Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkilaatha Kirukkalgal
Ilakkilaatha Kirukkalgal
Ilakkilaatha Kirukkalgal
Ebook281 pages1 hour

Ilakkilaatha Kirukkalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசிரியர் எஸ்.எல். நாணு தனது முகநூல் பக்கத்தில் கிறுக்கிய பல கிறுக்கல்களின் தொகுப்பு.. இதில் புத்தக அறிமுகம், சினிமா விமர்சனம், கடந்து போன சந்திப்புகள், பிரயாணக் கட்டுரைகள்.. இவற்றோடு பல விஷயங்களைப் பற்றின ஆசிரியரின் பதிவுகள் தொகுக்கப்பட்ட சுவாரஸ்யமான நூல்.. படிப்பவர்ளின் மனதை நிச்சயம் இதமாக வருடிவிடும்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580142310863
Ilakkilaatha Kirukkalgal

Read more from Sl Naanu

Related to Ilakkilaatha Kirukkalgal

Related ebooks

Reviews for Ilakkilaatha Kirukkalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkilaatha Kirukkalgal - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலக்கில்லாத கிறுக்கல்கள்

    Ilakkilaatha Kirukkalgal

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    பொருளடக்கம்

    என்னுரை

    நூல் அறிமுகங்கள்

    திரை விமர்சனங்கள்

    ஹைதராபாத் விஜயம்

    அம்பாசமுத்திரம் பயணக் குறிப்பு

    கடந்து போன சந்திப்புகள்

    இலக்கில்லாத கிறுக்கல்கள்

    நூலாசிரியரைப் பற்றி…

    சமர்ப்பணம்

    என்னையும் எழுதத் தூண்டிய உங்கள் அனைவருக்கும்

    என்னுரை

    வணக்கம் அன்பர்களே...

    நீ எழுதறது எல்லாமே கிறுக்கல் தானே? அதென்ன இல்லக்கில்லாத கிறுக்கல்கள் என்று நீங்கள் குரல் கொடுப்பது எனக்குக் கேட்காமலில்லை.

    இந்தத் தொகுப்பில் இடம்பெறுவது எல்லாமே நான் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவுகள் தான். இன்னது தான் என்று இல்லாமல் எதையெதையோ பற்றி கிறுக்கியிருக்கிறேன். சில பதிவுகள் தொடர்ந்து சில அத்தியாயங்களுக்கு நீளும்... ஆனால் அவற்றை தனிப் பதிவாகப் படித்தாலும் தொடர்ச்சிக்கு எந்த பங்கமும் வந்து விடாது என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

    இந்தப் பதிவுகளில் பல என் சொந்த அனுபவங்கள்... சில நான் கண்டு உள் வாங்கிய அனுபவங்கள்... சில கற்பனைகள்... ஆனால் கண்டிப்பாக புருடாக்கள் கிடையாது.

    இது ஒரு கதம்ப மாலை... முடிந்தவரை வகைப் படுத்தி அளிக்க முயற்சித்திருக்கிறேன்.

    குவிகம் பதிப்பகம் வெளியிடும் என்னுடைய பதினோராவது புத்தகம்... நாங்கள் இணைந்து பயணிக்க இன்னும் நிறைய இருக்கிறது...

    முகநூலில் பதிவுகள் போடும்போது நான் அவசரமாக கணினியில் தட்டச்சு செய்து பதிவிட்டேன். அப்போது சில எழுத்துப் பிழைகள்... தட்டச்சுப் பிழைகள் என் பார்வையில் படாமல் ஏமாற்றி விட்டன. ஆனால் என் சகதர்மணியின் பார்வையிலிருந்து அவை தப்ப முடியுமா? புத்தக வடிவில் வருவதற்காக எல்லாப் பதிவுகளையும் பொறுமையாகப் படித்து பிழை திருத்தம் செய்த என் சகதர்மணி திருமதி மீனாக்‌ஷிக்கு நன்றி.

    வழக்கம் போல் மேலட்டையை வடிவமைத்துக் கொடுத்த எனது மகள் திருமதி சிவகாமி லெஷ்மிநாராயணனுக்கு நன்றி.

