Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhanamalar Sirithathu
Santhanamalar Sirithathu
Santhanamalar Sirithathu
Ebook175 pages1 hour

Santhanamalar Sirithathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466879
Santhanamalar Sirithathu

Read more from Mekala Chitravel

Related authors

Related to Santhanamalar Sirithathu

Related ebooks

Related categories

Reviews for Santhanamalar Sirithathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhanamalar Sirithathu - Mekala Chitravel

    1

    நாலாபுறமும் நட்சத்திரத் தோழிகள் சூழ்ந்திருக்கும் பின் மாலைப்பொழுது

    உயிரும் உணர்வும் திரைப்பட வெள்ளி விழாவுக்காகக் நேரு உள்விளையாட்டு அரங்கம் நிறைந்து கல கலத்தது. வெளிர்மஞ்சள் பட்டுச் சேலையில் சந்தனாவைக் கண்டதும் வெள்ளிக் காசுகளை வாரி இறைத்தது போலக் கைத்தட்டல்.

    பரிசு வாங்கிக் கொண்ட சந்தனா ரசிகர்களைப் பார்த்துக் கையாட்டினாள். மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் கண்டு உடல் வெடவெடத்துக் கண்கலங்கியது. தன் இருக்கைக்குத் திரும்பியும் உணர்ச்சித் தளும்பல் குறையவில்லை.

    ‘இந்தப் பரிசு துவக்கம்தான். இனிமேல் தான் ஒரு மவுனயுத்தம் இருக்கிறது. எதிராளிகள் அனைவரும் சாணக்கியர்கள். தாங்கள் வெல்லவேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள்.

    இந்த யுத்தத்தில் இழப்பு என்பது எனக்கு மட்டும் தான். கவனமாக இருப்பதோடு இல்லாமல் வெற்றியும் பெற்றாக வேண்டும். விடக்கூடாது...

    சிவந்த முகம் மேலும் சிவந்து கவனம் சிதறியது. பக்கத்து இருக்கையில் இருந்த தேவகி தொட்டு எச்சரித்தாள். நொடிப்பொழுதில் முகபாவனையை மாற்றிய சந்தனா புன்னகையில் மலர்ந்தாள்.

    விழா முடிந்து காருக்குப் போவதற்குள் பெரும்பாடாகி விட்டது. கையெழுத்து வாங்கவும், கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கூட்டம் அலைமோதியது. ஒரு வழியாக வணக்கம் சொல்லிக் காருக்குள் ஏறிய சந்தனாவின் கவனம் இருளும் ஒளியும் கலந்த இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனிடம் லயித்தது. ஒரு வினாடி விழி சுருக்கி யோசித்தாள்.

    கண்ணாடி அணிந்த இவன், அடிக்கடி கண்ணில் படுகிறான். ஆனால் பேச முயற்சிப்பதில்லை. அருகிலும் வருவதில்லை. தூரத்திலிருந்து கண் எடுக்காமல் பார்ப்பதோடு சரி... யார் இவன்? சந்தனா மேலே நினைக்குமுன் கார் புறப்பட்டது.

    2

    "தேவகியம்மா... நான் சொன்ன மாதிரியே பாப்பாவுக்கு அதிர்ஷ்டம் வந்திட்டுதும்மா. இயக்குநர் பெரியசாமி தன்னோட படத்தில் வாய்ப்பு தர்றதாச் சொல்லி விட்டிருக்கார். உங்களை நாளைக்கு மாலை தன்னோட ஆபீசுக்கு வரச் சொன்னார்."

    தங்கராசின் கும்மாளக் குரலுக்குப் பதிலாகத் தேவகி குதிக்கவில்லை. வெறும் புன்னகை மட்டும் புரிந்தாள்.

    என்னம்மா... கொஞ்சம்கூட அலட்டிக்காம இருக்கீங்களே... பெரியசாமி கூப்பிடறார்னா எத்தனை பெரிய காரியம்? போன ஆண்டு நீங்க அவர் ஆபீஸ் வாசலில் தவமிருந்தது மறந்து போச்சா?

