Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1
Ebook175 pages1 hour

Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து மிஸ்டர் எக்ஸ் கதைகளும் குமுதம் இதழில் பிரசுரமானவை. அவ்வாறு ஆரம்பித்து எழுதப்பட்ட கதைகள் தான் இவை. குமுதத்தில் தொடர்ந்து 80 மிஸ்டர் எக்ஸ் கதைகள் பிரசுரமாகின.

அதில் ஒன்று முதல் இருபது வரையான இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த நூல். எல்லாமே கலகலப்பான நகைச்சுவைக் கதைகள் தான்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580141510413
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1

Related ebooks

Related categories

Reviews for Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1 - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரி விளையாடல் சிரிப்புக் கதைகள் - தொகுப்பு 1

    Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 1

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    பிள்ளையார் சுள்ளி

    இடுக்கி வருங்கால் நகுக

    அம்பரீஷின் அம்பயர்

    கோபம் கொண்ட கோப்பு

    சத்த சோதனை

    போறாளே பூர்ணிதாயீ

    தும்மல் கே. அச்சுதன்

    கடன் கன்னி

    முகராசி

    எந்தரோ மெட்ரோனுபாவலு

    மாமன் எத்தனை மாமனடீ

    பஞ்சராபகேசன்

    குப் குப் குப்பை

    ஏணிப் பொடிகள்

    சிவப்புக் கம்பளம்

    ஓ.டி.டி விளையாடு தாத்தா

    ஓரம் போ

    கால் நீட்டி சம்பளம்...

    புத்தம் புதியப் புத்தகமே...

    ஓல்ட் ஈஸ் கோல்ட்

    மிச்சம் தவிர்

    திரைகடல் திரவியம்

    கருப்பு – வெள்ளை

    A for Attendance

    சாம்பார்

    செல்லுக்குள் ஈரம்

    அர்த்தமும் அனர்த்தமும்

    சத்த ஜுரங்கள்

    ஸ்டெப் சிஸ்டர்

    மாமி யார்?

    அதிரடி ஹீரோ

    கங்கா நாணம்

    காலம் மாறிப் போச்சு

    கடன்காரன்

    ஜோக் மாமா

    பட்சணப் ப்ரவேசம்

    பேசு அப்பா... பேசு

    குழாய்க் குழப்பம்

    செட்டிங் சோமு

    விஷமக்காரன்

    சிரிவிளையாடல் – விளையாட்டான சிரிப்புக் கதைகளின் முதல் தொகுப்பு இந்த நூல்.

    இத்தொகுப்பில் முதல் நாற்பது கதைகள் உள்ளன.

    இவை இனியவை நாற்பது தான். இன்னா நாற்பது அல்ல.

    மாம்பலம் டைம்ஸ் இதழில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக வெளியான கதைகள் தான் இவை.

    முன்னதாக இந்தக் கதைகளை வெளியிட்ட மாம்பலம் டைம்ஸ் இதழ் ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், அது சமயம் பொருத்தமாக ஓவியங்கள் வரைந்து சிறப்பு செய்த ஓவியர் திரு. அரஸ் அவர்களுக்கும் நன்றி.

    இப்புத்தகத்தை நேர்த்தியான முறையில் பதிப்பித்த புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பன்,

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    பிள்ளையார் சுள்ளி

    அபார்ட்மெண்டின் அடுத்த அடுத்த இரண்டு ப்ளாக்கில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது.

    நியூயார்க் நகரத்தில் இரட்டை கோபுரத்தில் விமானத்தை சொருகியவுடன் புகை வந்ததைப் போல வந்து கொண்டிருந்தது.

    இது பின் லேடன் புகையல்ல. ஹோமப் புகை.

    ஹேமா வீட்ல ஹோமம் நடக்குது. மாசத்துக்கு ஒரு ஹோமம் நடத்தறா என்றாள் என் மனைவி பூமா.

