Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொதப்பல் மன்னன் ஐடியா சாமி
சொதப்பல் மன்னன் ஐடியா சாமி
சொதப்பல் மன்னன் ஐடியா சாமி
Ebook159 pages59 minutes

சொதப்பல் மன்னன் ஐடியா சாமி

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடைத்தெருவிற்குப் போய்விட்டு காய்கறிப் பையுடன் அலமேலு வீடு திரும்பியபோது அய்யாசாமி பக்கத்து வீட்டு ஓசிபேப்பரில் தேர்தல் நியூஸ் படித்துக் கொண்டிருந்தார்.
 "அலமேலு, நம்ம - அம்பாசமுத்திர தொகுதியில மொத்தம் பதினெழு பேர் நிக்கிறாங்கடீ. ரொம்ப இழுபறி - போட்டியா இருக்கும்போல தெரியுது."
 "ஆம்மா! இந்தத் தேர்தல் வந்தாலும்வந்துது சின்னம் எழுதறேன், விளம்பரம் பண்ணுறேன்னு சுவரெல்லாம் நாசக் காடாக்கிடுறாங்க: காளை மாடு வரைஞ்சிருக்காங்க, சொறிநாய் மாதிரி நிக்குது கோழி வரைஞ்சிருக்காங்க, சீக்கு கோழி மாதிரி - நிக்குது. சுவரெல்லாம் பார்க்க சகிக்கலை..." அலுத்துக்கொண்டாள் அலமேலு.
 "தபாருங்க, பொங்கலுக்கு வெள்ளையடிச்சிருக்கோம் என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. - நம்ம வீட்டுச் சுவரை பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு ஆமா..." அலமேலு சொல்லவும் அய்யாசாமியின் அடிவயிற்றில் அரைக்கிலோ புளி கரைந்தது.
 'ராட்சசி சொல்லிவிட்டாள். இனிமேல் மறுக்கவும் முடியாது. சரி என்று ஒத்துக்கொண்டு நமக்கு தெரியாமல் எவனாவது சுவரில் கிறுக்கிவிட்டுப் போய்விட்டால் இவள் ஆடும் ஆட்டம் தாங்கவும் முடியாது.'
 பாம்பு வாயில் சிறைப்பட்ட சினைத்தவளை மாதிரி ஒரு பரிதாபமுழி முழித்தார் அய்யாசாமி.
 "அலமேலு, இந்த எலக்ஷன்ல எவனையும் பகைச்சுக்க முடியாது. எவன் ஜெயிப்பான் எவன் தோப்பான்னு ஊகிக்க முடியல. நம்ம வீட்டு சுவருல..."இந்தா ஆரம்பிச்சுட்டீங்களே. சால்ஜாப்பு சொல்றதுக்கு. எதையும் பொறுப்பா செய்யத் தெரியாதே. தினம் ராத்திரி மொசுக்கிட்டு குறட்டைதானே விடுறீங்க. கட்டிலைத் தூக்கி வெளியில் சுவர்கிட்ட போட்டுகிட்டு காவல் இருங்க. எவனாவது சுண்ணாம்பு வாளியைத் தூக்கிட்டு வந்தா விரட்டி அடிங்க."
 அலமேலு கணவனை உசுப்பிவிட்டாள்.
 "அலமேலூ! மா... மா..."
 "மாமாவா?"
 "இ... இல்ல மார்கழிமாசம், குளிரு கடுமையா இருக்கு எனக்கு உடம்புக்கு ஒத்துக்காது அலமேலூ." பரிதாபமாகச் சொன்னார் அய்யாசாமி.
 நாட்டுக்கோழி முட்டை சைசில் கண்களை ஒரு உருட்டு உருட்டி அலமேலு - பார்க்க, அய்யாசாமி தலையை குனிந்து கொண்டார்.
 மாலை வரை அய்யாசாமிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
 இந்த மார்கழி பனியில் சுவருக்குக் காவல் தெய்வமாக நின்று காப்பாற்ற முடியாது. எதாவது ஐடியா செய்தாக வேண்டும்.
 சுவரை எப்படிப் பாதுகாப்பது என்ற பொருளில் மனதிற்குள் நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி, இறுதியாகக் கொள்கை அடிப்படையில் ஒரு முடிவையும் எடுத்தார்.
 அலமேலுவிடம். அதைச் சொல்லி அமலாக்க அனுமதி வாங்க தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
 "இந்தாங்க காபி."
 கழநீர் கலரில், சூடான ஒரு திரவம் இருந்த தம்பளரை அய்யாசாமியின் முன்னால் வைத்தாள் அலமேலு.
 "அலமேலூ."
 "என்னா?"
 "இந்தச் சுவர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சு இருக்கேன் அலமேலு."என்ன, கட்சி தொண்டர்கள கூப்பிட்டு ஒரு ஒப்பந்தம் பண்ணிடலாம்னா?"
 "இல்ல அலமேலு! இது வேற. சூப்பர் ஐடியா."
 "சூப்பர் ஐடியா...? ம். சொல்லுங்க பார்ப்போம்."
 "வந்து! நம்ம வீட்டு சுவர்ல. 'இந்தச் சுவரில் விளம்பரம் செய்பவர்களுக்குக் கண்டிப்பாக எங்கள் ஓட்டு கிடையாது' அப்படீனு எழுதிப் போட்டுருவோம்."
 "ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா அதைப்பற்றி எனக்குத் தெரியாது. வீட்டு சுவர் பாழாயிடக்கூடாது. அவ்ளோதான்."
 அலமேலுவின் சுருதி கொஞ்சம் குறைந்து ஒலிப்பதாகத் தோன்றியது அய்யாசாமிக்கு.
 சுவரில் எழுதுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார் அய்யாசாமி.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223463184
சொதப்பல் மன்னன் ஐடியா சாமி

