Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellam Kavar Kalvan
Vellam Kavar Kalvan
Vellam Kavar Kalvan
Ebook185 pages1 hour

Vellam Kavar Kalvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு சிறுகதைத் தொகுதி.

முன்னணி தமிழ் இதழ்களில் வெளியான நகைச்சுவைக் கதைகள் இத்தொகுதியில் உள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். ஆனால் எல்லாக் கதையிலும் நகைச் சுவை உண்டு.

'வெள்ளம் கவர் கள்வன்' என்ற கதை சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டது. படியுங்கள்.

மனச்சோர்வு ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக நீங்கும்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580141510468
Vellam Kavar Kalvan

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Vellam Kavar Kalvan

Related ebooks

Related categories

Reviews for Vellam Kavar Kalvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellam Kavar Kalvan - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெள்ளம் கவர் கள்வன்

    (நகைச்சுவை சிறுகதைகள்)

    Vellam Kavar Kalvan

    (Nagaisuvai Sirukadhaigal)

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    சாரதியும் சிங்கிள் டீயும்

    டிசைனர் பேபி

    காக்கா படுத்தும் பாடு

    சர்வ ஜாக்கிரதை சம்பத்ராம்

    கிச்சன் கில்லாடிகள்

    ரிஷியின் ரிசப்ஷன்

    வெள்ளம் கவர் கள்வன்

    வாட்ஸ் அப் வனஜா

    பானை பிடிக்காதவள்

    சிவப்புப் பெட்டியும் நானும்

    உள்ளே... வெளியே

    சொப்பன வாழ்வு

    அல்போன்சாவும் ஆலப்புழாவும்

    ஸ்மோக் பாபு

    பஞ்சமி சபதம்

    சென்னைத் தம்பி

    மருப் பெயர்ச்சி

    ராசி நல்ல ராசி தான்

    புத்தகப் புரட்சி

    இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்துக் கதைகளும் பிரபல தமிழ் இதழ்களில் வெளியானவை.

    இதில் உள்ள எந்தக் கதையுமே கனமான கதை அல்ல.

    படிப்பவர்களைக் குதூகலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கதைகள். பெரிதாக லாஜிக் தேட வேண்டாம்.

    இந்தக் கதைகளை வெளியிட்டு ஆதரித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்றி.

    இந்நூலை சிறப்பான முறையில் வெளிக் கொணர்ந்திருக்கும் புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பன்

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    சாரதியும் சிங்கிள் டீயும்

    மாலை ஐந்து மணி. வாக்கிங் போய் விட்டு வடபழனியில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தார் சாரதி. மத்தியான நேரத்துக் கோவில் மாதிரி வாசல் கதவு பூட்டியிருந்தது.

    மனைவி சாந்தாவுக்குப் போன் செய்தார்.

    ஏன் வாசல் கதவு பூட்டியிருக்கு?

    நான் திடீர்னு வெளீல வந்துட்டேன்

    வீடு பூட்டியிருந்தா நான் டீ எப்படிக் குடிக்கறதாம்? எங்கே போயிருக்கே?

    ஒரு டீ பார்ட்டிக்கு

    எனக்கு டீ வேணும்

    டீ கேக்கற மனுஷனுக்கு வீட்டு கீ எடுத்துக்கனும்னு தெரியாதா? கடைல டீ குடிங்க

    பணம் வீட்டுக்குள்ளே இருக்கு

    அப்போ டீப் பிச்சை எடுங்க

    ராப் பிச்சை மாதிரி டீப் பிச்சை எடுக்கச் சொல்கிறாளே! நிஜமாகவே டீப் பிச்சை எடுத்து விடலாமா?

    அடுத்த தெருவில் தீனா டீக்கடை என்று ஒன்று இருக்கிறது. இது வரை சாரதி அங்கு டீ குடித்ததில்லை.

    தீனா டீக்கடை ஓனர் பெயர் குமாரு. அவர் கடையில் ஒரு பாய்லர் இருக்கும். எனவே பேட்டையில் தன் அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள பாய்லர் குமாரு என்ற பட்டப் பெயரை அவரே சூட்டிக் கொண்டு போலீஸ் ரிகார்டுகளில் அதை பதிவேற்றினார்.

    இப்படியாகப்பட்ட பாய்லர் குமாரு கடையின் முன்னால் நின்றார் சாரதி.

    புதினா டீ இருக்கா? என்றார் சாரதி.