    வீட்ல ஹோமம் பண்ணா நல்லது. கிருமிகள் எல்லாம் கூட போயிடுமாம் – பூமா.

    உனக்கு ஹமாம் சோப்புக்கும் ஹோமத்துக்கும் வித்தியாசம் தெரியல்லே. ஓவரா கன்ப்யூஷ் ஆகிக்கறே

    சிவந்த விழிகளுடன் என்னை முறைத்தாள் அவள். இரண்டு காதிலிருந்தும் புகை வந்தது.

    எனக்குத் தெரியாது. நம்ம வீட்லயும் அடுத்த வாரம் ஒரு ஹோமம் பண்ணனும். உடனே சாஸ்திரிகளுக்கு போன் பண்ணுங்க

    வேறு வழியில்லை. போன் செய்தேன்.

    ஹலோ... சாஸ்திரிகளா?

    இல்லே. ஹோம நாத பாகவதர் பேசறேன்

    ஸாரி. ராங் நம்பர் - போனைக் கட் செய்தேன்.

    பாரு. ஆரம்பமே சரியில்லே. நான் விருகம்பாக்கத்துக்கு போன் செஞ்சா அது வரகுண பாண்டியர் அரண்மனைக்குப் போகுது. இத்தோட விட்டுடுவோம்

    நோ. சரியான நம்பர் போடுங்க

    மறுபடியும் போன் செய்தேன். இப்போது சாஸ்திரிகளே எடுத்தார்.

    சாஸ்திரிகளே... அடுத்த ஞாயித்துக் கிழமை ஒரு கணபதி ஹோமம் செய்யனும்

    கொஞ்சம் இருங்க. அன்னைக்கு நான் ஃப்ரீயான்னு பாக்கறேன்

    சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு சாஸ்திரிகள் தொடர்ந்தார்.

    ஸாரி. டேட்ஸ் லயனா இருக்கு

    டேட்ஸ்னாலே லயன் தானே?

    ஞாயித்துக் கிழமை எனக்கு நவக்கிரக ஹோமம் இருக்கு. வெள்ளிக் கிழமை வைச்சுக்கலாமா?

    சரி சொல்லுங்க என்று ஜாடை காட்டினாள் பூமா.

    உங்களுக்கு ஹோமம் எந்த லெவல்ல வேணும்?

    தரை லெவல்ல தான்

    அதில்லே. பெருசா செய்யனுமா? சின்னதா செய்யனுமா?

    என்னிடமிருந்து போனைப் பிடுங்கிக் கொண்டாள் பூமா.

    மாமா. நமஸ்காரம். எங்களுக்குப் புகை நிறைய வரணும். அதுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க

    என்னம்மா? சாஸ்திரிகளை ஷேர் ஆட்டோ ஸ்டார்ட் பண்ணச் சொல்றீங்க? சரி. உங்க ஆசை அது தான்னா நிறைய ஈரமான சுள்ளி அக்னில போடனும்

    செஞ்சிடலாம். புகை அடுத்த ப்ளாக் ஹேமா வீட்டு வரைக்கும் போகனும்

    இவள் புகையை வளர்த்தி பகையை வளர்க்கப் போகிறாள் என்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது.

    எல்லா சாமானும் நீங்க கொண்டு வந்திடுங்க. சுள்ளி, சமித்து மட்டும் நாங்க வாங்கிடறோம். புகை முக்கியம் இல்லே என்றாள் பூமா.

    அடுத்த நாள்.

    பூஜை சாமான் கடைக்குப் போங்க என்றாள் பூமா.

    இந்த வெயில்லயா?

    சமர்த்தோல்லியோ. போய் சமித்து வாங்கிட்டு வாங்க

    சமர்த்து என்று எனக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாள். அந்த நன்றிக்காகக் கிளம்பினேன்.

    தொட்டுப் பாத்து வாங்கிட்டு வாங்க. சுள்ளி நல்லா ஈரமா ஜில்லுனு இருக்கனும்

    அதுக்கு நீ சாக்கோ பார் ஐஸ்க்ரீம் தான் வாங்கனும்

    கடைக்குப் போனேன்.

