Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantha Kaala Paravaigal
Vasantha Kaala Paravaigal
Vasantha Kaala Paravaigal
Ebook208 pages1 hour

Vasantha Kaala Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466275
Vasantha Kaala Paravaigal

Read more from Geetharani

Related to Vasantha Kaala Paravaigal

Related ebooks

Related categories

Reviews for Vasantha Kaala Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantha Kaala Paravaigal - Geetharani

    15

    1

    இரவு விழித்துக்கொள்ள விடியல் ஆரம்பமானது. விடியலைக் கண்டதும் சூரியன் பூமித்தாயின் மீது வாழும் மக்களைச் சந்திக்க வந்தான்.

    இவன் வேறு வந்து காலங்காத்தாலே நம் தூக்கத்தைக் கெடுக்குறானே என்று சூரியன் மீது கோபம் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் உலகையே மறந்து போனார்கள் அந்த மூன்று இளைஞர்களும்.

    கடமை மறந்து கல்லூரி மாணவர்கள் காலம் கடந்தும் தூங்குவது கண்டு கொதித்துப் போயிருந்தாள் தாமரை.

    சற்றுப் பொறுத்திருந்தாள். மணி எட்டைத் தொட்டவுடன் அந்த இளைஞர்கள் படுத்திருந்த அறையை ஓங்கித் தட்டினாள்.

    டேய் அறிவு கெட்ட முண்டங்களா எழுந்திரிச்சு வாங்கடா.

    நான்கைந்து முறை கதவைத் தட்டியதும் ஒருவன் மட்டும் எழுந்து வந்து கதவைத் திறந்தான். சோம்பல் முறித்து அணிந்திருந்த ஆடையைச் சரி செய்தவாறே தாமரையைப் பார்த்து முறைத்தான்.

    எதுக்கு இப்படிக் கத்துறே?

    கத்துறேனா மணியைப் பாரு.

    எட்டுதானே ஆகுது. அதுக்குள்ள என்ன அவசரம்?

    உங்களுக்கு வேலை இல்லாமல் தூங்கியே காலத்தைக் கழிக்கலாம். எனக்கு அப்படி இல்ல. ஞாபகத்துல வச்சுட்டு மத்தவங்களையும் எழுப்பு கூறிவிட்டு சமையல் கட்டுக்குள் சென்று விட்டாள்.

    டேய் எழுந்திரிங்கடா இதுக்கு மேலேயும் தூங்கினா பேய் வேஷம் போடத் தொடங்கிடுவா! முதலில் எழுந்த தாசன் கூற விவேக்கும் நித்யனும் இன்னும் பாதி உறக்கம் மீதி இருக்க எழுந்து வந்தனர். தாமரை கொடுத்த காபியைக் குடித்து விட்டு மூவரும் பின்புறம் இருந்த குளியல் அறையை நோக்கிச் சென்றார்கள்.

    அதற்கிடையில் தாமரை தலைவாரிக் கொண்டாள். ஊதாக் கலர் சுடிதாரை அணிந்து கொண்டாள். உலக அழகிகளை ஓரம் கட்டும் அளவிற்குத் தாமரையிடம் அழகும் திறமையும் இருந்தது.

    மூவரும் சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார்கள். மூவருக்கும் தட்டை எடுத்து வைத்து இட்லியையும் பொடியையும் எடுத்து வைத்தாள்.

    இந்தப் பொடியை மனுசன் சாப்புடுவானா? தாசன் கோபத்துடன் எழுந்து விட்டான்.

    தக்காளிச் சட்னியாவது வைக்கலாந்தானே! எங்களை வேணுன்னே படுத்துறா நித்தியனும் எழுந்து கொண்டான்.

    விவேக் மட்டும் அமைதியாக அமர்ந்திருக்க அருகில் போனாள் தாமரை.

    இதப் பாரு விவேக். நான் காலையில எழுந்து எவ்வளவு வேலை பார்க்கிறேன். காலை டிபனும் செய்திட்டு மதியச்சாப்பாடும் முடித்திட்டு எல்லா வேலையும் பாத்துட்டு காலேஜ் போக எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இதுல சாம்பார் வைக்கல சட்னி வைக்கலயின்னா எப்படி விவேக்? நீங்க போய் வெளியில சாப்பிட்டா இவ்வளவும் வீணாத்தானே போகும். ஒரு நாளைக்கு இதச் சாப்பிட்டா என்ன?

