Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pavazha Maalai
Pavazha Maalai
Pavazha Maalai
Ebook220 pages1 hour

Pavazha Maalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் இந்திய சுதந்திரத்துக்கு முன் எழுதப்பட்டவை.

அனைத்தும் அந்நாளைய வாழ்க்கை சுவையை எடுத்துக் காட்டுபவை. சென்னை வெள்ளத்தின் போது அதிகம் பேசப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி சூழலை வைத்து புனையப்பட்ட ஏரி அம்மன் கோவில் மற்றும் அனைத்து கதைகளும் அதிகம் எழுத்தில் வராத செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றி இருக்கும். இவை முதலில் வெளிவந்த போது ஆசிரியரின் வயது 32.

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580136205824
Pavazha Maalai

Read more from P.M. Kannan

Related authors

Related to Pavazha Maalai

Related ebooks

Reviews for Pavazha Maalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pavazha Maalai - P.M. Kannan

    http://www.pustaka.co.in

    பவழ மாலை

    Pavazha Maalai

    Author:

    பி.எம். கண்ணன்

    P.M. Kannan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pm-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பவழ மாலை

    அம்மான் கோலம்

    பிச்சைக்காரன்

    சுமங்கலிப் பிரார்த்தனை

    இரண்டுங்கெட்டான்

    காலடிப் பாறை

    வில்லிப் பெண்

    துரோக சிந்தனை

    நவராத்திரி

    ஏரியம்மன் கோவில்

    மூன்றாவது கடிதம்

    சாந்தியும் சலனமும்

    தண்டனை

    கிராம தேவதை

    இது சகஜம்

    பவழ மாலை

    1

    சக்கரம் 'கிறு கிறு'வென்று சுழன்றது. அதன் மையத்திலிருந்து சில நிமிஷங்களுக்கொருதரம் விதவிதமான உருவங்கள் எழுந்தன. ஒவ்வொன்றாய்ப் பக்குவப்படுத்தி எடுத்துத் தரையில் வைத்துக் கொண்டிருந்தான் குமாரலிங்கம். அவன் கைகளும் கண்களும் மனத்துடன் லயித்து அவன் வேலையில் ஒத்துழைத்தன.

    பாலசூரியன் ஒளியில் அவனது கரிய நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள் நீலவெளியில் மின்னும் நக்ஷத்திரங்கள் போலிருந்தன. இறுகப் பிசைந்த களிப்பு மண்ணில் அவன் பலமாதிரி பாத்திரங்களை அழகு நுட்பம் தோன்றச் சிருஷ்டித்தான். 'பிரம்ம சிருஷ்டிக்கு உயிர் உண்டு; குமாரலிங்கம் சிருஷ்டிக்கு உயிரில்லை; ஆனால் பெயருண்டு' என்று புகழும்படியான அவ்வளவு முதிர்ந்த வேலைப்பாடு அவன் கைவிரல்களில் அமைந்திருந்தது.

    தலையிலிருந்த தயிர்க் கூடையைக் கீழேகூட இறக்காமல் அவனைக் கவனித்துக்கொண்டு நின்றாள் பொன்னாச்சி. சுமார் பன்னிரண்டு வயதிருக்கும். அவள் தாய்க்கு ஒத்தாசையாக அவளும் ஊருக்குள்ளே போய்த் தயிர் விற்றுவருவது வழக்கம்.

    அவள் முகத்தில் பால் வடியவில்லை. ஆனால் எண்ணெய் வழிந்தது. ஏற்கனவே கறுப்பு. கூட இப்பொழுது 'எண்ணெய் தடவிய கறுப்பு' என்று சொல்லும்படியிருந்தாள். அவள் வாரி முடித்துப் போட்டிருந்த கொண்டையிலிருந்து ஒரு தவனக்கதிர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் வாசனை கூடக் குமாரலிங்கத்தின் கவனத்தைப் பறிக்கவில்லை.

    சில நிமிஷங்கள் சென்றன! அவன் தலை நிமிரவே இல்லை.

    ஏ மாமா, ரொம்ப ரொம்பக் கவனமோ? என்று கூப்பிட்டாள் பொன்னாச்சி; பொறுக்க முடியாமல்.

    குமாரலிங்கத்தின் காது ஜவ்வுகளில் அந்தக் குரல் திடீரென்று விழுந்தது, வெகுதூரத்திலே, மாமரக் கிளையிலிருந்து குயில் கூவுவது போலிருந்தது. அவனுக்கு அந்தக் குரலில் அவ்வளவு மோகம்; அவ்வளவு உணர்ச்சி. அவன் தலையைத் தூக்கி அவளைப் பார்ப்பதற்கு முன்பே அவனது வெள்ளைப் பற்கள் அவளை வரவேற்கக் குதூகலத்துடன் இளித்தன.

