Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Vinaadi Poru
Oru Vinaadi Poru
Oru Vinaadi Poru
Ebook118 pages46 minutes

Oru Vinaadi Poru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனக்கு அமைந்த வேலையைவிட நண்பனது தொழில் அமையவில்லையே எனப் பொறாமைப் படும் ரகத்தை சேர்ந்தவரா நீங்கள்? டாக்டராக இருந்தால் எஞ்சினியராக இருந்திருக்கலாம், ஆடிட்டராக இருந்தால் மருத்துவனாக போயிருக்கலாம், பேங்க் வேலை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வக்கீலாக போய்விட்டேனே, I am a square peg in the round hole - எனப் புலம்புபவரா நீங்கள் இந்த ரக மனிதர்கள் நம்மில் ஏராளம்.

பக்கத்து வீட்டுக்காரர் மனைவி எவ்வளவு நாகரீகமாக இருக்கிறார், என் மனைவியும் இருக்கிறாளே நாட்டுப்புறம் என்றோ அவன் பெண்டாட்டி எவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருக்கிறாள் என்மனைவி இப்படி எல்லோருடனும் சகஜமாக பழகுகிறாளே என்று அங்கலாய்ப்பவரா நீங்கள் அப்படியானால் இந்த நாடகம் உங்களுக்கானது!!

இதன் நாயகன் நம்மில் ஒருவன்!!!! படித்து மகிழுங்கள்!

நடிக்க விரும்பினால் எனக்கு எழுதி அனுமதி பெறுங்கள்.

பாம்பே கண்ணன்

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580126509517
Oru Vinaadi Poru

Read more from Bombay Kannan

Related authors

Related to Oru Vinaadi Poru

Related ebooks

Reviews for Oru Vinaadi Poru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Vinaadi Poru - Bombay Kannan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஒரு வினாடி பொறு

    Oru Vinaadi Poru

    Author:

    பாம்பே கண்ணன்

    Bombay Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bombay-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அங்கம் - 1

    காட்சி 1

    அங்கம் – 2

    காட்சி – 1

    காட்சி – 2

    காட்சி - 3

    காட்சி – 4

    காட்சி – 5

    காட்சி – 6

    என்ன பேங்க் வேலை! வெறும் 15000 ரூபாய்தான் சம்பளம். என்னிக்கோ சொந்தமா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சியிருந்தா… இன்னிக்கு நானும் ஒரு கோடீஸ்வரன். அடிமை பொழப்பு இல்லை… ம்… எல்லாம் என் தலையெழுத்து!

    என்ன பிசினஸ் பொழப்போ? 24மணி நேரமும்… வேலை வேலை… ஒரு PF உண்டா?  GRATUITY உண்டா? ஒரு 1/2 நாள் லீவ்தான் போட முடியுமா? எங்கப்பா மட்டும்… என்னை CA படிக்க வைச்சிருந்தா… நானும் ஒரு ஆடிட்டர். நாலு பேரை கேள்வி கேட்டுகிட்டு நிம்மதியா சம்பாதிக்கலாம். இப்ப… பிசினஸ்லே சம்பாதிச்சது என்ன? B.P… அல்சர் Diabetes… இவ்வளவுதான்.

    என்னய்யா CA பொழப்பு? சதாசர்வ காலமும் எவனுக்காவது பொய் கணக்கு எழுதனும். Income Tax, Sales Taxன்னு உயிரை எடுக்கறானுங்க… நான் ஆசைப்பட்டபடி ஒரு Engineer ஆகி இருந்தா?

    Engineer வேலைதான் ரொம்ப மலிவா விக்குதே… இதுக்கும் ஒரே செலவுதான் Medicine படிக்கிறதுக்கும் ஒரே செலவுதான், ஆனா மதிப்பு? சம்பாதிச்சு கொழிக்கிறது டாக்டர்ஸ்… நான் மட்டும்… Collegeலே எங்க அண்ணன் சொன்னபடி Maths எடுக்காம Biology எடுத்திருந்தா…

    இதெல்லாம்… ஒரு பொழப்பா… எப்பப் பார்த்தாலும் வியாதி… வலி… அழுகை… என்னதான் பணம் வந்தாலும்… ஏது நேரம்… 24மணி நேரமும், டாக்டர்தான். பொண்டாட்டி குழந்தைகளோட நிம்மதியா ஒரு சாயங்கால வேளையில TV பார்க்க முடியுதா… சினிமா போக முடியுதா… இல்லை… Beachதான் உண்டா… Degree முடிச்ச கையோட பேங்க் வேலைக்குப் போயிருந்தா… நிம்மதியான உத்தியோகம்… கைநிறைய சம்பளம்…

    இவையெல்லாம்… நம் காதில் அடிக்கடி விழும் வார்த்தைகள்! அவற்றுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    என் பொண்டாட்டி இருக்காளே, சரியான Reserved Type, என் பிரண்ட்ஸ் wife எல்லாம்… அவங்க அவங்க husbands எங்க போனாலும் கூடவே போய்கிட்டு சந்தோஷமா இருக்காங்க..இது... வீட்டை விட்டு புறப்படாதே... என் தலைவிதி!

    என்ன wife சார்..இவ? wifeதான் ...அதுக்காக husbandஐ கொஞ்சம்கூட சுதந்திரமாஇருக்க விடாம...எங்க போனாலும்  வால் மாதிரி ஒட்டிகிட்டு… எல்லார் கூடேயும் சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு… கொஞ்சம் Reservedஆ இருக்க வேண்டாமா? எல்லாரும் ஒரு மாதிரியாப் பேசாறாங்களாம். விதி!