    இல்லே

    அப்போ எதுனா ஒரு டீ கொடு

    சர்க்கரை இல்லாத டீயா?

    காசு இல்லாத டீ

    சாரதியை ஏற இறங்கப் பார்த்தார் பாய்லர் குமாரு.

    காசு இல்லாம தரேன். ஒரு உதவி செய்யனும். இந்தக் கடை பேர்ல பேங்க் லோன் அப்ளை செஞ்சிருக்கேன். கடைல ஒரு அசிஸ்டென்ட் வைச்சிருக்கறதா பேங்க்ல சொல்லிட்டேன். இப்போ பேங்க் அசிஸ்டென்ட் மேனேஜர் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வரப் போறாரு

    கடைல ரெண்டு பேரைப் பார்த்தா மேனேஜர் லோன் கொடுத்திடுவாரா?

    ஆமா

    ஓ. என்னை கோ ஓனர்னு சொல்லப் போறீங்களா?

    உங்களை எப்படி கவர்னர்னு சொல்ல முடியும்?

    யோவ். கோ ஓனர்னா கூட்டாளியா?

    நீங்க கூட்டாளி இல்லே. கூலித் தொழிலாளி

    கூலியா? நான் கவர்ன்மென்ட் ஜாப்லேர்ந்து ரிடையர் ஆனவன்

    சும்மா ஒரு ஆக்ட் தானே? நாம எல்லாரும் சிறப்பா நடிச்சா லோன் கிடைச்சிடும். நீங்க நடிச்சா தினமும் இலவசமா டீ தரேன்

    இந்த ‘டீ’ல் சாரதிக்குப் பிடித்துப் போனது.

    சாரதி கடைக்குள் நுழைந்தார். வலது பக்கம் ஊட்டி வர்க்கி ஒரு பாட்டிலில் இருந்தது. பக்கி மாதிரி வர்க்கியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

    டூட்டி முடிஞ்சு போறப்ப ஊட்டி வர்க்கி தரேன்

    கேவலம். ஒரு வர்க்கிக்காக வேலைக்காரன் வேலை செய்வதா? லாபத்தில் பங்கு கேட்கலாமா? வேண்டாம். பிறகு லோன் அடைப்பதிலும் பங்கு என்று சொல்லி விட்டால் வம்பு.

    உங்க பேர் என்ன? என்றார் பாய்லர் குமாரு.

    சாரதி

    என்ன சாரதியா? இந்த பேர் செட் ஆகாதே. நீங்க பீஹாரின்னு சொல்லியிருக்கேன். உங்க பேர் பாண்டே

    பாண்டேவா? என் பேர் சாரதி. ஒரு எழுத்துல புரட்சிப் புலவன் பாரதி மிஸ் ஆகிடுச்சு. என்னைப் போய் பாண்டேன்னு சொல்றே. இது அபாண்டம்

    எல்லாக் கடைலயும் இப்போ பீஹாரி தான் வேலை செய்யறாங்க. ரியலிசம் மெயின்டெய்ன் செய்யனும்னு பீஹாரின்னு பேங்க்ல சொல்லிட்டேன். கொஞ்ச நேரம் பீஹாரியா இருந்துடுங்களேன். குடியா முழுகிடும்

    திஹார் ஜெயிலிலிருந்து வந்தவன் மாதிரி இருக்கிறான் இந்த பயல்! நம்மை பீஹார் என்கிறான். இருந்து விட்டுப் போகட்டும். டீயைத் தீண்டும் இன்பத்திற்காக பீஹாரைப் பொறுத்துக் கொள்ளலாம்.

    டீ குடிக்க வரவங்க கிட்டே மறக்காம காசை வாங்கனும்

    ஒரு டம்ளருக்கு எக்ஸ்டிரா பத்து ருபா வாங்கலாமா?

    யோவ். டீ விலையே பத்து ரூபா தான். முதல்ல பாத்திரம் கழுவுங்க"

    பாத்திரம் கழுவுவதா? தன்னுடைய கதா பாத்திரம் வேறு திசையில் போகிறதே!

    ஒரு பெரிய குண்டாவை நீட்டினார் குமாரு.

    இந்த குண்டாவைக் கழுவனும்

    ஆக்டிங்?

    ஆமா

    குண்டாஸ் ஆக்ட்?

    வைச்சிக்குங்க. நீங்க ஹிந்தீல தான் பேசனும்

    ஹிந்தியா? ஏக் காவ் மே ஏக் கோபால் ராவ் ஹை என்ற அளவுக்குத் தான் அவருக்கு ஹிந்தி தெரியும்.