    டேய் விவேக் வாடா. இவ ஏதாவது சொல்லிட்டுத்தான் இருப்பா இங்க இவ இருக்கும் வரைக்கும் வெளியிலே சாப்புட்டுக்குவோம். தாசனும் நித்தியனும் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப வேறு வழியின்றி விவேக்கும் கிளம்பினான்.

    தாமரைக்குக் கோபமும் அழுகையுமாக வந்தது.

    இவளும் சாப்பிடாமலே சென்று விட்டாள்.

    தாசன், நித்தியன், விவேக் மூவரும் எம்.எஸ்ஸி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க தாமரை பி.எஸ்ஸி கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

    இரவு எட்டு மணிக்கு மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

    தாமரை படித்துக் கொண்டிருந்தாள். மூவரும் உடை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.

    தாமரை பசிக்குது சாப்பாடு போடு! சாப்பாட்டு மேசையில் அமர்ந்து நித்தியன் கூறினான்.

    இப்ப சமையல் எதுவும் பண்ணல. காலையில் செய்த சாப்பாடும் இட்லியுந்தான் இருக்கு. வேணுன்னா சொல்லுங்க எடுத்து வைக்கிறேன்! புத்தகத்தை விட்டுப் பார்வையை விலக்காமலே கூறினாள்.

    ஏன் சமையல் செய்யல? அதட்டலுடன் தாசன் கேட்டான்.

    காலை டிபனும் நீங்க சாப்பிடல, மதியச் சாப்பாட்டுக்கும் வரல, இராத்திரி நீங்க வருவீங்கன்னு என்னால நம்ப முடியல. அப்படியே வந்தாலும் மதியச் சாப்பாட்டைத்தான் கொடுக்கணுன்னு எதுவும் பண்ணல!

    இவளுக்கு மட்டும் ஏன்தான் இவ்வளவு திமுறு இருக்கோ தெரியல கூறிய நித்தியன்,

    விவேக் வாடா வெளியில போய் சாப்புடுவோம்! என்றான் அதிகாரமாக.

    இல்லடா நித்தி இப்ப எங்கிட்ட பணம் இல்லை. நாளைக்கு பேங்ல எடுத்தால்தான்... இப்ப இதையே சாப்புடுவோம்! என்றான் மெதுவான குரலில்,

    என்னடா சொல்றே பணம் இல்லையா?

    எல்லாப் பணத்தையுந்தான் நீங்க புடுங்கிட்டிங்களே. அப்புறம் எப்படி அவங்கிட்ட பணம் இருக்கும். நீங்க இங்க வந்ததிலேருந்து அவனுக்குப் பணம் போச்சு. எனக்கு நிம்மதி போச்சு. என்னமோ பண்ணித் தொலைங்க. தாமரை அலுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

    ஞாயிற்றுக்கிழமை என்றால் தியேட்டரில் கட்டாயம் சினிமா பார்ப்பது வழக்கம். மூவரும் அன்றும் கிளம்பிச் சென்றனர். ஏற்கனவே வீட்டில் டெக்கில் போட்டுப் படம் பார்த்திருந்தாலும் தியேட்டரிலும் சென்று பார்க்க வேண்டும்.

    மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தாமரை இவர்கள் செல்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு ஒரு இளைஞன் வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் மூவரும் அதன் வழியாகச் செல்ல அந்த இளைஞன் இவர்களைப் பார்த்துச் சிரித்தான்.

    நித்தியனும் தாசனும் அவனைப் பார்த்து ஏதோ கோபமாகச் சொல்ல விவேக் இருவரையும் இழுத்துச் சென்றான்.

    இதைப் பார்த்துக் கொண்டிருந்த தாமரைக்கு எதுவுமே புரியவில்லை.

    யார் அவன்? என்று எண்ணியவள் கீழே இறங்கி வந்தாள்.

    அந்த இடத்திற்கு சென்று ஓர் பெண்ணை அழைத்தாள்.

    வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பினாள்.

    சொல்லும்மா!

    அருகில் போன தாமரை, அதோ போறாங்களே மூணு பசங்க அவுங்க யாருன்னு தெரியுமா?

    தெரியலம்மா. ஆனா அந்தப் பசங்க இந்தப் பையனைப் பார்த்தா முறைச்சுட்டு திட்டிட்டே போவாங்க. இந்தத் தம்பியைக் கேட்டா சிரிச்சுட்டே ஒண்ணுல்லையின்னு சொல்லிரும். எதுக்கும் தேவையின்னா அந்தத் தம்பிட்டே கேளும்மா.

