Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annai Bhoomi
Annai Bhoomi
Annai Bhoomi
Ebook840 pages5 hours

Annai Bhoomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்று படைத்த 'அன்னை பூமி' அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்தாள். அந்தச் சிக்கல் அவள் அகத்தே தாங்கியுள்ள பாத்திரங்களில் கூடத் தென்படத்தானே செய்யும்? ராஜ நாராயணனை இப்போது படைத்திருந்தால் வேறு விதமாகத்தான் சித்திரிக்கத் தோன்றும். சுவர்ண குமாரிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்று கருதுவதும் இயல்பே. திருமலை ஐயங்கார் கத்தரித்துக்கொண்டு வந்த பிறகும், பார்த்தசாரதி ஐயங்கார் அவரை நாடி வருகிறாரே. ஏன்? இந்தக் கேள்வியை வேணுவிடந்தான் கேட்க வேண்டும். கதையின் சூத்திரக் கயிறாக அல்லவோ அவன் வாழ்கிறான்?

ஆம்! கட்டின வீட்டிற்குக் குறை சொல்ல நாவுக்கு என்ன பஞ்சமா? அன்னை பூமி 1945-இல் ஆரம்பித்து 1946-ல் எழுதி முடித்த நாவல்.

காலம் உள்ளத்தை மாற்றுகிறது; உலகத்தை மாறுதலடையச் செய்கிறது; உணர்ச்சிகளைச் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறுபடச் செய்கிறது; ஆனால் மனித இயல்பை மாற்றக் காலம் ஒன்றும் செய்ய முடியாது. வால்மீகி, காளிதாசன், வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், கெத்தே, டால்ஸ்டாய், டாகுர், பாரதி எல்லோரும் சித்திரித்துள்ள மனித இயல்புகளைப் பாருங்கள்! காலத்தின் தோல்வி கண்கூடாகத் தெரியும்.

'அன்னை பூமி' பத்து ஆண்டுக் காலத்தில் பசுமை மாறவில்லை. பத்து ஆண்டுக்குப் பிறகும் பசுமையோடு தான் இருக்கும்.

- பி. எம். கண்ணன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136205813
Annai Bhoomi

Read more from P.M. Kannan

Related authors

Related to Annai Bhoomi

Related ebooks

Reviews for Annai Bhoomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annai Bhoomi - P.M. Kannan

    http://www.pustaka.co.in

    அன்னை பூமி

    Annai Bhoomi

    Author:

    பி.எம். கண்ணன்

    P.M. Kannan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pm-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    இந்த நாவல்

    பத்து ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் மாதத்தில் தான் ஒரு நாள் இந்த நவீனத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்து, 'முற்றும்' போட்டேன். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாக 'ஹநுமானி'ல் வாரவாரம் தொடர்ச்சியாக எழுதி வந்த இந்த நவீனம் முற்றுப் பெற்றபோது, இதைப் புத்தகமாக வெளியிடச் சரியாகப் பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை.

    ஒரு தடவை நாவல் முழுவதையும் படித்தால் தேவலை என்று தோன்றியது எனக்கு. ஏனெனில் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த என் கருத்துக்களுக்கும், இன்றைய கருத்துக்களுக்கும் எவ்வளவோ மாறுதல் இருக்கக்கூடும் அல்லவா? அன்றியும் அக்காலத்திலே என் உள்ளத்தை முற்றுகை போட்டிருந்த 'அன்னை பூமி'யின் பாத்திரங்கள், அந்தக் கடைசி அத்தியாயத்தை முடித்து 'முற்றும்' போட்டதுமே என் உள்ளத்திற்கு விடுதலை அளித்துவிட்டு மறைந்து போய்விட்டனர். அதோடு அவர்களைப்பற்றி நான் மறந்தும் போனேன்.

    இன்று மீண்டும் அவர்களைச் சந்தித்தபோது எனக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. ஒரு முறை நவீனத்தைப் படித்து முடித்துவிட்டு யோசித்தேன். 'சிலந்தி வலை பின்னுவது போல அழகும் ஒளியும் நேர்மையும் கூர்மையுமாக இந்தக் கதையைப் பின்னியிருக்கிறேனே; எத்தனை உயிருள்ள பாத்திரங்களை அருமையாகப் படைத்திருக்கிறேன்!' என்று என்னை நானே வியந்து கொண்டேன். 'இந்தக் கதைக்கு வேணுகோபாலன் பாத்திரம் ஒன்றே போதுமே' என்று என்னையும் மீறி வாய்விட்டே சொல்லிவிட்டேன். மற்றும் திருமலை ஐயங்கார், பார்த்த சாரதி ஐயங்கார், சேஷாத்திரி ஐயங்கார், மணவாளய்யா, ராஜநாராயணன், பூமா, கல்யாணி, செல்லம்மாள், சீதாலக்ஷ்மியம்மாள் விஜயகுமாரி, சுவர்ண குமாரி, 'நானும் இருக்கிறேன் நட்ட நடுவிலே' என்று அந்தச் சிரஞ்சீவிப் பாட்டி, எத்தனை விதவிதமான குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்கள் கூடி இந்தக் கதையை உருவாக்கியிருக்கின்றனர் என்று ஆராயும் போது எனக்கே பிரமிப்பாக இருந்தது.

    மீண்டும் ஒரு முறை இதே 'அன்னை பூமி'யை நான் எழுதப் புகுந்தால் இத்தனை நன்றாக அது அமையுமா என்று ஓர் எண்ணம் தோன்றியது என் உள்ளத்திலே. இந்த எண்ணம் என்னை மறுபடியும் இந்த நூலைப் படிக்கும்படி தூண்டியது. இரண்டாவது தடவை படித்து முடித்தேன். முதல் தடவை படித்து முடித்ததும் உண்டான வியப்போ, மகிழ்ச்சியோ, பெருமையோ இப்போது ஏற்படவில்லை. கதை வாய்ப்பாகத்தான் இருக்கிறது. பாத்திரங்கள் உள்ளத்தைக் கவரத்தான் செய்கின்றனர். ஆரம்பம் முதல் முடிவு வரையில் விறுவிறுப்பாகத்தான் ஓடுகிறது கதை. கருத்துக்களும் கதையின் ஊடே பின்னிப் பிசிறிக்கொண்டு கதையோடு கதையாகச் செல்லுகின்றன. வெல்லத்தைச் சுவைப்பது போலத்தான் கதை பழக்கப் பழக்க உள்ளத்திலே இனித்துக்கொண்டே கரைகிறது. ஆனால் அந்த வெல்லத்திலே காணப்படும் துரும்பு போல ஏதோ ஒன்று. நாக்கிலே நெருடுகிறதே. அது தான் என்னவோ பண்ணுகிறது நெஞ்சை.

    நிதானமாகச் சிந்திக்கலானேன் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நவீனம். அன்று நம் நாடு விடுதலை பெறவில்லை. அன்று நாட்டிலே ஒரு சுதந்திர அரசியல் திட்டம் ஏற்படவில்லை. இன்று உள்ள அரசியல்படி வர்க்கமற்ற, ஜாதி மத பேதமற்ற சமுதாயம் வேண்டும் என்கிற கருத்து சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இன்று மாத்திரம் என்ன, அரசியல் திட்டப்படி வர்க்கமற்ற சமுதாயம், ஜாதிமத பேதமற்ற மக்கள் சமுதாயம், ஏற்பட்டுவிட்டதா என்று கேட்கலாம்

    அரசியல் காரியங்களிலும், சமுதாய வேலைகளிலும் மட்டுமே வர்க்கமற்ற சமுதாயம் என்பது சாத்தியம். குடும்ப வாழ்க்கை, தனி மனிதன் வாழ்க்கை என்று பார்க்கும்போது வகுப்பு, மதம், ஜாதி இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை நாகரிகத்தில் முன்னேறி நிற்கும் நாடுகள் கூட ஒப்புக்கொள்ளத்தான் செய்கின்றன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ரஷ்யாவிலுங்கூடக் குடும்ப வாழ்விலே இந்தத் தராதரங்கள் இன்னமும் இருந்து கொண்டு தான் வருகின்றன என்பதை அந்த நாட்டு நூல்கள் கூறுகின்றன. அமெரிக்கச் சுதந்திரச் சாசனப்படி வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் சம உரிமை வழங்கப்படுவதாகத்தான் கருத்து. ஆனால் வெள்ளையர் ஹோட்டலில் நீக்ரோக்கள் நுழைய இன்னும் அங்கே அநுமதி இல்லை. இது நடைமுறை. இப்படித்தான் 'வீட்டுக்கு வீடு வாசற்படி'.

    'அன்னை பூமி'யை இரண்டாவது தடவை படித்து முடித்தபோது, 'இது என்ன ஒரே ஐயங்கார் பட்டாளமாயிருக்கிறதே!' என்று தோன்றியது. ஐயங்கார்கள் மன்னிக்க வேண்டும்; நானும் ஓர் ஐயங்கார் தான். இந்த எண்ணந்தான் நெஞ்சிலே ஒரு துரும்பு போல நெருடியதற்குக் காரணமோ? இல்லை.

