Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nivethitha
Nivethitha
Nivethitha
Ebook179 pages59 minutes

Nivethitha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலில் இடம் பெற்றிருக்கும் நாயகி நிவேதிதாவும், நாயகன் சேகரும் நட்பிற்குப் புதிய அகராதியையே உருவாக்கி விடுகிறார்கள். நிவேதிதா கதாபாத்திரம் உயர்ந்ததா, சேகர் கதாபாத்திரம் உயர்ந்ததா என்று சொல்லி விடுவது அத்தனை சுலபமல்ல. நிவேதிதாவின் தாய் தந்தை இனிய தாம்பத்தியத்தின் உயிரோட்டமான மொழிபெயர்ப்புகள்.

இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு சேகரைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும், ஆண்களுக்கு நிவேதிதாவைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும் ஏற்படப் போவதென்பது உறுதி. நிவேதிதாவின் கணவன் மற்றும் அந்த வீட்டில் இருக்கிற ஆயா கதாபாத்திரங்கள் இன்னும் கதையில் நேரடியாக வராமல் மட்டுமே பேசப்படுகிற சில கதாபாத்திரங்கள் உட்பட கச்சிதமான வார்ப்பு.

இறுதிக்காட்சியில் நாவலாசிரியர் எல்லோர் இதயத்தையும் உணர்வின் கதகதப்பினால் உருகச் செய்து விடுகிறார். இந்த நாவலை இத்தனை சீக்கிரம் முடிக்காமல், இன்னும் விஸ்தரித்து எழுதியிருக்கக் கூடாதா என்கிற எண்ணம் இதன் நிறைவுப் பகுதியை படிக்கையில் ஏற்படுவது இந்த நாவலின் சிறப்பு.

காதலுக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் தாஜ்மஹால். நட்புக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் நிவேதிதா ஒரு புதுமலர்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580124004581
Nivethitha

Read more from Kulashekar T

Related to Nivethitha

Related ebooks

Reviews for Nivethitha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nivethitha - Kulashekar T

    http://www.pustaka.co.in

    நிவேதிதா

    Nivethitha

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    முன்னுரை

    இந்த நாவலில் இடம் பெற்றிருக்கும் நாயகி நிவேதிதாவும், நாயகன் சேகரும் நட்பிற்குப் புதிய அகராதியையே உருவாக்கி விடுகிறார்கள். நிவேதிதா கதாபாத்திரம் உயர்ந்ததா, சேகர் கதாபாத்திரம் உயர்ந்ததா என்று சொல்லி விடுவது அத்தனை சுலபமல்ல. நிவேதிதாவின் தாய் தந்தை இனிய தாம்பத்தியத்தின் உயிரோட்டமான மொழிபெயர்ப்புகள்.

    இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு சேகரைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும், ஆண்களுக்கு நிவேதிதாவைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும் ஏற்படப் போவதென்பது உறுதி.

    நிவேதிதாவின் கணவன் மற்றும் அந்த வீட்டில் இருக்கிற ஆயா கதாபாத்திரங்கள் இன்னும் கதையில் நேரடியாக வராமல் மட்டுமே பேசப்படுகிற சில கதாபாத்திரங்கள் உட்பட கச்சிதமான வார்ப்பு.

    இறுதிக்காட்சியில் நாவலாசிரியர் எல்லோர் இதயத்தையும் உணர்வின் கதகதப்பினால் உருகச் செய்து விடுகிறார். இந்த நாவலை இத்தனை சீக்கிரம் முடிக்காமல், இன்னும் விஸ்தரித்து எழுதியிருக்கக் கூடாதா என்கிற எண்ணம் இதன் நிறைவுப் பகுதியை படிக்கையில் ஏற்படுவது இந்த நாவலின் சிறப்பு.

    காதலுக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் தாஜ்மஹால். நட்புக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் நிவேதிதா ஒரு புதுமலர்.

    ‘ஸ்ஸ்… ஆஆஆ’

    உயிர்பிக்கப்பட்ட சிகரெட் கன்னத்தில் அழுந்தியதும், வலி தாளாமல் அலறினாள் நிவேதிதா. உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்டுவிடும் என்கிற எச்சரிக்கையோடு, துரை ஓடிச்சென்று கதவை தாளிட்டு விட்டு, காய் கறிக்காரன்ட்ட அப்டியென்னடி பேச்சி? என்றான்.

    நிவேதிதா, அநாவசியமா பேசாதீங்க... என்றாள் மேலிட்ட அழுகையை கட்டுப்படுத்த முடியாமல்.

    எதுடீ அநாவசியம். இஷ்டத்துக்கு நீ அடிக்கற லூட்டிய தட்டிக் கேக்கறது அநாவசியமா?

    ஏங்க இப்டி ஒண்ணுமில்லாத விசயத்த எல்லாம் பூதாகரப்படுத்தறீங்க... எதையுமே இந்த மாதிரி கண்ணோட்டத்துலதான் பார்க்கத் தெரியுமா?