    "ஆமாம் நின்னேன். அதுக்கு இப்ப என்ன? பாப்பா நடிச்ச படம் வெள்ளிவிழா கொண்டாடி இன்னும் கூட ஓடிக்கிட்டிருக்குத் தெரியுமில்லே? தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு தயாரிப்பாளருங்கக் கியூவில் நிக்கறாங்க...

    காலையில்தான் இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப் போன் வந்தது. ஷாருக்கானே பாப்பாவைப் பத்திச் சொல்லித் தேதி வாங்கச் சொன்னாராம். வரிசையா தேதி கொடுத்திட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னே பின்னே அசையமுடியாது. அதோட ரேட்டும் ஏத்திட்டேன்.

    பெரியசாமியா இருந்தாலும் அதேதான்; இதெல்லாம் சிக்கலாயிடும். நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாத் திமிர்னு ஒரே வார்த்தையோட போயிடும். அதனால வேற பேசு... இந்தா வெத்தலை போடு..."

    பெங்களூர் தக்காளி மாதிரித் தன் எதிரே உட்கார்ந்து காலாட்டும் தேவகியைத் தங்கராசு வியப்புடன் பார்த்தார். முன்பு அவரிடம் பத்து ரூபாய்க்குக் கடன் கேட்டுத் தலைசொரிந்தவள் மாதிரியா பேசுகிறாள்.

    எல்லாம் பணம்படுத்தும் பாடு.ஒரே வருடத்தில் சந்தனாவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும், மூன்று படங்கள் நூறு நாள்களும் ஓடின. அதன் பிறகு சந்தனா தமிழகத் திரை உலகின் முதலிடத்தைப் பிடிக்கும் தகுதிக்கு உயர்ந்து விட்டாள்.

    அதற்காக இப்படிப் பேசுவதா? இருந்தாலும் இவளைப் பகைத்துக் கொள்ள முடியாதே... அவர் பிழைப்பு அப்படி...

    நீங்க சொல்றதெல்லாம் சரிம்மா... ஆனால் நான் என்ன சொல்லவரேன்னா...

    அவரை மேலே பேசவிடாமல் நூறு ரூபாய்த் தாளை அவரிடம் நீட்டி, நீ பொறப்படு தங்கராசு... எனக்கு வேலையிருக்கு என்றாள் தேவகி. அதற்குமேல் பேச முடியாமல் தங்கராசு கிளம்பினார்.

    மாடியிலிருந்து இறங்கிவந்த சந்தனா, என்னக்கா, தங்கராசு வந்திருந்தார் போலிருக்கு என்றாள்.

    "ஆமாம். வந்திருந்தான்... பெரியசாமிக்கு மார்க்கெட் இல்லை. உன் மார்க்கெட்டைப் பயன்படுத்தி அவங்க முன்னேறப் பார்க்கிறாங்க. நாம அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதையெல்லாம் நீ கண்டுக்காதே. நான் பார்த்துக்கறேன்.

    இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து நரசிம்மராஜு வரப்போறார். நம்ம வீட்டில் சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீ குளிச்சிட்டுத் தயாராகு. பிழைக்கிற வழியைப் பார்ப்போம்."

    மறுபேச்சுப் பேசாமல் சந்தனா உள்ளே சென்றாள். தேவகி விருந்தில் கவனத்தைச் செலுத்தினாள். மனம் தெலுங்குப்படத்தில் கிடைக்கும் பணம் பற்றிக் கணக்குப் போட்டது.

    எத்தனைப் பாடுபட்டிருப்பாள் இந்த உன்னத நிலைக்கு வர... சந்தனாவை முன்னேற்ற, தான் செய்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தாள் தேவகி.

    எங்கோ கிராமத்தில் இருந்தவளை அழைத்து வந்து நடனமும் நாகரிகமும் சொல்லிக் கொடுத்து மனுஷியாக்கினது இன்றுபோல் இருக்கிறது.

    சந்தனா வெகு சூட்டிகையாக எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பிடித்துக் கொண்டு தேவகியின் சிரமத்தைக் குறைத்தது.

