Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உயிரைத் தந்துவிடு!
உயிரைத் தந்துவிடு!
உயிரைத் தந்துவிடு!
Ebook154 pages55 minutes

உயிரைத் தந்துவிடு!

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோப்பையிலிருந்த தேநீரை உறிஞ்சிக்கொண்டே அருண் நிமிர்ந்து பார்த்தான். எதிரில் இந்துஜா இருந்தாள்.
 மின்னலடிக்கும் அதிவெண்மை சோப் உபயோகித்துத் துவைத்து, துணிகளின் தூய வெண்மைக்கு என விளம்பரப்படுத்தப்படும் சொட்டு நீலம் உபயோகித்து நீலமிட்டு மொறுமொறுப்பான சலவைக்கான ஸ்டார்ச்சை நனைத்துக் காயவைத்து, லாண்டரிக் கடையில் 'சுருக்' இல்லாமல் அயர்ன் போடப்பட்ட வெள்ளைக் காட்டன் சேலையும், பார்டர் கையுடன் கூடிய வெள்ளை ஜாக்கெட்டும் அணிந்து புத்துணர்ச்சி முகத்துடன் பொலிவாக இருந்தாள்.
 அருண் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த இந்துஜா மேஜையைத் தட்டினாள்.
 "என்ன இந்து?"
 "காலைல இருந்து சும்மாவே இருக்கிறோமேனு - அடிச்சேன்."
 "அதுக்கு ஏன் மேஜையை அடிக்கணும்?"
 "நான் அடிச்சது மேஜையை இல்ல."
 "பின்னே?"
 "மேஜைமேல இருந்த ஈயை."
 "ஈயடிச்சிட்டு இருக்கிறோம்னு வாசகர்களுக்குத் தெரிவிக்கிறியாக்கும்?"
 "இல்லே சந்தோஷப்படுகிறேன்."
 "இதுல என்ன சந்தோஷம் உனக்கு?"
 "அடிக்கிறதுக்கு அட்லீஸ்ட் ஈயாவது வருதேன்னு!""கிண்டலா? வர்ற எரிச்சல்ல..."
 இந்துஜா அழுவதுபோல் சிணுங்கினாள்.
 "அய்யோ... அழாதே அழாதேப்பா. இது குடும்பக்கதை இல்லை. க்ரைம் கதை. அழுது கண்ணைக் கசக்கி சோகமாக்கிடாதே."
 "பின்னே என்ன? திருநெல்வேலியில ஜாலியா கேஸ் பார்த்துகிட்டு, இன்வெஸ்டிகேஷன், என்கொயரினு அங்கே இங்கே ரவுண்ட் அடிச்சுகிட்டிருந்தோம். கோயமுத்தூர்ல மர்டர் கேஸ். வா, கோயமுத்தூர் பிராஞ்ச்ல கேம்ப் போட்டு அதைத் துப்பறியலாம்னு இங்கே வந்தீங்க. காலைலேர்ந்து உட்கார்ந்திட்டிருக்கிறோம். ஈ, காக்கா தவிர வேற ஆளையே காணோம்..."
 "ப்ச்... இதுதான் உன் கோபத்துக்குக் காரணமா? கேஸ் வரும். அதுவும் சுவாரஸ்யமான கொலைக் கேஸ் நிச்சயம் வரும்..."
 "எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?"
 "ஜேடி ஆர் இந்த நாவலை எழுதிட்டிருந்தப்ப நைஸா பார்த்தேன். ரெண்டாவது அத்தியாயத்துலயே கொலை கேஸ் வருது..."
 "வெரிகுட்... ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்றீங்களா அருண்?"
 "ம்... கேளு..."
 "நாயுடு ஹால் கடை முன்னாடி நிக்கிற செக்யூரிட்டிக்கு என்ன பேரு தெரியுமா?"
 "ம்... செக்யூரிட்டிதான்"
 "இல்ல... 'பாடி' கார்டு..."
 அருண் சிரித்தான்.
 "கேஸ் வர்றவரை எதாவது ஜோக் சொல்லேன்..."
 "விரல் ஜோக் சொல்லவா?"ம்..."
 "கல்யாணம் ஆகாத இளம்பெண் ஒருத்தி..." இந்துஜா ஆரம்பித்த வினாடி இண்டர்காம் ங்ங்... ங்ங்க்...
 கடமை உணர்வு வர, "ஜோக் அப்புறமா சொல்றேன், என்ன...!" என்ற இந்துஜா ரிஸீவரை எடுத்து "ஹலோ," என்றாள். ரிசப்ஷனிஸ்ட் ஷரீபா பேசினாள்.
 "மேடம், மிஸ்டர் சாம்பசிவம்னு ஒருத்தர் வந்திருக்கார். அவரோட அண்ணன் மிஸ்டர் பரமசிவம் கொலை சம்பந்தமா வந்திருக்கார். பாஸ்கிட்டே அனுப்பவா அல்லது இங்கே பிரான்ச் ஆபீஸ்லேயே டீல் பண்றதா?"
 "ஒரு நிமிஷம் ஷரீபா," என்ற இந்துஜா காதிலிருந்து ரிஸீவரை விலக்கி அருணிடம் திரும்பினாள்.
 "அருண் கேஸ் வந்தாச்சு," என்று கண்ணடித்தாள். மீண்டும் ரிஸீவரைக் காதில் பொருத்தி, "அவரை இங்கே அனுப்பு," என்றாள்.
 "ஓ. கே மேடம்."
 அருண் இருந்த அறைக்குள் வந்த சாம்பசிவம் முகத்தில் சோகம் தேக்கியிருந்தார். கன்னத்தில் இத்தனூண்டு தாடி. தனக்குத் தெரிந்த வரையில் சுருக்கமாய்க் கொலை விவரத்தைச் சொன்னார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223882909
உயிரைத் தந்துவிடு!

