Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shabash Poonkutty
Shabash Poonkutty
Shabash Poonkutty
Ebook167 pages57 minutes

Shabash Poonkutty

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, முரண் நகை(மின்னூல்), நிலைத்தல், ஆகிய 14 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால் விலங்கு ஆகிய நான்கு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற ஒரு சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம் என்பதான உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், படித்தேன் எழுதுகிறேன், உறங்காக் கடல் என்ற இரு வாசிப்பு இலக்கியம் குறித்த கட்டுரைத் தொகுப்பும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் தொடர்ந்து மாணவ, மாணவிகளால் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

2016 ல் உஷாதீபன் குறுநாவல்கள் – சென்னை நிவேதிதா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பதிப்பகமான “காகிதம் பதிப்பகம்” வெளியீடாக இவரது “செய்வினை-செயப்பாட்டுவினை” சிறுகதைத் தொகுதி (2016) வெளிவந்துள்ளதை மனமுவந்து அவர்களோடு கைகோர்த்ததாகப் பெருமையோடு முன் வைக்கிறார். சென்னை கவிதா பப்ளிகேஷனின் வெளியீடுகளாக “லட்சியப் பறவைகள்” என்ற சமூக நாவலும், “நின்று ஒளிரும் சுடர்கள்” என்ற திரைச் சித்திரமும் 2016 க்கான தனது படைப்புக்களின் மற்றும் இரண்டு முக்கிய வெளியீடுகள் என்று தெரிவிக்கிறார். அமேஸான் கி-ண்டிலில் இவரது “முரண் நகை” என்ற சிறுகதைத் தொகுப்பு 2018 வெளியீடு இ.புக்காக வெளிவந்து விற்பனையில் உள்ளது.

குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை விவாத நோக்கில், உள்மன வியாபகங்களோடு சுவைபட வழங்குவது இவரது கலை வெளிப்பாடு. சிறுகதைகளில் தனக்கென்று படிந்துபோன சரளமான நடையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவரின் தடம் நினைவு கூறத்தக்கது.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580129904756
Shabash Poonkutty

Related to Shabash Poonkutty

Related ebooks

Reviews for Shabash Poonkutty

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shabash Poonkutty - Ushadeepan

    http://www.pustaka.co.in

    சபாஷ் பூக்குட்டி

    Shabash Pookutty

    Author:

    உஷா தீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    1. அடி சக்கே...!

    2. அனுபவக் கல்வி

    3. சபாஷ், பூக்குட்டி...!

    4. ஊற்று

    5. பந்து பொறுக்கி...

    6. பிஞ்சு மனசு

    7. ஜன்னல் வழி வந்த பாட்டு

    8. ராசி... மகராசி...!!

    9. எல்லோரும் ஓர் நிறை

    10. கல்விக் கண்

    11. சொல்லி வளர்க்கணும்...

    12. பொக்கிஷம்

    13. வாழ்க்கைக் கல்வி

    14. வீட்டு டீச்சர்

    15. கதை கதையாம் காரணமாம்...

    16. நிலா டீம்...

    17. விளையும் பயிர்...

    பதிப்புரை

    சிறுவர் இலக்கியம் படைத்த முன்னோடிகளில் பலர் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகள் காலத்தால் அழியாமல் கல்வெட்டுகளாய் போற்றப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

    அவர்களின் வழித்தோன்றல்களாக சமீபகாலமாக சிறுவர் இலக்கியம் படைப்பதில் குறிப்பிடத்தக்க சிலர் ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

    நாவல், சிறுகதை, கட்டுரை என தடம் பதித்த எழுத்தாளர் உஷாதீபன் சிறுவர் இலக்கியத்திலும் சிறந்து விளங்குகிறார் என்பதை சபாஷ் பூக்குட்டி நிருபித்திருக்கிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    1. அடி சக்கே...!

    வந்ததிலிருந்து ஏன் இப்படிப் பித்துப் பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறான் என்று குழந்தை சசியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

    கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க வேண்டும். பிறகு பாடம் எழுத உட்கார்ந்து விட வேண்டும் என்று சொல்லி வைத்துப் பழக்கப்படுத்தியிருக்கிறாள். டி.வி. பார்க்கிறானோ இல்லையோ, தன் மடியில் வந்து ஆசுவாசமாய்ப் படுத்துக் கொண்டு விடுவான். பல சமயங்களில் அப்படியே தூங்கியும் விடும் குழந்தை. எழுப்பவே மனம் வராது. பிஞ்சு முகத்தையே பார்த்து ரசித்திருப்பாள் இவள். இன்று அதுவும் இல்லாமல், பொழுது போக்காய்ப் பார்க்கும் கார்ட்டூன் சேனலையும் தவிர்த்துவிட்டல்லவா கிடக்கிறான்?