    இதற்குப் பதிலாய் அவன் கைபேசியது. சிகரெட் சூடுபட்ட அதே இடத்தில், ஆத்திரம் முழுவதையும் ஒன்று திரட்டி பளார் என அறைந்தான். இயலாமையின் வெப்பம், நிவேதிதா அலங்கோலமாய் சுருண்டு விழுந்தாள். காயம்பட்ட இடத்தில் வலி விண்விண் என்று தெரித்தது. இந்த முறை அடியை எதிர்பார்த்திருந்ததால் அலறவில்லை. தரையில் உட்கார்ந்தபடி உத்தரத்தையே வெறித்துப் பார்த்தாள். அப்படிச் செய்து அவனை அலட்சியப்படுத்துவதாய் நினைத்தாள். அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் கதவை படாரென அறைந்து விட்டு வெளியேறினான்.

    ஏன் இப்படி ஆகிப்போனான்? தாளம் தப்பிய சிந்தனை. ஆரம்ப நாட்களில் எத்தனை பிரியத்துடன் இருந்தார்? அதற்குள் என்னவாயிற்று? சிந்திக்க சிந்திக்க நினைவுகள் கடந்த காலத்துள் ஊடுறுவியது.

    1

    நிவேதிதா டான்பாஸ்கோவில் தான் ப்ளஸ்டூ படித்தாள். அப்போதே ஸ்கூல் நாடகம் ஒன்றில் நடித்து, டி.வியில் ஒளிபரப்பாகி, யார் அந்தப் பெண்ணு? என்று பார்த்தவர்களை அசர வைத்திருக்கிறாள். நடிப்பில் மட்டுமல்ல.. அழகிலும்.

    சில அழகு அதீதமாய் பூசப்பட்ட லிப்ஸ்டிக் மாதிரி முகத்தில் அடிக்கும். சிலவகையில் செயற்கைத்தனம் தூக்கலாயிருக்கும். இன்னும் சிலவகையில் அகந்தை தொனிக்கிற ஆர்ப்பாட்டம் தெரியும். இவள் அழகு கண்ணை உறுத்தாத அழகு. மனசை சூடாக்காமல் ஏதோ ரம்யமான இயற்கைச்சூழலை தரிஷித்த மாதிரி மனதை ஜில்லிக்க வைக்கிற அழகு மாநிறம் என்று சொல்லமுடியாது. முகத்திலடிக்கிற வெள்ளையும் கிடையாது. நடுவில் மிதமான நிறம். கதை பேசும் கண்கள். சற்றே தடித்த ரோஜா அதரம். பூசினாற் போல் சுருக்கமேயில்லாத கன்னம். சில்வர்கேஸ்கட் அருவியாய் பளிரிடும் புன்னகை. மிதமான நீளத்தில் அடர்ந்த கருங்கூந்தல். இப்படியெல்லாமே மிதமாகத் தெரிந்தாலும், எத்தனை கல் எறிந்தாலும் கலங்காத அந்தத் தாமரை நெஞ்சம், யூனிஃபாம்மில் தெரியும் மிதமான அவையங்கள்.

    அம்மாவிடம் பரதநாட்டியம் கற்றது, பிரசிடன்ஸியில் எம்.ஏ., லிட்ரச்சர் முடித்தது, சர்டிபிகேட் ஆஃப் ஆட்ஸ் கோர்ஸில் சேர்ந்து முதலாய் பாஸானது, ரெடிஃபிஷன் ஆட்ஸில் வேலைக்குச் சேர்ந்தது எல்லாம் சொடக்குப் போடுகிற நேரத்தில் நடந்துவிட்ட மாதிரி, காலம் ஓடிவிட்டது.

    ரெடிஃபிஷன் விளம்பர நிறுவனத்தில் வேலை கிடைத்தது ரொம்ப எதேச்சையானது. இன்ட்டர்வியூ கார்டில் குறிப்பிட்டிருந்த நேரத்தைவிட அரைமணி முன்னதாகவே போனாள். ஹால் முழுக்க சென்ட்ரல்லைஸ்ட் ஏசி மெட்ராஸ் வெயிலுக்கு குளுகுளுவென்றிருந்தது. வரிசையில் உட்கார்ந்திருந்தவர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அரண்டு போய் இருந்தார்கள். நிவேதிதா குஷியாய் தெரிந்தாள். அவள் முறை வந்ததும், கெட்டப்பாய் நுழைந்தாள். முகத்தில் பயம் துளியுமில்லை. சொல்லப் போனால் உதட்டோரம் ஒருவித டேக் இட் ஈஸி தனம் தெரிந்தது.

    இன்டர்வியூ பண்ணியவர் ஒரே கேள்விதான் கேட்டார். ஒங்களுக்கு ஈஸியா ரெண்டு கேள்வி கேக்கட்டுமா... இல்ல, கஷ்டமா ஒரு கேள்வி கேக்கட்டுமா? என்றார். கொஞ்சமும் யோசிக்காமல், 'கஷ்டமா ஒரு கேள்வி கேளுங்க' என்றாள்.

