Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbudan
Anbudan
Anbudan
Ebook91 pages31 minutes

Anbudan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகனின் அன்புக்காக ஏங்கும் ஒரு தாயின் மனதை பிரதிபலிக்கும் நாடகம். அவள் ஏங்கும் அந்த அன்பு கிடைத்தும் அவள் நிலமை என்ன என்பதை சித்தரிக்கிறது. சிறந்த நாடகம், சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகை என்று மேடையில் பல விருதுகளைப் பெற்ற நாடகம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306694
Anbudan

Read more from Sl Naanu

Related to Anbudan

Related ebooks

Reviews for Anbudan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbudan - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்புடன்

    Anbudan

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 20

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய எனது தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது தாயார் திருமதி. சிவகாமி அவர்களுக்கு.

    காட்சி - 1

    இடதுபக்க Spot: (விமான நிலைய வரவேற்பு! சில நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் ஜானகி உட்கார்ந்திருக்கிறாள். விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்கிறது.

    This is the final call for passengers boarding British Airways Flight BC006 to New York via London… Passengers are requested to proceed towards security Check immediately.

    இதைக் கேட்டு ஜானகி மெதுவாக எழுந்து நிற்கிறாள்… பிறகு ஏதோ யோசித்து கையிலிருக்கும் டிக்கெட்டைப் பார்க்கிறாள். பின் யோசனையுடனும், தயக்கத்துடனும் மறுபடியும் மெதுவாக உட்கார சங்கரன் அங்கு வந்து)

    சங்கரன்: மன்னி… கிளம்புங்கோ போகலாம்…

    ஜானகி: வாசு…

    சங்கரன்: எல்லாம் தெரியும்… கிளம்புங்கோ போகலாம்…

    (என்று சங்கரன் பையை எடுத்துக்கொண்டு போக ஜானகி யோசனையுடன் உட்கார விளக்கு மெதுவாக மங்குகிறது.)

    காட்சி - 2

    இடம்: ஜானகியின் வீடு

    பாத்திரங்கள்: ஜானகி, விக்னேஷ், விஸ்வநாதன்

    (பழைய பங்களாவின் ஹால். மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சுவரில் நடுவில் விஸ்வநாதனின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. அதற்கு சற்று தள்ளி இளவயது வாசுவின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. இடதுபக்கத்தில் மேஜையில் டேப் ரெகார்டர் இருக்கிறது. சோபா டீப்பா இருக்கிறது. வலதுபக்கத்தில் ஊஞ்சல் தொங்குகிறது.

    காட்சியின் துவக்கத்தில் பின்னணியில் எம்.எஸ்ஸின், காற்றினிலே வரும் கீதம் இசைக்க ஊஞ்சலில் ஒளி விழுகிறது. ஊஞ்சல் மெதுவாக ஆடிக் கொண்டிருக்கிறது. மெதுவாக விஸ்வநாதனின் படத்தில் ஒளி விழுகிறது. பிறகு மேடை முழுவதும் ஒளி படர்கிறது. பாட்டு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. விக்னேஷ் வெளியிலிருந்து கையில் பையுடன் வருகிறான். பாட்டைக் கேட்டு சலிப்படைந்து டேப் ரெகார்டரை நிறுத்துகிறான். உடனே உள்ளிருந்து ஜானகியின் குரல் கேட்கிறது.)

    ஜானகி: விக்னேஷ்! வந்த உடனே வேலையை ஆரம்பிச்சுட்டியா? டேப் ரெகார்டரை ஆன் பண்ணு!

    விக்னேஷ்: பாட்டிம்மா! You are great!! நான்தான் வந்திருக்கேன்னு பார்க்காமலே கரெக்டா எப்படிச் சொல்றீங்க?

    ஜானகி: (பூச்சட்டியுடன் வந்துக்கொண்டே) வந்த உடனே இப்படி சேட்டை பண்ணறது உன்னைத் தவிர வேற யாரா இருக்க முடியும்? டேப்-ரெகார்டரை ஆன் பண்ணு!

    விக்னேஷ்: எப்படித்தான் பழைய பாட்டெல்லாம் கேட்கறீங்களோ? சுத்த போர்…

    ஜானகி: (பூச்சட்டியை திண்டில் வைத்தபடி) நீங்க கொலைவெறியைக் கேட்கறேள்… நாங்க இனிமையான கீதத்தைக் கேட்கறோம்… ரெண்டுமே பாட்டுதான்… ஆனா ரசனைதான் வேற…

    விக்னேஷ்: பாட்டிம்மா… எங்க ரசனை ஹை-டெக் ரசனை… உங்களுக்குப் புரியாது…

    ஜானகி: (பூவை சரிசெய்தபடி) புரிய வேண்டாம்… எங்க ரசனை இப்படியே இருந்துட்டுப் போகட்டும்… அனாவசியமா இதுல தலையிடாதேங்கோ. அது போதும்… (என்று அவன் அருகில் வந்து) ஆமா… ஃபார்மஸில மருந்து லிஸ்ட் கொடுத்துட்டியா? இன்னியோட மருந்து காலி…

    விக்னேஷ்: தெரியும். அதான் வாங்கிட்டே வந்திட்டேன்… இந்தாங்க… அப்புறம்… இந்தப் ஃபைல ரோஜாபூ மாலை இருக்கு…

    ஜானகி: எதுக்கு?

    விக்னேஷ்: இன்னிக்கு தாத்தாவோட நினைவு நாள்னு சொன்னீங்களே. அவர் படத்துக்குப் போடத்தான் வாங்கிட்டு வந்திருக்கேன்…

    ஜானகி:

    Enjoying the preview?
    Page 1 of 1