    என்னுடைய கலையார்வத்தை சிறுவயது முதல் ஊக்குவித்த என் பெற்றோர்களுக்கு நன்றி…

    தொடர்ந்து என்னை ஆதரித்துவரும் வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி...

    இனி கிறுக்கல்களுக்குள் போகலாமா?

    எஸ்.எல். நாணு

    Mob.:9444005848

    நூல் அறிமுகங்கள்

    (1) சிவஞானம் – தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

    இந்தத் தொகுப்பில் சிவஞானத்தைத் தவிர்த்து தி.ஜ.வின் இன்னும் ஐந்து குறுநாவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    சுதேசமித்ரன் தீபாவளி மலரில் வெளியான குறுநாவல் என்று முன்னுரை சொல்கிறது. வருடம் குறிப்பிடப் பட வில்லை.

    வழக்கம் போல் நெருப்பின் மேல் மெல்லிய இழையில் பயணித்திருக்கிறார் தி.ஜ. பிறந்த குழந்தை இடம் மாறி வளர்வதாகப் பின்னர் எடுக்கப் பட்ட பல திரைப் படங்களுக்கு இந்தக் கதை முன்னோடியாக இருக்கலாமோ என்று எனக்குள் ஒரு சிந்தனை...

    சிவபெருமான் ஆல கால விஷத்தை உண்ட போது பார்வதி தேவி தன் திருக்கரத்தால் அவர் கழுத்தைப் பிடிக்க... விஷம் அங்கேயே நின்று ஈசனின் கழுத்து நீலமாகியது... இது முடிந்து ஈசனும் உமையாளும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வந்தமர்ந்த கிராமம் தான் நீலாண்டூர்... அதனால் அங்கு கோவிலில் ஆண்டவனின் பெயர் நீலகண்டன்... அம்பாளின் பெயர் கர கருணாம்பிகை...

    இந்தத் தொன்மையான சிறு கோவிலைக் காண சிவஞானம் படையாச்சி விஜயம் செய்வதிலிருந்து தான் கதை விரிகிறது.

    இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நீலாண்டூர் கோவில் குருக்களும் அவர் சம்சாரமும் மூணு மாதக் குழந்தையை அநாதையாக்கிவிட்டு பெரியம்மை தாக்கி அம்மனிடம் ஐக்கியமாகின்றனர். அந்தக் குழந்தை மாரிமுத்து படையாச்சியின் கைகளுக்குப் போக... குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கும் அவர் மனைவி யோகாம்பாளுக்கும்... அன்றிலிருந்து படையாச்சி மகனாக அவன் மாறுகிறான்... படையாச்சி மகனாகவே வளர்கிறான்...

    இருபதைந்து வருடங்களுக்குப் பிறகு... மாரிமுத்து இறந்த பிறகு... நில குத்தகைக்குச் சொந்தக்காரர் பஞ்சாமி ஐயர் மூலம் பிறப்பின் ரகசியம் சிவஞானத்துக்குத் தெரிகிறது...

    உண்மை தெரிந்த பிறகு அவன் நிலைப்பாடு என்ன? தன்னுடைய உரிமை பறிக்கப் பட்டு விட்டதாக அவனுக்குக் கோபம் கூட வருகிறது... தொடர்ந்து அவன் பயணிக்கும் பாதை என்ன? அவன் படும் அவலங்கள் என்ன? இறுதியில் பஞ்சாமி ஐயர் மூலமாகக் கிடைக்கும் தெளிவு தான் என்ன?