    என்னடா தங்கம்... ஏன் டல்லா இருக்கே? - கேட்டுக் கொண்டே வந்து, அருகில் அமர்ந்து இழுத்து மடியில் கிடத்திக் கொண்டாள் லலிதா. அவன் புரட்டிக் கொண்டிருந்த அந்த வார இதழின் குறிப்பிட்ட பக்கத்தில் இருந்த படத்தைப் பார்த்தாள்.

    வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கையில் குச்சியோடு ஒரு பையனை ஒருவர் விரட்டிக் கொண்டிருந்தார். சிறுவன் ஓட்டமெடுக்க, கூடவே ஒரு நாயும் சேர்ந்து ஓடுவது போல் அந்தப் படமிருந்தது. ஒரு கதைக்கான படம் அது.

    சசிக்குட்டி... எதுக்கு இந்தப் படத்தியே பார்த்திட்டிருக்கே... பேகோ சானல் பார்க்கலாமில்ல...

    போம்மா... பிடிக்கலை எனக்கு...

    அப்போ சுட்டி பாரு... கார்ட்டூன் படங்கள் போடுவானே...

    வேண்டாம்...

    எதுக்குக் குட்டிக்கு இம்புட்டு சலிப்பு? அவன் கன்னத்தை இழுத்து வைத்து முத்தா கொடுத்தாள். போ... இதுவும் வேண்டாம்... சிரித்துக் கொண்டாள் லலிதா.

    இன்னிக்கு ஆறுமுகத்த டீச்சர் அடிச்சிட்டாங்கம்மா...! சொல்லிவிட்டு அம்மா முகத்தில் எதையோ தேடுவதுபோல் பார்த்தான் சசி. அதைப் புரிந்து கொண்ட லலிதா அப்டியா? அடப்பாவமே... எதுக்கு அடிச்சாங்க...? என்றாள் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு. ஆறுமுகம் நல்லாப் படிப்பாம்மா... என்பான் அடிக்கடி.

    அவன் யூனிபார்ம் அழுக்கா இருந்திச்சிம்மா... அதப்பார்த்திட்டு, என்ன இப்டி நேஸ்டியா வந்திருக்கேன்னு கைல அடிச்சிட்டாங்க... வலி தாங்காமக் கத்திட்டான் கையை உதறிட்டு அழுதிட்டேயிருந்தான். பாவமா இருந்திச்சு... வெளில கூட்டிட்டுப் போய் குழாய்ல கையைக் காண்பிச்சு குளிர்ச்சியா தண்ணிய விட்டவுடனேதான் வலி குறைஞ்சிச்சு... சிவப்பா கோடு விழுந்த மாதிரி ஆயிடுச்சிம்மா... எரியுதுன்னு சொல்லிட்டேயிருந்தான்... ஊதி ஊதி விட்டேன்...

    பாவம்... அப்டியா பலமா அடிக்கிறது...? தப்பில்லே...!

    எதுக்கும்மா அடிக்கணும்? நாளைலேர்ந்து வாஷ் பண்ணிப் போட்டுட்டு வான்னு சொல்லலாமில்ல.? இப்டியா காயமா அடிக்கிறது? அவன் வீட்டுப்பாடமெல்லாம் கரெக்டா செய்திட்டு வருவாம்மா...! நல்ல பையன்...

    மருந்து ஏதாவது போட்டானா?

    எப்டிம்மா? வீட்டுக்குப் போயில்ல போடனும்... பாவம்... என்ன செய்றானோ? சசியின் முகவாட்டத்தைப் பார்க்க இவளுக்கே வருத்தமாயிருந்தது.

    நம்ப வீட்ல வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் இருக்கு... அவங்க வீட்ல இல்ல... கைல வாஷ் பண்ணி, வெளில கொடுத்து அயர்ன் பண்ணனும். அப்பத்தான் நீட்டா இருக்கும்... ஒரு துணிக்கு அஞ்சு ரூபால்ல வேணும்... அவங்கப்பா ஒரு சின்ன கடைதான வச்சிருக்காரு... ஸ்கூல் ஃபீஸெல்லாமே கடைசி நாளன்னிக்குத்தான் கட்டுவான்...! பாவந்தானேம்மா...! கஷ்டந்தானேம்மா...!!