    திருமலை ஐயங்கார், பார்த்தசாரதி ஐயங்கார், சேஷாத்திரி ஐயங்கார் இப்படியாக வரும் பாத்திரங்களிலிருந்து ஐயங்கார் முத்திரையை நீக்கிவிட்டு ஐயர் முத்திரை, அல்லது முதலியார் முத்திரை, அல்லது நாயுடு, நாயக்கர், பிள்ளை, ராவ், கவுண்டர், படையாச்சி, தேவர், எதை வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு பார்க்கலாமே; எந்தப் பட்டாளமாயிருந்தாலும் பாதகமில்லை. கதையிலே இதயம் இருக்கிறதா? பாத்திரங்களிடத்திலே உயிர் இருக்கிறதா? அவர்களை எந்த வகுப்பினராகக் கொண்டாலும் அவர்களிடம் மனித உள்ளம் தென்படுகிறதா? எந்த வகுப்பிலே தோன்றியவர்களாக இருந்தாலும், அவர்கள் சுகம், துக்கம், வாழ்வு, தாழ்வு, கோபம், தாபம் ஆகியவற்றிலே நம் உள்ளம் ஈடுபாடு கொள்கிறதா? அக்கறை காண்பிக்கிறதா? அநுதாபம் அடைகிறதா என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான் என் மனம் சமாதானம் அடைந்தது.

    திருமலை ஐயங்காரும் சேஷாத்திரி ஐயங்காரும் சிண்டைப் பிடித்துக்கொண்டு சண்டை போட்டாலும் சரி, திருமலைப் பிள்ளையும் சேஷாத்திரி பிள்ளையும் அதே சண்டையைப் போட்டாலும் சரி, இருவருக்கும் ஏற்படக் கூடிய ஆத்திரமும் வேதனையும் அடிதடியும் காயங்களும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளைத்தான் நமது உள்ளத்திலே ஏற்படுத்தும் என்று தெளிந்தேன்.

    இந்தத் தெளிவிலிருந்து தான் என் உள்ளத்திலே ஓர் புதிய உண்மை பிறந்தது. இன்ன வகுப்பு, இன்ன ஜாதி என்று ஒன்றுமே குறிப்பிடாது எழுதினால் என்ன? ஆம், அப்படித்தான் எழுத வேண்டும் என்று கருதினேன். மனித வாழ்க்கையிலே உணர்ச்சி என்னும் அம்சம் எல்லா நாட்டுக்கும், எல்லா மக்களுக்கும் பொது; அது ஒரே மாதிரியானதுதான். எனவே வகுப்பைக் குறிப்பிடாது மனித இயல்புகளைச் சித்திரித்து வெற்றிகரமாகப் பாத்திரங்களைப் படைக்க முடியும் என்கிற உண்மைதான் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. எனது பிந்திய நாவல்களில் நான் பாத்திரங்களின் வகுப்புக்கோ, இனத்திற்கோ முக்கியத்துவம் தரவில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

    பத்து ஆண்டுக் காலத்தில், நம் நாடே தலைகீழாக மாறியிருக்கிறது. அன்று உள்ளத்திலே நம்மையுமறியாமல் தேங்கிப் பீடித்துக்கொண்டிருந்த அடிமை மனப்பான்மை, இன்று அறவே ஒழிந்துவிட்டது. நாடு அதி வேகமாகப் பல துறைகளிலும் முன்னேறிச் செல்கிறது. மக்களும் முன்னேற்றப் பாதையிலே குதி போட்டுச் செல்கின்றனர். இன்றைச் சிந்தனைக்கும், அன்றைச் சிந்தனைக்கும் எத்தனையோ வேறுபாடு இருக்கத்தான் இருக்கிறது.

    அன்று படைத்த 'அன்னை பூமி' அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்தாள். அந்தச் சிக்கல் அவள் அகத்தே தாங்கியுள்ள பாத்திரங்களில் கூடத் தென்படத்தானே செய்யும்? ராஜ நாராயணனை இப்போது படைத்திருந்தால் வேறு விதமாகத்தான் சித்திரிக்கத் தோன்றும். சுவர்ண குமாரிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்று கருதுவதும் இயல்பே. திருமலை ஐயங்கார் கத்தரித்துக்கொண்டு வந்த பிறகும், பார்த்தசாரதி ஐயங்கார் அவரை நாடி வருகிறாரே. ஏன்? இந்தக் கேள்வியை வேணுவிடந்தான் கேட்க வேண்டும். கதையின் சூத்திரக் கயிறாக அல்லவோ அவன் வாழ்கிறான்?

    ஆம்! கட்டின வீட்டிற்குக் குறை சொல்ல நாவுக்கு என்ன பஞ்சமா? அன்னை பூமி 1945-இல் ஆரம்பித்து 1946-ல் எழுதி முடித்த நாவல்.

    காலம் உள்ளத்தை மாற்றுகிறது; உலகத்தை மாறுதலடையச் செய்கிறது; உணர்ச்சிகளைச் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறுபடச் செய்கிறது; ஆனால் மனித இயல்பை மாற்றக் காலம் ஒன்றும் செய்ய முடியாது. வால்மீகி, காளிதாசன், வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், கெத்தே, டால்ஸ்டாய், டாகுர், பாரதி எல்லோரும் சித்திரித்துள்ள மனித இயல்புகளைப் பாருங்கள்! காலத்தின் தோல்வி கண்கூடாகத் தெரியும்.

    'அன்னை பூமி' பத்து ஆண்டுக் காலத்தில் பசுமை மாறவில்லை. பத்து ஆண்டுக்குப் பிறகும் பசுமையோடு தான் இருக்கும்.

    பி. எம். கண்ணன்

    தாம்பரம்

    28-8-56

    *****

    1

    மழை நிற்கவில்லை. ஆனால் ஆட்டம் முடிந்து விட்டது. இத்தனை நேரமாகத் துளிகூட அசையாமல் ஆசனங்களில் உட்கார்ந்து கிடந்த ஜனங்கள் ஒரே கூட்டமாக எழுந்து நெருக்கித் தள்ளிக்கொண்டு கிளம்பினார்கள். தியேட்டரின் கதவுகளெல்லாம் திறந்துகொண்டன. மழைச்சாரல் ‘சள்'ளென்று கதவுகளின் வழியாக எதிர்ப்பட்ட ஜனங்களின் மீது தெறித்தது. மேலேயிருந்து கூடல்வாய்களின் ஜலம் 'ஜோ'வென்று பேரிரைச்சலுடன் கொட்டியது. சுமார் முன்று மணி காலமாகப் படத்தைப் பார்த்துக்கொண்டு பொறுமையுடன் அமர்ந்திருந்த ஜனங்களுக்கு இன்னும் சில நிமிஷ காலம் பொறுமையாக இருக்க முடியவில்லையே! மழையோ, சாரலோ, இடியோ, மின்னலோ எதுவாயிருந்தாலும் சரி, கொட்டகையை விட்டு அவர்கள் வெளியேறிக்கொண்டுதான் இருந்தனர்.

    அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்துகொண்டே தான் அவனும் கதவருகில் வந்தான். கதவருகில் தானே ஏதோ 'அளிந்து' போகிறாப்போல ஜனங்கள் விழுந்தடித்துக்கொண்டு நெருக்குகிற வழக்கம்? கதவின் ஓரத்தில் அவனை அநேகமாக நசுக்கியே விட்டார்கள் ஜனங்கள். டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே போகும்போதுகூட எப்படியோ அவன் சட்டைக்கு அபாயம் ஏற்படவில்லை. ஆனால் இப்போது அது கிழிந்தே போய் வாலும் தோலுமாகத் தொங்கத் தொடங்கியது.

    அவன் கொட்டகையை விட்டு எப்படியோ நெருக்கித் தள்ளிக்கொண்டு ரோட்டுக்கு வந்துவிட்டான். ரோட்டில் ஒரே ஜலப்பிரளயம். குப்பையும் கூளமும் காகிதமும் கந்தலும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு மிதந்து வரும்போது, ஜலம் குழம்பிக் கொப்புளித்து நுரைத்துக்கொண்டு ரோட்டுப் புழுதியைக் கரைத்தபடி விரையும் காட்சி பார்ப்பதற்கு மகா கோரமாக இருந்தது. ஜலம் அவன் முழங்கால் வரையில் வந்து விட்டது. எதிரே டிராம் 'லயன்' எங்கிருக்கிறதென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ரோட்டு விளக்குகள் கூட இல்லாதபடியால் ஒரே கும்மிருட்டாயிருந்தது. அவ்வப்போது பளிச்சிட்ட மின்னலின் ஒளிதான் மழைத்தாரைகளின் கோர நர்த்தனத்தையும், வெள்ளம் புரளும் வேகத்தையும், ரோட்டின் இரு மருங்கிலும் இருந்த வீடுகள் மழையில் மங்கள ஸ்நானம் செய்வதையும், கலைந்து செல்லும் ஜனக்கூட்டத்தையும் கண்ணுக்குத் தெரியும்படி செய்தது.

