Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முத்தங்களுடன் ஷாலினி...
முத்தங்களுடன் ஷாலினி...
முத்தங்களுடன் ஷாலினி...
Ebook77 pages25 minutes

முத்தங்களுடன் ஷாலினி...

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பொன்னுத்தாயி... ராவு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத. மூஞ்சி கறுத்து கண்ணுக்குக் கீழ கருப்பு வளையம் விழுந்திரும்... நல்லா சாப்பிடு. இல்லைன்னா உடம்பு மெலிஞ்சு போயி தோள்பட்டையில எலும்பு தள்ளிடும்... அப்புறம் மாப்பிள்ள என்னப் பார்த்து எம் பொண்டாட்டிக்கு சரியா சோறுதண்ணிகூடக் குடுக்கமாட்டேங்கறீங்களேனு சொல்லிடப்போறாரு..." செல்லமுத்து தன் மகளைக் கிண்டலடித்தார்.
 "போங்கப்பா..."
 "நான் ஏன் தாயி போறேன்? நீதான் புருஷன் வீட்டுக்குப் போகப்போற... வர்ற திங்கட்கிழமை உன்னைப் பொண்ணு பார்க்க வரப்போறாங்க. அன்னிக்கே நிச்சயம் பண்ணி, கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிடுவாக..."
 செல்லமுத்து சொல்ல, பொன்னுத்தாய் உற்சாகமானாள்.
 அப்பாவும், அம்மாவும் இல்லாத நேரம் பார்த்து காலண்டரில் திங்கட்கிழமையைத் தேடினாள். விரல்விட்டு நாளை எண்ணினாள். இன்னும் ஐந்து நாட்களே இருந்தன.
 அந்தத் திங்கட்கிழமைக்காக அவள் காத்திருந்தாள். ஐந்து இரவுகளும், நான்கு பகல்களும் விரைவாகக் கடந்து போய்விட, அந்தத் திங்கட்கிழமையும் வந்தது.
 மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் காரில் வந்தார்கள்.
 சரம்சரமாய் தங்கச் சங்கிலிகள், கையில் அடுக்கடுக்காய் வளையல்கள், காது, காதுமடல், தலைப்பின்னல் என எங்கெங்கு முடியுமோ அங்கங்கு தங்க நகைகளோடு நகை ஸ்டாண்டாக வந்து இறங்கினாள் ராஜகுமாரி.
 அவளைத் தொடர்ந்து பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பாவில் அவள் கணவர் ஆறுமுகம் காரிலிருந்து இறங்கினார். கட்டைவிரல், சுண்டுவிரல் தவிர பிற விரல்களில் மோதிரம் அணிந்திருந்தார். கழுத்திலும் வடம் போல் தங்கச் சங்கிலிமூன்றாவதாக கடந்த அத்தியாயத்திலேயே வர்ணிக்கப்பட்டுவிட்ட சந்தான கிருஷ்ணன் இறங்கினான்.
 மூன்று பேர் வரக்கூடாது என்பதற்காக கூடவே ஒரு பன்னிரண்டு வயது பொடிசையும் கூட்டி வந்திருந்தார்கள். அது நான்காவதாக இறங்கிற்று.
 மாலை மரியாதைகளுடன் மூன்றரை டிக்கட்களும் வரவேற்கப்பட்டனர்.
 "இதுதானா மாப்பிள்ளை பையன்? யப்பா... ஆளு ஜம்முனு இருக்கானே... பொன்னுத்தாயி அதிஷ்டக்காரிதான்..." வாய்விட்டு புலம்பினாள் ஒயிலா. அரை நூற்றாண்டுக்கு முன் அவள்தான் அந்த ஊரின் கனவுக் கன்னி.
 மாப்பிள்ளை வீட்டார் வரவேற்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். இளசாய் செவ்விளநீர் வெட்டிக் கொடுக்கப்பட்டது.
 அலங்கரிக்கப்பட்ட பொன்னுத்தாயி ஜன்னல் இடுக்கு வழியாக மாப்பிள்ளையைப் பார்த்து பூரித்துப் போனாள்.
 "நேரமாகுது பொண்ண காபித்தண்ணி கொண்டாந்து கொடுக்கச் சொல்லுங்க..." யாரோ ஒரு பெண் சொல்ல, சிந்தாமணி தன் மகளைத் தேடிப் போனாள்.
 வெங்கல தாம்பாளத்தில் ஐந்து தம்ளர்கள் வைக்கப்பட்டு பொன்னுத்தாயிடம் கொடுத்தனுப்பப்பட்டது.
 "யாத்தா... மாப்பிள்ளையை நல்லா பாத்துக்கோ, இப்ப உட்டுட்டனா அப்புறம் கல்யாணத்துலதான் பாக்க முடியும்..." முன்னாள் இளசும் இந்நாள் கிழடுமான காஞ்சனைப் பாட்டி சொல்ல - மெல்ல நிமிர்ந்தாள் பொன்னுத்தாய். அவள் பார்வை மாப்பிள்ளையின் முகத்துக்குப் போனது.
 திடுக்கிட்டாள்.
 'ஏன் மாப்பிள்ளையின் முகம் இப்படி மோகினி அடிச்சது மாதிரி இருக்கு?'
 "அட காப்பிய குடு புள்ள... எம்புட்டு நேரந்தான் மாப்பிள்ள மூஞ்சியையே பாத்துகிட்டு நிப்ப..." யாரோ சொல்ல காபி தம்ளர் இருந்த வெண்கல தாம்பாளத்தை அவனிடம் நீட்டினாள்ஒரு மெல்லிய முகச்சுளிப்புடன் அவன் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டான்.
 பொன்னுத்தாயின் மனதில் ஒரு சின்ன சந்தேகத் தீப்பொறி விழுந்து புகைய ஆரம்பித்தது.
 சம்பிரதாயங்களும் சடங்குகளும் முடிவுற்றன. நாலு கிடா அடிக்கப்பட்டு கறிச்சோறு விருந்து பந்தலில் நடந்து கொண்டிருந்தது.
 தற்செயலாகப் புறக்கடைப்பக்கம் வந்த பொன்னுத்தாய், அங்கே சந்தானகிருஷ்ணனும் ராஜகுமாரியும் காரசாரமாய் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.
 ராஜகுமாரி கோபமும் கண்டிப்புமாய் தன் மகனிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போவதைக் கவனித்தாள். பொன்னுத்தாயின் மனதில் இடி, மின்னல், பூகம்பம்.
 தனியாய் இருந்த சந்தான கிருஷ்ணனை நெருங்கினாள்.
 "மாமா..."
 அவளை எதிர்பார்க்காத சந்தான கிருஷ்ணன், திடுக்கிட்டுப் பார்த்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223617433
முத்தங்களுடன் ஷாலினி...

