Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koondu Paravai
Koondu Paravai
Koondu Paravai
Ebook158 pages56 minutes

Koondu Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித வாழ்க்கையில் வறுமை என்னும் கொடிய நோயினால் சிறார்கள் படும் துன்பங்களையும், பொறாமை என்ற கொடிய விஷம் தன்னையே அழித்தது எவ்வாறு என்பதையும், மூடநம்பிக்கையால் கருப்புப் பூனையை இழந்த குட்டிகளை பற்றியும், நாவடக்கத்தினால் உயர்ந்த மனிதரெல்லாம் தெய்வமாக மாறுவதையும் கூண்டுப் பறவையில் வாசித்து மகிழலாம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580160509849
Koondu Paravai

Read more from W.R. Vasanthan

Related to Koondu Paravai

Related ebooks

Reviews for Koondu Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koondu Paravai - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூண்டுப் பறவை

    (சிறுகதைகள்)

    Koondu Paravai

    (Sirukathaigal)

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அழியாத செல்வம்

    2. தாயின் தவிப்பு

    3. அடி மரம்

    4. வாடாத நட்பு

    5. மடி நெருப்பு

    6. தகாத ஆசை

    7. எது பெருமை?

    8. கறுப்புப் பூனை

    9. விடா முயற்சி

    10. மன விலங்கு

    11. நாவடக்கம்

    12. கூண்டுப் பறவை

    முன்னுரை

    மனித வாழ்க்கை மிகவும் அழகானது, மகிழ்ச்சியானது. எப்போது என்றால், நம் மனதை அழகாக வைத்திருப்பது வரை. மனித உறவில் மிகவும் முக்கியம் பெறுவது புரிந்து கொள்ளுதல். பிறரைப் பற்றிய தவறான எண்ணங்களே போட்டி, பொறாமை, பகை போன்றவற்றை நம்மிடம் வளர்க்கின்றன. பிறரிடம் இருக்கும் நல்ல குணங்களையே பார்க்கப் பழகிக்கொண்டால், வேண்டாத வன்மம் வளர்வதில்லை.

    களைபோல் நெஞ்சில் முளைக்கும் எதிர்மறை எண்ணங்களே வளர்ந்து நச்சு மரமாகி, அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமாயின், அன்பு என்ற நீருற்றி மனிதநேயம் என்ற நற்பயிரை வளர்ப்பதே ஒரே வழியாகும்.

    இந்த பூமியைப் படைத்த இறைவன் யாருக்கும் எந்தப் பாரபட்சமும் காட்டவில்லை. காற்றையும், நீரையும், நிலத்தையும் பொதுவில்தான் கொடுத்தான். வாழ்க்கையை மகிழ்ந்து சுவைப்பதற்கு எத்தனை, எத்தனை வண்ணங்கள், சுவைகள், வாசனைகள்! அள்ளிக் கொடுத்த வள்ளல் அவன். அவற்றை நமக்கு மட்டுமே உரித்தானது என்று யாரும் சொந்தம் கொண்டாடுவதற்கில்லை.

    ‘நான்’ என்ற அகம்பாவ விதை முளைத்து, ‘எனது’ என்ற சுயநலம் நச்சுமரமாக வளர்ந்து நிற்பதே இன்று இந்த பூமியைப் பாழ்படுத்தி, நாசம் செய்யும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

    இன்றைய அறிவியல் உலகம், மனித வாழ்க்கைப் பாணியையே புரட்டிப்போட்டுவிட்டது. அது தரும் வசதிகளில் மயங்கி, அடிப்படை மனிதத் தன்மைகளைப் பறிகொடுத்து வருகிறோம். மனித நேயத்தையும், காருண்யத்தையும் வளர்த்துக் கொள்ளாவிடில், நாளைய உலகில் மனிதனின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும்.

    ‘கூண்டுப் பறவை’ என்ற இச்சிறுகதைத் தொகுப்பில், எதிர்மறைச் சிந்தனைகளால் பிறரைப் புரிந்துகொள்ளாமல் வன்மம் கொள்ளும் கதாப்பாத்திரங்களைச் சந்திப்பீர்கள். தங்கள் குறைகளை அவர்கள் உணர்ந்து திருத்திக்கொள்ள உதவும் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் காண்பீர்கள்.