    எல்லாம்… விதி என் தலையெழுத்து!

    I am a square pig in a round hole you see!

    எதோ அடுத்த ஜென்மத்துலேயாவது சந்தோஷமா இருந்தா சரி.

    God is very cruel to me

    மேல சொன்னவற்றில் எதையாவது ஒன்றை நீங்கள் அடிக்கடி சொல்பவரா?

    அல்லது நினைப்பவரா?

    அப்படியானால்… நாடகக்காரன் உங்களுக்காகவே வழங்கும் நாடகம்தான்…

    Just A Second Please! (ஒரு வினாடி பொறு) கண்டு மகிழுங்கள் (மாறுங்கள்).

    நாடக பாத்திரங்கள்

    வாசுதேவன்: கதாநாயகன்

    சுபா: வாசுவின் மனைவி

    கிருஷ்ணன்: வாசுவின் அப்பா

    அனந்தா: சுபாவின் அப்பா

    அனிதா: வாசுவின் காதலி

    ராமன்: அனிதாவின் அப்பா

    கணபதிராமன்: வாசுவின் உதவியாளர்

    மேனன்: திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் மகாலஷ்மி தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும்

    கதை வசனம்: பம்பாய் கண்ணன்

    அங்கம் - 1

    காட்சி 1

    வாசுவின் வீடு, காலை நேரம்.

    வாசு பூஜையில் அமர்ந்தவாறு… பூஜை செய்து கொண்டிருக்க அவன் மனைவி சுபா, துளசி மாடத்தை சுற்றி வந்தவாறு,

    சுபா: அப்பனே எல்லாம் நல்லபடியா நடக்கணுமப்பா… ஏன்னா பூஜை முடிச்சிட்டேளா?

    வாசு: காலங்கார்த்தாலே ஆபீஸ் போர நேரத்துக்கு இந்த பூஜை ஒண்ணு இழவு… கொண்டா… கற்பூரத்தை (சுபா கற்பூரத்துடன் ஊதுபத்தி பாக்கெட்டையும் கொண்டு வைக்க) என்னது… ஊதுபத்தியா… ம்… இது ஒண்ணுதான் இவருக்கு குறைச்சல். கொளுத்தின ஊதுபத்தி போதாதாக்கும்…

    சுபா: ஏன் இப்படி பூஜையிலே உக்காந்துண்டு ஏதேதோ பேசுறேள்?

    வாசு: என்ன பேசிட்டேன்? இந்த ஆளுக்கு… என்ன முழிக்கற உங்க சாமிக்குத்தான்… எவ்வளவு ஊதுபத்தி ஏத்தியிருப்பேன்… எவ்வளவு கற்பூரம் கொளுத்தியிருப்பேன்.  இவன் எனக்கு என்ன பண்ணான்?

    சுபா: என்ன பண்ணலை? நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம்.

    வாசு: எவண்டி கேட்டான் இவன் சம்பளத்தை. பொல்லாத Bank உத்தியோகம். 15,000/- சம்பளம். I.T. போக 10,000/- ரூபாய்கூட தேறல. (விஷ்ணு ஸ்லோகம் சொல்லிக்கொண்டே) இதையா கேட்டேன் நான்? என் திறமைக்கு இப்படியா Bankலே குப்பை கொட்டணும். உடனொடுத்தவன் கண்பட்… அதாண்டி இன்னிக்கி பெரிசா கொட்டி முழங்கறானே டைரக்டரா… என்கூட இருந்தப்ப அடிச்சு உதைச்சு வேலை வாங்குவேன். இன்னிக்கு அவனெல்லாம் நடிகன். நான் இப்படி மணி ஆட்டிண்டிருக்கேன்.

    சுபா: சரி… நீங்களும் நல்லாத்தானே நாடகமெல்லாம் போடறேள். உங்களுக்கு ஒரு காலம் வராமலேயா போயிடப் போறது?

    வாசு: வரும். காலம். நான் செத்தாத்தான் காலம் வரும்.

    சுபா: ஐயையோ, வெள்ளிக்கிழமை யானா போதுமே வாயில எப்பப் பாத்தாலும் சாவு, இழவு, இதானா?

    வாசு: வெள்ளிக்கிழமை சாவைப்பத்தி பேசினா உன் சாமிக்கு ஆகாதோ, (கற்பூர ஆரத்தி காட்டுதல்)  ஏண்டி நானும் தெரியாமத்தான் கேக்கறேன், வெள்ளிக்கிழமை அன்னைக்கு சாயங்காலம் சரியா விளக்கு வைக்குற நேரத்துக்கு TVய போட்டு அதுலே Mega Serial பாப்பீங்கோ. அதுவே வெள்ளிக்கிழமைன்னா சொல்லி வெச்ச மாதிரி யாராவடு மண்டையைப் போடுறா… நடுக்கூடத்துல ஒருத்தனை பொணம் மாதிரி படுக்க வெச்சு மூக்குல பஞ்சை அடைச்சு விரலைக் கட்டிப் போட்டு சங்கு ஊதி ஊதுபத்தி கொளுத்தி வச்சு… சுத்தி எல்லாரும் உக்காந்துண்டு அழறா… அதைப் பார்த்திட்டு நீங்க எல்லாரும் அவா அவா வீட்டு கூடத்துலே உக்காந்துண்டு அழறேள். அதெல்லாம் ok… நான் பேசினா மட்டும் ஆகாதோ. பெரிய டைரக்டராகணும், எழுத்தாளனாகணும், நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நடத்தினானா இவன்… ஏய்யா உனக்கெல்லாம் கற்பூரம், ஊதுபத்தி…

    Enjoying the preview?
    Page 1 of 1