Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanneerile Thaamaraipoo
Thanneerile Thaamaraipoo
Thanneerile Thaamaraipoo
Ebook129 pages49 minutes

Thanneerile Thaamaraipoo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
Thanneerile Thaamaraipoo

Read more from Geetharani

Related to Thanneerile Thaamaraipoo

Related ebooks

Reviews for Thanneerile Thaamaraipoo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanneerile Thaamaraipoo - Geetharani

    17

    1

    ஒலிபெருக்கி, இசையை அதிர்வேட்டுச் சப்தத்துடன் அலை பரப்பிக் கொண்டிருக்க, வாழை மரத் தோரணங்களினைச் சுற்றி சிறார்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மணப்பெண் மஞ்சுளா பதுமை போன்ற அலங்காரத்துடன் மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள்.

    இரு வீட்டாரும் வெகு பரபரப்பாய் உறவுகளை வரவேற்று நொடிக்கு ஒரு தரம் கைக்கடிகாரம் பார்த்து முகூர்த்த நேரம் நெருங்கி விட்டிருப்பதை உணர்ந்து மணமேடைக்குச் சென்றனர்.

    மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கோ... நாழி யாறது... ஐயர் குரல் கொடுத்தார்.

    அகிலனின் அறைக்கதவு தட்டப்பட்டது மிக வேகமாக.

    பதிலேயில்லை. மாப்பிள்ளையின் தாயாரான அன்னபூரணிக்குள் கலக்கம். என்னாயிற்று. இவனுக்கு... நினைவு தாறுமாறாய் ஓட...

    அகிலா... அகிலா... செல்லமாக அவள் விளிக்கும் தொனியில் சற்று உரத்தே அழைத்தும் பதிலில்லை. இதற்கிடையில் மாப்பிள்ளையின் நெருங்கிய தோழனான மகேஸ்வரன் அறையை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

    த... தம்பி மகேஷ்...! அகிலனைக் காணோமா...? அறைக்கதவை ரொம்ப நேரமாத் தட்டறேன்... எனக்கென்னவோ பயமாயிருக்குப்பா... அன்னபூரணி வேர்த்துப் பூத்துப் போகாத குறையாகப் பதறினார்.

    மகேஸ்வரன் வெளித்தாழ்ப்பாளை நீக்கி உள்ளே பிரவேசித்ததும், வாங்கம்மா என மெல்லிய குரலில் சைகை செய்தான்.

    கதவு வெளித்தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பது கூட தெரியாது, இது நேரம் வரையிலும் தான் வெளியில் நின்று தட்டிக் கொண்டிருந்து விட்டோமா... அப்படியானால் அகிலன்... அகிலன் உள்ளே இருக்கிறானா...? புது மாப்பிள்ளை அகிலனை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு மகேஸ்வரன் வெளியில் எதற்கு செல்ல வேண்டும்...? அகிலனுக்கு என்னாயிற்று.

    பூரானின் கால்களாய் கிளைத்து விட்டிருந்தன சந்தேகம். பாய்ந்து உள்ளே சென்றவள் கட்டிலில் மல்லாந்த வாக்கில் கிடந்த மகனைப் பார்த்த மாத்திரத்தில் அடிவயிற்றில் கத்தி செருகியது போன்று திகில் பரவிற்று.

    ஐயையோ... தம்பி... அகிலா... என்னாச்சுடா...? மகனை நெருங்கினவள் வாயில் லேசாய் நுரை ததும்பி வழிந்த நிலையில் இருப்பது கண்டு துடித்துப் போனாள். மறுபடியும் கத்த முற்பட்டவளை, மகேஷ்வரன் சமாதானப்படுத்தினான்.