    இதை தி.ஜ. தன்னுடைய பாணியில் விவரிக்கிறார்,,

    சென்னை தனி உலகம். நம்ம ஊரும் இந்தப் பட்டணமும் மலையும் மடுவும் போல. அங்க நாற்பது நிமிஷத்துக்கு ஒரு பஸ் இல்லை. இங்கே நிமிஷத்துக்கு ஒரு பஸ் பறக்கிறது. நம்மை ஏற்றிப் போகிற பஸ்ஸோ இல்லையோ ஏதாவது ஒன்று ஓடிக் கொண்டு தானிருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை போதாதென்று வாய் ஓயாமல் சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

    அந்தக் காலத்து சென்னைப் பட்டிணத்தைப் பற்றிய அவர் வர்ணனை... இந்தக் காலத்து டிராபிக்கைப் பார்த்து என்ன எழுதியிருப்பாரோ...

    திரை உலகத்தையும் அவர் விட்டு வைக்க வில்லை... உதவி டைரக்டர்கள் பண்ணும் அலம்பல்களையும், துணை நடிகர்களின் அவலங்களையும், அந்தக் காலத்து ஹீரோக்கள் காட்டும் பந்தாக்களையும் கோடிட்டிடுக்கிறார்,

    நான் யார்? என்ற ரமணரின் கேள்வி சிவஞானத்தின் மனதிலும் எழுகிறது...

    கெட்ட புள்ளைங்க தான் உண்டு... கெட்ட தாயாருங்க இருக்கவே முடியாது

    இது தி.ஜ.வின் பஞ்ச் டையலாக்...

    படிக்காதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய குறுநாவல்.

    (2) நாலாவது சார் – தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

    தி. ஜானகிராமன் குறுநாவல்கள் தொகுப்பில் இரண்டாவது குறுநாவல் நாலாவது சார்.

    கிராமத்து மண்வாசனை, நில வரப்பின் வர்ணனைகள், கிராமத்து வீட்டின் விவரிப்பு, மண் சார்ந்த பேச்சு வழக்கு...

    தி.ஜ.வின் டிரேட் மார்க் விஷயங்கள் எல்லாம் இதிலும் உண்டு. அது உலகறிந்த விஷயம் என்பதால் அதைப் பற்றி நான் பிரஸ்தாபிக்கப் போவதில்லை.

    ஆனால் இந்தக் குறுநாவலின் விசேஷம் என்னவென்றால்... ஒவ்வொரு கதாப்பத்திரத்தின் வடிவமைப்பு...

    நாலாவது சார் சுப்பையாவின் காம்ப்ளிகேடட் கதாபாத்திரத்திலிருந்து வர்ணனைக்காக மட்டுமே முளைத்த நாயனம் கலியபெருமாள் வரை மனதில் நிற்கிறார்கள்.

    நான்காம் வகுப்புக்குப் பாடம் எடுப்பவர்... அதனால் நாலாவது சார்... இவருக்கும் சிறுவன் முத்தப்பனுக்கும் இடையே விரியும் நட்பு தான் இந்தக் குறுநாவலின் ஜீவ நாடி...

    இந்தக் காலத்துச் சிறுவர்கள் சிறுமியர் தோண்டித் துருவி எல்லாம் கேட்பார்கள் என்று கூறுகிறோம். ஆனால் சிறுவன் முத்தப்பன் மூலம் இந்தக் காலத்துச் சிறுவனை அந்தக் காலத்துலேயே படைத்து விட்டார் தி.ஜ.

    குழந்தைப் பிறப்பைப் பற்றி சுப்பையாவிடமும்... (குழந்தைப் பிறப்புப் பற்றிப் பேசினாலே அது அசிங்கம் என்று ஒதுக்கி விடுவார்... அதனால் தான் கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் அவருக்கு வாரிசு இல்லையோ?) தொடர்ந்து அவன் அம்மாவிடமும் முத்தப்பன் கேட்கும் கேள்விகளே இதற்குச் சான்று. (அம்மா ரொம்பவே தர்ம சங்கடப் படுகிறாள்)

    அதே சமயம்... தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று முத்தப்பன் காட்டும் வெறி... தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய சுந்தரேசனை அம்பால் துளைக்க வேண்டும்... ராஜபாளையம் நாய் வளர்த்து அவன் மேல் ஏவி சேர் சேராக அவன் சதையைக் கவ்வச் செய்ய வேண்டும், கால் இடறி அவனை விழ வைத்து பீட் அடிக்க வேண்டும் என்று அவன் திட்டம் தீட்டுவது ஒரு சிறுவனின் வெகுளித்தனமாகப் பட்டாலும் சிறுமை கண்டு சீறி எழு என்ற எண்ணம் அவன் ஆழ் மனதில் இருப்பதை பளிச்சென்று சொல்கிறார் ஆசிரியர்.