    கலையுலகமாம் திரையுலகம் தேவகியை முதலில் பயம் காட்டியது. எதற்கும் ஒரு விலை பேசியது. திரும்பிய பக்கமெல்லாம் தடைப்போட்டு நிறுத்தியது. ஆனாலும் தேவகி தன்னுடைய புத்தியால் எல்லோரையும் சமாளித்துச் சாதித்தாள்.

    3

    "தேவகியம்மா தயவு பண்ணுங்கம்மா... படமே முடிஞ்சுபோச்சு. ஒரே ஒரு பாட்டு சீன்தான் பாக்கி இருக்கு. முன்னாடியே நீங்க ஒப்புக்கிட்டபடி நாலு நாள் கால்ஷீட் கொடுங்கம்மா. அருவியில் குளிக்கிற மாதிரி சீன். லாங் ஷாட்டுக்கு வேணும்னா வேற ஆள் போட்டுக்கலாம். பாப்பா நீயாவது சொல்லும்மா..."

    தேவகி தீவிரமாக வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். சந்தனா அருகில் உட்கார்ந்தாள். தேவகியைத் தொட்டாள்.

    சரி சரி... நீ என்ன சொல்லவரேன்னுப் புரியுது. போய்த் தொலையலாம். நாளைக்குக் காலையில் வந்து சேருங்க...

    சந்தனாவுக்கு நன்றி கூறிவிட்டு உதவி இயக்குநர் பறந்தோடினார். தேவகி அலுத்துக் கொண்டாள். எங்கேயோ அருவிக் கரையிலே படப்பிடிப்பு. கொசுவிலேயும், புழுக்கத்திலேயும் துன்பப்படணும். உனக்கு எப்பவும் பரிதாபப்படற மனசு...

    இருக்கட்டுமக்கா. பாவம்... நம்மைப்போலத்தானே அவங்களும் துன்பப்படறாங்க...

    தேவகி சொன்னதே சரியானது. எங்கோ ஒரு காட்டுக்குள் இருக்கும் அருவிக்கரை. விளம்பரம் செய்யாததால் கூட்டம் அதிகமில்லை. மக்கள் முடிச்சு முடிச்சாக நின்றிருந்தார்கள்.

    நடனக் கலைஞர் சொல்லிக் கொடுத்த அசைவு களைக் கவனப்படுத்திக் கொண்டு, பாட்டை மனத்தில் வாங்கிக் கொண்டு தண்ணீருக்குள் இறங்கினாள் சந்தனா.

    நடனமாடிக் கொண்டிருக்கும் போது சடசடவென நீர்ப்பிரவாகம் அதிகரித்தது. சந்தனா கால் வழுக்கித் தடுமாறினாள். கையை அசைத்து உதவிக்கு ஆட்களை அழைத்தாள். அந்த அசைவையும் நடனத்துக்கானது என்று எல்லோரும் நினைத்து ஒதுங்கினார்கள்.

    தண்ணீர் மேலும் தன்னை இழுக்க சந்தனாவுக்கு மரணபயம் மேலோங்கியது. அடித்துச் செல்லும் போதே தலைமுடி எதிலேயோ சிக்கியது. பயம் அதிகமாகச் சந்தனா மயங்கினாள்.

    நல்லவேளை, உடனே காப்பாற்றி விட்டதால் மேடம் தப்பிச்சாங்க. இல்லேன்னா கஷ்டம்தான். இன்னிக்கு ஓய்வா இருக்கட்டும். பயந்துபோய் இருக்காங்க. நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் மருத்துவர் எழுந்தார்.

    படத்தயாரிப்பாளர், மருத்துவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார். "டாக்டர் சார்... இது உங்க கையில்ல... கால்னு நினைச்சுக்குங்க. சினிமா தயாரிக்கிறதே பெரிய ரிஸ்க். அதில் ஆயிரம் கஷ்டம்; அவங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் யாருக்குப் பதில் சொல்வேன். என்னன்னு சொல்லுவேன், என்னைக் காப்பாத்திட்டீங்க சார்.’

    சந்தனா அவரை இரக்கமாகப் பார்த்தாள். தன்னைவிட அவர்தான் பயந்து நடுங்கி இருக்கிறார். சமாதானப் படுத்தவில்லை என்றால் மனிதர் இரவு தூங்கக்கூட மாட்டார். புன்னகைத்தாள்.