    எவ்வளவு யோசிக்கிறான்? இந்த விஷயம் எத்தனை பாதித்திருக்கிறது அவனை? தண்ணில அளையாத... தண்ணில அளையாதேன்னு எவ்வளவு தரம் சொல்றது? .. சளி பிடிக்காது? என்ன சேட்டை? மோட்டர் ஒரு மணி நேரம் ஓடினாத்தான் கால் தொட்டித் தண்ணியாவது கிடைக்கும். எவ்வளவு இ.பி.சார்ஜ்...? நீ ப்ளாஸ்டிக் டப்புக்குள்ள இறங்கி உட்கார்ந்திட்டு இருக்கிற தண்ணியப் பூராவும் வாரி இறைச்சீன்னா? இவ்வளவு துணியையும் அதுலதான நனைச்சாகணும்... வாஷிங் மிஷின் போடத் தண்ணி கிடையாது... போடா உள்ளே... கொல்லைப் பக்கம் எட்டிப் பார்த்தியோ, ஜாக்கிரதை... போ...! சொல்லிக்கொண்டே காலையில் அவன் அப்பா, சசியின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தது இப்போதும் வலித்தது அவளுக்கு. பலமான மொத்து. என்ன ஒரு முரட்டுத்தனம்? குழந்தையிடமா இப்படி? ஸ்கூல் புறப்படும் போதும் நிற்காத அழுகை... ஏப்பூ அழுவுற? வா... மாமா பக்கத்துல உட்கார்ந்துக்க... ஆட்டோக்காரனின் அன்பான அரவணைப்பு. அந்த பாதிப்புதான் இதிலும் தொடர்கிறதோ...!

    குழந்தைகளை எதற்குமே அடிக்கக் கூடாது இந்தக் காலத்தில்... எல்லாம் படு புத்திசாலிகள். கற்பூரமாய்ப் பிடித்துக் கொள்கின்றன எதையும். பதமாய்ச் சொல்லிக் கொடுத்து தான் திருத்த வேண்டும்... அந்தக் காலம் மாதிரி எடுத்ததற்கெல்லாம், கையை நீட்டு... என்றால் கதையாகாது. மனசில் அந்த அடியும், அதற்காகச் செய்த தப்பும் அச்சு அசலாய்ப் பதிந்து, அடுத்தாற்போல் ஒரு தப்பைச் செய்யத் தோன்றாது... அது அப்போது. என்றாலும் இது அடிக்கும் காலம் அல்ல. ஸ்கூலில் வாத்தியாரே தொட முடியவில்லையே...! அப்பா அம்மாவிற்கு இல்லாத உரிமை ஸ்கூல் டீச்சருக்கு இருந்த காலம் அது...! பையனின் ஒழுங்கைப் பற்றி ஆசிரியரிடம் கேட்டு அறிந்த நற்காலம்... பொறுப்பை குருவிடம் ஒப்படைத்த பொற்காலம். அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்... அது அப்போ... இன்று? - மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் லலிதா.

    வாசலில் சுந்தரம் நுழைவது தெரிந்தது. குட்டிக் கண்ணா... தங்கக் கட்டீ... வந்துட்டியா? ஓடியா... ஓடியா... அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேம்பாரு... சொல்லிக் கொண்டே அந்தப் பெரிய ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை சசியை நோக்கி நீட்டினான். அள்ளியெடுத்து அவனை மடியில் கிடத்திக் கொண்டான். மறுகணம்...

    வாசலைப் பார்த்து துள்ளி ஓடினான் சசி. இன்னும் அய்யாவுக்குக் கோபம் தணியலை போலிருக்கு... என்று நினைத்தவாறே டே..டேய்... எங்க ஓடுற? இங்க வா...! என்றவாறே கலக்கமாய் நோக்கினான் சுந்தரம்.

    யம்மா... நான் ஆறுமுகத்தைப் பார்க்கப் போறேன்... சாக்லெட் கொடுத்துட்டு வர்றேன்... சொல்லியவாறே விலுக்கென்று செருப்பை மாட்டிக் கொண்டு சிட்டாய்ப் பறந்தான் சசி. மேஜை மேலிருந்த காயத்திற்குப் போடும் சைபால் மருந்துப் புட்டியையும் அவன் கையில் வைத்திருந்ததைக் குறிப்பாய்க் கவனித்தாள் லலிதா.

    என்னாச்சு? என்பதுபோல் லலிதாவைப் பார்த்தான் சுந்தரம். விடுங்க... போயிட்டு வரட்டும்... என்றுவிட்டு, நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்

    2. அனுபவக் கல்வி

    அப்பா... என்ன செய்றே? - கேட்டுக் கொண்டே ஆர்வமாய் துள்ளிக் குதித்து ஓடி வந்து பக்கத்தில் நின்று கொண்டான் விஷ்ணு.

    கன்னுக்குட்டி மாதிரித் துள்றியே, ஒரு இடத்துல நிற்க மாட்டியா? என்ற நாராயணன். தன்னுடைய அப்பா, அவரது மூன்று சகோதரர்கள் இணைந்திருந்த அந்தப் பழைய புகைப்படத்தை அவனது செல் காமிராவில் பிடித்துக் கொண்டிருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1