Read more from Jdr

Related to முத்தங்களுடன் ஷாலினி...

Related ebooks

Related categories

Reviews for முத்தங்களுடன் ஷாலினி...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முத்தங்களுடன் ஷாலினி... - JDR

    1

    எலே, பொன்னுத்தாயி... நீ ரொம்ப அதிஷ்டக்காரி புள்ள... என்றார் செல்லமுத்து.

    ஏம்ப்பா நான் வாங்கின லாட்டரி சீட்டுக்கு பிரைஸ் அடிச்சிருக்குதாக்கும். எம்புட்டு. ரூவாப்பா? கேட்ட பொன்னுத்தாய், அடுத்த வாரம் தனது இருபத்து மூன்றாவது பிறந்த தினத்தை சந்திக்கப் போகிறாள்.

    அவள் ஒரு கிராமியப் பேரழகின் தொகுப்பு. அழகாய் அளவாய் இருந்தாள். இடுப்பு தவிர மற்ற இடங்களில் சராசரிக்கும் மேல் அஞ்சு இன்ச் சுற்றளவு என செழிப்பாய் இருந்தாள்.

    பொன்னுத்தாய் என்ற பெயருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத அழகு அவளிடமிருந்தது. அவளது தாவணியும், ஜாக்கெட்டும் அவளின் இளமைத் திமிரை சற்றே மிகைப்படுத்திக்காட்டின. அவளது முகத்தில் மட்டும் அவள் பிறந்த இடத்துக்குச் சொந்தமான ஒரு கிராமிய அப்பாவித்தனம் அக்மார்க் முத்திரையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது

    யப்போவ், கேட்கிறேனில்ல, எம்புட்டு ரூவா ப்ரைஸ் அடிச்சிருக்கு?

    ப்ரைஸ்தான் அடிச்சிருக்கு புள்ள... ஆனா ரூவா இல்லை... வாழ்க்கை... சொன்ன செல்லமுத்து அக்கு வாயெல்லாம் பல்

    அவரது உற்சாகக் கூச்சல் கேட்டு, அவரது சகதர்மினி சிந்தாமணி வீட்டினுள்ளிருந்து வெளிவந்தாள்.

