அடையப் போகும் பொன்னுலகம் பார்ப்பனியம்!

    தலித்தியம் சாதி பேசுகிறது என்பது மேல் தட்டு மக்கள் புலம்புவதுபோல் தலித்துக்குள்ளே இப்போது புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டு கால தலித் மக்களின் கண்ணீரையும் இழிவையும் துடைக்க முன் வராமல் தமக்கான பார்ப்பனியத் தன்மையை கூசாமல் அறிவிக்கிறார்கள்.

    பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும் இல்லை. பிற உயர் சாதியினர் தொடங்கி இன்று தலித் மக்கள் வரை ஊடுருவத் தொடங்கி இருக்கின்றன. பார்ப்பனியத்தைவிட தலித் பார்ப்பனியம் என்பது கொடியதும் மிகக் கொடூரமானதுமாகும். தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக் கொள்கிற நிலையை தலித் மக்கள் ஒரு போதும் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

    தலித்துக்களின் அறிவுப் பூர்வமான வளர்ச்சி என்பது ஒரு சிலரிடம், தலித்துக்கான விடுதலையை மையப்படுத்தாமல் சொந்த சாதிக்கு துரோகம் செய்வதோடல்லாமல் சாதியில் பிறந்ததே ஒரு தீட்டுப்பட்ட சம்பவம் போல் எண்ணத் தொடங்கியிருப்பது வெட்கப்பட வேண்டியவையாகும்.

    இவற்றால் தலித்தியம் தோற்பதில்லை;

    இவர்களை மட்டும் நம்பி இல்லை தலித்தியம்.

    தலித்தியம் பிற இலக்கியத்தோடோ பிற அரசியல் நிலைப் பாட்டிலிருந்தோ வித்தியாசப்படும். குறிப்பாய் சாதிய ஒற்றுமைக்குக் குரல் கொடுக்குமேயொழிய சாதியத்தை கட்டமைக்காது. தன் சாதியை நிலை நிறுத்தாது. சாதி ஒழிப்பை இறுதியில் வலியுறுத்தும் உழைக்கும் வர்க்க அரசியல் பேசுமேயொழிய பிற வர்க்கங்களோடு சமரசம் செய்து கொள்ளாது. இதுதான் தலித் இலக்கிய அரசியலாகவும் இருக்கமுடியும்.

    அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல் மார்க்சியம் என்பதில்லை. வர்க்கப் பிண்ணனியையும் அவர்களுக்குள்ளான சுயலாபங்களையும் கண்டிப்பாய் நாம் சந்தேகத்திற்குள்ளாக்கிப் பார்க்க வேண்டும்.

    தலித்தியம் பேசுவது மார்க்சிய விஞ்ஞானத்தின் அடிப்படையைப் பேசுவதாகும். பரந்துபட்ட மக்கள் ஒன்றிணைவதை இலட்சியமாகக் கொண்டு தலித் மக்கள் ஒருங்கிணைவதும் அரசியல் பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுதலை பெறத் துடிப்பதுமாகும். இவற்றின் இலக்கிய அரசியலும் இவ்வாறாகத்தான் இருக்கும்.

    இத்தகைய தலித் அரசியல் போக்கினோடேதான் தலித் இலக்கியம் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகையப் புரிதல்களோடுதான் இந்நூலின் பல கட்டுரைகள் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு தளத்திலும் வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. தலித் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மட்டுமின்றி பிற கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள் எனவும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்நூலாக்கம் சிறப்புற வெளியிட உதவிய சென்னை திரு. மு. நடராஜசுந்தரம் அவர்கட்கும், அட்டை, அச்சு, அமைப்பில் மிகுந்த கவனத்தோடு உதவிய நண்பர்களுக்கும், தொகுப்பின் கட்டுரைகள் வெளியான இதழ்களுக்கும், சிநேகமாய் நின்று எனது படைப்பை அணுகும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் மிகுந்த குடும்ப சிரமத்திற்கிடையே எழுதவும், இயங்கவும், நூலாக்கவும் அனுமதித்த துணைவியார் அ. விசயலட்சுமி மற்றும் குழந்தைகள் அ.வி. அஜிதா பாரதி, அ.வி. சூரியதீபன், அ.வி. சாருமதி ஆகியோருக்கும் படித்துவிட்டுத் தோழமையோடுத் தொடர இருக்கும் உங்களுக்கும் நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    விழி.பா. இதயவேந்தன்

    1. தலித் இலக்கியம்: எனது அனுபவம்

    ஒவ்வொரு நாளும் எப்போது விடியும் எப்படி விடியும் என்பதே அன்றாடக் கேள்விக்குறியாக இருக்கும் எங்கள் தெரு. அன்றாடம் கடுமையாய் உழைத்து முடித்து வீடு திரும்பினால் பொண்டாட்டி பிள்ளைகள், அப்பா, அம்மா, பசியாலும் பல்வேறு நோய் நொடி பிரச்சினையாலும் அவதிப்படும் போது இருக்கிற சமூக அமைப்பையும் ஆண்டவனையும் சேர்த்து சாபம் விடுவது சாதாரண விசயம்.

    உழைப்பைச் சுரண்டிக்கொண்டு பழிவாங்கும் தொடராய் அல்லல்பட்டும், வட்டி, கந்துவட்டித் தொல்லைகளினால் காலம் முழுவதும் கஷ்டப்பட்டும் பஞ்சமோ பசியோ இதுதான் வாழ்க்கை ‘இது எனது சாபக்கேடு’ என்று குறுகிப் பார்க்கும் அறிவின் பலவீனங்கள் பல நிறைந்தவைதான் எங்கள் சனங்கள் வாழ்வு.

    வீட்டுக்கு வீடு குடிசைக்குக் குடிசை எத்தனையோ நெருக்கடிகள் பிரச்சினைகள் அவ்வப்போது வரும் போதெல்லாம் 'ஏன் தான் இந்த ஜென்மம் எடுத்தமோ, இப்படி நாயாபேயா அலையுறோம்...’ எனக் கோபத்தில் புலம்புவதை கேட்காமல் இருக்க முடியாது.

    சூரியன் கிளம்பும் முன் என் சனங்கள் உழைக்கத் தயாராகவேண்டும். தனக்கான கூலியோ சம்பளமோ எந்தத் திசையில் கிடக்கிறது என்பது பின்புதான் உறுதி செய்யப்படும். நகராட்சியில் அடிப்படைத் தொழில்கள் எங்கள் சனங்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருக்கும், மலம் அள்ளுவதும், சாய்க்கடை அள்ளுவதும், கரைப் பெருக்கி சுத்தம் செய்வதும்

    Enjoying the preview?
    Page 1 of 1