Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ooty Varai Ularu..!
Ooty Varai Ularu..!
Ooty Varai Ularu..!
Ebook169 pages1 hour

Ooty Varai Ularu..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாவற்றிலும் சர்ச்சைகளை காண நினைக்கும் இன்றைய சமூகத்தில் சிரிக்க வைக்க தெரிந்தவர்கள் மட்டுமே மிகவும் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் இந்த இரட்டை காமெடியன்கள், இன்னமும் நிறைந்த நகைச்சுவை கதைகளை எழுதி வாசகர்களை மதிக்க வேண்டும்.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580117408996
Ooty Varai Ularu..!

Read more from Balaganesh

Related authors

Related to Ooty Varai Ularu..!

Related ebooks

Related categories

Reviews for Ooty Varai Ularu..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ooty Varai Ularu..! - Balaganesh

    http://www.pustaka.co.in

    ஊட்டி வரை உளறு..!

    Ooty Varai Ularu..!

    Author :

    பாலகணேஷ்

    Balaganesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balaganesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை:

    ஆ‘சிரி’யர்கள் உரை :

    நந்துசுந்து

    பாலகணேஷ்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாழ்த்துரை:

    எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, 1967 -ல், எனது தந்தை சித்ராலயா கோபு வசனமெழுதிய ஊட்டி வரை உறவு படம் ரிலீஸ் ஆனது. வழக்கம்போல் நாகேஷ்- பாலையா-சச்சு காம்பினேஷனில் நகைச்சுவையை வெளுத்து வாங்கியிருந்தார் கோபு. ஆனால், சிவாஜி, முத்துராமன், வி கே ஆர், சுந்தரிபாய், எல் விஜயலக்ஷ்மி என்று அந்த படத்தில் அனைவருக்குமே நகைச்சுவை பாத்திரம்தான். எனவே, ஊட்டி என்றாலே எனக்கு இந்தப்படம்தான் நினைவுக்கு வரும். ஊட்டி என்றாலே எனக்கு சிரிப்புதான்.

    திடீரென்று ஒரு நாள், நண்பர் கணேஷ் பாலா போன் செய்தார்.

    நானும், நண்பர் நந்து சுந்து அவர்களும் சேர்ந்து ஒரு சரித்திர நகைச்சுவை புதினம் ஒன்றை எழுத உள்ளோம். அதற்கு தலைப்பாக ஊட்டி வரை உளறு என்று வைக்க நினைக்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடம் சொல்லி, அதற்கு அவரிடம் அனுமதி வாங்கி தாருங்கள். அவர் மனம் புண்படக்கூடாது அல்லவா?’ - என்று கேட்க, தந்தையிடம் அனுமதி கேட்டேன்.

    ஊட்டி என்னுடையது அல்ல.! அவங்களை ஆளுக்கொரு மலை உச்சியிலே நின்னுகிட்டு எவ்வளவு வேணும்ன்னாலும் உளற சொல்லு. எனக்கு ஆட்சேபனையே இல்லை என்று சொன்னார், எனது தந்தை சித்ராலயா கோபு. நான் கணேஷ் பாலாவிடம் அவர் கூறியதை சொன்னேன்.

    மீண்டும் ஒரு போன் கால், கணேஷிடம் இருந்து.!

    நந்து சுந்துவும், நானும், எங்கள் நகைச்சுவை நாவலை முடித்து விட்டோம். நீங்கள்தான் முன்னுரை எழுத வேண்டும் என்றார். கணேஷ் என்னை எப்போதும் நரசிம்ம பல்லவர் என்றுதான் கூப்பிடுவார். ஊட்டி வரை உளறு- புதினத்திற்கு என்னை முன்னுரை எழுத சொல்வதற்கு என்ன காரணம் எ!ன்று யோசித்தேன். சரித்திர புதினங்களை எழுதுபவன் என்பதாலா, அல்லது ஊட்டி வரை உறவு எழுதிய நகைச்சுவையாளரின் மகன் என்பதாலா? அவரையே கேட்டேன்.

    மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர கதையை குமுதத்தில் எழுதியதால் உம்மை கேட்கிறேன் என்றார், கணேஷ் பாலா.! வானரதம் என்று நான் குறிப்பிட்டிருந்தது உதகமண்டலம் என்கிற ஊட்டி. எனவே, இந்த தகுதி போதும் என்று அவர் கூறியதால், நான் இதற்கு முன்னுரையை எழுதி தர இசைந்தேன்.