    அவன் வேஷ்டியை மடித்து முழங்காலுக்கு மேல் கட்டிக் கொண்டு மழையில் நனைந்தபடியே டிராமுக்குக் காத்திருக்கும் கூட்டத்தோடு கூட்டமாகத் தியேட்டருக்குச் சற்றே தள்ளி ரோட்டில் நின்றுகொண்டிருந்தான். 'இப்படி மழை பெய்கிறதே. கரன்ட் பெயிலாய் விட்டால் என்ன பண்ணுவது? டிராம் வருமோ வராதோ?' என்றெல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வது அவன் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. உள்ளூர அவனுக்கும் கொஞ்சம் பயம்தான். 'இந்த இருட்டிலே மழையில் நனைந்து கொண்டு எத்தனை தூரம் போய்த் தொலைய வேண்டும்?' என்று நினைத்தபோது அவனுக்கே மனத்தில் ஆயாசம் உண்டாயிற்று. 'என்ன படம் வேண்டியிருக்கிறது? அப்படிப் பிரமாதப் படம்...? உம்... வேண்டும் இப்பேர்ப்பட்ட படத்தைப் பார்த்ததற்கு இந்தத் தண்டனை வேண்டியதுதான். மழை நன்றாக வெளுத்துக் கட்டுகிறது' என்று உடனடியாகவே ஓர் எண்ணமும் தோன்றியது அவனுக்கு. ஆனால் அதே சமயத்தில் அடுத்த ஆட்டத்திற்காகத் தியேட்டர் வாசலில் மழையையும் பொருட்படுத்தாது கூடியிருந்த ஜனங்களின் மீது அவன் பார்வை சென்றது. வானத்தில் வெட்டி மடிந்த ஒரு மின்னல் அந்த ஜனத்திரளை அவனுக்குப் பளிச்சென்று காண்பித்தது. 'உம். வாரக்கணக்கில் ஓடுகிறது இந்தப் படம். என்ன தான் இருக்கிறதோ இதில்!' என்று தனக்குள்ளாகவே நகைத்துக்கொண்டான், அவன். அந்தச் சமயத்தில் மழை இரைச்சலையும் அடக்கக்கூடிய தொனியில் பயங்கரமாக மணியடித்துக்கொண்டு எங்கிருந்தோ ஒரு டிராம், ரோட்டின் மத்தியில் வரும் சப்தம் கேட்டது. சாதாரணமாகவே டிராமில் கூட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது மழை வேறு. டிராம் வந்து தியேட்டருக்கு அருகில் நின்றது. அதில் ஏறுவதற்கோ இறங்குவதற்கோ இடம் எங்கே இருக்கிறது? இருந்தாலும் இறங்குகிற ஜனங்கள் இறங்கிக்கொண்டு தான் இருந்தனர். ஏறும் ஜனங்கள் விழுந்தடித்துக்கொண்டு ஏறத்தான் ஏறினர்.

    அவனும் டிராமில் தொத்திக்கொண்டான். முழங்கையால் இடித்து வழி பண்ணிக்கொண்டே உள்ளேயும் சென்று விட்டான். மேலேயிருந்த வளையத்தைப் பிடித்துக்கொண்டு நாலு பேரைப் போல அவனும் தொங்கினான். டிராமிலிருந்து இறங்கின ஜனங்களை விட டிராமுக்குள் ஏறின ஜனங்கள் அதிகம் என்று சொல்ல வேண்டியதில்லை. சினிமா பார்த்துவிட்டு வரும் கூட்டமல்லவா? உள்ளே நெருக்கம் அதிகரித்தது. இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடமில்லை. ஒரு காலை ஊன்றி மற்றொரு காலே இல்லை போன்ற உணர்ச்சியை உண்டு பண்ணிக்கொண்டு தொங்குவது தவிர வேறு வழியே இல்லை. அப்படித்தான் அவனும் நின்றுகொண்டிருந்தான். டிராம் கிளம்பியது. எங்கே கரென்ட் நின்றுவிட்டால் முதலுக்கே மோசமாய்ப் போகுமோ, நடுத்தெரு நாராயணா என்று நிற்கும்படியாகிவிடுமோ என்று பயந்ததுபோல் டிராம் வண்டி ஓடு ஓடென்று ஓடியது. இருந்தாலும் மண்ணடியைத் தாண்டிச் சிறிது தூரம் வரையில்தான் அந்த ஓட்டமெல்லாம்.

    திடீரென்று வண்டிக்குள் கும்மிருட்டுச் சூழ்ந்தது. எலெக்டிரிக் விளக்குகள் எல்லாம் அணைந்துவிட்டன. தலைகால் தெரியாமல் ஓடிய டிராம் வண்டி 'தட்'டென்று நின்றது. நெருக்கிக்கொண்டு நின்ற ஜனக்கூட்டம் மரம் வெட்டிச் சாய்வது போல விழத்தானே வேண்டும்? ஆனால் ஜனங்கள் பின்னுக்கோ முன்னுக்கோ சாய்ந்து விழவில்லை. விழுவதற்கு இடம் எங்கே இருக்கிறது? அவர்கள் அப்படியே கொஞ்சம் அசைந்துமசைந்து சமாளித்துக்கொண்டனர். சில தலைகள் முட்டிக் கொண்டன; சில தோள்கள் தொட்டுக்கொண்டன; சில உடல்கள் உராய்ந்துகொண்டன; எல்லாம் அகஸ்மாத்தாய். அவன் சரீரமும் பின்னாலிருந்த வேறொரு ஆத்மாவின் சரீரத்துடன் மோதியது, தற்செயலாய். ஆனால் அவன் உடல் ஏன் அப்படிக் குலுங்கவேண்டும்?

    சுற்றிலும் ஒரே இருட்டு என்கிற பிரக்ஞைகூட இல்லை அவனுக்கு. சட்டென்று அவன் தலை பின்பக்கமாகத் திரும்பியது. கண்கள் இருட்டைத் துருவிக்கொண்டு பார்த்தன. தன் சரீரத்தினால் மோதுண்டு நெளியும் மற்றொரு சரீரத்தை அவன் கண் காணாவிட்டாலும், மனம் கண்டு கொண்டது. ஆம்; பின்னால் நின்று கொண்டிருப்பது ஒரு பெண்தான்.

    அவனுக்கு ஒருவிதக் கூச்சம் ஏற்பட்டது. எனினும் சமாளித்துக்கொண்டு பின்னால் நின்ற அந்த ஜீவனைப் பார்த்து, 'மன்னிக்கவேண்டும்' என்கிற வார்த்தைகளை அவன் வெகு சிரமத்துடன் சொல்லி முடித்தான். அந்த ஜீவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவன் சொன்ன வார்த்தை அதன் காதில் விழுந்ததோ இல்லையோ; அவன் பக்கம் அந்த ஜீவன் திரும்பிப் பார்த்ததா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை அந்த இருட்டில்.

    டிராம் நடுவழியில் நின்று போகவே இப்போது அதன் சப்தம் கேட்கவில்லை. வெளியே மழை இரைச்சல் தான் அதிகமாகக் கேட்டது. சிறிது நேரம் நின்றவர் நின்றபடி, உட்கார்ந்தவர் உட்கார்ந்தபடி, டிராமும் நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்தது. மழையின் ஆர்ப்பாட்டம் அதிகரித்து வந்ததேயொழியக் குறைவதாகக் காணவில்லை. 'இடியும் புடையுமாக' மேன்மேலும் வந்துகொண்டிருந்த மழை சீக்கிரத்தில் நிற்கும் என்கிற நம்பிக்கை கூடப் போய்விட்டது ஜனங்களுக்கு. அவர்களும் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு மழையோ காற்றோ வீடுபோய்ச் சேரவேண்டுமென்கிற நினைப்பினால் ஒவ்வொருவராக வண்டியை விட்டு இறங்கிப் போகத் தொடங்கினார்கள். வண்டியின் 'புட் போர்டை' முழுகடித்துக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வண்டியின் சக்கரங்களும் அடிப்பாகத்திலுள்ள யந்திரக் கருவிகளும் தண்ணீருக்குள் நிம்மதியாய்த் தூங்கலாயின. பின்னும் சிறிது நேரத்தில் டிராம் கண்டக்டரும் டிரைவரும் கரென்ட் வந்தால் கூட வண்டியை மறுபடியும் ஓட்ட வெகுநேரம் பிடிக்கும் என்று பிரகடனம் செய்துவிட்டார்கள்.

    இதன் பிறகு கேட்க வேண்டுமா? வண்டியில் 'எவாகுவேஷன்' தீவிரமாக ஆரம்பமாகிவிட்டது. ஜனங்கள் கலையவே அவனுக்கும் கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தது. ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல நின்று கொண்டிருந்ததால் கால் வலியெடுத்ததோ என்னவோ? எதிரே இருந்த ஆசனத்தில் உட்கார்ந்தான் அவன். ஆனால் அக்கம் பக்கத்திலிருந்த ஜனங்கள் அநேகமாக வெளியேறிவிட்டதை உணர்ந்தபோது அவனுக்கும் இருப்புக்கொள்ளவில்லை. ஜனங்கள் இன்னும் இறங்கிக்கொண்டுதான் இருந்தனர். அவனும் ஆசனத்தை விட்டு எழுந்து வெளியேறலானான். டிராம் 'புட்போர்டில்’ அவனுக்கு முன்னால் அந்த ஜீவன் இறங்கிக்கொண்டிருந்தது. மின்னல் வெளிச்சத்தில் அவன் கண்கள் அதன் உருவத்தைக் கவனித்தன. ஒரே தெப்பமாய் நனைந்துபோன புடைவை உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டிருந்தது. தலைப்பின்னலும் புஷ்பமும் அவள் ஒரு யுவதி என்பதைத் தெரிவித்தன. அவள் முகம் தெரியவில்லை. எனினும் அவளது பின்புறச் சாயலில் ஒரு வித லாவண்யம் இருந்ததை அவன் கண்கள் அவனையும் அறியாமல் உணர்ந்துகொண்டன.

    அவள் இறங்கிய பின் அவனும் கீழே இறங்கினான். தியேட்டர் எதிரே இருந்ததை விட இங்கே ஜலம் அதிகம். ஜலம் வரும் திக்குக்கு எதிர்த் திக்கில்தான் இறங்கினவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். அந்தத் திசையில்தான் டிராமும் சற்று முன் போய்க்கொண்டிருந்தது. அவனும் புறப்பட்டான். அப்போது எதிரே அந்த ஜீவனின் குரல் கேட்டது. அம்மா, கையைப் பிடித்துக்கொள். இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை.