    அப்பொழுது தான் கவனித்தான். வலது கையில் தான் கொடுத்திருந்த கொத்துச்சாவி நழுவி தரையில் விழுந்திருப்பதை. கைத்தாங்கலாய் எழுப்பி தன் கைவசம் எடுத்து வந்திருந்த மாத்திரையை அவனுக்கு புகட்டி டீபாயின் மீதிருந்த நீரைப் புகட்டினான். பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து ஒரு சின்ன பாட்டிலில் இருந்து மருந்தை சிரின்ச்சிற்கு மாற்றி வெகு லாவகமாய் ஊசியை தசைக்குள் செலுத்த... அகிலன் முகத்தில் மெல்ல சுணக்கம். இமையைப் பிரிப்பதற்கு பிரயாசைப்பட்டு பிரித்துப் பார்க்க அன்னபூரணிக்குள் நிம்மதி பரவிற்று. இருப்பினும் -

    என்னப்பா... என்ன... என்ன இங்கே நடக்குது...? எனக்கு ஒரு விபரமும் புரியலையே... எதனால அகிலன் மயங்கி விழுந்து கிடந்தான்னு எனக்குத் தெரிஞ்சாகணும். அங்கே மணமேடையிலே மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வரச் சொல்லி அமர்க்களம். நேரம் வேற போயிட்டிருக்கு...!

    அகிலன் ரெண்டே நிமிஷத்துல ரெடி. நான் கூட்டிட்டு வர்றேன்... நீங்க போங்கம்மா... வெகு இயல்பாக மகேஸ்வரன் சொல்ல அன்னபூரணி செல்கிறதாக இல்லை.

    இன்னும் இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க...? அன்னபூரணி... கணவர் மதிவாணனின் குரல்.

    இப்பொழுது என்ன செய்யப் போகிறோம் என்ற பதற்றத்திற்கு விடையாக நல்லவேளை அகிலனே எழுந்து அமர்ந்து விட்டிருந்தான்.

    நேரம் போறதுன்னு ஐயர் கிடந்து கத்தறார். மாப்பிள்ளையா லட்சணமா முன்னாடி வந்து இருக்காமல், பொம்பிளைப் பிள்ளை மாதிரி ரூம்ல அடைஞ்சுக்கிட்டு வாங்க... எல்லாரும்...

    என்னங்க... ஒரு நிமிஷம் நில்லுங்க! கணவரின் கையைப் பற்றினாள்.

    என்னடி... நேரங்காலந் தெரியாமல் ஒரு நிமிசம். ரெண்டு நிமிசம்ன்னுட்டு...

    அகிலனுக்கு... என்னன்னே தெரியலைங்க. மயங்கி விழுந்து கிடந்தான். மகேஷ் தம்பி தான் மாத்திரை குடுத்து ஊசி போட்டுது. எழுந்து உட்கார்ந்திருக்கான். எனக்கென்னவோ பயமாயிருக்குங்க...-

    அடி... யார்டி உன்னோட பெரிய ரோதனையாப் போச்சுது. அகிலன் என்னோட வா. மற்றதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்...! மகனின் கையைப்பற்றினார்.

    நில்லுடா... பெத்த தாய்கிட்டே கூட வாயைத் திறந்து பேச வலிக்குதா...? உனக்கு என்னாச்சுதுன்னு உள்ளும், புறமுமா ஆடிப்போய் நிக்கறேன் நான்!

    ஹையோ... அம்மா என் தலையை உருட்டாதீங்க ப்ளீஸ்...

    இப்போ... நீ உள்ளதைச் சொல்லாமல் மாடி விட்டிறங்கினால் நானே மறிச்சு கல்யாணத்தை நிறுத்திடுவேன் ஆமா... அன்னபூரணி கிட்டத்தட்ட கத்தினாள். அவளின் கீச்சுக்குரல் அறையில் சிலையோடுவது போலிருந்தது ஒரு கணம்.

    அபசகுணமா... எந்த நேரத்துல எதைப் பேசறதுன்னு தெரியாமல்... ச்சேய்... மதிவாணன் எரிச்சல் மேலிடக் கத்தினார்.

    திடீர்ன்னு கல்யாண மாப்பிள்ளை விழுந்து கிடந்தா... பெத்த மனசு பதறாதா...? இவனுக்கு விழுந்து கிடக்கிற மாதிரி என்ன வியாதி வந்தது...? இதே நம்ம பொண்ணுக்கா இருந்தா இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை சரின்னு நாம ஒப்புத்துக்குவோமா...? மறைக்கிறதும் ஒரு வகையில் பெரிய குற்றம். கல்யாணத்துக்கு முன்னாடியே இதைப் பற்றித் தெரிஞ்சிருந்தும் அநியாயமா மறைச்சு எங்க பொண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டீங்களேன்னு பொண்ணைப் பெத்தவங்க நாளை பின்னே நம்மை வந்து கேட்டால் நாம் என்ன பதில் சொல்ற தாம்...?