    பலவிதமான வேறுபட்ட சூழல்களில் நிகழும் கதைக் களன்களில் மனிதநேயமும், காருண்யமும் அடிநாதங்களாக இழையோடும்படி கதைகளை அமைத்திருக்கிறேன். இவை நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    முகத்தைத் திருத்திக்கொள்ள கண்ணாடி உதவுவதைப் போல, நமது மனக்குறைகளைக் காட்டும்

    கண்ணாடியாக இக்கதைகள் உதவும் என்ற நம்பிக்கையில் உங்கள் கைகளில் தருகிறேன்.

    பன்னிரண்டு கதைகளுக்கும் ஓவியங்களை நானே தீட்டியுள்ளேன். கற்பனையில் தோன்றிய பாத்திரங்களுக்கு வடிவம் கொடுப்பது கடினமானதாக இருந்தாலும் இனிமையானதாகவும் இருந்தது.

    இந்நூல் உங்கள் மனச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் நல்லுணர்வுகளை விடுவித்து உங்களை மகிழ்ச்சி வானில் சிறகடிக்க வைத்தால், அதை இவ்வெளியீட்டின் பயனாகக் கருதி நானும், பதிப்பகத்தாரும் மகிழ்வோம். வணக்கம்.

    - வி.ர. வசந்தன்

    1. அழியாத செல்வம்

    நாளை மறுநாள் நண்பர்களோடு சேர்ந்து செல்வதாக இருந்த சுற்றுலாவைப் பற்றிய இனிய நினைவுகளில் மூழ்கியிருந்தான் சிலம்புராசன். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலங்களை மட்டும் பார்வையிடும்படி, பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பயணத்தை நினைக்கையிலேயே அவனுக்கு மனமெல்லாம் மகிழ்ச்சியால் பூரித்தது.

    திப்புசுல்தான் ஆண்ட மைசூர் அரண்மனை, செஞ்சிக்கோட்டை, நாயக்க மன்னர்களின் மதுரை மஹால், திருவிதாங்கூர் ராஜாக்களின் பத்மனாபபுரம் கோட்டை என்று விரிந்தது அந்தச் சுற்றுலா.

    எத்தனை நாடகங்களுக்குத் தன் தந்தை ராஜாக்களையும், ராணிகளையும், மந்திரிகளையும், படைவீரர்களையும் தன் ஒப்பனைத் திறமையால் தத்ரூபமாக கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். சாதாரண மனிதர்கள் அவர் கைவண்ணத்தால் மறுவடிவம் பெற்று விளக்கொளியில் வீரவசனம் பேசுவதைக் கேட்டுக் கேட்டு, அவன் மனதில் பண்டைய மாமன்னர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடங்காத ஆவல் உருவாகியிருந்தது. எனவே அருகிலிருக்கும் நூல் நிலையத்திற்குச் சென்று ஏராளமான வரலாற்றுப் புத்தகங்களையும் கதைகளையும் தேடித் தேடி வாசிப்பான். அப்போது அம்மன்னர்களால் கட்டப்பட்டு அவர்கள் வாழ்ந்த பிரம்மாண்டமான அரண்மனைகளைத் தன் கற்பனையில் கண்டு மகிழ்வான். இப்போது அவற்றையெல்லாம் நேராகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தான் அவன்.

    கற்பனை வெள்ளத்தில் அவன் மிதந்து கொண்டிருந்த வேளையில், வெளியே சென்றிருந்த அவன் தகப்பனார் மிகுந்த பரபரப்போடு வருவதைக் கண்டு, என்னவோ! ஏதோவென்று! புரியாமல் எழுந்து நின்றான். செருப்பை வெளியே உதறியவர், அவனை வரும்படி செய்கை காட்டிவிட்டு அவசரமாக வீட்டினுள் சென்றார்.

    பதற்றமடைந்தவனாக எழுந்து அவர் பின்னால் ஓடியவன் என்னப்பா எதுக்குக் கூப்பிட்டீங்க என்று கேட்டான் பரபரப்புடன்.