    அவன் பிரமிப்புடன் உற்று நோக்கினான். இருட்டில் சிறிது நேரம் கண்கள் தம் பார்வையைச் செலுத்திப் பழக்கப்பட்டுப் போய்விட்டதால், இப்போது அவனுக்கு முன்னே போய்க்கொண்டிருப்பவர்களின் வடிவம் நன்றாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்திரீ நடந்து செல்வதை, அப்போதுதான் கவனித்தான் அவன். அதற்குமுன் அந்தப் பெண்ணுக்குப் பின்னால் டிராமில் நின்றுகொண்டிருந்த அவள் தாயை அவன் பார்க்கவில்லை. அவள் டிராமை விட்டு இறங்கிய போதும் பார்க்கவில்லை. அதையெல்லாம் பற்றி அவன் மனத்திலும் எவ்விதமான சிந்தனையும் ஏற்படவில்லை. டிராம் வண்டி திடீரென்று நின்ற அதிர்ச்சியில் அந்தப் பெண்ணின் மீது மோதிக்கொள்ளும்படி நேரிட்டதே, அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்புகூட அவன் அவளைப்பற்றி நினைத்ததாகக் கருத முடியாது. அதுவரையில் அவன் மனத்தில் மழையைப் பற்றியும், சற்று முன் பார்த்த படத்தைப் பற்றியும் வேறு ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றியுந்தான் எண்ணங்கள் குழம்பிக்கொண்டிருந்தன.

    அவள் வண்டியை விட்டு இறங்கியபோது மின்னல் வெளிச்சத்தில் அவளைப் பார்க்க நேரிட்டபின் கூட அவளைப்பற்றி அவன் மனத்தில் ஏதாவது சிந்தனை ஏற்பட்டிருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது அவள் தாயுடன் அவளைப் பார்த்த பிறகுதான் முதல் முதலாக அவன் அவளைப்பற்றி அவர்களைப்பற்றி - நினைக்கத் தொடங்கினான்.

    அப்போது பின்னாலிருந்து கேட்ட குரல் அவன் கால்களை முன்னேறவொட்டாமல் தடை செய்தது. எல்லோரும் முன்னே போய்விட்டார்கள். பின்னால் யாரையுமே காணோம். ஒரே இருட்டும் மழையும்... நடக்கக்கூட முடியவில்லை. எங்கேயும் ஒரு ரிக்ஷாவைக்கூடக் காணோமே; எப்படியம்மா போய்ச் சேருவது? என்று பேசிய ஒரு குரல் தான் அவனை அப்படியே நிற்கச் செய்தது.

    இன்றைக்கு நாம் வந்தேயிருக்கக் கூடாது என்று மற்றொரு குரல் பதிலளித்தது.

    மழை இப்படிப் பிடித்துக்கொள்ளும் என்று தெரியுமா என்ன? என்றது இளங் குரல்.

    அவர்கள் இருவரும் தனிமையாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள் என்பது நொடிப்பொழுதில் தெரிந்துவிட்டது அவனுக்கு. அவர்களுக்குத் தைரியம் சொல்லி, அவர்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டுபோய் விடலாமா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் ஏதோ ஒருவித உணர்ச்சி அவனைப் பேசவொட்டாமல் தடை செய்தது. ஒரு சமயம் தானாக ஏதாவது அவர்களிடம் பேசப்போனால் அவர்கள் தவறாக நினைத்துக்கொண்டு பயப்படப்போகிறார்களே என்று நினைத்தானோ என்னவோ? எதற்கும் நடையைக் கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு முன்னாலேயே போனால் நல்லது. அவர்களும், 'முன்னால் மனிதர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்' என்று நிம்மதியாய் வருவார்கள் என்று எண்ணிக்கொண்டே நடந்தான்.

    என்ன இருந்தாலும் புருஷன் நடை. பெண்களுடன் நிதானமாக நடக்க முடியுமா? சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் எங்கேயோ வந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது அவனுக்கு. அவர்களுக்கு முன்னால் இரண்டு மூன்று பேர்வழிகள் அவர்களைக் கடந்து வந்துகொண்டிருந்தனர். ' இந்த மளையிருட்டிலே பொம்பிளைங்களுக்கு என்னையா சினிமா பாக்க வேண்டியிருக்கு... வரவர இந்தப் பொம்பிளைங்க தனியாப் போகவும் வரவும் துணிஞ்சுட்டாங்கையா.' இந்தமாதிரிப் போக்கில் சில வார்த்தைகள் - கொஞ்சம் விரஸமாகக்கூட - அவன் காதில் விழுந்தன.

    இந்தப் பேர்வழிகள் அந்த ஸ்திரீகளைக் குறித்துத்தான் இப்படிப் பேசிக்கொண்டு போகிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்துகொண்டான் அவன். 'சீ, நம் ஸ்திரீகளைப் பற்றி எத்தனை கேவலமாக இந்தச் சோம்பேறிகள் பேசுகிறார்கள் இவர்களுக்கெல்லாம் புத்தி என்பதே கிடையாது' என்று மனத்துக்குள்ளேயே வெறுத்துக்கொண்டு அதற்குமேல் நடக்காமல் நின்றான்.

    அந்த ஆசாமிகள் அவனைக் கடந்து முன்னே சென்று விட்டார்கள். சிறிது நேரத்தில் அந்த ஸ்திரீகளும் அவன் அருகில் வந்தார்கள். அவர்களிடம் இப்போதாவது பேச்சுக் கொடுத்து அவர்கள் போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொள்வோம் என்று எண்ணினான் அவன். ஆனால் தொண்டையிலிருந்து வார்த்தை கிளம்பவில்லை. சாதாரணமாகப் பெண்களுடன் கலகலவென்று பேசி அரட்டையடித்துப் பழக்கப்பட்டவர்களானால் சிரமமில்லை. அவனுக்கு அந்தக் காரியம் கஷ்டமாகவே இருந்தது. அவர்கள் தனக்குப் பின்னால் நெருங்கி வரும் வரையில் நின்றிருந்தவன், அவர்களுக்கு முன் மறுபடியும் மெல்ல நடக்கத் தொடங்கினான். கொஞ்சதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தபோது அவர்கள் எங்கேயோ பின் தங்கிவிட்டது தெரிந்தது. அப்படியே நின்றான் அவன்.

    அவர்கள் டிராமை விட்டு இறங்கி இப்போது வெகுதூரம் வந்துவிட்டார்கள். எதிரே சிறிது தூரத்தில் பிராட்வே மூலை தெரிந்தது. திறந்திருந்த இரண்டொரு கடைகளின் விளக்கு வெளிச்சம் ரோட்டுத் தண்ணீரில் பளபளவென்று மின்னியது. அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஸ்திரீகளை அவன் கண்கள் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கத் தூண்டின. அவர்கள் ரோட்டில் ஓரமாக நடந்து வருவதைப் பார்த்து அவன் திடுக்கிட்டான். அப்போது அவர்கள் ஏறக்குறைய பிராட்வே திருப்பத்திற்கு வந்துவிட்டார்கள். அம்மா, கொஞ்சம் ரோட்டு மத்தியிலே நடந்து வாருங்கள். ஓரத்தில் சாக்கடைக்குப் போட்டிருக்கும் கம்பி மூடிகளே இருப்பதில்லை. இந்த வெள்ளத்தில் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாது என்று பதைப்புடன் பேசினான் அவன் அவர்களைப் பார்த்து.

    அவர்கள் அவனை விளக்கு வெளிச்சத்தில் ஏறெடுத்துப் பார்த்தனர். ரோட்டு மத்திக்கு வந்து நடந்துகொண்டே, அவனை நன்றியுடன் பார்த்தார்கள் இருவரும். அம்மா, நீங்கள் எங்கே போகவேண்டும்? என்று துணிந்து கேட்டு விட்டான் அவனும்.

    மாம்பலத்துக்குப் போகவேணும். இனிமேல் பஸ் கிடைக்குமோ கிடைக்காதோ? ரெயிலில்தான் போகவேணும். கோட்டை ஸ்டேஷன் வரைக்கும் ஒரு ரிக்ஷாவாவது கிடைத்தால் தேவலை என்று பார்த்தால் இந்தக் கொட்டுகிற மழையிலே ஒரு வண்டியா, காடியா ஒன்றையும் காணோம் என்றாள் வயதில் மூத்தவளாகத் தென்பட்ட அம்மாள்.

    மாம்பலத்துக்கா போகவேண்டும்? நானும் அங்கேதான் போகிறேன். இந்த மழையிலே எங்கே வண்டி கிடைக்கப் போகிறது? கிடைத்தாலும் எட்டணா பத்தணா என்று வாய் கூசாமல் கேட்பான். இவ்வளவு தூரம் வந்து விட்டோம். இன்னும் கொஞ்ச தூரந்தான். நானும் ஸ்டேஷனுக்குத்தான் போகிறேன். பஸ் இனிமேல் கிடைக்காது. உங்களுக்குச் சம்மதமானால் உங்களைச் சௌக்கியமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன். நல்ல வேளையாக மழையும் குறைந்து விட்டது என்று படபடவென்று பேசினான் அவன்.

    இந்தச் சினிமாவுக்கு வர எனக்குத் துளிகூட இஷ்டமில்லை. ‘எல்லோரும் ரொம்ப நல்ல படம் என்கிறார்கள். கட்டாயம் பார்த்தாகவேண்டும்’ என்று இந்தப் பெண்தான் பிடிவாதம் பிடித்தது என்று பேசிக்கொண்டே நடந்தாள் அந்த ஸ்திரீ தன் மகளுடன்.