    சரிங்க கூறிவிட்டு அவனிடம் சென்றாள்.

    மண்ணும் சிமெண்டையும் கலந்த கலவையை சுவற்றில் பூசுவதிலேயே கவனமாக இருந்தான்.

    எப்படிப் பேசுவது என்று தயங்கியபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் இவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் அருகில் சென்று, ஹலோ! என்றாள்.

    குரல் கேட்டுத் திரும்பினான். பளிச்சென்று புன்னகை பூத்திருக்கும் முகம். எதையும் தெளிவுடன் நோக்கும் பார்வை அவன் முகத்தில் தெரிய சற்றே குழப்பத்துடன் தாமரை ஏறிட்டாள்.

    என்னையா கூப்புட்டிங்க?

    ம்... ஆமா.

    என்ன வேணும்?

    என்ன கேட்பது என்று சற்று தயங்கியவள்.

    கொஞ்சம் முன்னாடி உங்ககிட்ட பேசிட்டுப் போனாங்களே மூணு பசங்க. அவங்க யாரு?

    என்னோட நண்பர்கள்!

    அவனுங்க உங்க நண்பர்களா?

    ஆமாம்.

    நீங்க அவுங்களோட படிக்கிறீங்களா?

    இல்ல...

    பின்னே?

    படித்தால்தான் நண்பர்களா இருக்கணுமா?

    அவனுங்க என்ன உங்க நண்பர்கள் மாதிரியா நடந்துக்கிறாங்க.

    தாமரையை ஆழமாகப் பார்த்தான்.

    இல்ல... இழுத்தாள் தாமரை.

    பாத்தா பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி இருக்கீங்க. முன்னப் பின்ன தெரியாதவன்ட்ட வந்து அநாகரிகமாப் பேசுறீங்க. யாரும் என் நண்பர்களைத் தப்பாப் பேசினா எனக்குப் பிடிக்காது. எனக்கு வேலை இருக்கு போறீங்களா? கூறிவிட்டு அவன் வேலையில் கவனம் செலுத்தினான்.

    அவனிடம் திரும்ப எதுவும் கேட்க விரும்பாமல் திரும்பி வந்து விட்டாள் தாமரை.

    என்னம்மா அந்தத் தம்பி ஏதாவது சொன்னுச்சா? முதலில் அவள் விசாரித்த பெண் கேட்டாள்.

    ம்ஹூம்.

    சொல்லாதும்மா!

    ஏன்?

    எனக்குத் தெரியாது.

    நான் தெரிந்து கொள்கிறேன். மனதிற்குள் நினைத்துக் கொண்டு தாமரை நகர்ந்தாள்.

    2

    டேப்ரிக்கார்டரின் சத்தத்தை அதிகமாக வைத்துக் கொண்டு தாசன், நித்தியன், விவேக் மூவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    படித்துக் கொண்டிருந்த தாமரைக்கு அந்தச் சத்தம் மிகவும் தொந்தரவாக இருந்தது. எழுந்து சென்று பாடலின் சத்தத்தை முற்றிலும் குறைத்தாள்.

    ச்சே நீங்களெல்லாம் என்ன ஜென்மம். படிக்கிற பசங்க கொஞ்சமாவது படிப்பில் கவனம் செலுத்த வேணாம். அதுதான் இல்ல, படிக்கிற என்னையாவது படிக்க விடக்கூடாது. இப்படிக் கூத்தும் கும்மாளமும் போட்டுட்டு, காலையில எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு என்னுயிரை வாங்க வேண்டியது. தாமரைக்குக் கோபம் அதிகரிக்க கத்தத் தொடங்கினாள்.

    தாசனும் நித்தியனும் விவேக்கிடம் சண்டை போட்டனர்.

    இவள முதல்ல வேற எங்கேயாவது அனுப்புடா எரிந்து போய் தாசன் கூற...

    நீ சொன்னவுடனே இவள அனுப்பிறப் போறான் பாரு. முடியாது அது மட்டும் என்னால முடியாதுடான்னு சொல்லுவான். ச்சே இவளால நமக்கு நிம்மதியே இல்லடா தாமரையைப் பார்த்து முறைத்துக் கொண்டே கட்டிலில் போய் சாய்ந்தனர் நித்தியனும் தாசனும், விவேக் மட்டும் யோசனையில் அமர்ந்து விட்டான்.