    ஹோமத்துக்கு சமித்து வேனும்

    எடுத்துக்குங்க சார். நம்ம கடை சமித்து நல்லா எரியும்

    நல்லா எரியக் கூடாது சார்

    கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

    ஹோமம்னா அக்னி நல்லா வரணும் என்றார்.

    எங்க ஹோமத்துல அக்னியை அடக்கி வைக்கறோம்

    சரி. நாலு கட்டு போதுமா?

    பத்தாது. நாப்பது கட்டு கொடுங்க. புகை என்ன கலர்ல வரும்?

    கருப்பா தான் வரும்

    கலர் கலரா வராதா? சரஸ்வதி சபதம் படம் முதல் சீன் மாதிரி

    கடைக்காரர் ஏதும் பதில் பேசவில்லை. நான்கு சாக்கு மூட்டைகள் நிறைய சமித்து வாங்கினேன்.

    இதை எப்படி வீட்டுக்குக் கொண்டு போறது? என்றேன்.

    ஆந்திரால செம்மரக் கடத்தல் பண்ற லாரி ஒன்னு சொல்லிடுங்க. புஷ்பா தான் ஓனரு

    புஷ்பா... ஆஹா... ஹோமத்துக்கேத்த மங்களகரமான பேர்

    வீட்டுக்கு வந்தேன்.

    அடுத்த நாள் பார்த்தால் சுள்ளிகள் சென்னை வெயிலில் காய்ந்து போயிருந்தன.

    திடீரென பூமாவுக்கு ஐடியா வந்தது.

    உள்ளிருந்து பன்னீர் சொம்பு கொண்டு வந்தாள்.

    சமித்து மீது தெளிக்க ஆரம்பித்தாள்.

    இது ரோஸ் வாட்டர். புகை வாசனையா இருக்கும்

    ஹோமம் நடைபெறும் நாள். சாஸ்திரிகள் வந்து விட்டார்.

    புகை அதிகமா கேக்கறீங்க. கொஞ்சம் ரேட் அதிகமாகும். Smoking charges கொடுக்கனும் என்றார் சாஸ்திரிகள்.

    கொடுத்திடலாம். புகை இங்கேந்து ஹேமா வீட்டுக்குப் போனா போதும்

    ஹோமம் ஆரம்பம் ஆனது. எல்ல ஜன்னல்களையும் திறந்து விட்டாள் பூமா.

    பழைய பேசின் ப்ரிட்ஜ் அனல் மின் நிலைய புகை போக்கியிலிருந்து வருவது போல புகை பூதாகரமாக வந்தது.

    அந்த புகைக் கற்றை நேராக அடுத்த ப்ளாக்குக்கு, குறிப்பாக ஹேமா வீட்டுக்குப் போனது.

    ரொம்ப சந்தோஷம். ஹோமம் பேஷா நடந்தது. இந்தாங்க சம்பாவனை என்று தாம்பாளத்தில் பணத்தை வைத்து நீட்டினேன்.

    நீங்க உங்க ஒய்ப் கிட்டே தரீங்க. நான் இங்கே இருக்கேன் என்றார் சாஸ்திரிகள் புகை மறைவு பிரதேசத்திலிருந்து.

    பூமாவுக்கு ஏக சந்தோஷம். ஹேமா வீட்டுக்கு நாலு டன் புகையை அனுப்பியாகி விட்டது.

    இரண்டு நாள் கழித்து கீழே போனாள் பூமா.

    ஹேமா பெட்டிகளுடன் ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

    பூமாவைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தாள்.

    மச்சினி வீட்ல வளைகாப்பு. தஞ்சாவூர் போயிருந்தேன். நாலு நாள் இருந்திட்டு இப்போ தான் அபார்ட்மெண்டுக்குள்ளே நுழையறேன் என்றாள் வியர்வையை துடைத்துக் கொண்டே.

