Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thai Mann
Thai Mann
Thai Mann
Ebook115 pages43 minutes

Thai Mann

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நெம்புகோல்கள் எழுக!

நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இத்தொகுப்பு வெளி வருகிறது.

தமிழ் எழுத்துலகில் வர்க்க சார்புடைய எழுத்துக்கள் பலரும் எழுதிக் கொண்டு வருகிறார்கள் என்றாலும் ஒடுக்கப்படும் தலித் சமூகத்தின் பிரதிபலிப்பாக இலங்கையில் மறைந்த தந்தை டானியல் தொடங்கி தமிழகத்தில் பூமணி, சிவகாமி, கே. ஏ. குணசேகரன், இரவிக்குமார், பாமா, இமையம், அபிமானி... என்று பலரும் எழுதி வருவதில் நம்மால் சந்தோசப்பட முடிகிறது.

இந்நூற்றாண்டின் போர்க்குரலாய் தலித்துக்கள் எழத் தொடங்கியுள்ளதை வரலாற்றில் மறைக்க முடியாத அம்சமாகிப் போய்விட்டது.

1981 பிப்ரவரியின் முதல் ஞாயிறில் விழுப்புரத்தில் துவங்கி, நான் இன்றளவும் அங்கம் வகித்து வரும் ‘நெம்பு கோல்' என்னும் மக்கள் கலை இலக்கிய அமைப்பை இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன்.

வியாபார ரீதியாகவும் உயர்ந்த வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடியதுமாக என் எழுத்து அலங்கரிக்கப்படவில்லை. உழைக்கும் வர்க்க நலன்களுக்காகவும் ஒடுக்கப் படும் வர்க்கத்தின் விடியலுக்காகவும் சேவை செய்யக் கூடியதாகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இன்னமும் எழுதுகின்றேன். அதைத்தான் எனக்கு 'நெம்புகோல்,’ கற்றுத் தந்தது.

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு முகங்களையும் முகவரிகளையும் இழந்து சமூகத்தில் சமூக நீதிக்காகப் போராடும் எங்கள் சனங்களின் குமுறலையும் எண்ணங்களையும்தான் நான் தொடர்ந்து பறைமுழக்கம் செய்கின்றேன். எனது பறைச்சத்தம் அதிகார வர்க்கத்தின் காதுகளில் எட்டும் வரை எனது பறை ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

எனது இலக்கிய முயற்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேராசிரியர் பா. கல்யாணி, பேராசிரியர் த. பழமலய் உட்பட 'நெம்பு கோல்' இயக்கத்தின் பல தோழர்களும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், கூலி உழைப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சூரிய தீபன், இந்திரன், தி.க. சிவசங்கரன், வே. சபாநாயகம், அஸ்வகோஷ், ப. திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கருத்தாலும் கரத்தாலும் உதவி செய்திருக்கிறார்கள். அவற்றிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இத்தொகுப்பு வெளிவராது எனக்கருதிய சூழ்நிலையில், வந்தே ஆகவேண்டும் என முயற்சி எடுத்துக்கொண்ட தோழர்கள் அ. மார்க்ஸ், இரவிக்குமார், பழமலய் உட்பட இத்தொகுப்பிற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் செய்த அத்துணை பேருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

நெம்புகோலாய் உங்கள் முன் நிற்கிறது என் எழுத்துக்கள். உங்கள் விமர்சனங்களால் மேலும் நிமிர்த்துங்கள்; என்னையும் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தையும்.

நீங்களும் இச்சமூகத்தின் நெம்புகோல்கள்; எழுக!

- விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127404563
Thai Mann

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Thai Mann

Related ebooks

Reviews for Thai Mann

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thai Mann - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    தாய் மண்

    Thai Mann

    Author:

    விழி பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சோறு

    கற்கள்

    தாய் மண்

    துளிர்விடும் பட்டமரம்

    உழைப்பு

    பள்ளத் தெரு

    அப்பாவின் புகைப்படம்

    இரக்கம்

    இம்சை

    அரசாங்க பிணங்கள்

    சாய்வு அல்ல, நடுவு நிலைமை

    பேராசிரியர் த. பழமலய்

    விழுப்புரம் பாவாடை இதயவேந்தன் கதைகளின் மூன்றாவது தொகுதி இது.