    ரொம்ப நேரமா நின்னுக்கிட்டிருக்கையா? உக்காரு. பொங்கலுக்கு இன்னும் பதினஞ்சு நாள் தானே இருக்கு. அதுக்குள்ளேயாச்சும் வேலையை முடித்தாத்தானே பொழைக்கலாம்? என்றான் குமாரலிங்கம்.

    ஆமாம், பொங்கலுக்குத் தயிர்வித்த பணத்தையாச்சும் கொண்டு அந்த ஐயர் வீட்டம்மா பவழமாலை மாதிரி ஒண்ணு வாங்கிப் போடறேண்ணு சொல்லிச்சு ஆச்சி. ஆனா எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணாமா? செவிலிப் பசுவுக்குக் கண்ணு செத்துப் போச்சு கார்த்திக் குளிரிலே; அது உதைக்குது. அந்த மொட்டைக்கொம்பு எருமை கப்பலாட்டமிருந்திச்சு, கண்ணு போட முடியாமே உசுரையே விட்டுது நேத்து என்று சொல்லியபோது பொன்னாச்சியின் கண்களிலிருந்து 'கரகர'வென்று நீர் பெருகியது.

    பொன்னாச்சி தலைக்கூடையை இறக்கிவிட்டுக் குமாரலிங்கத்தின் எதிரில் உட்கார்ந்தாள். அவள் 'ஐயர் வீட்டம்மாள்' என்று குறிப்பிட்டது அடுத்த கிராமத்திலிருக்கும் ஒரு மிராசுதார் மனைவியை; அந்தம்மாளுடைய பவழமாலை போலத் தனக்கும் ஒன்று வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக உண்டு அவளுக்கு. ஆனால் அவ்வளவு விலைகொடுத்து வாங்க அவள் ஏழைத் தாயாருக்குச் சாத்தியமா? பொங்கலுக்குத் தயிர் விற்று வரும் பணத்திலிருந்து மிச்சப்படுத்தி ஒரு 'இமிடேஷன்' பவழமாலையாவது வாங்கிப் போடுவதாக, அவள் தாயார் அம்மாக்கண்ணு சொல்லியிருந்தாள். ஆனால் கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டதுமல்லாமல் கொஞ்சங் கொஞ்சமாகச் சேதமும் ஏற்படத் தொடங்கியது. பொன்னாச்சி நம்பிக்கையை இழந்தாள். குடும்பத் துன்பம் தெரியாத குழந்தை மனசு. பவழமாலை கிடைக்காது என்ற எண்ணம் மாத்திரம் அவளது இளம் ஹிருதயத்தைச் செல்லரிப்பதுபோல் சில நாட்களாக அரித்துக் கொண்டிருந்தது. பொங்கலைப் பற்றிய ஞாபகம் வரவே பவழமாலையின் நினைப்பு அவளை அழும்படி செய்து விட்டது.

    பக்கத்து வீட்டுக் குமாரலிங்கத்துக்கு இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயந்தான். இருந்தாலும் அவளிடத்தில் இளமையிலிருந்தே அவனுக்கு ஒரு தனிப்பட்ட பிரேமை. அந்தப் பிரேமை முற்றிக் கனியும்படியான வயசுகூட. அவள் 'கண்ணில் நீர் வழிந்தது, அவன் நெஞ்சில் உதிரத்தைக் கொட்டியது' என்றால் மிகையாகுமா?

    பொன்னு, அழாதே பொன்னு. என்ன செய்யலாம்? இந்தச் சூளை செலவழிஞ்சு ஏதாச்சும் நெல்லு நீரு கிடைக்காதா? உனக்கு நான் வாங்கிப் போடறேன் பவளமாலை என்று குழையக் குழையப் பேசினான்.

    அவன் கைகள் சக்கரத்தையும் மண்கலத்தையும் விட்டுவிட்டன. சகடச் சுழல் நின்றது. அவன் ஹிருதயம் பதினமடங்கு வேகத்துடன சுழன்றது. செயலற்று, ஒரு பித்தன் போல அவளைப் பார்த்தபடியே இருந்தான். அவனது ஹிருதயச் சுழலில் அவள் வடிவம் ஜீவதாதுவின் தீவிர உணர்ச்சியுடன் செப்பனிடப்பட்டது. அந்தப் புதிய சிருஷ்டியில் மயங்கிப்போன அவன் மனம் அவன் கைகள் செய்துகொண்டிருந்த உயிரற்ற சிருஷ்டிக்கு இடங்கொடுக்க மறுத்தது.

    அவன் வார்த்தைகள் அவள் செவிகளில் தேன்சுவைபோல் பாய்ந்தன. அவள் கறுப்பு முகம் மலர்ந்தது 'காக்கணாம்பூ'ப் போல. அந்த அழகை அள்ளிக் குடித்தான் அவன்.