    மகன் சுந்தரேசனால் கைவிடப் பட்ட சீதையாச்சிக்கு அடைக்கலம் கொடுக்கும் நாலாவது சார்... அவள் விருப்பப் பட்டதன் பேரில் அவளை காசி ராமேஸ்வரம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்து (அதற்காக அவர் ராப்பகலாக பஞ்சு பொம்மை செய்து விற்று முன்னூறு ரூபாய் சேமிக்கிறார்) இறுதியில் அது முடியாமல் சீதையாச்சி உயிர் துறக்கும் போது அவர் உடைந்து போவது நெகிழ்ச்சி. அதே சமயம் இயலாமையின் வெளிப்பாடாக திடீரென்று ஆவேசத்துடன் பொங்கி எழுந்து சுந்தரேசனை பீட் அடிப்பது அந்நியன் ரகம்.

    இலை மறைவு காயாக விஷயங்கள் சொல்வதில் தி.ஜ. பி.ஹெச்.டி. பெற்றவர்... இந்தக் குறுநாவலிலும் அதை உணரலாம்...

    சுப்பைய்யா மற்றும் முத்தப்பனின் வயது வரம்பில்லாத நட்பின் வெளிப்பாடு தான் நாலாவது சார்.

    (3) இது மிஷின் யுகம் – புதுமைப் பித்தன் சிறுகதைகள்

    அகல்யை, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமி பிள்ளையும், டாக்டர் சம்பத், கட்டில் பேசுகிறது உள்ளிட்ட மொத்தம் 109 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கிண்டிலில் முப்பத்தொம்பதே ரூபாய்க்குக் கிடைத்தது. உடனே வாங்கி விட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை அதிக ஜோடனைகள் இல்லாத எளிமையான நேரிடை எழுத்து புதுமைப்பித்தனுடையது. அதனாலேயே நான் அவர் கட்சி.

    இதில் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு பொக்கிஷம்... அதிலும் செல்லம்மாவைப் பற்றி ஒரு தீஸிஸே எழுதலாம்... கடவுளே மானிடனாக வந்து கந்தசாமிப் பிள்ளையுடன் பழகுவதும் ஒரு காவியம்.

    அகல்யையில் ஆரம்பித்து வரிசையாகப் படித்துக் கொண்டு வந்த என்னை செல்லம்மாள் ரொம்பவே பாதித்தாள்... தொடர்ந்து வந்த இது மிஷின் யுகம் இந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கச் செய்து புதுமைப் பித்தன் ஒரு தீர்கதரிசி என்று என்னுள் ஒரு எண்ணம் எழச் செய்தது. அதனால் உடனே பதிவிடுகிறேன்...

    இது மிஷின் யுகம் – அந்தக் காலக் கட்டத்துச் சிறுகதை வடிவங்களுக்கு மாறாக ரொம்பவே சின்னக் கதை. (இன்றைய ஒரு பக்கக் கதைகளை விடக் கொஞ்சம் பெரிசு).

    இந்தக்காலத்து இளைஞர்களை... எப்போதும் வேலையிலேயே மூழ்கியிருக்கிறார்கள்... வெளி உலகமே தெரிவதில்லை... அவர்கள் வாழ்க்கையே இயந்திரத்தனமாகி விட்டது என்று நாம் சலித்துக் கொள்கிறோம்.

    இதை புதுமைப் பித்தன் அந்தக் காலத்துலேயே படைத்து விட்டார். பிழைப்பு... வேலை என்று வந்து விட்டால் மனிதன் எப்படி இயந்திரமாகி விடுகிறான் என்பதை ரொம்பவே எளிமையாக இது மிஷின் யுகம் சிறுகதையில் சித்தரிக்கிறார்.