    இதயவேந்தன் நான்காவது, அய்ந்தாவது-என்றும் தொகுதிகள் வெளியிடக் கதைகள் இது வரை எழுதியுள்ளார். யக்கா என்னும் புதின முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

    இதயவேந்தன் இவ்வாறு தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது இவரை அறிந்த வாசகர்களுக்கும் இலக்கியத்துக்கும் உதவி.

    இலக்கியப் பயிற்சி - எழுதுவதானாலும் படிப்பதானாலும் - இவ்வாறு பிறருக்குப் பயன்படுவதோடு உரியவர்களுக்கும் பயன் தருவது.

    தேடுவது என்பதும் விசாரணை என்பதும் தன்னை மட்டுமோ தன் சூழலை மட்டுமோ கருதியது அல்ல. இரண்டையும் நோக்கியது. காரணம் ஒன்றின் இருப்பு என்பது அதனாலும் அதன் சூழலாலும் நேர்வதாக இருப்பது தான்.

    நெஞ்சுக்கு நீதியோடு ஒன்றைச் சொல்வதிலும் ஒன்றில் கலந்து கொள்வதிலும் உள்ள நேர்மையால் தான் இதயவேந்தன் தொடர்ந்து ஓர் எழுத்தாளராக இருந்து வருகிறார். அவர் எழுத்துக்கள் இலக்கியமாக இருக்கின்றன.

    இதயவேந்தனின் எழுதுகோல் சமன் செய்து சீர் தூக்கும் கோல். இந்த நடுவு நிலைமையால் தான் இன்று ஒருவர் தலித்தியராக இயங்க வேண்டியிருக்கிறது. தலித்தியம் மக்கள் பகைவர்கள் இட்டுக் கட்டுவதைப் போல ஒரு பக்கச் சாய்வானது அல்ல. மக்கள் பொதுவான நடுவு நிலைமைத் தத்துவம்.

    இதனால்தான் இவர்களும் இவர்கள் படைப்புகளும் சமுதாயத்தை எதிர்காலத்திற்குள் இயக்கும் சக்கரங்களாக இருக்கின்றன.

    ஆணைச் சக்கரங்கள் ஒன்றாகவோ சிலவாகவோ இருந்து வந்தது தான் இன்றைய மனித இருப்பின் பின்னடைவுகளுக்கு எல்லாம் காரணங்கள் ஆகும். தலித்தியம் ஒற்றைச் சக்கரத்தை மறுத்து ஒவ்வொருவரும் சக்கரங்களாக இருப்பதை உணர்த்துகிறது. ஒருவருக்குள்ள சுயமரியாதையை - தன் மதிப்பை உறுதி செய்கிறது.

    எழுத்து - இலக்கியம் - எல்லாம் வேறு எதற்கு இருக்க வேண்டும்? எதற்கு இருக்க வேண்டுமோ அதற்கு இருப்பது தான் இலக்கியம்.

    இதயவேந்தன் கதைகள் இதயம் இல்லாதவர்களுக்கு இதயம் தருகின்றன. பழுதுபட்டவற்றைச் செப்பனிடுகின்றன.

    நமக்கு இடையில் இவர் கிடைத்திருப்பதில் பெருமைப் படலாம். பயனடையலாம்.

    இம்சையாலும் உழைப்பாலும் இயற்றப்படும் மனித வாழ்வின் நியதி இரக்கமாகத்தான் இருக்க முடியும். இதுதான் பட்டமரங்களையும் துளிர்விட வைப்பது.

    பிறர் மீது இரக்கம் இல்லாதவர்கள் மெய்யில் தன் மீதும் இரக்கம் இல்லாதவர்களே. தன்னைத் தனக்கேயும் அடிமையாக்குபவர்களே. தன் விடுதலையின் மறுபக்கந்தான் பிறர் விடுதலை.

    இதயவேந்தன் தாயின் நினைவாக வாங்கிய மனையைப் போய்ப் பார்த்து வருவதும், தந்தையின் புகைப்படத்திற்காக ஒரு தேடுதல் வேட்டையையே நடத்துவதும் தனக்குப் போலவே தன் சகமனிதர்களுக்கும் அடையாளப் படுத்தக்கூடிய ஒரு விடுதலையை விழைவது தான்.