    ஒண்ணுமில்லடா சிலம்பு... வாகைக் குளம்னு ஒரு குக்கிராமம் இங்கயிருந்து நூறு மைல் தொலைவுல இருக்கு... அங்கு கோயில் திருவிழாவுல நாடகம் போடறாங்க... கட்டப்பொம்மன் நாடகமாம். கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு மேல் நடிக்கறாங்க... எல்லோருக்கும் மேக்கப் போட்டாகணும். நான் உதவிக்கு அழைச்சுட்டுப் போவேனே கண்ணுச்சாமி, அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு போயிட்டான்... வேற யாரையாவது அழைச்சிட்டுப் போவலாம்னு தான் இவ்வளவு நேரமும் அலைஞ்சேன்.... யாரும் கிடைக்கல அதனால...

    அவர் வார்த்தைகளை முடிக்கவில்லை. அதனால என்னப்பா என்று தவித்தான் சிலம்புராசன்.

    நீ தான் நல்லா தாடி மீசை ஒட்டுவியே... எங்கூட வா... போயிட்டு வந்திரலாம் என்றார் அவர்.

    அப்பா... வந்து நாளன்னிக்கு சுற்றுலா இருக்கு... நான் எப்படி என்று அவன் தயங்க,

    நாளைக்குத் தானேடா நாடகம்... ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சுரும்... பஸ் புடிச்சு பதினோரு மணிக்குள்ள வந்துடலாம்... கவலைப்படாதே என்றார் அவர்.

    வரவர நாடகக் கலையே நசிந்து வரும், இந்தக் காலக்கட்டத்தில் எப்போதாவதுதான் சிலர் நாடகம் போடுகிறார்கள். இப்படி ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால்தான் அப்பாவுக்கும் வருமானம் வரும்.

    வேறு வழியின்றிச் சம்மதித்தவன். ராத்திரி பதினோரு மணிக்குள்ள வந்திரலாமா என்றான் சந்தேகமாக.

    வந்துடலாம் சிலம்பு. ஏன் பயப்படற? சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுரு வாங்களாம்... அப்புறம் நமக்கு என்ன வேலை... பணத்தைக் கொடுத்துட்டாங்கன்னா இடையிலகூட கிளம்பிடலாம் என்றார் அவர் நம்பிக்கையுடன்.

    ***

    மறுநாள் மதியம் வாகைக்குளம் கிராமத்திற்குள் பேருந்து நுழைந்த போது, அங்கு கோயில் திருவிழா அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. அப்பாவோடு ஒப்பனைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அவர் பின்னால் நடந்த சிலம்புராசனுக்கு மனமெல்லாம் சுற்றுலாவின் மீதே இருந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்து சீக்கிரமாகக் கிளம்பிட வேண்டும் என்று கண்ணில்பட்ட சாமிகளையெல்லாம் வேண்டிக்கொண்டான்.

    ***

    வயலும், வாழைத் தோப்புமாகப் பச்சைப் பசேலென்று விரிந்து கிடந்த அந்தக் கிராமமே திருவிழா மகிழ்ச்சியில் மிதக்க, திரும்பிய திசையெங்கும் பலவர்ணக் காகிதத்தோரணங்கள் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. குலைவாழை கட்டிய அலங்கார வளைவுகளும், மாவிலை, தோரணங்களும் ஆங்காங்கே வரவேற்க, ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்களும், திரைப்படப்பாடல்களும் ஆரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன.

    நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல, ஒரு பெரும் திடலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையைப் பார்த்து பிரமித்தான் சிலம்புராசன். இந்தச் சின்ன கிராமத்தில் இவ்வளவு பெரிய மேடையில் நாடகமா என்று வியந்தவாறு அவன் நடக்க, ஆளுயரத்திற்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளில் நாடகப் பாத்திரங்களான கட்டபொம்மனும், எட்டப்பனும், வெள்ளையத் தேவனும், பானர்மானும் கம்பீரமாகக் காட்சியளித்தனர்.

    அவர்களை அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் அவனது அப்பாவிடம் சொன்னார். போஸ்டரெல்லாம் பிரமாதமா அடிச்சுட்டோம்... இனி உங்க கை வண்ணத்துலதான் கதாபாத்திரங்களை உயிர்த்துடிப்போட உருவாக்கிக் காட்டணும் நீங்க.

    அதுக்கு என்னங்க.. அதுதானே என்னோட வேலை. எல்லோரும் திருப்தி அடையற மாதிரி செஞ்சுடறேன் என்றார் அப்பா, பணிவுடன்.

    மாலை ஆறு மணிக்கு நாடகம் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1