Read more from Jdr

Related to சொதப்பல் மன்னன் ஐடியா சாமி

Related ebooks

Related categories

Reviews for சொதப்பல் மன்னன் ஐடியா சாமி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொதப்பல் மன்னன் ஐடியா சாமி - JDR

    சொதப்பல் மன்னன் ஐடியா அய்யாசாமி!

    "இந்த லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடுங்க!" என்று அலமேலு கொடுத்த லெட்டரை வாங்கிக்கொண்டு வெளியே சென்ற அய்யாசாமி, ஒரே நிமிடத்தில் திரும்பி வந்தார்.

    என்ன அதுக்குள்ள திரும்பிட்டீங்க?

    லெட்டரை - போஸ்ட் பாக்ஸ்ல போட்டாச்சு. அலமேலு, என்னைப்பற்றித் தெரியாதா? எள்ளுன்னா எண்ணையா நிற்பேன். அதுவும் ஆனந்தம் நல்லெண்ணையா ஹிஹி...

    அலமேலு அவரைக் குழப்பமாய் பார்த்தாள்.

    இவ்வளவு சீக்கிரமா எப்படி? ஆமா லெட்டரை எந்தப் போஸ்ட் பாக்ஸல போட்டீங்க?

    நம் வீட்டு கேட்ல வச்சிருக்கமே சிவப்பு லெட்டர் பாக்ஸ், அதுலதான். ஏன்?

    கொஞ்சமாவது இது இருக்கா உங்களுக்கு? நான் உங்ககிட்ட கொடுத்தது தென்காசியில இருக்கிற என் சித்தப்பா பையன் குத்தாலிங்கத்துக்கு நான் எழுதின லெட்டர். அதைப் போஸ்ட் ஆபீஸ் போஸ்ட்பாக்ஸ்ல போடுவீங்களா? அதை விட்டுட்டு நம்ம வீட்டு லெட்டர் பாக்ஸ்ல போட்டுட்டு வந்திட்டீங்களே உங்களை...

    அய்யோ... சமாதானம் சமாதானம் அலமேலூ. வன்முறையில இறங்கிடாதே. தப்பு என் மேல இல்லை. நீ வேணுனா குணமங்கலம் கோவிந்தராசு, சிவகங்கை ஜிகுனு, கோபாலசமுத்திரம் சாரதா, வேட்டாம்பாடி அம்பிகாபதி இவங்களை எல்லாம் கேட்டுப்பாரு.

    யாரு இவங்க எல்லாரும்?