    இந்த ஆனந்த சுதந்திரம் எங்கும் எதிலும் ஒரு மக்கள் யுத்தத்தால் தான் சாத்தியப்படும் என்கிற போது தான்,

    பெருமாள் கக்கூஸ் கழுவ வைத்திருந்த 'ஆசிட்' பாட்டிலை உடைத்து இன்னொரு கையில் ஏந்துகிறான்.

    உச்ச ஸ்தாயியில் எழும் அவனது குரல் ஒரு யுகக் குரலாக ஒலிக்கிறது.

    ஓடுறா நாயே, உசிருக்குப் பயந்தவங்க நாங்கல்லடா.

    பேராசிரியர் த. பழமலய்

    *****

    நெம்புகோல்கள் எழுக!

    நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இத்தொகுப்பு வெளி வருகிறது.

    தமிழ் எழுத்துலகில் வர்க்க சார்புடைய எழுத்துக்கள் பலரும் எழுதிக் கொண்டு வருகிறார்கள் என்றாலும் ஒடுக்கப்படும் தலித் சமூகத்தின் பிரதிபலிப்பாக இலங்கையில் மறைந்த தந்தை டானியல் தொடங்கி தமிழகத்தில் பூமணி, சிவகாமி, கே. ஏ. குணசேகரன், இரவிக்குமார், பாமா, இமையம், அபிமானி... என்று பலரும் எழுதி வருவதில் நம்மால் சந்தோசப்பட முடிகிறது.

    இந்நூற்றாண்டின் போர்க்குரலாய் தலித்துக்கள் எழத் தொடங்கியுள்ளதை வரலாற்றில் மறைக்க முடியாத அம்சமாகிப் போய்விட்டது.

    1981 பிப்ரவரியின் முதல் ஞாயிறில் விழுப்புரத்தில் துவங்கி, நான் இன்றளவும் அங்கம் வகித்து வரும் ‘நெம்பு கோல்' என்னும் மக்கள் கலை இலக்கிய அமைப்பை இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன்.

    வியாபார ரீதியாகவும் உயர்ந்த வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடியதுமாக என் எழுத்து அலங்கரிக்கப்படவில்லை. உழைக்கும் வர்க்க நலன்களுக்காகவும் ஒடுக்கப் படும் வர்க்கத்தின் விடியலுக்காகவும் சேவை செய்யக் கூடியதாகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இன்னமும் எழுதுகின்றேன். அதைத்தான் எனக்கு 'நெம்புகோல்,’ கற்றுத் தந்தது.

    வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு முகங்களையும் முகவரிகளையும் இழந்து சமூகத்தில் சமூக நீதிக்காகப் போராடும் எங்கள் சனங்களின் குமுறலையும் எண்ணங்களையும்தான் நான் தொடர்ந்து பறைமுழக்கம் செய்கின்றேன். எனது பறைச்சத்தம் அதிகார வர்க்கத்தின் காதுகளில் எட்டும் வரை எனது பறை ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

    எனது இலக்கிய முயற்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேராசிரியர் பா. கல்யாணி, பேராசிரியர் த. பழமலய் உட்பட 'நெம்பு கோல்' இயக்கத்தின் பல தோழர்களும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், கூலி உழைப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சூரிய தீபன், இந்திரன், தி.க. சிவசங்கரன், வே. சபாநாயகம், அஸ்வகோஷ், ப. திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கருத்தாலும் கரத்தாலும் உதவி செய்திருக்கிறார்கள். அவற்றிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இத்தொகுப்பு வெளிவராது எனக்கருதிய சூழ்நிலையில், வந்தே ஆகவேண்டும் என முயற்சி எடுத்துக்கொண்ட தோழர்கள் அ. மார்க்ஸ், இரவிக்குமார், பழமலய் உட்பட இத்தொகுப்பிற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் செய்த அத்துணை பேருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

    நெம்புகோலாய் உங்கள் முன் நிற்கிறது என் எழுத்துக்கள். உங்கள் விமர்சனங்களால் மேலும் நிமிர்த்துங்கள்; என்னையும் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தையும்.

    நீங்களும் இச்சமூகத்தின் நெம்புகோல்கள்;

    எழுக!

    விழி. பா. இதயவேந்தன்

    Enjoying the preview?
    Page 1 of 1