    'கோழிலருந்து முட்டை வந்துச்சா... இல்ல முட்டைலருந்து கோழி வந்துச்சா?’

    'கோழிலருந்துதான் சார் முட்டை வந்துச்சி.'

    'எப்டி?’

    குறும்பாகப் பார்த்து, 'சார்... நீங்க ஏற்கெனவே ஒரு கேள்வி கேட்டாச்சி' என்றதும், அவர் சிரித்தேவிட்டார். உடனே அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் தயாராகிவிட்டது.

    ரெடிஃபிஷன் விளம்பர நிறுவனம் இந்தியாவிலேயே மிகப் பிரபலமான கம்பெனி என்று சொல்லலாம். எல்லா தரப்பு விளம்பர யுத்திகளும் சரளமாய் விளையாடுமிடம். நிவேதிதா டி.வி. விளம்பரப்பிரிவில் இருந்தாள். இயல்பாகவே அந்தப் பிரிவில் ஈடுபாடு அதிகம். அவளாகவேதான் கேட்டு அந்தப் பிரிவில் சேர்ந்தாள். அரை நிமிடத்திற்கும் குறைவாக இடம் பெறுகிற அந்தப் படத்தில், விளம்பரப்படுத்தப்படுகிற பொருளைப் பற்றிய பிரேமையை அதற்குள் பார்ப்பவர் மனதில் பதித்தாக வேண்டும்.

    அதற்கான சூட்டிங் ஸ்கிரிப்ட் நிவேதிதா தயாரிப்பது தனியாய் தெரியும். நிறைய கட்ஸ் வைப்பாள். இமைக்கிற நேரத்திற்குள் ஒரு ஷாட். நிறைய எக்ஸ்ட்ரா லார்ஜ் க்ளோஸ்அப் காட்சி வைத்து உருவாக்குவாள். முடிக்கிற போது நெத்தியடி மாதிரி கேப்ஷன் வைப்பாள். வள்ளுவர் இருந்திருந்தால் இத்தனை சிறிய வாசகத்தில் இவ்வளவு அழுத்தம் தரமுடிகிறதே இந்தப் பெண்ணால் என்று அசந்திருப்பார். நிவேதிதா கற்பனையில் விளைகிற ஒவ்வொரு கேப்ஷனும் சுண்டக் காய்ச்சிய பால் மாதிரி அளவில் சிறிதாய் மிகுந்த சுவையோடு அமையும். ஐ லவ் யூ ரஸ்னா மாதிரி. ஒன்லி சன்ரைஸ்கூட அவள் தயாரித்ததுதான்.

    டி.வி. விளம்பரப்படத் தயாரிப்பில் ஈடுபட்டாலும், மற்ற அட்வர்டைஸிங் வகையறாக்களுக்கும், அவ்வப்போது புதுதுபுதுசாய் ஐடியா கொடுக்கத்தான் செய்தாள். அந்த நிறுவனம் குறுகிய காலத்தில் எல்ஐசியாய் வளர்ந்ததில், நிவேதிதாவின் புத்திசாலித்தனத்திற்கும் ஒரு பங்குண்டு. அவள் தானாகவே எடுத்துப் போட்டுக் கொண்ட வேலைப் பளுவை, ஒரு நேரம் குறைத்துக் கொள்ள நினைத்தாலுங்கூட, மேனேஜ்மெண்ட் விடுவதாய் இல்லை.

    பத்தாயிரம் ரூபாய் சம்பளம். இதர வசதிகள் தனி. தினம் பழைய வண்ணாரப் பேட்டையிலிருந்து பஸ்சிலேயே போய் வந்துவிடுவாள்.

    இவள் அம்மாவின் வீடு பக்கத்திலேயே, காளிங்கராயன் தெரு. இவள் இருப்பது எண்பத்து மூன்று சஞ்சீவிராயன் கோயில் தெரு. மகாராணியிலிருந்து எட்டிப்பிடிக்கிற தூரங்கூட இருக்காது. அம்மா பக்கத்தில்தான் இருக்கிறாள் என்றாலும், என்னவோ ஏழுகடல் தாண்டியிருக்கிறவளாட்டம் அத்தி பூத்தாற் போல் வருவாள். அப்பாவாவது அவ்வப்போது பார்த்து விட்டுப் போவார். ஐந்து நிமிஷந்தான் இருப்பார். நெஞ்சு வெடிக்கிற அளவு பிரியம் நிரப்பிக் கொண்டு, கையிலும் எதையாவது வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். போகிற போது கண் கலங்கிவிடும். அப்பா... உங்களை அப்பாவா அடஞ்சதுக்கு எத்தனை புண்ணியம் செய்தேனோ? உங்களைப் பார்த்து, இது என் அப்பானு சொல்லிக்கறதுல எவ்வளவு பெருமையாயிருக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1