Read more from Jdr

Related to உயிரைத் தந்துவிடு!

Related ebooks

Related categories

Reviews for உயிரைத் தந்துவிடு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உயிரைத் தந்துவிடு! - JDR

    1

    பள்ளி மணிகள் நீளமாய் டிங்டாங் செய்து, மாணவ மாணவியருக்கு ஆகஸ்ட் 15 அனுபவம் வழங்கிய - பஸ் நிறுத்தங்களில் யூனிபார்ம் சிறுசுகளும், வண்ண வண்ண இளசுகளும் குவிய ஆரம்பித்த- போனால் போகிறதென்று சூரியன் தனது கோபச் சூட்டைக் குறைத்துக்கொண்ட மாலை நேரம்.

    பஞ்சாலைத் தூசியினாலும், வாகனப் புகையினாலும் மாசுற்ற ஈரப்பதமிக்க கோவைக் காற்று மெல்லிய இயக்கத்தில் இருந்தது. கோவையின் ராமநாதபுரம் பகுதியில், ஒலம்பஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து உள் வாங்கிச் சென்ற கணேசபுரம் சந்தில் அமைந்திருந்த காம்பவுண்ட் வீடுகளில் ஒன்றின் வாசலில் நின்று காற்றின் மெல்லிய வீச்சை அனுபவித்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

    வா... வா...

    அழைக்கும் குரல் ஒன்று அருகில் கேட்க, சுற்று முற்றும் பார்த்தான். யாரும் அருகில் இல்லை. பிரமை என்று ஒதுக்கினான்.

    பானு... பானு...

    உட்புறமாகக் குரல் தந்தான்.

    என்னங்க? என்றாள் மிஸஸ் பானுமதி மாணிக்கம்.

    பசிக்குது. சாப்பாடு இருந்தால் தாயேன்.

    என்ன பழக்கமோங்க. சாயங்காலம் கூடச் சாப்பிடுவாங்களா? ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடுறீங்க. உடம்பு தேறமாட்டேங்குதே. என்ன உடம்போ இது.

    நான் என்ன செய்யறது? நாலு நாலரையானா வயிறு கபகபனு பசிக்க ஆரம்பிச்சிடுது.

    ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க. தொடுகறி எதுவும் இல்லை. முட்டை வாங்கி வச்சிருக்கன். ஆம்லெட் போட்டுத் தந்திடுறேன், என்ற பானுமதி, வெங்காயம் எடுத்து நறுக்க ஆரம்பித்தாள்.

    வீதிப்பக்கம் பார்வையைத் திருப்பினான் மாணிக்கம்.

    முழங்கால் வரையிலான வயலட் பாவாடையும் வெள்ளை சிலாக்கும் அணிந்த மாணவிகள் இருவர் சுவாரசியமாய் பேசிக்கொண்டு போனார்கள்.

    காய்கறி வண்டிக்காரன் வண்டி தள்ளிக்கொண்டு போனான்.

    வா... வா...

    மாணிக்கம் தன்னை யாரோ அழைப்பதை மீண்டும் உணர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். மீண்டும் பிரமையோ? தலையை உலுக்கிக் கொண்டான்.

    தா... தந்து விடு... மாணிக்கம் இந்தக் குரலைத் துல்லியமாக உணர்ந்தான்.

    இது பிரமை இல்லை. இந்தக்குரல் நிச்சயம் ஒலித்தது. ‘தா’ என்று யார் கேட்கிறார்கள்? எதைத் தரச் சொல்கிறார்கள்?

    சுற்றுமுற்றும் பார்த்த மாணிக்கத்திற்கு அச்சமாக இருந்தது. குரல் துல்லியமாக ஒலித்தது. மிக அருகிலேயே ஒலித்தது. ஆனால் இங்கே யாருமில்லையே...