    என்னதான் சொல்லுதிய? விக்கிரமாத்தித்தன் கதையில விடுகதை போடுற மாதிரி சொல்லாம விஷயத்தை பட்டுனு சொல்லுவியளா? சிந்தாமணியின் குரலில் ஆர்வம் தெரிந்தது.

    நம்ம பொன்னுத்தாயிக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகுது சிந்தாமணி... பட்டணத்துல இருக்காளே என் சித்தி மவ ராசகுமாரி, அவ மகன் சந்தானகிருஷ்ணனுக்கு நம்ம பொன்னுத்தாயைக் கேட்குறாவ...

    என்ன ராசகுமாரி மவனுக்கா?

    ஆமா சிந்தாம்னி... அவன்... ச்சீச்சீ... அவரு... பட்டணத்துல பெரிய கம்பெனில மேனேசரா இருக்காரு... காரு பங்களானு ரொம்ப வசதியா இருக்காவ...

    அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கக் கேட்க பொன்னுத்தாயி வானத்தில் பறந்தாள்.

    சந்தானம் மாமாவை அவள் இரண்டுமுறை பார்த்திருக்கிறாள். திருநெல்வேலியில் உறவினர் வீட்டு கல்யாணத்துக்குச் சென்றிருந்த போதும், மதுரையில் ஒரு கிரஹப் பிரவேசத்திற்கு சென்ற போதும் அவரைப் பார்த்திருக்கிறாள்.

    கொஞ்சம் சிவந்த மாநிறம், சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி, துறுதுறுத்த கண்கள், அளவாய்க் கத்தரிக்கப்பட்ட மீசை என அவன் சினிமாவில் வருகிற கதாநாயகன் போல இருப்பான். அவன் தனக்கு கணவனாக வரப்போகிறானா?

    ‘குபுக்’கென்று ஒரு சந்தோஷ ஊற்று அவள் மனதில் பொங்கிற்று. மழைக்கால காட்டாறு போல வெள்ளமாய் மகிழ்ச்சி பரவிற்று. கூடவே ஒருவித வெட்கம்.

    சட்டென முகம் சிவந்து போன பொன்னுத்தாய் வீட்டுக்குள் ஓடினாள். குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு வெளிப்பட்டாள்.

    அம்மா... நான் தோப்பு கிணத்துல போயி தண்ணி எடுத்திட்டு வர்றேன்...

    தோப்புக் கிணற்று தண்ணீர் அவள் நோக்கமல்ல. தோழியரிடம் தன் திருமணச் செய்தியைச் சொல்வதே அவளது எண்ணம்.

    அட, கல்யாண விசயம் சொல்லிகிட்டிருக்கேன், நீ பாட்டுக்கு கொடத்தத் தூக்கிட்டு கிளம்புனா என்ன புள்ள அர்த்தம்? செல்லமுத்து சிரிப்போடு சொல்ல, சிந்தாமணி குறுக்கிட்டாள்.

    அர்த்தம் என்ன அர்த்தம்? வெக்கந்தான்... கல்யாண விசயமுல்ல... குமரிக்கு வெக்கம் வராதா பின்னே? நீ போமா பொன்னுத்தாயி... இந்த குடம் தூக்கற வேலை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீ மேனேசர் பெண்டாட்டி ஆனபிறகு உனக்கு தண்ணி எடுக்க ஒரு ஆளு, துணி துவைச்சுப் போட ஒரு ஆளு... சமையல் பண்ண ஒரு ஆளு, பாத்திரம் கழுவ ஒரு ஆளு... அம்மா அடுக்கிக் கொண்டேயிருக்க, பொன்னுத்தாய் வெட்கத்துடனும் குடத்துடனும் ஓடியே போனாள்.

    கிணற்றடியில் அவளது தோழிகள் இருந்தார்கள்.

    வா பொன்னுதாயி... என்ன இன்னிக்கு வெள்ளனே வந்திட்ட? கேட்டாள் அஞ்சலை.

    உங்கள எல்லாம் பார்க்கிறதுக்குத்தான்...

    ஏன் நேத்து முந்தானேத்து பாக்கலையாக்கும்?

    "நேத்து முந்தானேத்து பார்த்தாச்சு சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1