Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn Ondru Kandaen
Penn Ondru Kandaen
Penn Ondru Kandaen
Ebook67 pages26 minutes

Penn Ondru Kandaen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தியாகராஜன்-அனிதா காதலர்கள் தியாகராஜன் இளம் வயதில் தன் தந்தையை இழந்ததால் மாமா மற்றும் சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்கிறான். ஆனால் இருவரும் இப்போது இவன் காதலின் வில்லன்கள். இவர்களை சமாளித்து தன் காதலில் வெற்றி பெறுகிறானா? இல்லை இவர்களுக்காக தன் காதலை துறக்கிறானா? வாருங்கள் இவர்கள் காதல் நாடகத்தில் நாமும் பயணிப்போம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580126508326
Penn Ondru Kandaen

Read more from Bombay Kannan

Related authors

Related to Penn Ondru Kandaen

Related ebooks

Related categories

Reviews for Penn Ondru Kandaen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn Ondru Kandaen - Bombay Kannan

    http://www.pustaka.co.in

    பெண் ஒன்று கண்டேன்

    Penn Ondru Kandaen

    Author :

    பாம்பே கண்ணன்

    Bombay Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bombay-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி – 1

    காட்சி – 2

    காட்சி - 3

    காட்சி – 4

    காட்சி – 5

    காட்சி – 6

    காட்சி – 7

    காட்சி – 8

    காட்சி – 9

    காட்சி – 10

    காட்சி – 11

    காட்சி – 12

    காட்சி – 13

    காட்சி – 14

    காட்சி – 15

    காட்சி – 16

    காட்சி – 1

    ஒரு அலுவலக வாசல். மொபெட் ஒன்றை இளம் பெண் அனிதா ஓட்டிக் கொண்டு வர அதன் பின்னால் உட்கார்ந்து கொண்டு வருகிறான், தியாகு எங்கிற தியாகராஜன். மொபெட் நின்றவுடன் தியாகு அவசர அவசரமாக இறங்கி சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்து,

    தியாகு : சரி சரி போயிட்டு வறியா? (அவன் வேகமாக நகர அவன் சட்டையைப் பிடித்து இழுக்கிறாள் அனிதா.)

    அய்யய்யோ... சட்டையை விடு. யாராவது பாத்துடப் போறாங்க. நான் பாட்டுக்கு பஸ்ஸிலயே வந்திருப்பேன். பின்னால உட்கார வெச்சு கூட்டிகிட்டு வந்துட்டே. ஆஃபீஸ் வாசல். யாராவது பார்த்திடப் போறாங்க!

    அனிதா : ஆ... அப்படியெல்லாம் போயிடுவேனா? ‘டாட்டா’ சொல்லுங்க போறேன்.

    தியாகு : என்ன இது குழந்தையாட்டமா? சரி ‘டாட்டா’ போயேன். அய்யய்யோ... எங்க செக்க்ஷன் ஹெட் வராரு... போயேன்.

    அனிதா : (வருபவரைப் பார்த்து) சார்... சார்... இங்க வாங்க... இவரு... (தியாகு வேகமாக அவளருகே வருகிறான்)

    வந்தவர் : என்னம்மா... கூப்பிட்டியா? என்ன ப்ராப்ளம்?

    தியாகு : அனி... ப்ளீஸ்... சார் ஒண்ணுமில்லை... நீங்க போங்க சார். (அனிதாவிடம்) மேடம் நீங்க இந்த பக்கமா போயி வலது பக்கம் திரும்பினிங்கன்னா, நீங்க கேக்குற விலாசம் வரும். (அவர் போனவுடன்) அய்யோ... போய்த் தொலையேன் அனிதா.

    அனிதா : அதெப்படி, சாயங்காலம் ப்ரோக்கிராம் ஃபிக்ஸ் பண்ணாம...? அஞ்சு மணிக்கு ஆஃபீஸ் முடிஞ்சவுடனே சரியா 5.02க்கு போன் பண்ணி ஞாபகப்படுத்துவேன்.

    தியாகு : கத்தாதேயேன்! யாராவது கேக்கப் போறாங்க.

    அனிதா : கேட்டா என்ன? லவர்ஸ் ரெண்டுபேரும் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கிறாங்கன்னு நினைப்பாங்க.

    தியாகு : அனிதா லவ்வர்ஸ்னு கத்தி சொல்லாதே. யார் காதிலாவது விழப்போகுது.

    அனிதா : அப்ப நீங்க என்னை லவ் பண்ணலையா?

    தியாகு : இல்லை.

    அனிதா : ஆங்!

    தியாகு : இல்லைன்னு சொல்லலைன்னு சொல்ல வந்தேன்.

    அனிதா : அப்ப இன்னும் என்ன பயம்? (அவன் கண்ணத்தில் செல்லமாக தட்ட...)

    தியாகு : அனிதா... ப்ளீஸ் இதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம்.

    அனிதா : இது நான் பேச வேண்டிய வசனம்.

    தியாகு : டைம் ஆச்சு புறப்படேன். எங்க மேனேஜிங் டைரக்டர் வர நேரம்

    அனிதா : சரி நீங்க போங்க, அப்புறம் நான் போறேன்.

    தியாகு : சரி... (நடக்க ஆரம்பித்து திரும்பி)

    Enjoying the preview?
    Page 1 of 1