    நம்ம வாசகர்கள்தான். இவங்ககிட்ட கேட்டுப்பாரு அலமேலு. என் மேலே தப்பே கிடையாது. நீ... நீதான் கொஞ்சம் தெளிவா விளக்கமா சொல்லியிருக்கணும். சரி விடு. இப்ப உடனடியா முடிச்சிடுறேன். அந்த லெட்டரை போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் பாக்ஸ்ல போடணும். அவ்ளோதானே. இரு, அஞ்சே நிமிஷத்துல. போட்டுட்டு வந்திடுறேன்.

    வீட்டு லெட்டர் பாக்சில் இருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு போஸ்ட் ஆபீசுக்கு விரைந்தார் அய்யாசாமி.

    ‘யாருக்கு லெட்டர் எழுதியிருக்கா இந்த அலமேலு’ என்றபடி முகவரியைப் பார்த்தார்.

    ‘டாக்டர் குத்தாலிங்கம்’, என்று எழுதியிருந்ததைப் பார்த்து வியந்தார்.

    அட... குத்தாலிங்கம் டாக்டர் ஆயிட்டானா? பலே... பய சின்ன வயசுலேயே நல்லாப் படிப்பான். குத்தாலிங்கம் நீ நல்லா படிச்சு பெரிய டாக்டராவோ, இன்ஜினியராவோ வரணும்டா... என்று சொன்னால், போ மாமா இன்ஜினியரெல்லாம் வேண்டாம். நான் நல்லா படிச்சு - டாக்டராத்தான் வருவேன். என் லட்சியமே டாக்டர் ஆகிறதுதான்னு சொல்வான். துடைப்ப குச்சியை எடுத்துக்கிட்டு வந்து எல்லாருக்கும் ‘சுருக்’னு ஊசி குத்துவான்.

    கொஞ்சநாள் முன்னாடி குத்தாலிங்கம் பற்றி பேச்சு வந்தப்ப, ‘அவன் டாக்டருக்குப் படிச்சிட்டிருக்கான்’னு அலமேலு சொன்னாள். பய படிச்சு முடிச்சிட்டானா என-- நினைத்துக்கொண்டார் அய்யாசாமி.

    லெட்டரை போஸ்ட் செய்யும்போது அவர் மனதில் ஒரு ஐடியா பளிச்... பளிச்...

    அலமேலுவுக்குக் குத்தாலிங்கம் மேல் பாசம் உண்டு. அவன் அவளது சித்தப்பா பையன்தான் என்றாலும் சொந்த தம்பிகளான குப்புராஜ், சின்னராசா மேல் அவள் வைத்திருக்கும் பாசம் போலவே குத்தாலிங்கம் மேலேயும் பாசம் வைத்திருந்தாள். குத்தாலிங்கமும் விசேஷ வீடுகளில் அலமேலுவை பார்த்துவிட்டால்போதும், ‘அக்கா,அக்கா.’ என அவளையே சுற்றிச்சுற்றி வருவான்.

    இப்போது அவன் : டாக்டர் ஆகிவிட்ட நிலையில் அவனுக்கு ஏதாவது நல்லது செய்து அவன் நன்மதிப்பை பெற்றுவிட்டால் ஆட்டோமெட்டிக்காக அலமேலுவிடம் தன் பெருமை உயர்ந்துவிடுமே! என நினைத்தார் அய்யாசாமி.

    நினைத்த வினாடியே ‘அ... பம்பம்... பஜக்ஜம்’ என்று மனது குதியாட்டம் போட்டது.

    தனக்குத்தானே ஒரு ‘சபாஷ்... பலே... பலே...’ போட்டுக்கொண்டார் அய்யாசாமி.

    ஒரே வாரத்திலேயே அய்யாசாமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

    என் தம்பி குத்தாலிங்கம்... டாக்டர் குத்தாலிங்கம் ஆயிட்டான். அவனைப் பார்த்து ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்திடுறேன். ஒரு எட்டு தென்காசி போயிட்டு வரேன்... வீட்டைப் பார்த்துக்குங்க. நான் இல்லேங்கிற தைரியத்துல ஐடியாகிய்டியானு ஏதாவது சொதப்பிகிட்டு இருக்காதீங்க. ஆமா என்றாள் அலமேலு.

    அலம்ஸ்... அ... அலம்ஸ்...

    என்ன கொஞ்சல், நேரம் கெட்ட நேரத்துல?

    இல்லை அலம்ஸ்... நானும் அலம்ஸ்... உன்கூட அலம்ஸ்... தென்காசிக்கு அலம்ஸ்... வரணும் அலம்ஸ்... ஹிஹி... ஹி...