    படத்துக்கென்ன? நன்றாய்த்தானே இருந்தது? இப்படி மழை வரும் என்று கண்டோமா என்ன? என்று தன் பக்கம் தவறு ஏதும் இல்லை என்று நிரூபணம் செய்யும் தோரணையில் வெட்டிப் பேசினாள் யுவதி.

    நீங்கள் மாம்பலத்திலே எங்கே இருப்பது? புது மாம்பலமா? என்று கேட்டாள் பெரியவள்.

    ஆமாம். புது மாம்பலம், தியாகராய நகரில்தான். நீங்கள்?

    பழைய் மாம்பலம், பரோடா தெருவில் இருக்கிறோம்... உம்... ஆமாம்... உங்களைப் பார்க்கிறபோது எங்கள் ஊரிலே ஒரு பிள்ளையாண்டான் ஞாபகம் வருகிறது என்று வார்த்தையைத் தொடர்ந்து பேசிக்கொண்டே நடந்தாள் பெரியவள்.

    அவனுக்கு இந்த மாதிரியான பெண்டுகள் பேச்சென்றாலே பிடிக்காது. வெறும் வெட்டிப்பேச்சு என்று கருதுகிறவன் அவன், இதையெல்லாம். எனவே அவனுக்கு வார்த்தையை வளர்த்துக்கொண்டு போக விருப்பமில்லை. உங்கள் ஊர் எது? என்றான் சற்றே அசிரத்தையாக.

    தேவனூர்.

    தேவனூரா? அங்கே யார் வீடு? என்று திடுக்கிட்டவன் போல் கேட்டான் அவன்.

    இப்போ அப்படிப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லை. ஏன்? உங்களுக்கு அந்த ஊரில் யாராவது மனுஷ்யாள் இருக்கிறார்களோ...? என்று கேட்டாள் அந்த ஸ்திரீ.

    உம்... அங்கே யாரும்... எனக்கு... மனுஷ்யாள் இல்லை. என் சிநேகிதன் ஒருவன் அந்த ஊர்க்காரன். அதனால் தான் கேட்டேன் என்று சிறிது தடுமாற்றத்துடன் ஆரம்பித்த பதிலை பச்சைப் புளுகு ஒன்றைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டு முடித்தான் அவன்.

    அந்த ஊரிலே பத்மநாப ஐயங்கார் என்று ஒருத்தர் இருந்தார்... உம்... இப்போ... இல்லை. அவர் வீடு என்று சொல்வார்கள் என்னை... என்று வருத்தம் ததும்பும் குரலில் வெகு சிரமத்துடன் பேசினாள் அவள்.

    அவன் பின்னும் திடுக்கிட்டுப் போனான், அவள் பேச்சைக் கேட்டு. அந்த இரண்டு ஸ்திரீகளையும் மற்றொரு முறை கூர்ந்து கவனித்தான். சரியாக முகங்கள் தெரியவில்லையெனினும் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆம். அந்தப் பூமாவா இவள்? எப்படி வளர்ந்துவிட்டாள்? பாவம் இந்த அம்மாள்... ஊரின் பெயரைக்கூடச் சொல்லிக்கொள்ள முடியாத கஷ்டம் வரவேண்டுமா இவளுக்கு! என்று எண்ணியபோது. அவன் உள்ளம் உருகியது. அந்த இருவரையும் எதிர்பாராத விதத்தில் அன்று சந்திக்க நேரிட்டதைப் பற்றி அவன் அடைந்த ஆச்சரியம் சொல்லத்தரமன்று. தான் இன்னான் என்பதை அவர்களுக்குச் சொல்லிவிடலாமா என்று மனம் பதைப்புற்றது. ஆனால் மனத்தை அடக்கிக்கொண்டு நடந்தான் அவன்.

    அவர்கள் கோட்டை ஸ்டேஷனையடைந்ததும் அவனே அவர்களுக்கும் சேர்த்து டிக்கட்டுகளை வாங்கிவிட்டான். அந்தப் பெரிய ஸ்திரீ எவ்வளவு தடுத்தும் அவன் கேட்கவில்லை. ரெயிலும் சீக்கிரத்தில் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் பத்திரிகை விற்கும் பையனிடம் ஒரு பத்திரிகையை வாங்கிக்கொண்டு அவன் அவர்களுடன் ரெயிலில் ஏறி உட்கார்ந்தான். ரெயிலுக்குள் விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் இருவரையும் அவன் ஒரு தரம் நன்றாகப் பார்த்துக்கொண்டான். அந்த ஸ்திரீ மறுபடியும் பேச்சுக்கொடுக்கப் போகிறாளே என்கிற எண்ணத்தினாலோ அல்லது தன் முகத்தை அவர்களுக்குக் காட்டக்கூடாது என்கிற நினைப்பினாலோ பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு எதிராகப் பிடித்து மறைத்துக்கொண்டான்.

    எனினும் அவள் சும்மா இல்லை. விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் அவளுக்கு, அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் இருப்பது போலவே தோன்றியது. உங்களைப் போலவேதான் இருப்பான் எங்களூர்த் திருமலை ஐயங்கார் பிள்ளை கூட. உங்களைப் பார்த்தால் அவனைப் பார்க்க வேண்டாம். அந்த நாளிலே...

    அதற்குமேல் பேச முடியாமல் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. புடைவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு ஜன்னலுக்கப்பால் திரும்பிப் பார்வையைச் செலுத்தலானாள் அவள். அவள் குமாரி வாய் திறக்கவில்லை. பொம்மை போல அசையாமல் உட்கார்ந்திருந்தாள் எனினும் அவ்வப்போது அவள் கண்கள் தன்னைக் கவனிப்பதை உணர்ந்தான் அவன்.

    ரெயில் போகும்போது அவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவன் பத்திரிகை படிப்பதில் ஈடுபட்டிருப்பவன் போலத் தென்பட்டான். ஆனால் அவன் மனம் எங்கெங்கேயோ அலைந்து என்ன என்னவோ எண்ணங்களில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தது.

    மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்கினார்கள். மாடிப் படிக்கட்டு ஏறிப் பாதிவழி போகும் வரையில் அவர்கள் சேர்ந்தாற்போலவே நடந்து சென்றார்கள். அவன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு, புது மாம்பலம் பக்கம் போகும் வழியாகத் திரும்பும்போது அந்த ஸ்திரீ, உங்களைப் பகவான் தான் சமயத்தில் ஒத்தாசையாக அனுப்பினார். எங்கேயாவது நன்றாயிருக்க வேணும் என்று சொல்லிவிட்டு விடைபெற்றுப் பிரிந்தாள். அவள் பெண் ஒரு சிறு புன்னகையின் மூலம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு திரும்பினாள்.

    மாடிப் படியிறங்கி யோசனைக் கடலில் ஆழ்ந்தபடியே நடந்தான் அவன்.

    வீட்டை அடைந்து தான் வசிக்கும் அறைக்குப்போய் எலெக்டிரிக் விளக்கை ஏற்றிவிட்டு, அவன் தனது ஈரவேஷ்டி, சட்டை முதலியவற்றைக் களைந்த வண்ணம் அறையின் ஒரு பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியில், 'உஸ் அப்பாடா!' என்று களைப்புடன் சாய்ந்துகொண்டான். சற்றுத் தள்ளியிருந்த மேஜைமேல் நெட்டுக் குத்தலாக நிறுத்தியிருந்த ஒரு கடித உறை அவன் கண்ணில் பட்டது. ஆம்! அன்று காலையில் அவன் தகப்பனாரிடமிருந்து அவன் பேருக்கு வந்த கடிதம் தான் அது! அதுதானே அவனைச் சினிமாக் கொட்டகை வரையிலும் விரட்டி விட்டது என்றைக்கும் இல்லாமல்! அந்தக் கடித உறையின் மேலிருந்த பெயரை அவன் மனத்துக்குள்ளாகவே, 'ராஜநாராயணன்' என்று ஒரு தரம் படித்துக்கொண்டான்.

    *****

    2

    அந்தக் கடிதம் வந்தது முதல் தான் எத்தனை அலைச்சல் அவனுக்கு. அதைக் கையில் வாங்கி ஒரு தரம் படித்தான். இரண்டு தரம் படித்தான். மூன்று தரமும் படித்தான். பிறகு அப்படியே மேஜைமேலிருந்த ஒரு புஸ்தகத்தின் மீது வைத்தான். நாற்காலியில் தொப்பென்று உட்கார்ந்து உன்மத்தம் பிடித்தவன் போல் நெடுநேரம் இருந்துவிட்டான்.

    ராஜநாராயணன் அன்று காலேஜுக்குக்கூடப் போகவில்லை. சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போகவில்லை. நாற்காலியை விட்டு எழுந்து அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பி நேராகப் பஸ் நிற்குமிடம் போனான். டவுனுக்குப் போகும் பஸ் ஒன்றில் ஏறிக்கொண்டான். டவுனிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போகவில்லை அவன். ஏதாவது காரியம் இருந்தால்தானே? மனம் போனபடி, கால் போனபடி நடந்துகொண்டே இருந்தான். கால் வலி எடுத்தபோதுதான் வயிற்றிலும் ஏதோ கிள்ளுவதுபோல் இருந்தது அவனுக்கு. பக்கத்திலிருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்று கொஞ்சம் டிபனும் காபியும் சாப்பிட்டு விட்டு மறுபடியும் கிளம்பினான். எதிர்ப்பட்ட பஸ்ஸில் ஏறினான். சிறிது தூரம் போய் இறங்கினான். டிராமில் ஏறினான். கொஞ்சம் பிரயாணம் செய்து எங்கேயோ ஓரிடத்தில் இறங்கினான். இப்படியாக அன்றைய பொழுது சாய்ந்துவிட்டது.