    நான் அன்று ஒரு முழு நீளம் பெயர் கொண்ட – ஹோட்டல் காரர்களுக்கும் நாடகக் காரர்களுக்கும் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்

    என்று புதுமைப் பித்தனுக்கே உண்டான நகைச்சுவை பாணியில் கதையை ஆரம்பிக்கிறார்.

    உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள்.அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்ற அதிகாரங்கள்... இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு...

    இது தான் அந்த ஹோட்டலைப் பற்றிய புதுமைப் பித்தனின் வர்ணனை.

    இப்போதெல்லாம் ஹோட்டலில் வரிசைக்கு ஒரு சர்வர் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் மொத்தமே ஒரு சர்வர் தான் இருப்பார்... மிஞ்சிப் போனால் இரண்டு...

    இது கிருஷ்ணா என்ற சர்வரைப் பற்றிய கதை...

    என்ன இருக்கு? என்று ஆசிரியர் கேட்டவுடன் கடல் மடை திறந்தது போல் பட்சணப் பெயர்கள் அவருடைய செவித் துளைகளைத் தகர்க்கின்றன...

    அவன் சொன்ன பட்டியலில் இல்லாத பூரி கிழங்கை இவர் உச்சரித்தவுடன் சலனமில்லாமல் இயந்திரத் தனமாக உள்ளே போகிறான்...

    தொடர்ந்து யார் யாரோ ஏதேதோ ஆர்டர் செய்கிறார்கள்...

    இடையே என்னப்பா எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? என்று ஒருவர் அதிகாரமாகக் கத்த இதோ வந்து விட்டது சார் என்று கெஞ்சலாகக் குரல் கொடுக்கிறான்...

    இடையே இன்னொரு கூட்டம் வந்து ஸேவரி வகை கேட்க அதையும் ஸ்விட்ச் தட்டியது போல் கட கடவென்று ஒப்புவிக்கிறான்...

    இதற்கிடையில் ஐஸ் வாட்டர், கிரஷ், நாலு பிளேட் ஜாங்கிரி என்று ஆளாளுக்கு ஆர்டர் பண்ண... இயந்திரம் போல் எல்லோருக்கும் சப்ளை செய்கிறான்...

    என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி

    இதைக் கூறிய ஆசிரியருக்கு இவன் மனிதனா இல்லை மிஷினா என்று சந்தேகம் வருகிறது போலும்...

    இதுவரை இயந்திரமாக சலனமின்றி இருந்தவன் ஸார், உங்கள் கைக் குட்டை கீழே விழுந்து விட்டது என்று அதை எடுக்கக் குனிகிறான்.

    அதைக் கண்டு அவர் முடிவு செய்கிறார்... உணர்வு இருக்கிறது... இவன் மிஷின் இல்லை... மனிதன் தான்...

    ஒரு ஐஸ்க்ரீம்

    மறுபடியும் குரல் கேட்கிறது.

    திரும்பவும் மிஷினாகிவிட்டான் என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

    சீரியஸான விஷயத்தை ரொம்பவே இயல்பாகச் சொல்லிவிட்டார் ஆசிரியர்.

    நீங்களும் அவசியம் படித்து அனுபவிக்க வேண்டிய தொகுப்பு... தவற விடாதீர்கள்...

    (4) அடி – தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

    தி. ஜானகிராமன் குறுநாவல்கள் தொகுப்பின் மூன்றாவது குறு நாவல் அடி. இன்னும் இருபது பக்கங்கள் இருந்தால் இதை நாவல் என்றே சொல்லலாம். இந்த நாவலை தி.ஜா. பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிப் போன பின் எழுதியிருப்பாரோ? கதை கிராமத்தில் ஆரம்பித்தாலும் காஷ்மீர், டெல்லி, அம்பாலா என்று இடம் பெயர்கிறது.