    எது எப்படியோ, பத்திரிகையில் பணிபுரிவதால், அப்போதைக்கு அப்போதே எனக்கு வேலைகளை முடித்துவிட வேண்டும். என்கிற எண்ணத்தை கொண்டவன். எனவே, அவர் புதினத்தை முடித்தவுடன், இரவோடு இரவாக படித்து முடித்துவிட்டு, இதோ விடியலில் முன்னுரையையும் தயார்.

    இரண்டு பேர்கள் சேர்ந்து ஒரு காரியத்தை செய்ய முடியுமா.? போர்க்கலையில் பெரிய பழுவேட்டரையரும், சிறிய பழுவேட்டரையரும் இணைந்து செயல்படலாம். அரசியலிலும், இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்படலாம். ஆனால் நகைச்சுவையில் அவ்வாறு இருவர் சேர்ந்து களம் இறங்க முடியுமா?. லாரல் ஹார்டி, கவுண்டமனை-செந்தில் என்று கூறினாலும், நகைச்சுவை காட்சிகளை எழுதுபவர் ஒருவர்தான்.

    இருவர் சேர்ந்து எழுதுவதென்றால், இருவருக்குமே நகைச்சுவை உணர்வு இருந்தால் மட்டுமே முடியும். அதன்பின்னும், இருவருக்கும் ஒரே அலைவரிசை இருக்க வேண்டும்.. காரணம், நகைச்சுவை உணர்வு இருவரை இணைய வைத்தாலும், ஒருவர் சம்பவ நகைச்சுவைகளிலும், மற்றொருவர் கற்பனை நகைச்சுவைகளிலும் சமர்த்தராக இருந்தால், அந்த நகைச்சுவை சோபிக்காது. இவர் எழுதியது தனியாகவும், அவர் எழுதியது தனியாகவும், தண்ணீரில் எண்ணெய் மிதப்பது போன்று தனியாக நிற்கும்.

    விக்கிரமாதித்யன்-பட்டி, அக்பர்-பீர்பால், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன், ஸ்ரீதர்-கோபு. என்று இருவர் இணைந்தாலும், இதில் முதல்வர் கதாநாயகனாகவும், பின்னவர் நகைச்சுவை விகடகவியாகவுமே இருப்பார்கள். எனவேதான் எனக்கு! குழப்பம். நந்து சுந்து- கணேஷ் பாலா என்கிற இவர்கள் இருவரில், யாரை முதலில் அழைப்பது, யாரை பின்னால் குறிப்பிடுவது என்று. யார் முந்தி, யார் பிந்தி என்று இல்லாமல், இருவரும் சேர்ந்து சக்கை போடு போட்டிருக்கிறார்கள்.

    கல்கியின் பொன்னியின் செல்வன் இலக்கியவாதிகளை, வாசகர்களை மிகவும் பாதித்த ஒரு புதினம். சரித்திர ரீதியாக அந்த புதினம் மற்றவர்களை பாதித்திருப்பதில் வியப்பில்லை. ஆனால நகைச்சுவை ரீதியாக இருவரை கல்கி பாதித்திருக்கிறார், என்பது ஒரு புதிய தகவல்.

    ஆயிரம் தலை உடைய காளி மிகவும் விகார தோற்றமுடையவள். அந்தத் காளி கோவிலுக்கு இரவில் தங்குவதற்காக தெனாலி ராமன் சென்றான். அந்த கோவிலில் தூங்காதே! அங்கே காளி நடமாடுகிறாள்" - என்று ஊர்மக்கள் எச்சரித்தார்கள். அவனோ, அதனை லட்சியம் செய்யாமல், அங்கே தங்க, இரவு உக்கிர காளி அவன் கண்முன்பாக ஏராளமான தலைகளுடனும், கைகளுடனும் தோன்றினாள்.

    அச்சுறுத்தும் தோற்றத்தில் நின்ற காளியை, தெனாலிராமன் பார்த்துவிட்டு சிரிக்க, காளி கோபத்துடன் எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டாள்.

    எங்களுக்கெல்லாம் ஜலதோஷம் வந்தா, ஒரு மூக்கு குடைச்சலையே தாங்க முடியலை. துடைச்சுக்கிட்டே இருக்கோம். உனக்கு ஜலதோஷம் வந்தா இத்தனை மூக்கை எப்படி துடைச்சுப்பேன்னு நினைச்சு பார்த்தேன். சிரிப்பு வந்துடுச்சு. என்றான் தெனாலிராமன். காளியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டு, அவனுக்கு விகடகவி பட்டத்தை தந்தாள்.