    சார்... எனக்கு ஆபத்து எதுவுமில்லை. இப்பவேகூட நான் நடிக்கத் தயார்... இதுமாதிரி சில விஷயங்கள் நாம எதிர்பாராம நடந்திடுது. அது நம்ம கையில் இல்லை. நல்லபடியா தப்பிச்சிட்டோம்னு மகிழ்ச்சியடைய வேண்டியதுதான். இதுக்குப் போய் இப்படிக் கவலைப் படறீங்களே, விட்டுத் தள்ளுங்க. நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க சார்...

    மருத்துவர் அவளைப் பார்த்துச் சிரித்தார். ரொம்ப அழகாப் பேசறீங்க. சந்தனா... ஆனால் முக்கியமான ஒன்றை மறந்திட்டீங்களே... உங்களைக் காப்பாத்தினது யார்னு யாராவது கேட்டாங்களா இல்லை, நீங்களாவது கவலைப்பட்டீங்களா? அவங்க அவங்க கவலை அவங்க அவங்களுக்கு... இதுக்கு நடுவில் காப்பாத்தின அந்த நல்லவரைப் பத்தி யாருக்கு அக்கறை இருக்கும்?

    சந்தனா அதிர்ச்சியடைந்தாள். மருத்துவர் சொல்வது உண்மைதானே...

    ஆமாம் சார். நான் எவ்வளவு பெரிய தப்புப் பண்ணிட்டேன். ரொம்பச் சுயநலமா இருந்திட்டேனே... யார் சார் என்னைக் காப்பாத்தினது? எங்கே இருக்கார். உடனே அவரை அழைச்சிக்கிட்டு வரச் சொல்லுங்க.

    சந்தனா ரொம்பப் பரபரப்பாகாதீங்க. அவர் வெளியே தான் இருக்கார். குரு உள்ளே வாங்க... ஆவலுடன் திரும்பிய சந்தனா வியந்தாள். நின்றது கண்ணாடி இளைஞன்.

    4

    "வர வர நீ செய்யறது எதுவும் எனக்குப் பிடிக்கலை சந்தனா. இப்ப எதுக்கு இந்த மாதிரி ஏற்பாடெல்லாம் செய்யறே?"

    தேவகி கோபமும் வருத்தமும் ஒருசேரக் கேட்டபோது சந்தனா அவள் தோளைக் கட்டிக் கொண்டாள்.

    எதுக்கா உனக்குப் பிடிக்காதது? ஓ... குருவை என்னுடைய பாதுகாவலராக நியமிச்சதைத்தானே சொல்றே?

    ஆமாண்டி ஆமாம்... என்மேல நம்பிக்கை இல்லாமத்தானே அவனை வீட்டுக்குள்ளே சேர்த்துக்கிட்டே? அவனும் அவன் கண்ணாடியும்... பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்கு ஏண்டி புத்தி இப்படிப் போகுது?

    ஐயோ அக்கா... அசட்டு அக்கா... குரு எனக்கு மட்டும் பாதுகாப்புக்கு இல்லை. நம்ம வீட்டுக்கு... உனக்கு... எல்லாத்துக்கும்தான்...

    ஆமா பெரிய பீமசேனன்... ஒத்தைக் கையால் பத்துப்பேரைத் தூக்கி எறிஞ்சிடுவான். போடி... போடி... போக்கத்தவளே... கொத்தவரங்காய்க்குப் பேண்டையும், சட்டையும் மாட்டிவிட்டது மாதிரி இருக்கான். இவன் பாதுகாப்பு தர்றதாம். என்னவோ போ... முதல் முதலாக என் பேச்சை மீறி அவனைச் சேர்த்துட்டே.... என்ன பிரச்சினை வரப்போகுதோ?

    அக்கா, அதெல்லாம் ஒண்ணும் வராது. வீணா கவலைப்படாதே. இன்னும் ஒண்ணையும் தெரிஞ்சுக்க... உன்னையல்லாது ஒரு துரும்பைக்கூட அசைக்கமாட்டேன். போதுமா?

    தேவகி பெருமூச்சுடன் சந்தனாவைப் பார்த்தாள். பாடுபட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1