    இடுக்கி வருங்கால் நகுக

    அடுக்களையிலிருந்து தடாலென சத்தம் கேட்டது.

    வாசு வேகமாக ஓடினார்.

    கீழே பால் கொட்டியிருந்தது. பக்கத்தில் ஒரு சிறிய பாத்திரம் லைட் ஹவுஸ் லைட் மாதிரி வட்டமடித்துக் கொண்டிருந்தது.

    என்ன ஆச்சு?

    காபிக்கான பால் கொட்டிடுச்சு

    மேற்கொண்டு எதுவும் பேசாமல் மேடையில் இருந்த ஒரு டம்ளர் காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள் மனைவி வசுமதி.

    நீ எப்படி காபி குடிக்கறே?

    கொட்டினது உங்க காபிக்கான பால்

    பால் எப்படி கொட்டினதுன்னு எனக்கு வெள்ளை அறிக்கை வேணும்

    இடுக்கி புட்டுகிச்சு

    கீழே பார்த்தார் வாசு.

    பீமனால் பிய்த்துப் போடப்பட ஜராசந்தன் கால்கள் போல இடுக்கி இரண்டு பாகமாக தனித் தனியாகக் கிடந்தன.

    இரவு ஏழரை மணிக்கு டைனிங் டேபிளில் அமர்ந்தார் வாசு.

    டின்னர் ரெடியா?

    டின்னரா? எதுவும் சமைக்கல்லே

    சமைக்கலையா? ஏன்?

    இடுக்கி இல்லாம எப்படி சமைக்கறது? எனக்கு இடுக்கி இல்லாம இறக்க வராது

    சரி. ஒரு அக்ரீமெண்ட். நீ சமைப்பியாம். நான் அதை இறக்குவேனாம்

    எங்கே? வயித்துலயா?

    நீ டிபன் செய். நான் துணி வைச்சு இறக்கறேன் – ஒரு அசட்டுத் துணிச்சலோடு சொன்னார் வாசு.

    கிச்சன் டவல் காஸ்ட்லி. தர மாட்டேன். உங்க துவைச்ச பனியனை வேணும்னா யூஸ் பண்ணிக்குங்க

    வாசு போய் பனியனை எடுத்து வந்தார்.

    அவல் உப்புமா செய்யப் போறேன்

    ரெண்டு நாள் முன்னால கூட செஞ்சியே? அதே தானா?

    ஆமா. அவலே தான் இவ

    உப்புமாவை கிண்டி முடித்ததும் வாணலியை இறக்குங்க என்று கூறி விட்டு கூடத்துக்குப் போய் விட்டாள் வசுமதி.

    திடீரென ஐயோ என்று அடுக்களையிலிருந்து சத்தம் கேட்டது.

    என்ன ஆச்சு?

    பாதி பனியனை பர்னர் சாப்பிட்டுடுச்சு

    அடுப்பை அணைக்காம யாராவது இறக்குவாங்களா? எங்கே பனியனைக் காட்டுங்க?

    அவருடய ஸ்பைடர் பனியனின் ஒரு பக்கக் கை டர் ஆகி தொங்கிக் கொண்டிருந்தது.

    வீட்ல தானே இருக்கீங்க. போட்டுக்குங்க. கொஞ்சம் கொஞ்சம் வின்னர் பட வடிவேலு மாதிரி இருப்பீங்க. பரவாயில்லே. நான் சமாளிச்சுக்கறேன். நாளைக்கு பணியாரம் செய்யறதுக்கு ஒரு பனியன் இப்பவே எடுத்து வைச்சிடுங்க

    இரவு எட்டு மணிக்கு மகன் விவேக் ஆபிசிலிருந்து வந்தான்.

    இடுக்கி இற்றதை வருத்தத்துடன் சொன்னார் அப்பா. பனியன்

    Enjoying the preview?
    Page 1 of 1