    அவளுக்குப் பவழமாலை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவள் மனத்துக்கு அவன் சாந்தியளித்தான்; அதில் அவனுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று.

    *****

    2

    எருமையூர் ஒரு சிறிய கிராமம். சுமார் இருபது வீடுகளே கொண்ட ஒரே வளைவைச் சுற்றிப் பல புளியமரங்கள் இருண்டு நின்றன. சில மாமரங்களும் வேப்ப மரங்களும் அங்கும் இங்குமாய்ச் சிதறி நின்றன. கூப்பிடு தூரத்தில் பனஞ்சாலைப்பக்கம் ஒரு சிறிய ஏரி; அதற்கடுத்தாப்போல தெற்குத் திசையில் ஒரு தாமரைக் குளம். ஊருக்கு மேற்கில் இருந்த சிறு குன்றுகளும் சுற்றியிருந்த காடும் அந்த ஊரின் இயற்கை எழிலை அதிகரிக்கச் செய்தன.

    இடையரும் குயவருமே ஊர் ஜனங்கள். கால் வைத்த இடமெல்லாம் பானை ஓடும் எருமைச் சாணியும் மிதிபடும்.

    பொன்னாச்சியும் குமாரலிங்கமும் பவழமாலையைப் பற்றிப் பேசி ஒரு வாரம் கழிந்தது.

    ஒருநாள் மாலை; மரங்களுக்கப்பாலுள்ள வெட்டவெளி; மஞ்சள் வெயில் காய்ந்துகொண்டிருந்தது. குமாரலிங்கம் சூளை அடுக்கிக் கொண்டிருந்தான். முந்திய வருஷங்களைவிட அந்தச் சூளையின் உயரமும் சுற்றளவும் பெரிதாயும் ஒழுங்காயுமிருந்தது, அவன் கர்வத்தை ஓங்கி வளரச் செய்தது. பொன்னாச்சிக்குப் பவழமாலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் அவனது திறமைக்கு அவ்வளவு உதவி செய்தது. ஒரு மதயானை போல் பெருமிதத்துடன் சூளையைச் சுற்றிச் சுற்றி வந்து சீர்ப்படுத்தினான்.

    அவன் கண்கள் சூளையின் மதிப்பையும் அதனால் கிடைக்கக்கூடிய லாபத்தையும் நிர்ணயம் செய்து கொள்வதுபோல் பிரகாசத்துடன் விளங்கின. அவன் முகத்தில் ஒரு சோபை தென்பட்டது. அவன் எண்ணம் ஈடேறும் என்பதை அந்த முகம் எடுத்துக் காட்டிற்று. அவன் கன்னக்கதுப்புகள் ஆனந்தத்தால் பூரித்தன. அந்த ஆனந்தம் அவன் செய்யும் வேலையில் அவனை மேன்மேலும் ஊக்கியது.

    கையைத் தட்டிக்கொண்டு குதூகலத்துடன் ஓடிவந்தாள் பொன்னாச்சி. ஓ மாமா என்று கூவினாள். அந்தக் கானத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் குமாரலிங்கம். அவள் கையோசையை விட, அவள் குரலோசையின் இனிமையைவிட, அவள் ஹிருதயத்தில் பொங்கும் உவகை வெள்ளத்தின் அலையோசையை அவள் கலகலப்பான சிரிப்பு எடுத்துக் காட்டியது.

    வா பொன்னு, இதோ பார்த்தையா இந்தப் பெரிய சூளையை என்று பெருமையுடன் கூறி அவளை வரவேற்றான் குமாரலிங்கம்.

    அவள் அவன் சொல்லியதின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் தன்னிச்சைப்படி பேச ஆரம்பித்தாள்.

    மச்சான், எனக்கு நீங்க பவளமாலை வாங்கித் தரவேண்டாம் என்றாள் பொன்னாச்சி அவன் சமீபத்தில் வந்ததும்.

    குமாரலிங்கத்துக்கு அவளது வார்த்தைகள் அந்தப் பெரிய சூளையையே தடியால் நொறுக்கியது போன்ற உணர்ச்சியை உண்டாக்கின; அவன் மனம் பதைப்படைந்தது.

    ஆயினும் சமாளித்துக் கொண்டு மெல்லிய குரலில் ஏன்? என்றான்.

    பொன்னாச்சி பதில் பேசவில்லை. ஏனெனில் அவளது குழந்தை மனம் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று வந்த அவனது கேள்வி அவளைத் திகைப்படையச் செய்தது. பதில் ரொம்ப சுலபம் தான்; ஆனால் அவளது வயதை மீறிய பெண்மை இடங்கொடுக்கவில்லை. தன் கால் கட்டை விரலால் மண்ணைக் கீறிக்கொண்டு நின்றாள்.

    பொன்னு!

