Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodimalar
Kodimalar
Kodimalar
Ebook116 pages1 hour

Kodimalar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466244
Kodimalar

Read more from Geetharani

Related to Kodimalar

Related ebooks

Reviews for Kodimalar

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kodimalar - Geetharani

    23

    1

    நாலா புறமும் நட்சத்திரத் தோழிகள் சூழ்ந்திருக்க, முன் மாலைப் பொழுது.

    ‘உயிரும் உணர்வும்’ திரைப்பட வெள்ளி விழாவுக்காகக் கலைவாணர் அரங்கம் நிறைந்து கலகலத்தது. வெளிர் மஞ்சள் பட்டுச் சேலையில் சந்தனாவைக் கண்டதும் வெள்ளிக் காசுகளை வாரி இறைத்தது போலக் கைதட்டல்.

    பரிசு வாங்கிக் கொண்ட சந்தனா ரசிகர்களைப் பார்த்துக் கையாட்டினாள். மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் வெடவெடத்துக் கண் கலங்கியது. தன்னிருக்கைக்குத் திரும்பியும் உணர்ச்சித் தளும்பல் குறையவில்லை.

    இந்தப் பரிசு துவக்கம்தான். இனிமேல்தான் ஒரு மவுன யுத்தம் இருக்கிறது. எதிராளிகள் அனைவரும் சாணக்கியர்கள். தாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள்.

    இந்த யுத்தத்தில் இழப்பு என்பது எனக்கு மட்டும்தான். கவனமாக இருப்பதோடு இல்லாமல் வெற்றியும் பெற்றாக வேண்டும். விடக் கூடாது.

    சிவந்த முகம் மேலும் சிவந்து கவனம் சிதறியது. பக்கத்து இருக்கையில் இருந்த தேவகி தொட்டு எச்சரித்தாள். நொடிப் பொழுதில் முகபாவனையை மாற்றிய சந்தனா புன்னகையில் மலர்ந்தாள்.

    விழா முடிந்து காருக்குப் போவதற்குள் பெரும் பாடாகி விட்டது. கையெழுத்து வாங்கவும் கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கூட்டம் அலை மோதியது. ஒரு வழியாக வணக்கம் சொல்லி காருக்குள் ஏறிய சந்தனாவின் கவனம் இருளும் ஒளியும் கலந்த இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனிடம் லயித்தது. ஒரு வினாடி விழி சுருக்கி யோசித்தாள்...

    கண்ணாடி அணிந்த இவன் அடிக்கடி கண்ணில் படுகிறான். ஆனால் பேச முயற்சிப்பதில்லை. அருகிலும் வருவதில்லை. தூரத்திலிருந்து கண் எடுக்காமல் பார்ப்பதோடு சரி... யார் இவன்? சந்தனா மேலே நினைக்கு முன் கார் புறப்பட்டது...

    2

    "தேவகியம்மா... நான் சொன்ன மாதிரியே பாப்பாவுக்கு அதிர்ஷ்டம் வந்திட்டுதும்மா. இயக்குனர் பெரியசாமி தன்னோட படத்தில் வாய்ப்புத் தர்றதா சொல்லிவிட்டிருக்கார். உங்களை நாளைக்கு மாலை தன்னோட ஆபீசுக்கு வரச் சொன்னார்."

    தங்கராசின் கும்மாளக் குரலுக்குப் பதிலாகத் தேவகி குதிக்கவில்லை. வெறும் புன்னகை மட்டும்தான் புரிந்தாள்.

    என்னம்மா..... கொஞ்சம் கூட அலட்டிக்காம இருக்கீங்களே... பெரியசாமி கூப்பிடறார்னா எத்தனை பெரிய காரியம்! போன ஆண்டு நீங்க அவர் ஆபீஸ் வாசலில் தவமிருந்தது மறந்து போச்சா?

    ஆமாம். நின்னேன். அதுக்கு இப்ப என்ன? பாப்பா நடிச்ச படம் வெள்ளி விழா கொண்டாடி இன்னும் கூட ஓடிக்கிட்டிருக்கு, தெரியுமில்லே? தெலுங்கு, மலையாளம்னு தயாரிப்பாளருங்க கியூவில நிக்கறாங்க. காலையில்தான் இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்ய போன் வந்தது. ஷாரூக்கானே பாப்பாவைப் பத்தி சொல்லி தேதி வாங்கச் சொன்னாராம். வரிசையா தேதி கொடுத்திட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னே பின்னே அசைய முடியாது. அதோட ரேட்டும் ஏத்திட்டேன்.

    பெரியசாமியா இருந்தாலும் அதேதான். இதெல்லாம் சிக்கலாயிடும். நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாத் திமிர்னு ஒரே வார்த்தையோட போயிடும். அதனால வேற பேசு... இந்தா, வெத்தலை போடு...

    பெங்களூர் தக்காளி மாதிரி தன் எதிரே உட்கார்ந்து காலாட்டும் தேவகியைத் தங்கராசு வியப்புடன் பார்த்தார். அவரிடம் பத்து ரூபாய்க்குக் கடன் கேட்டுத் தலை சொறிந்தவள் மாதிரியா பேசுகிறாள்!