    எடு தொடப்பக் கட்டையை... வீட்டுல சிவனேனு இருந்து வீட்டைப் பார்த்துகிறத விட்டுட்டு ஊர் சுத்தணுமாக்கும்.

    அய்யோ... புரியாம பேசறியே அலம்ஸ்... நான் உன்கூட வர்றேன்னு சொன்னது ஒண்ணும். என்னோட ஆசைக்காக இல்லை. அலம்ஸ். எல்லாம் உனக்காக... உன் தம்பி குத்தாலிங்கத்துக்காக.

    வார்த்தைகளை வீசிவிட்டு ஓரக்கண்ணால் அலமேலுவைக் கண்காணித்தார்.

    அலமேலுவின் முகத்தில் சிந்தனை ரேகை, யோசனை ரேகை, லேசான குழப்ப ரேகை என பல்வேறு வகையான ரேகைகள் ஓட்டமாய் ஓட மகிழ்ந்தார்.

    ‘அப்படிப் போடு சபாசு’ என்று உள்ளூர குதூகலித்தார்.

    எனக்காகவா? என்றாள் அலமேலு சுருதிகுறைந்த குரலில்.

    ஆமா அலம்ஸ்... நீயோ டாக்டரானதுக்காக உன் தம்பியை ஆசிர்வாதம் பண்ணப்போற. சும்மா தனியா போனா உன் மரியாதை என்னாகிறது? உன் கவுரவம் என்னாகிறது? உன்...

    சட்... என்ன சொல்ல வர்றீங்க?

    நாம ரெண்டு பேரும் தம்பதி சமேதரா போவம்... மனசார டாக்டர் குத்தாலிங்கத்த ஆசிர்வாதம் பண்ணுவோம். குடும்பத்தோட வந்து நம்ம அக்கா வாழ்த்தினாளேனு அவனுக்கும், மனசு சந்தோஷமா நிறைவா இருக்கும். என்ன நான் சொல்றது?

    அவர் சொல்வது சரி என்பதுபோலத் தோன்றியது. தலையசைப்பில் பச்சைக்கொடி காட்டினாள்.

    ‘அ... பம்பம் பஜக்ஜம்... அலமேலூ மைடியர் அலம்ஸ் தென்காசி வந்து உன்னை ஒரே அசத்தா அசத்திடுறேன். உன் மனசுல நான் அப்படியே பி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் மாதிரி ‘ஜிவ்வ்வ்வு’னு உயர போயிடுறேன்.’ மனதுக்குள் மலர்ந்தார் அய்யாசாமி.

    தென்காசிக்குப் புறப்படுமுன் செங்கோட்டை இசக்கி ராஜனின் அட்ரசை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டார். புது ஊரில் உதவிக்கு ஆள் வேண்டுமே!

    தென்காசி -

    குற்றாலத்திடம் இரவல் வாங்கிய ‘ஜில்’ மற்றும் ‘குளு... குளு...’ ஊர் முழுக்க பரவியிருந்தது.

    குத்தாலிங்கத்தைப் பார்த்ததுமே கையைக் குலுக்கு குலுக்கு என குலுக்கி, வாழ்த்துக்கள். கன்கிராஜுலேஷன், பாராட்டுக்கள், ஆசிர்வாதம், பிளசிங்ஸ். நீ ரொம்ப கைராசியான டாக்டராகணும்ப்பா என்று வாழ்த்தினார் அய்யாசாமி.

    கிளினிக் போட்டாச்சா? - இன்னும் இல்லையே? ஏன்னா அது சம்மந்தமா என்கைவசம் ஏகப்பட்ட ஐடியாஸ் இருக்கு. நீ இதுல தலையிடவே வேண்டாம் குத்தாலிங்கம். நானே எல்லாம் கவனிச்சு ஏக் தம்ல எல்லாம் முடிச்சு கொடுத்திடறேன். ஓகே? என்றவர் குத்தாலிங்கத்தின் பதிலை எதிர்பார்க்காமலேயே புறப்பட்டார்.

    மாமா...