    அவன் மெலிதாய் வியர்த்தான். பானு, நீ ஏதாவது சொன்னயா?

    என்ன சொன்னேன்? எப்போ?

    வந்து... இ... இப்பத்தான்... ஏதாவது கேட்டியா என்கிட்டே?

    இல்லையே!

    மாணிக்கம் திகிலானான். இதென்ன சத்தம், வா, தா என்று? இதுவரை இப்படி ஏற்பட்டதில்லையே... இது பிரமை போலத் தோன்றினாலும், அந்தச் சத்தம் துல்லியமாக, தெளிவாகக் கேட்டதே. யோசித்த மாணிக்கத்திற்கு தலை ‘கிண் கிண்’ என்றது.

    வீட்டுக்குள்ளிருந்து பானுமதியின் சத்தம் கேட்டது...

    ஸ்... ஸ்... ஆ

    என்ன பானு?

    ஒண்ணுமில்லைங்க... கையில லேசாகக் கத்தி பட்டுட்டுது. நீங்க இங்கே பார்க்காதீங்க.

    ஐயையோ! கத்தி பலமா பட்டுச்சா பானு? ரத்தம் வர்றதா?

    லேசாத்தாங்க... கொஞ்சமா ரத்தம் வருது. நீங்க இங்கே வராதீங்க. வேண்டாம் நீங்க ரத்தத்தைப் பார்த்தா மயங்கிடுவீங்க.

    பா... னு... என்று பதறிய மாணிக்கம். இயற்கையான ஆர்வத்துடன் உட்புறம் திரும்பினான்.

    அவளது வெளிர் நிறக் கையில் கட்டைவிரல் பகுதியில் சிவப்பாய் ரத்தம் தெரிந்தது. ரத்தத்தைப் பார்த்த வினாடி அவனது இதயத்தில் ஒரு ‘திடுக்.’ கொஞ்சம் படபட நிறையத் தடார் படார்...

    ர... ர... த்... தம்... என்று குழறினான், கண்கள் செருக, அப்படியே மடங்கிச் சரிந்து விழுந்தான்.

    ‘ஆம்பளை இப்படியா தைரியமில்லாமல் இருக்கிறது? சே! என்ன உடம்பு, என்ன மனசு? ஒவ்வொருத்தன் துள்ளத் துடிக்கக் கொலையே பண்ணிட்டுப் பதறாமல் இருக்கிறான். இவரு துளி ரத்தத்தைப் பார்த்தா இப்படி மயங்கி விழறாரே!’ தனக்குள் முணுமுணுத்தபடி வந்த பானுமதி, அவனை நேராகப் படுக்க வைத்தாள்.

    பிறகு காயம்பட்ட தனது விரலைக் கழுவி ஈரத்துணியைச் சுற்றிக் கொண்டாள். ஓர் அட்டையை எடுத்துக்கொண்டு வந்து தன் கணவனுக்கு விசிற ஆரம்பித்தாள்.

    கொஞ்ச நேரத்தில் அவன் முனகிப் புரண்டான்.

    பானுமதி ஒரு துணியை நனைத்து அவன் கண்களில் ஒற்றி எடுத்தாள்.

    ‘மயங்கி விழுந்தா முகத்துல தண்ணி தெளிக்கக்கூட முடியல... தண்ணி தெளிச்சா சளிப்புடிச்சு இருமல்ல கொண்டு வச்சிடுது. இந்தப் பூஞ்சை மனுசர் உடம்பும் தேறமாட்டேங்குது,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    கொஞ்ச நேரத்தில் மாணிக்கம் எழுந்து உட்கார்ந்தான்.

    தண்ணி குடு, பானு!

    அவள் தந்த ஒரு செம்பு நீரை மடக் மடக் என்று குடித்தான்.

    காத்தாட வாசல்ல உட்காருங்க. நிமிஷத்துல சாப்பாடு போடுறேன்.

    வாசல் பக்கம் நகர்ந்தவனுக்கு, ‘வா... தா’ என்று கேட்ட குரல்கள் நினைவுகள் வந்தன. வாசல் பக்கம் செல்ல முனைந்தவன் தயங்கினான்.

    வேண்டாம், பானு. நான் இங்கேயே இருக்கேன்.

    பானுமதி சமையலறையில் ஆம்லெட் தயாரிக்கலானாள்.

    மாணிக்கம் ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

    அந்தக் குரல்கள் மீண்டும் கேட்டன.

    அவன் காதருகில் தெளிவாக.

    வா... வா... தா... தந்துவிடு... - தெளிவான குரல்தான் கொஞ்சம் கரகரப்பாய் முரட்டுத்தனமாய் கேட்டது. பெண் குரலா, ஆண் குரலா, என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் காது அருகில் வாய் வைத்துத் தெளிவாய் அழுத்தந்திருத்தமாய்ச் சொன்னது போலிருந்தது.