    மாலை ஆறு மணி சுமாருக்கு அவன் பிராட்வே முனையில் நின்றுகொண்டிருந்தான். பிராட்வேயில் ஒரு தியேட்டரில் ஓடும் ஒரு தமிழ்ப் படத்தைப் பற்றிய பேச்சு அவன் செவிகளில் அன்று அடிக்கடி டிராமிலும் பஸ்ஸிலும் விழுந்து கொண்டேயிருந்தது. சாதாரணமாக அவனுக்குச் சினிமா, டிராமா இவற்றிலெல்லாம் மோகமே கிடையாது. எப்போதாவது நல்ல இங்கிலீஷ்ப் படமாக வந்தால் தன் நண்பர்களுடைய தொந்தரவுக்காகவாவது போய்விட்டு வருவான். தமிழ் டாக்கி ஆரம்பகாலத்தில் இரண்டொன்று பார்த்திருக்கிறான் பின்னர் எப்போதாவது பொழுது போக்கிற்காக ஒரு படத்திற்குப் போவான். எனினும் கடைசி வரையில் உட்கார்ந்து பார்க்க அவனுக்குப் பொறுமை இராது. படம் பிடிக்கவில்லை என்று தோன்றும் அவனுக்கு. உடனே எழுந்து வந்துவிடுவான். அதோடு சரி. அப்பேர்ப்பட்டவன் அன்று மாலை பிராட்வே முனையில் நின்றுகொண்டே இருந்தபோது, சினிமாவுக்குப் போகும் ஒரு கூட்டம் அந்தப் படத்தைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிக்கொண்டு போவதைக் கேட்டு, அங்கே போய் உட்கார்ந்தால் மூன்று மணி காலம் தன் மனத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை மறந்திருக்கலாம் என்கிற நினைப்புடன் சென்றான்.

    வழக்கம்போலவே அவனுக்குப் படம் பிடிக்கவில்லை. இந்தப் படத்தைப் பற்றி ஜனங்கள் பிரமாதமாகப் பேசிக் கொள்கிறார்களே என்று அவன் வெறுத்துக்கொள்ளத்தான் செய்தான். எனினும் அவன் எதற்காகப் படம் பார்க்கச் சென்றானோ அந்த நிம்மதி அவனுக்குக் கிடைக்கவில்லை அங்கே. படக் கதைதான் காரணம். படத்திலே கதாநாயகன் விரும்பும் பெண்ணை மணக்க முடியாமல் போகிறது. அவன் பெற்றோர் வலுக்கட்டாயமாக அவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கும் பெண்ணுடன் அவன் நடத்தும் வாழ்க்கை அவனுக்கு நரகமாகத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதையில் பல கடுமையான சோதனைகள் ஏற்படுகின்றன. அந்தச் சோதனைகளில் தேற முடியாமல் இடறி விழுகிறான் அவன். அந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறாள் அவன் காதலித்த பெண்.

    இந்தக் கதை அவன் நெஞ்சைக் கிளறிவிட்டது. அன்றைக் காலையில் அவன் தகப்பனாரிடமிருந்து வந்த கடிதத்தைப் பற்றி மறக்க நினைத்தவன், மேலும் மேலும் அதைப்பற்றியே சிந்திக்கும்படியாகத் தூண்டி விட்டது இந்தப் படக்கதை. அவன் தகப்பனாரும் யரோ ஒரு பெண்ணை அவனுக்கு நிச்சயம் பண்ணியிருப்பதாகவும் நிச்சயதார்த்த தேதியும் கணித்துவிட்டதாகவும், பெண்ணும் அவள் பெற்றோரும் ஒரு முறை பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்று விரும்புவதால் உடனே ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வந்து போகும்படியும் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் அளித்த அதிர்ச்சிதான் ராஜநாராயணனை இப்படி நிலைதடுமாறும்படி செய்தது. அவன் கல்யாணத்தைப் பற்றித் துளிகூட சிந்திக்கவில்லை அதுவரையில். காலேஜ் படிப்பு முடிந்தபின் கூட அவன் உடனே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் சிந்தனை, கற்பனையெல்லாம் வெவ்வேறு விஷயங்களில் ஈடுபட்டிருந்தன. எதிர்காலத்தில் அவன் பொதுவாழ்வில் எந்த விதத்தில் ஈடுபட்டு வேலை செய்யலாம் என்பது போன்ற எண்ணந்தான் அவன் மனத்தில் உதித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றியும் வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் திடுதிப்பென்று தகப்பனாரிடமிருந்து இப்படிக் கடிதம் வந்து அவனை இப்படியெல்லாம் அலைக்கழித்து விட்டது.

    கல்யாணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ஒருவரி பதில் எழுதிப் போட்டுவிட்டு அவன் நிம்மதியாக இருந்திருக்கலாம். ஆனால் இதுவரையில் அவன் பெற்றோர் பேச்சைத் தட்டினவன் அன்று. அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்தான் அவன். கடைசியாகச் சினிமாப்படம் பார்க்கப் போயும் அவன் மனம் நிம்மதியடையவில்லை. படக்கதையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே, தன் எதிர்காலத்தைப் பற்றியும் நினைத்தபடி கொட்டகையை விட்டு வெளியே வந்தான்.

    படக் கதைக்கும் தன் கதைக்கும் ஒரே ஒரு வித்தியாசந்தான் இருந்தது. கதையில் கதாநாயகனுக்கு ஒரு காதலி இருந்தாள். இவனுக்கு இந்த 'அயிட்டம்' இல்லை. இதையெல்லாம் யோசித்தபடியே, படம் பிடித்துள்ள விதத்தைத் தூஷித்துக் கொண்டே, வெளியே வந்தவன் எதிர்பாராத விதமாகத் தன் ஊர்க்காரராகிய பத்மநாப ஐயங்கார் மனைவியையும் பெண்ணையும் சந்திக்கும்படி நேர்ந்தது.

    இந்தச் சந்திப்பு அவன் உள்ளக் கிளர்ச்சியைப் பின்னும் அதிகரிக்கச் செய்தது. அறையில் சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடியே அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்துவிட்டான். நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு. அன்று பூராவும் அவன் சரியாகச் சாப்பிடவில்லையெனினும் அவனுக்குப் பசியே தோன்றவில்லை. காலை முதல் அலைந்ததால் கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஒரு மூலையில் வைத்திருந்த மண் கூஜாவிலிருந்து ஒரு ‘கிளாஸ்' டம்ளரில் தண்ணீர் எடுத்துக் குடித்து விட்டு மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்துவிட்டான். அவன் மனம் பத்மநாப ஐயங்கார் குடும்பத்தைப் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டது.

    பதினைந்து வருஷங்களுக்கு முன், அவன் ஐந்து வயதுப் பையனாயிருந்தபோது பத்மநாப ஐயங்கார் எப்படியிருந்தார் என்று எண்ணிப்பார்த்தான் அவன். அந்த வயசுதானே அவனுக்கும் நினைவு, நிலவரம் தெரியும் வயசு? அவன் கண் முன்னே தேவனூர் அக்கிரகாரம் தென்பட்டது அக்கிரகாரத்தின் கீழ்க் கோடியிலிருந்து, 'ஜிணிக் ஜிணிக்' என்கிற சப்தத்துடன் கழுத்துச் சலங்கை ஒலிக்க, 'டக் டக்' என்று குதிரைக் குளம்புகள் ஓசை செய்ய, நீல 'டாப்' போட்ட குதிரை வண்டி ஒன்று வந்து அக்கிரகாரத்தின் மத்தியிலிருந்த ஒரு மாடி வீட்டின் முன் நிற்கிறது. கம்பீரமாகச் சரிகை வஸ்திரமும் ஸில்க் ஷர்ட்டுமாக பத்மநாப ஐயங்கார் வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போகிறார். அதுவரையில் கண்ணைக் கொட்டாமல் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பாட்டி ஒருத்தி, 'அழிஞ்சு போற காலம் வந்துடுத்து, சாவானுக்கு. இல்லாதபோனா அக்கிரகாரத்துக்குள்ளே குதிரை என்ன, வண்டி என்ன? தேவடியா வீட்டிலேயிருந்து இப்படித் துளிகூட உடம்பிலே அஞ்சிக்கை, என்கிறது இல்லாமே நேரே வந்து இறங்கறானே?' என்று முணுமுணுத்துக் கொள்கிறாள். அந்தப் பாட்டியின் சாபந்தானோ என்னவோ? பத்மநாப ஐயங்கார் குதிரை, வண்டி ஒன்றும் இல்லாமல் ஒரு நாள் கால் நடையாக அக்கிரகாரத்துக்கு வந்து கோடியில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாயிருந்த ஒரு சின்ன வீட்டுக்குள் நுழைகிறார். இப்போது அவருக்குக் குதிரையில்லை, வண்டியில்லை, அந்தப் பெரிய மாடி வீடும் இல்லை. ஆனால் அந்தப் பாட்டி சொல்லிக் கொள்வதுபோல, 'எல்லாந்தான் போச்சு. ஆனால் அந்தத் தேவடியாள் முண்டையைக் கட்டிண்டு அழறானே, அது அவன் ஆயிசோடேதான் மடியும் போல் இருக்கு...’ ஆமாம். மற்றொரு நாள். அந்தக் கோடியிலுள்ள சின்ன வீட்டில் ஒரே களேபரம். பத்மநாப ஐயங்கார் ஆயுளும் அந்தப் பாட்டியின் சாபத்தினால் தானோ என்னவோ முடிந்து போய்விட்டது. அக்கிரகாரம் பூராவும் அங்கே கூட்டம் போட்டுக் கிடக்கிறது. இன்னும் வெளியூரிலிருந்து யார் யாரோ, பார்த்தால் மார்வாடி, ஸௌகார்கள் போல் இருக்கிறது; பெரிய பெரிய தலைப்பாகைகளுடன் வந்து வாசலில் நிற்கிறார்கள். ஏதோ பெரிய கலவரம், ரகளை நடப்பது போலத் தெரிகிறது. கடைசியில் பத்மநாப ஐயங்கார் பிணம் சுடுகாட்டுக்குப் போகுமுன் ஏகப்பட்ட சண்டையும் கூச்சலும் இடையிடையே அழுகைச் சப்தமும் கேட்கின்றன.