    ஷ்... நீ இன்னும் கிளினிக் போடலைல்லா. அது போதும் எனக்கு. மத்ததை நான் கவனிச்சுக்குவேன். சரி, எனக்கு அவசரமா ஒரு ரெண்டாயிரம் தேவைப்படுது. தர முடியுமா? ஹிஹி... எனக்காக இல்லப்பா. எல்லாம் உனக்காகத்தான். நான் வந்து என்ன ஏதுனு விபரம் சொல்றேன். அதுவரை விசயம் சஸ்பென்சா இருக்கட்டுமே ட்டுதவுசண்ட் தர்றியா. ஐ நீட்... ருப்பீஸ் அர்ஜெண்ட். இமீடியட்... யூ ஒர்க் ஒன்லி... மை ஒர்க் நாட்... ஹிஹி...

    குத்தாலிங்கம் அவரைக் குழப்பமாகப் பார்த்தான்.

    கொடுக்கலாமா? வேண்டாமா?

    என்ன குத்தாலிங்கம்! என் மேல நம்பிக்கை இல்லையா? நான் என்ன மூணாம் மனுசனா? ஐயாம் தேர்ட் மேன்? நோ... ஐ யூ அன்கிள் மிசஸ் அலமேலு அக்காஸ் ஹஸ்பெண்ட் யூ நோ? துட்டைக் கொடுப்பா, வந்து விபரம் சொல்றேன். விபரம் கேட்டு நீயே அசந்து போயிடுவ. அட, சிக்கிரம் கொடுப்பான்னா.

    குத்தாலிங்கத்தை வற்புறுத்தி பணம் வாங்கினார்.

    அப்புறம் ஒரு விசயம்ப்பா. இந்தப் பண விவகாரம் நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கட்டும். உங்க அக்காவுக்கு தெரிய வேண்டாம். சஸ்பென்சா இருக்கட்டும். ஓகே என்றார். கிளம்பினார்.

    அ... பம்பம்... பஜக்ஜம் அலமேலு இந்த ரெண்டாயிரத்தை வச்சு நான் பண்ணப்போற ஐடியாவில நீ அப்படியே மகிழ்ந்து அசந்து போயிடப் போறே. அப்புறம் பாரு இந்த அய்யாசாமிக்கு உன் இதயத்துல எவரெஸ்ட் உயர இடம்தான்.

    பையில் செங்கோட்டை இசக்கிராஜன் முகவரி இருக்கிறதா என்பதை ஒருமுறை உறுதி செய்துகொண்டு புறப்பட்டார். செங்கோட்டைக்குப் பஸ் ஏறினார்.

    அய்யாசாமி வீடு திரும்பியபோது இரவு - எட்டு மணி. ஹாலில் எல்லாரும் கவலையாய் உட்கார்ந்திருந்தனர்.

    தெரியாத ஊரு இந்தமனுசன் எங்கயாவது வழிமாறி போயிட்டாரோ என்னவோ, காலைல போன மனுசன், இப்ப இருட்டிட்டு. இன்னும் காணுமேப்பா. எதுக்கும் போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்துடுவமா சித்தப்பா என்று படபடப்பாய் புலம்பிக்கொண்டிருந்த அலமேலு, வாசலில் தெரிந்த அய்யாசாமியின் தலையைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.

    உள்ளே வந்த அய்யாசாமியின் முகம் சூரியன்போல் பிரகாசித்தது.

    மகிழ்ச்சி!

    சக்சஸ்... வெற்றி... குத்தாலிங்கம் உனக்காக எல்லா ஏற்பாடும் செஞ்சு முடிச்சிட்டேன். ச்சே! காலைல இருந்து ஒரே அலைச்சல்... - செங்கோட்டைபோய் என்னோட வாசகர் இசக்கிராஜனைக் கூட்டிக்கிட்டு தென்காசி வந்து ஊர் முழுக்க ஒரு அலசு அலசி... காசி விஸ்வநாதர் கோயில் பக்கமா ஒரு சூப்பர் இடம் பிடிச்சிட்டேன்.

    சூப்பர் இடமா? எதுவும் புரியாமல் குழப்பமாய் கேட்டாள் அலமேலு.

    "ஆமா! பக்கத்துல ஆட்டோ ஸ்டாண்ட். எதுத்தால டாக்சி ஸ்டாண்ட், நோயாளிகள் வரப்போக நோ பிராப்ளம்...

    Enjoying the preview?
    Page 1 of 1