    திகிலடித்துப் போனான். அமானுடம் ஏதேனும் விளையாடுகிறதா? சாப்பிட்டு விட்டுப் போய் மந்திரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    பானுமதி அழைத்தாள். வாங்க, சாப்பாடு ரெடி.

    மாணிக்கம் சாப்பிட உட்கார்ந்தான்.

    என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க? மயக்கமாவே இருக்கா?

    இல்லை – பானு தலை விண்விண்ணுன்னு தெறிக்குது!

    வயிற்று வலின்னு டாக்டர்கிட்டே போனீங்களே; அப்பவே இதையும் சொல்லி மருந்து மாத்திரை வாங்கியிருக்க வேண்டியதுதானே?

    அப்ப நல்லாத்தான் இருந்தேன். இப்பத்தான் ஒரு கால் மணி, அரை மணி நேரமா இப்படி இருக்கு தவிர...

    என்னங்க?

    யாரோ என்னை வா வான்னு கூப்பிடுற மாதிரி இருக்குது. பானு.

    கூப்பிடுறாங்களா! ஹஹ்... சும்மா பிரமையா இருக்கும். சாப்பிட்டுட்டுப் படுத்துத் தூங்குங்க. நல்லாத் தூங்கினால் எல்லாம் சரியாப் போயிடும். ரெண்டு நாளா வயித்து வலி வயித்து வலின்னு தூங்கவே இல்லையே. அதோட எபக்ட்தான் இது.

    ம்... இருக்கும் இருக்கும். ரெண்டு நாளா சரியாவே தூக்கம் பிடிக்கலை.

    சரி, சரி. சாப்பிடுங்க.

    மாணிக்கம் சாப்பிட்டான். கை கழுவிவிட்டு வாசலுக்கு வந்தான். பானுமதி அவன் சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் படுக்கையை விரிக்க ஆரம்பித்தாள்.

    அப்போது -

    தொலைவில் ஒரு வினோதமான ஹாரன் ஒலி கேட்டது. அது மீண்டும் கேட்டபோது -

    மாணிக்கத்தின் உடல் விலுக்கென்று உலுக்கிக் கொண்டது. உடலில் ஒரு விறைப்புத் தன்மை வந்தது. அவனது நினைவு மெல்ல மெல்ல விலகி ஒரு புது உணர்வு அவனுள் வியாபித்தது.

    பார்வை மங்கி, மிரள மிரள விழித்தான் மாணிக்கம்.

    என்னங்க... பாய் விரிச்சாச்சு... என்று குரல் கொடுத்தாள் பானுமதி.

    மாணிக்கத்திடமிருந்து பதில் இல்லாமல் போகவே, என்னங்க... என்றபடி வந்தாள். அவன் நின்றிருந்த நிலையைப் பார்த்து மனதில் ‘திடுக்’ பெற்றாள்.

    ‘ஏன் இப்படி மிரண்டு முழிக்கிறார்?’

    என்னங்க... என்று அவனை நெருங்கிக் கேட்ட பானுமதியை மிரட்சியாய்ப் பார்த்தான்.

    என்ன செய்யுது உங்களுக்கு? என்று கேட்டபடி, தொட்ட பானுமதியை அவன் உதறிய உதறலுக்கு அவள் தடுமாறினாள். இந்த அலட்சிய உதறலில் இவ்வளவு வலிமையா?

    அவனிடமிருந்து வெளிப்பட்ட அசுர பலத்தைக் கண்டு வியந்தாள். பிறகு பயந்தாள்.

    ‘எப்படி இவரிடம் இப்படி ஓர் அசுர பலம்?’

    அந்த வினோத ஹாரன் ஒலி மீண்டும் கேட்க, மாணிக்கம் வீட்டை விட்டு வெளியேறினான். தெருவில் இறங்கி நடந்தான். அவனது மிரட்சிப் பார்வை இப்போது மாறி ஒருவிதத் தீர்க்கமான முறைப்பாக மாறியிருந்தது.

    பானுமதி என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்தாள்.

    ‘இவர் எங்கே போகிறார்?’ மாணிக்கத்தின் ஒவ்வோர் அடியும் உறுதியாக இருந்தது தீர்க்கமான முடிவுடன் அவன் நடப்பதைப் போலத் தோன்றியது.

    நாகலட்சுமி கல்யாண மண்டபம் முன்பாக அவன் வந்த போது -

    சார்...

    காக்கி யூனிபார்ம் அணிந்த ஒருவன் மாணிக்கத்தை அழைக்க மாணிக்கம் கண்டு கொள்ளாமல் நடந்தான் அந்த நபர் மாணிக்கத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1