    ராஜநாராயணன் பெருமூச்சு விட்டுக்கொண்டே சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் மனக் கண்முன் தென்பட்ட காட்சிகளை மேலும் தொடர்ந்து நடத்திக்கொண்டு செல்ல அவன் சிந்தனா சக்தி இடமளிக்கவில்லை. அவன் இதயம் அத்தனை கனத்துப் போயிருந்தது.

    சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே ஜன்னலுக்கப்பால் வெளியே பார்த்தான். வாசல் பக்கத்தில் எங்கும் ஒரே இருட்டாயிருந்தது. அறையிலிருந்த 'அலாரம் டைம்பீஸ்' மணி இரண்டுக்குமேல் ஆகிவிட்டதை உணர்த்தியது அவனுக்கு. படுக்கையை விரித்துக்கொண்டு, எலக்டிரிக் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். ஆனால் தூக்கம் சட்டென்று வருகிறதா?

    இப்போது அவன் கண்முன் அந்தப் பெண் வந்து நிற்கலானாள். ஆம். சினிமாக் கொட்டகையிலிருந்து மாம்பலம் வரையில் கூடவே தாயுடன் வந்த அதே பெண்தான்! காலஞ்சென்ற பத்மநாப ஐயங்கார் பெண் பூமா. அவளது ஈரப் புடைவையும் அவள் வடிவமும் அப்படியே தோன்றின அவன் மனக் கண்முன். அவன் தேகம் சிலிர்த்தது. ஆனால் சட்டென்று அவன், 'சீ, இதெல்லாம் என்ன கலவரம்?' என்று மனத்துக்குள்ளாகவே நிதானித்துக்கொண்டு தூங்க முயன்றான். சிறிது நேரம் அவன் உள்ளத்தில் சிந்தனைகள் சீறி எழத்தான் எழுந்தன. ஆயினும் களைப்பினால் சீக்கிரத்திலேயே அவனுக்குத் தூக்கமும் வந்து விட்டது.

    பொழுது விடிந்து நெடுநேரம் வரையில் ராஜநாராயணன் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாள் அலைச்சலும் பாதி ராத்திரிக்கு மேல் தூக்கமில்லாமல் எண்ணமிட்டுக்கொண்டிருந்ததும் சேர்ந்து அவனை 'அடித்துப் போட்டாப்போல' தூங்கச் செய்துவிட்டன. ஒன்பது மணிக்கு மேல் அவன் படுக்கையில் இரண்டு மூன்று தரம் புரண்டு புரண்டு படுத்துவிட்டுச் சட்டென்று திடுக்கிட்டவன் போல விழித்துக்கொண்டு கண்களைக் கசக்கிய வண்ணம் எழுந்து உட்கார்ந்தான்.

    கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். மாம்பலத்தில் அவன் வசிக்கும் அறையில் தான் அவன் இருப்பதை உணர்ந்த பின் ஒரு நீண்ட பெருமூச்சு அவன் இதயத்திலிருந்து வெளிப்பட்டது. படுக்கையை விட்டு எழுந்து அதை ஒரு புறமாக ஒதுக்கிவிட்டு, மேஜைக்கு எதிராக இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். 'சீ, என்ன சொப்பனம் இது? இப்போதுதான் எல்லாம் நடந்துகொண்டிருப்பதுபோல் அல்லவோ இருக்கிறது?' என்று நினைத்துக்கொண்டே மேஜைமேலிருந்த கடிதத்தைக் கையில் எடுத்தான். ஆனால் பிரித்துப் படிக்கவில்லை. 'மனத்தில் சிந்தனை செய்து பார்த்தால் கூட அன்று நடந்ததெல்லாம் இத்தனை தெளிவாக இராது' என்று, தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான் அவன்.

    அவன் கனவில் கூட பத்மநாப ஐயங்கார் மனைவியையும் பெண்ணையுந்தான் கண்டான். கல்யாணியம்மாள் அப்போது இளைத்து எலும்பும் தோலுமாய்ப் போய்க்கிடந்தாள். பூமா இளங்கன்று. நாலைந்து வயசு இருக்கும். தேவனூரிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் அவன் நாலாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். பள்ளிக்கூடம் அக்கிரகாரத்துக் கோடியில், பூமாவும் அவள் அம்மாவும் வசித்துவந்த சின்ன வீட்டுக்குச் சுமார் ஐம்பது கஜ தூரத்தில் தான் இருந்தது. பள்ளிக்கூடத்தில் அவன் வகுப்பு அறையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் பூமாவின் வீடு, வாசல் எல்லாம் தெரியும். அவன் வகுப்பில் இருக்கும்போது அடிக்கடி பூமா தெருப்புழுதியை மேலே பூசிக்கொண்டு உடலை மறைக்க ஒரு சட்டைகூட இல்லாமல் வாசலில் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். அவள் சில சமயம் வெறி பிடித்துக் கொண்டு அழுவாள். அவள் அம்மா அவளைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவாள். வாத்தியாரிடம் அவளைக் கொண்டு வந்து நிறுத்தி, 'ஸார், இந்தப் பெண் படுத்துகிறபாடு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிரட்டுங்கள்' என்று சொல்லிப் பூமாவை விட்டு விட்டுப் போய் விடுவாள்.

    கல்யாணியம்மாள் தலைமறையும் வரையில் வாத்தியார் சும்மா இருப்பார். அதற்குள்ளாகவே பூமா விஷமம் பண்ண ஆரம்பித்து விடுவாள். வாத்தியார் மேஜைமேல் இருக்கும் 'சாக்கட்டி'யை எடுத்துச் சுவரிலோ தரையிலோ கிறுக்கத் தொடங்கிவிடுவாள். அல்லது 'டஸ்டரை' எடுத்து உதறி அதிலிருக்கும் அழுக்கு, சாக்கட்டித் தூசி எல்லாவற்றையும் முகத்திலும் உடம்பிலும் தடவிக்கொள்ளுவாள் 'சீ, தரித்திரமே ஆரம்பித்து விட்டாயா? அப்படிப்போய் அந்தக் கோடியிலே உட்காரு' என்று மிரட்டிப் பிரம்பால் மேஜை மேல் ஒரு தட்டுத் தட்டுவார் வாத்தியார். பூமா பிரம்பைக் கண்டு பேசாமல் அடங்கிவிடுவாள்.

    இந்தப் பழைய சம்பவங்களையெல்லாம் ராஜநாராயணன் கனவில் கண்டபடியே தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும்படியாக நேரிட்டது. காரணம் வாத்தியார் பூமாவை ஒரு சமயம் அடித்து விட்டதுதான். அப்போது சாயந்தரவேளை. வகுப்பில் பையன்கள் ஒருவரும் இல்லை; பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்த மைதானத்தில் 'டிரில்' பண்ணிக்கொண்டிருந்தார்கள். வாத்தியார் மாத்திரம் ஏதோ சில நோட்டுப் புஸ்தகங்களைப் பார்த்துத் திருத்திக்கொண்டிருந்தார். ராஜநாராயணனுக்குக் காலில் சுளுக்குப் பிடித்திருந்தபடியால் அவன் 'டிரில் கிளாஸு'க்கு லீவு வாங்கிக்கொண்டு வகுப்பு அறையிலேயே உட்கார்ந்து மறுநாள் வாத்தியாரிடம் காண்பிக்க வேண்டிய வீட்டுக் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருந்தான்.

    அப்போதுதான் பூமாவின் அம்மா வந்தாள். பூமாவும் கூட வந்தாள். ஆனால் பூமாவை அம்மா தூக்கிக்கொண்டு வரவில்லை. அவள் மாமூல் பிரகாரம் கையையும் காலையும் உதைத்துக்கொண்டு அழவில்லை. வாத்தியாரைப் பார்த்து அவள் அம்மா, 'ஸார், இவளை மிரட்டுங்கள்' என்று சொல்லவும் இல்லை.

    பூமா தலையை வாரிப் பின்னிக்கொண்டிருந்தாள். நெற்றியில் சாந்துப் பொட்டு இட்டுக்கொண்டிருந்தாள். கௌன் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் அம்மா சொன்னாள் வாத்தியாரைப் பார்த்து; ஸார், இவளுக்குப் பள்ளிக்கூடம் போய்ப் படிக்கவேணுமாம்; பிடிவாதம் பண்ணுகிறாள் என்று.