    எல்லாம் பணம் படுத்தும் பாடு. ஒரே வருடத்தில் சந்தனாவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. இரண்டு படங்கள் வெள்ளி விழாவும், மூன்று படங்கள் நூறு நாட்களும் ஓடின. அதன் பிறகு சந்தனா தமிழகத் திரை உலகின் முதலிடத்தைப் பிடிக்கும் தகுதிக்கு உயர்ந்து விட்டாள். அதற்காக இப்படிப் பேசுவதா? இருந்தாலும் இவளைப் பகைத்துக் கொள்ள முடியாதே. அவர் பிழைப்பு அப்படி.

    நீங்க சொல்றதெல்லாம் சரிம்மா. ஆனால் நான் என்ன சொல்ல வரேன்னா...

    அவரை மேலே பேச விடாமல் நூறு ரூபாய்த் தாளை அவரிடம் நீட்டி, நீ பொறப்படு தங்கராசு. எனக்கு வேலையிருக்கு, என்றாள் தேவகி. அதற்கு மேல் பேச முடியாமல் தங்கராசு கிளம்பினார்.

    மாடியிலிருந்து இறங்கி வந்த சந்தனா, என்னக்கா, தங்கராசு வந்திருந்தார் போலிருக்கு... என்றாள்.

    ஆமாம்... வந்திருந்தான்... பெரியசாமிக்கு மார்க்கெட் இல்லை. உன் மார்க்கெட்டைப் பயன்படுத்தி அவங்க முன்னேறப் பார்க்கறாங்க. நாம அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதையெல்லாம் நீ கண்டுக்காதே. நான் பார்த்துக்கறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து நரசிம்மராஜு வரப்போறார். நம்ம வீட்டில் சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீ குளிச்சிட்டுத் தயாராகு. பிழைக்கற வழியைப் பார்ப்போம்.

    மறுபேச்சுப் பேசாமல் சந்தனா உள்ளே சென்றாள். தேவகி விருந்தில் கவனத்தைச் செலுத்தினாள். மனம் தெலுங்குப் படத்தில் கிடைக்கும் பணம் பற்றி கணக்குப் போட்டது...

    எத்தனை பாடு பட்டிருப்பாள், இந்த உன்னத நிலைக்கு வர... சந்தனாவை முன்னேற்றத்தான் செய்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தாள் தேவகி.

    எங்கோ கிராமத்தில் இருந்தவளை அழைத்து வந்து நடனமும் நாகரீகமும் சொல்லிக் கொடுத்து மனுஷியாக்கினது இன்று போல் இருக்கிறது.

    சந்தனா வெகு சூட்டிகையாக எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பிடித்துக் கொண்டது தேவகியின் சிரமத்தைக் குறைத்தது.

    கலையுலகமாம் திரையுலகம் தேவகியை முதலில் பயம் காட்டியது. எதற்கும் ஒரு விலை பேசியது: திரும்பிய பக்கமெல்லாம் தடைபோட்டு நிறுத்தியது. ஆனால் தேவகி தன்னுடைய புத்தியால் எல்லோரையும் சமாளித்துச் சாதித்தாள்.

    3

    தேவகியம்மா! தயவு பண்ணுங்கம்மா... படமே முடிஞ்சு போச்சு. ஒரே ஒரு பாட்டு சீன்தான் பாக்கி இருக்கு. முன்னாடியே நீங்க ஒப்புக்கிட்ட நாலு நாள் கால்ஷீட் கொடுங்கம்மா. அருவியில் குளிக்கற மாதிரி சீன்... லாங் ஷாட்டுக்கு வேணும்னா வேற ஆள் போட்டுக்கலாம். பாப்பா! நீயாவது சொல்லும்மா."

    தேவகி தீவிரமாக வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். சந்தனா அருகில் உட்கார்ந்தாள். தேவகியைத் தொட்டாள்.

    சரி... சரி... நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது. போய்த் தொலையலாம். நாளைக்குக் காலையில் வந்து சேருங்க.

    சந்தனாவுக்கு நன்றி கூறி விட்டு உதவி இயக்குனர் பறந்தோடினார். தேவகி அலுத்துக் கொண்டாள்.

    எங்கயோ அருவிக் கரையில் படப்பிடிப்பு. கொசுவிலேயும், புழுக்கத்திலேயும் துன்பப்படணும். உனக்கு எப்பவும் பரிதாபப்படற மனசு...

    இருக்கட்டுமக்கா... பாவம்... நம்மைப் போலத்தானே அவங்களும் துன்பப்படறாங்க.

    தேவகியின் நினைவே சரியானது. எங்கோ ஒரு காட்டுக்குள் இருக்கும் அருவிக்கரை. விளம்பரம் செய்யாததால் கூட்டம் அதிகமில்லை. மக்கள் முடிச்சு முடிச்சாக நின்றிருந்தார்கள்.

    நடனக் கலைஞர் சொல்லிக் கொடுத்த அசைவுகளைக் கவனப்படுத்திக் கொண்டு, பாட்டை மனதில் வாங்கிக் கொண்டு, தண்ணீருக்குள் இறங்கினாள்

    Enjoying the preview?
    Page 1 of 1