    தாமரை மனக்கொதிப்புடன் புத்தகத்தை மூடிவிட்டுப் படுத்தாள்.

    உறக்கம் மட்டும் வரவே இல்லை.

    சிறிய ஓட்டு வீடு. உள்ளே பெரிய அளவில் எதுவும் இல்லாமல் எளிமையாக இருந்தது. உள்ளே சென்று பார்த்தாள் தாமரை. யாரும் தென்படவில்லை. ஓர் அறை மட்டும் பூட்டி இருந்தது. பின்புறம் சென்றாள். ஒரு பெண்மணி கட்டிலில் படுத்திருக்க, ஒரு பெண் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தாள்.

    தாமரை மெதுவாக அவள் அருகில் போனாள். அந்தப் பெண்ணும் தாமரையைக் கவனித்து விட்டாள்...

    வாங்க யாரு வேணும்?

    அவள் கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் கண் மூடித் திறந்தாள்.

    இங்க கொத்தனார் வேலை பார்க்கும்...

    ஓ அண்ணனைப் பாக்கணுமா? இப்படி உட்காருங்க நான் அண்ணனைக் கூட்டிட்டு வர்றேன் ஓர் கட்டிலைக் காட்டிவிட்டு அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

    தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவனிடம் சென்று,

    அண்ணா உன்னைப் பார்க்க அழகான ஒரு பொண்ணு வந்திருக்கு.

    பொண்ணா?

    ம். ஏதோ கட்டிடம் கட்ட வேண்டி உன்னைப் பாக்க வந்துருக்கு. பாத்தா அசந்து போயிருவே அப்படி ஒரு அழகு கண்களை உருட்டி வியந்து போய் கூறினாள்.

    வாய மூடிட்டுப் பேசாம வாடி. கையைத் துண்டால் துடைத்தபடி வந்தான்.

    தாமரையைப் பார்த்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

    தாமரை எழுந்து வணக்கம் கூறினாள்.

    வணக்கம் வாங்க. என்னைத் தேடி இவ்வளவு தூரம்? கட்டிடம் எதுவும் கட்ட வேண்டி இருக்கா? அவன் மிகவும் அமைதியாகக் கேட்க, தாமரை வியந்தாள். அன்று அவ்வளவு கோபம் கொண்டவன் இன்று இவ்வளவு அமைதியாக...

    அதெல்லாம் ஒண்ணுல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!

    என் நண்பர்களைப் பற்றி எதுவும் தெரியணுமா?

    ஆமா. ரொம்பக் கஷ்டப்பட்டு உங்க முகவரி கண்டு பிடித்து வந்துருக்கேன். முடியாதுன்னு சொல்லிறாதீங்க.

    இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்ததுனால சொல்றேன் கேளுங்க.

    உங்களுக்கு எப்படி அவங்க பழக்கம் ஆனாங்க?

    நாங்க எல்லோரும் பத்தாம் வகுப்பு வரை ஒண்ணா படித்தோம்.

    அதுக்கு மேல நீங்க படிக்கலையா?

    இல்லை.

    ஏன்?

    குடும்பத்தில் வறுமை காரணமா என்னால தொடர்ந்து படிக்க முடியல.

    உங்க குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

    என் குடும்பத்தைப் பற்றி... எங்க அப்பா இறந்துட்டாரு. எனக்கு ஒரே தங்கச்சி. இப்ப பாத்திங்களே அவதான். அம்மா தான் ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வச்சாங்க. திடீர்ன்னு எங்க அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் பல ஆயிரம் செலவு செய்து பார்த்தும் பலன் இல்லாமல் இப்ப அவுங்க படுக்கையில் நடக்கவும் முடியாமல், பேசவும் முடியாமல் இருக்காங்க கூறும்போது அவன் கண்கள் அதிகமாகவே கலங்கி இருந்தது.

    "அதன் பிறகு நான் படிப்பை நிறுத்திட்டேன். எனக்கு அதிகமா சம்பாதிக்கும் அளவுக்கு அப்ப வயசு போதல. கிடைத்த வேலை எது என்றாலும் செய்வேன். ஆரம்பத்துல கட்டட வேலைக்குப் போய் இப்ப கொத்தனார் வேலை வரைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1