    வாத்தியார் என்ன பதில் சொன்னாரோ; பூமாவின் அம்மா, அவளை விட்டு விட்டுப் போய்விட்டாள். பூமா ராஜநாராயணன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவன் புஸ்தகம் ஒன்றை எடுத்துப் பிரித்தாள். அதை அவன் கவனிக்கவில்லை. கணக்குப் போடுவதில் முனைந்திருந்தான். புஸ்தகத்தைச் சரியாகப் பிரிக்கத் தெரியாமல் அதில் உள்ள சில ஏடுகளைக் கிழித்துவிட்டாள். அதையும் அவன் கவனிக்கவில்லை. ஆனால் வாத்தியார் கவனித்தார். 'தரித்திரமே, அவன் புஸ்தகத்தை எடுத்துக் கிழித்துவிட்டாயா?' என்று சொல்லிக் கொஞ்சம் படபடப்புடன், 'சும்மாக் குந்தியிருக்கக்கூடாதா? ஏதாவது விஷமம்!' என்று பிரம்பை எடுத்துச் 'சுரீர்' என்று அவள் முதுகில் ஓர் அடி வைத்துவிட்டார்.

    குழந்தை பூமா துள்ளிப் போய்விட்டாள். வீரென்று அழுதுவிட்டாள் அவள். அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தான் ராஜநாராயணன். பக்கத்தில் தன் புஸ்தகம் ஒன்று கிழிந்து கிடப்பதையும் பூமா முதுகைத் தடவிக்கொண்டு அழுவதையும், வாத்தியார் சிடுசிடு என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பதையும் கண்டான். 'பாவம்! குழந்தைதானே ஸார்!' என்று அவனையும் அறியாமல் அவன் வாய் பேசியது.

    குழந்தையா? தரித்திரப் பீடை, எப்போதும் விஷமந்தான் குறி. இப்படிப் பிள்ளைகளின் புஸ்தகத்தையெல்லாம் கிழித்துவைத்தால் போதும்! இந்தச் சனியன்களெல்லாம் படிக்காவிட்டால் என்ன பாழாய்ப்போகிறது? என்று கோபத்துடன் பேசி இன்னொரு அடியும் கொடுத்துவிட்டார் வாத்தியார். அவர் வேண்டுமென்றுதான் அப்படி அடித்தாரோ, அல்லது சும்மா ஒரு தட்டுத் தட்டப் பார்த்தாரோ? அடி சற்றுப் பலமாகவே விழுந்து விட்டதும், குழந்தை துடித்துப் போய் அப்படியே சுருண்டு விட்டாள். ராஜநாராயணன் அவளைத் தூக்கிக்கொள்ளப் போனான், வில விலத்துப் போய். இந்த இடத்தில்தான் அவன் கனவு கலைந்தது.

    நாற்காலியில் உட்கார்ந்து கையில் தகப்பனார் கடிதத்தை எடுத்துக்கொண்டு கலைந்த கனவை நினைவினால் பூர்த்தி செய்து பார்த்தான் ராஜநாராயணன்.

    அன்று அந்தக் குழந்தைக்கு அவனிடம் ஏற்பட்ட அன்பு, அவள் அந்த ஊரை விட்டு நீங்கும் வரையில் துளிகூடக் குறையவில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் போதும். அதைத்தான் அவனும் சிந்தித்துப் பார்த்தான். ஆனால் அவள் அவனுடன் பழகியதெல்லாம் அப்புறம் இரண்டே வருஷங்கள் தாமே? அவளுக்கு ஏழுவயதாயிருக்கும்போதுதான் அவள் அம்மா தனக்குக் கடைசி ஆஸ்தியாக ஊரிலிருந்த அந்தச் சின்ன வீட்டையும் விற்று விட்டாள். பிறகு அவளுக்கு அங்கே என்ன இருக்கிறது? எங்கேயோ போய்விட்டாள், பெண்ணையும் கூட்டிக்கொண்டு.

    அவனுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாயிருக்கும்போது தான் அவர்களைக் கடைசியாகப் பார்த்திருக்கிறான். இப்போது திடுதிப்பென்று அவர்கள் மறுபடியும் அவன் முன் பிரசன்னமாகிவிட்டனர்; அதுவும் அவன் மனம் அமைதியற்றிருந்த நிலையில்.

    இப்போதும் நாற்காலியில் உட்கார்ந்து அவர்களைப் பற்றி யோசித்தபடியே தகப்பனார் எழுதியிருக்கும் கடிதத்தைப் பிரிக்கிறான் ராஜநாராயணன்.

    அந்தக் கடிதத்தில் அவன் தகப்பனார் அவனுக்கு நிச்சயித்திருக்கும் பெண்ணின் அந்தஸ்தைப் பற்றி விஸ்தாரமாக வர்ணித்திருப்பதை அவன் கண்கள் பார்வையிடுகின்றன. பெண்ணின் தகப்பனாருக்கு ஏராளமான சொத்து இருக்கிறதென்பதும், பெற்றோருக்கு ஒரே பெண்ணென்பதும், பெரிய இடத்துச் சம்பந்தம் என்பதும் அந்தக் கடிதத்தில் இருந்த மற்ற விஷயங்களை விடப் பிரதான அம்சங்களாக அமைந்திருப்பதை அவன் ஏற்கனவே உணர்ந்திருந்தான்.

    இப்போது அந்த விஷயங்களைப் படித்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. 'பூமாகூடப் பெற்றோருக்கு ஒரே பெண் தான். அவள் அப்பாவின் வீடுதான் தேவனூர் அக்கிரகாரத்திலேயே பெரிய மாடி வீடு. ஆனால் அதெல்லாம் எங்கே இப்போது? பெரிய இடத்துச் சம்பந்தமாம்! ஒரே பெண்ணாம்! பணமாம்! அந்தஸ்தாம்...! சீ... என்ன வேண்டியிருக்கிறது!' என்று மனத்துக்குள்ளாகவே சலித்துக்கொண்டான்.

    அந்தச் சமயத்தில் ராஜா, இன்றைக்குக்கூடக் காலேஜுக்கு மட்டமா என்ன? என்று ஒரு குரல் அவன் பின்புறமிருந்து கேட்டது.

    *****

    3

    ராஜநாராயணன் கையிலிருந்த கடிதத்தைச் சட்டென்று மறைத்துக்கொண்டு பின்புறம் திரும்பினான். பின்னால் நாற்காலியைப் பற்றிய வண்ணம் புத்தகமும் கையுமாக வேணு கோபாலன் நின்று கொண்டிருந்தான்.

    வேணு, வந்து ரொம்ப நேரமாயிற்றா? உட்காரேன் என்று ஓர் அசட்டுச் சிரிப்புடன் சொல்லிக்கொண்டே நாற்காலியை விட்டு எழுந்தான் ராஜநாராயணன்.

    அப்படி ஒன்றும் அதிக நேரமாகி விடவில்லை. நீ அந்தக் காதல் கடிதத்தைச் சுவாரஸ்யமாகப் படித்து ரஸித்துக்கொண்டிருக்கும்போதுதான் வந்தேன்... உம்... ஏன் அப்படிப் பயப்படுகிறாய்? நான் ஒன்றும் கடிதத்தைப் பார்த்துவிடவில்லை என்று அவன் தோள் மேல் ஒரு தட்டுத் தட்டி விட்டுச் சிரித்துக்கொண்டே பேசினான் வேணுகோபாலன்.

    நீ பார்த்தால் தான் என்ன? நீ நினைப்பது போல அது காதல் கடிதமும் அல்ல, கத்தரிக்காய்க் கடிதமும் அல்ல என்று சொல்லி உதடுகளைப் பிதுக்கினான் ராஜநாராயணன்.

    அப்படியானால் என்னைக் கண்டவுடனே கடிதத்தை ஏன் அத்தனை அவசரமாக மறைத்துக்கொள்ள வேண்டும்?

    வேணு, அதையெல்லாம் உனக்குச் சொல்லிக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. காலேஜுக்கு நேரமாகிறதல்லவா? வா போகலாம். இந்தக் கடுதாசி... உம்... குடும்ப விஷயம்... அதனால் தான்...

    ராஜநாராயணன் தடுமாற்றத்தைக் கண்டு வேணுகோபாலன் கலீர் என்று சிரித்துவிட்டான். குடும்ப விஷயமா...? ஓ... உன் குடும்ப வரலாற்றைப் பற்றி எனக்கு இதுவரையில் ஒன்றுமே சொல்லவில்லையே. உனக்குக் குடும்பம் ஒன்று இருப்பதாக இப்போது நீ சொல்லித்தான் தெரிகிறது. உம். குடும்பம் என்றால் பெண்டாட்டி எத்தனை பேர்? பிள்ளை, பெண்கள் எத்தனை பேர்?

    போடா, அரட்டைக்கல்லி! உன்னிடமிருந்து ஒரு விஷயத்தை மறைக்கப் பார்க்கிறேனே. என் புத்தியைச் சொல்ல வேணும் என்று சற்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறிய படி மறைத்துவைத்திருந்த கடிதத்தை எடுத்து அவன் முன்னால் விட்டெறிந்தான் ராஜநாராயணன்.

    பிறத்தியாருக்கு வரும் காதல் கடுதாசிகளைப் படிக்கும் வழக்கம் எனக்குக் கிடையாதப்பா. உன் கடிதத்தை நீயே வைத்துக்கொள். அதென்னடா அப்படி மூக்குக்கு மேலே கோபம் வருகிறது உனக்கு? இஷ்டமிருந்தால் சொல்லு, இல்லாவிட்டால் போயேன் என்று சற்றுப் பிகுவுடன் பேசி விட்டுக் கீழே தன் முன் வந்து விழுந்த கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அடே ராஜா, இந்தமாதிரி விஷயங்களில் உனக்குத் துளிகூட அநுபவம் போதாது. அன்றியும் ஆப்த சிநேகிதன் ஒருவனின் யோசனை எத்தனை பலனளிக்கும் தெரியுமா, இதிலெல்லாம்? என்று சொல்லி, "இந்தாடா அப்பா, கடுதாசியை ஜாக்கிரதையாகப் பெட்டிக்குள் வைத்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1