    இது போன்றுதான், பொன்னியின் செல்வன் என்கிற காவியத்தை, தங்களது நகைச்சுவை உணர்வால் பாமரனிடம் எடுத்து சென்றிருக்கின்றனர், இவர்கள். இரட்டை புலவர்கள் என்பது போன்று இரட்டை காமெடியர்கள் என்று இவர்களை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ஒருவரை விட்டுவைக்கவில்லை இவர்கள். வெந்தயத்தேவன், மீந்தவை தொடங்கி, நயன்தாராவின் வி ஜாக்கெட் வரை எல்லாரையும் இழுத்து போட்டு, நகைச்சுவையாக ஒரு கதையை கூறியிருக்கிறார்கள்.

    எல்லாவற்றிலும் சர்ச்சைகளை காண நினைக்கும், இன்றைய சமூகத்தில் சிரிக்க மட்டுமே வைக்கத்தெரிந்தவர்கள் மிகவும் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில், இந்த இரட்டை காமெடியன்கள், இன்னமும் நிறைய நகைச்சுவை கதைகளை எழுதி வாசகர்களை மகிழ்விக்க வேண்டும்.

    எனக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் மிகவும் சீரியசான விஷயங்களை பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துவதால், நகைச்சுவை எழுத நேரமில்லை. அப்படியே நான் நகைச்சுவையாக எழுதினாலும், யாரோட மகன் என்று கூறி எல்லா புகழையும் தந்தைக்கு கொடுத்து விடுகிறார்கள். எனவேதான் எனது வழி தனி வழி என்று சரித்திரம் பற்றி எழுதுகிறேன்.

    இந்த இரட்டை காமெடியன்கள் தனிப்பட்ட திறமையை பற்றி சொல்லத்தான் வேண்டும்.

    இந்த நூல் ஒரு காமெடி மரம் என்றால், இதற்கு ஆணிவேராக நின்று, நிலத்தின் அடியில் இருக்கும் நகைச்சுவை நீரை உறிஞ்சி மரத்திற்கு பலம் சேர்கிறார், கணேஷ் பாலா. நந்து சுந்துவோ நகைச்சுவை தோட்டத்தின் தோட்டக்காரராக, பூவாளியில் தனது நகைச்சுவை தண்ணீரை பாய்ச்சி, சிரிப்பு பூக்களை மலர வைக்கிறார்.

    எனவே, ஊட்டி வரை உளறு என்கிற இந்த நூல், புன்னகை மலர்கள், நகைச்சுவை கனிகள், ஆகியவற்றுடன் விளங்குகின்றன. நடுநடுவே அணில் கடி த்த பழங்கள் இருந்தாலும், மரத்தின் வளமையை அது பாதிக்கவில்லை. இந்த நகைச்சுவை மரத்தின் கீழே அவசியம் அனைவரும் இளைப்பாறி, சிரிப்பு மலர்களின் வாசத்தையும், நகைச்சுவை கனிகளின் சுவையையும் அனுபவிக்க வேண்டும்.

    இருவரும் இப்படியே ஒன்றாக இணைந்திருந்து,

    ஊட்டி வரை உளறுவை தொடர்ந்து,

    கொடைக்கானல் வரை கோளாறு,

    ஏலகிரி வரை எகிறு

    மூணார் வரை முக்கு

    குற்றாலம் வரை குமுறு

    டார்ஜிலிங் வரை தாண்டு

    என்று பல புதினங்களை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்

    ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

    ஆ‘சிரி’யர்கள் உரை :

    நந்துசுந்து

    இதை என்னுரை என்று சொல்வதை விட மின்னுரை என்று சொல்லலாம். ஏனெனில் சங்கப் பலகை என்ற மின் குழுவுக்காக எழுதப்பட்ட கதை இது.

    இதை கதை என்றும் சொல்லிவிட முடியாது. இது ஒரு தொடர். தொடர் வண்டி. ஆனால் இரண்டு எஞ்சின் பூட்டிய தொடர் வண்டி.

    நல்ல வேளையாக இரண்டு எஞ்சின்களும் எதிர் எதிர் திசையில் போகாமல் வண்டியை ஒரே திசையில் இழுத்துச் சென்று விட்டன.

    பத்திரிகைகளில் இரண்டு எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கள் வந்துள்ளன. பலர் சேர்ந்து எழுதும் ரிலே தொடர் கூட வந்துள்ளது. அவைகள் எல்லாம் பொதுவாக சமூகக் கதைகள்.

    இதுவரை காமெடி கதையை இரண்டு எழுத்தாளர்கள் எழுதியதாக

    Enjoying the preview?
    Page 1 of 1