    ம்... எங்கப்பன் குதிருக்குள்ளெ இல்லைன்னு சொல்லு. வெளங்காத ஜடமாடி நீ. நேரங்காலம் தெரியாமல் பிரச்சினையை பூதாகரமாக்கிட்டு. எம்புள்ளை. அகிலனுக்கு வலிப்பு வியாதி. அது எனக்கும் தெரியும். சீக்கிரமே குணமாகிடும். மருந்து சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்கான். தெரிஞ்சிக்கிட்ட வரைக்கும் போதுமா...? இல்லை இன்னும் வேற எதுவும் சொல்லணுமா...?

    ஹோ... உங்களுக்கு தெரிஞ்சிருக்கா...?

    பேசிட்டிருக்க நேரம் இது இல்லை. கல்யாணம் நின்னு போச்சுதுன்னா நஷ்டம் நமக்கொன்னும் அதிகமில்லை. பாதிக்கப்படப் போவது பொண்ணு வீட்டுக்காரங்க தான். எப்படி உத்தேசம்...? அன்ன பூரணி எதுவும் பேசும் நிலையில் இல்லை.

    மதிவாணன்... மாப்பிள்ளையோட என்ன பண்ணிட்டிருக்கீங்க...? பெண் வீட்டைச் சார்ந்த ஜனார்த்தனன் குரல் கொடுத்து உள்ளே பிரவேசிக்கவும் பேச்சு ‘தக்’கென நின்று போனது.

    அகிலனுக்கு வாந்தி. நேத்து ராத்திரி மாப்பிள்ளை ஊர்வலம், விருந்து சாப்பாடு, சரியாத் தூங்காததினால் வயித்தைப் பெரட்டிட்டது போல... சரியான வாந்தி... அதான்...! வாங்க... வாங்க... எல்லாரும் போகலாம்... ம்... மதிவாணன் சமயோசிதமாய் பேசி அனைவரையும் வெளிக்கிளப்பி அறைக் கதவை சாத்தித் தாழிட்டவர் மனைவியின் முந்தானையைப் பற்றி சரட்டென்று ஒரு இழுப்பு இழுத்து விட்டு வேறு திசை பார்த்தார். அன்னபூரணி புரிந்து கொண்டாற் போன்று ‘திடும்’மென நின்றாள்.

    அன்னபூரணி... தாலிகட்டறவரைக்கும் மாப்பிள்ளைக்கு தாயாரா லட்சணமா இருந்துக்கணும்...! இல்லை. ம்... சொல்ல மாட்டேன்... அன்னபூரணி அமைதியாய் மாடிப்படி இறங்கினாள்.

    மாப்பிள்ளையை உருவாக்கப் போனீங்களா... மாடிக்கு... நல்லா போனீங்க ரெண்டு பேரும் உறவுக் காரப் பெண்மணி ஒருத்தி நக்கலாய்ப் பேச சிரிப்பலைகள்.

    அகிலனின் முகம் வெளிறிப் போயிருந்தது லேசாய். புகை மூட்டம் வேறு நெய்வார்க்கும் சமயம் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. எங்கே மறுபடியும் ‘அது’ போல் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ என்கின்ற பயப்பந்து வேறு உருண்டு திரண்டு தொண்டையை அடைத்தது.

    ஐயர் மந்திரச் சொற்களை தம்பதி சமேதராகச் சொல்லச் சொன்னார்.

    மணப்பெண் மஞ்சுளாவின் அழகை ரசித்து அணு அணுவாய் காதல் இன்பத்திற்குத் தயாராக வேண்டிய மாப்பிள்ளை மனது மொத்தக் கூட்டத்தினரின் முன் விழுந்து வைத்து மானம் போய் விடுமோ என்கின்ற பரிதவிப்பால் நிறைந்திருந்தது.

    கெட்டி மேளம்... கெட்டி மேளம்... ஐயரின் குரல் அகிலனின் காதை

    Enjoying the preview?
    Page 1 of 1