    அவள் பார்வை அவள் கட்டைவிரலின் வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியது. அவளது கறுப்பு முகத்தில் கூடச் சில சிவப்புக் குறிகள் தென்பட்டன.

    பொன்னு, உங்க ஆச்சி வாங்கிப் போடறதாக சொல்லிச்சா?

    பொன்னு 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தாள். ஆச்சி எங்கே போகும் அம்மாம் பணத்துக்கு? என்ற பதில் வந்தது ஈனஸ்வரத்தில்.

    குமாரலிங்கத்துக்கு விவரம் புரியவில்லை. அம்மாக்கண்ணு வாங்கிப் போடாவிட்டால் பொன்னாச்சிக்கு வேறு யார் அவ்வளவு சொந்தத்துடன் பவழ மாலை வாங்கித் தர முடியும்? ஒரு வேளை...? அதைப்பற்றி அவனால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அவளிடத்தில் அவன் கொண்டிருந்த அன்பு அதற்குத் தடை செய்தது.

    சிறிது நேரம் மௌனம்.

    பொன்னாச்சியின் முகக்குறிப்பு அவர்களது மௌன நிலையை வளர்த்துக் கொண்டுதான் போயிற்று.

    மறுபடியும் குமாரலிங்கம் தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கினான்.

    பொன்னு!

    அதற்குமேல் வார்த்தை கிளம்பவில்லை. அவன் உதடுகள் படபடவென்று துடித்தன. ஆனால் நாக்கு உலர்ந்து மடிந்துபோய் மேல் வாயின் முகட்டில் ஒட்டிக்கொண்டது.

    பொன்னாச்சிக்குத் தான் சொல்லிய வார்த்தைகள் குமாரலிங்கத்தின் மனத்தில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கக்கூடும் என்பது தெரியும்படியான வயதா என்ன? ஆயினும் அந்த நிலைமையில் அவளுக்கும் ஒருவிதக் குழப்பம் ஏற்பட்டது.

    பொன்னு, பின்னே யார் உனக்குப் பவளம் வாங்கித்தாரேன்னு சொன்னது? என்று தொண்டையை அடைத்தாப்போலப் பேசினான்.

    பொன்னாச்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள். மறுபடியும் தலை குனிந்தாள். வேறு எங்கேயோ கவனத்தைச் செலுத்தியவள்போல வெட்ட வெளியைப் பார்த்துக்கொண்டே எனக்குக் கண்ணாலமாச்சே, தெரியாதா? என்று சொல்லி முடிக்குமுன் கண்ணாலமா! என்று கூவிவிட்டான் குமாரலிங்கம். அந்த ஒரே தொனியுடன் அவன் ஆவியில் பாதிக்கு மேல் பிரிந்து போய்விட்டதுபோல் தோன்றியது அவனுக்கு.

    அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. வரப்போகும் மாப்பிள்ளை பவழமாலை போடுவதால் பொன்னாச்சியின் பால்ய மனசு கலியாணத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இடங்கொடுத்தது என்று அவனுக்குப் பளிச்சென்று புலப்பட்டுவிட்டது.

    மாப்பிள்ளை பவழமாலை போடறாரா? என்றான்.

    பதிலில்லை. ஆனால் சூள் கொட்டினாள்.

    குமாரலிங்கம் நிதானித்தான். பொன்னாச்சியின் கால்கள் அங்கிருந்து விலகிவிடத் துடித்தன.

    அவன் நெஞ்சில் ஊறிக்கிடந்த அன்புத்தேன் மெல்ல வறட்சியடைவது போன்ற ஒர் உணர்ச்சி ஏற்பட்டது. அந்தத் தேனின் ருசியை அவன் அனுபவியாதபடி ஒரு பஞ்சால் ஒற்றி எடுத்து அக்னியில் வீசியெறிந்ததுபோல அந்த நெஞ்சில் ஒரு வேதனை கண்டது. பொன்னாச்சியை அவ்வளவு தீவிரமாக அவன் காதலிப்பதாக அப்பொழுதுதான் அவன் முற்றிலும் உணர்ந்தான்.

    உணர்ச்சியின் உத்வேகத்துடன் முன்பின் யோசியாமல், பொன்னு, உனக்குப் பவழமாலைதானே முக்கியம்? நான் போடறேனே அதை? என்னை... என்று துடிதுடித்துக் கூறினான்.

    பொன்னாச்சிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் ஒரு பைத்தியக்காரன் போலிருந்தான் அவள் கண்களுக்கு.

    மாமா, நீ என்ன ஜாதி நான் என்ன ஜாதி? என்று கேட்டுக் கொல்லென்று சிரித்துவிட்டாள்.

    அவளது இனிய குரல் அவன் காதில் அப்பொழுது

    Enjoying the preview?
    Page 1 of 1