    ஜம்முவில் ஆர்மியில் பொறுப்பான அதிகாரியாகப் பணி புரியும் செல்லப்பா மனைவி மங்களத்தம்மாள் மற்றும் மகன் மகளுடன் விடுமுறைக்காக தாய் தையும்மாளைப் பார்க்க வந்திருப்பதிலிருந்து கதை நகர்கிறது. இளம் வயதிலேயே கணவனைப் பறி கொடுத்த தையும்மாள் சமையல் வேலை செய்து உழன்று செல்லப்பாவை வளர்த்தது அவர் மனதில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது... செல்வந்தர்களைப் போல் அவள் மகனும் வசதியான வீட்டைக் கட்டி அதில் வாழ வேண்டும் என்ற லட்சிய வெறியோடு அவளே பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு அது... செல்லப்பா பணம் மட்டும் தான் அனுப்பிவந்தார்...

    அம்மாவின் மீது அசாத்திய நம்பிக்கை செல்லப்பாவுக்கு. அதனால் தான் தனக்குப் பெண் பார்க்கும் பொறுப்பையும் அம்மாவிடமே விட்டு விடுகிறார். ஆனால் கல்யாணத்துக்கு முதல் நாள் பெண்ணைப் பார்த்தது ஏமாற்றம்...

    பெண் குள்ளம்... காலை மொத்தமாகப் பண்ணி யாரோ நாலு தடவை கீறிவிட்டார் போல் குட்டை விரல்கள். குட்டையான கை விரல்கள்...

    கல்யாணப் பெண் மங்களத்தம்மாளை பற்றிய தி.ஜா.வின் வர்ணனை...

    அம்மா ஏன் இப்படிச் செய்தாள் என்று செல்லப்பாவுக்குக் கோபம் வருகிறது... ஆனால் விரைவிலேயே மங்களத்தம்மாளின் புத்திசாலித்தனமும் சாதுர்யமும் அவரை நிதர்சனப் படுத்தி இரண்டு வாரிசுகளை பெறக் கூடிய அளவுக்கு தாம்பத்யம் வளர்க்கிறது.

    காஷ்மீரில் வெளிநாட்டவர் வரும் பார்ட்டிக்குக் கூட மடிசாருடன் போய் கலக்குகிறாள் மங்களத்தம்மாள்.

    எதுக்கு பதினெட்டு முழம்... பன்னெண்டு போறாதா? என்று செல்லப்பா கேட்பதற்கு...

    நான் இருக்கிறபடி இருக்கேன்... அவா இருக்கிறபடி தானே இருக்கா... கவுன் போட்டுக்கறா. அவா ஊர்ல தினமும் யாரும் குளிக்கறதில்லையாம். இங்கியும் அப்படியேத் தான் இருக்கா. நெறய பவுடர், செண்ட் எல்லாம் போட்டுண்டு வந்துடறா... இந்த தர்மங்களையெல்லாம் அவா மாத்திக்கலையே இங்க வந்ததுக்காக... நான் ஏன் மடிசாரை மாத்திக்கணும்? நான் மட்டும் என் ஆசாரத்தை ஏன் மாத்திக்கணும்?

    அவரவர் நிமிஷ்டைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற தி.ஜா.வின் கருத்தும் இதில் பளிச்சிடுகிறது...

    தையும்மாளின் கண் அறுவை சிகிச்சையின் போது செல்லப்பாவால் வர முடியாமல் போகவே... தையும்மாளின் மாமாவின் மாமா பேத்தி பட்டு ஆஸ்பத்திரியில் கூடவே இருந்து அவளைக் கவனித்துக் கொள்கிறாள்.

    பட்டுவின் கணவன் சிவசாமி. நிரந்தர வேலை இல்லாதவன்... கடுமையான ஏழ்மை...

    தையும்மாளின் சிபாரிசின் பேரில் சிவசாமியை பட்டுவுடன் காஷ்மீர் அழைத்துச் செல்கிறார் செல்லப்பா... அங்கே அவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறார்... அந்த வேலையில் முன்னேறி அவன் டெல்லிக்கு மாற்றலாகிப் போகிறான்...

    இரண்டு மாதங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1