    பேங்க் மேனேஜர் வந்தா சரளமா ஹிந்தி பேசனும்

    யோவ். ஏதாவது ரண களம் ஆகிடப் போகுதய்யா

    சமாளிச்சுக்கலாம் என்ற குமாரு திடீரென சாரதியைப் பார்த்தார். சாரதியின் சட்டை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரேஞ்சுக்கு ரிச்சாக இருந்தது.

    சட்டையக் கழட்டி வேலை செய் சாரே...

    சாரதி சட்டையைக் கழட்டினார். அவருடைய பனியன் ஒரு ஓட்டை கூட இல்லாமல் பட்டி பார்த்த சீலிங் மாதிரி பள பளவென இருந்தது.

    குமாரு தன் பனியனைப் பார்த்துக் கொண்டார். ராயர் கடை ரவா தோசை மாதிரி பரவலான ஓட்டைகளுடன் இருந்தது அது.

    முதலாளி ஓட்டை பனியன் போட்டிருக்கும் போது பணியாள் பனியன் ப்ளெயினாக இருப்பதா?"

    இந்த ஓட்டைப் பந்தயத்தின் விளைவாக சாரதியின் அப்பழுக்கில்லா பனியன் அகற்றப்பட்டது.

    குமாரு தனது பஞ்சர் ஆன பனியன் பேங்க்கை ஓபன் செய்து ஒரு பனியனை எடுத்தார்.

    அந்த முண்டா பனியனில் ஒரு பக்க முண்டா தான் இருந்தது. இன்னொரு முண்டா உரித்த வாழைப்பழ தோல் போலத் தொங்கிக் கொண்டிருந்தது.

    ஆஹா...ஒரு பக்கம் கிழிஞ்ச இந்த பனியன் அம்சமா இருக்கு என்று தன் ஒன் சைட் லவ்வை தெரியப்படுத்தினார். சாரதிக்கு அணிவித்து அழகு பார்த்தார்.

    வேஷப் பொருத்தம் நல்லா இருக்கு. லோன் கிடைச்சிடும் என்று அக மகிழ்ந்தார்.

    உங்க ஊர் என்ன? என்று கேட்டார் குமாரு.

    காஞ்சி

    இல்லே. ராஞ்சி. பொண்டாட்டி பேர் என்ன?

    சாந்தா

    சாந்தா இல்லே. கவுரின்னு வைச்சிக்கோ

    கவுரியை வைச்சிக்கறதா? கற்புக்கு பாதகம் வந்துடும்யா

    டம்ளரை எல்லாம் கழுவுங்க

    சாரதி நிதானமாகக் கழுவ ஆரம்பித்தார்.

    பூஜை பாத்திரம் கழுவற மாதிரி கழுவறீங்க. தலைகீழா இந்த பக்கெட்ல டம்ளர்களை கமுத்துங்க. அவ்வளவு தான்

    பக்கெட்ல தண்ணியே இல்லையே

    கண்டுக்காதேய்யா

    இப்படியாக டீ டம்ளர்களை டிரை க்ளீனிங் செய்து கொண்டிருக்கும் போது பேங்க் மேனேஜர் வந்து விட்டார்.

    வாங்க சார். இது தான் கடை என்று இளித்தான் பாய்லர் குமாரு.

    அப்ளிகேஷன்ல போட்ட படி எல்லாம் இருக்கா? என்றார் மேனேஜர்.

    இருக்கு சார். எட்டடிக்கு எட்டடி கடை. சிங்கிள் ஃபேஸ் கரென்ட் கனெக்‌ஷன்

    ம்ம்ம். இது தான் அசிஸ்டென்டா?

    ஆமா சார் என்ற குமாரு நமஸ்தே போலோ என்றார் சாரதியைப் பார்த்து.

    நமஸ்தே ஜீ என்றார் சாரதி.

    நமஸ்தே ஜீ. டீ கடைக்கு முன்னால ஜீ எங்கே வேலை பாத்தது?

    ஜீ டி வில வேலை பார்த்தது

    அப்படியா?

    ஆமா. ஸ்டுடியோல டீ கொடுக்கற வேலை

    பீபீ பேர் என்ன?

    பீப்பீ பேர் நாதஸ்வரம்

    அதில்லே பையா. ஒய்ஃப் பேர்?

    கவுரி. ராஞ்சில இருக்கு

    ராஞ்சியா? அது ஜார்கண்ட் ஆச்சே?

    யார் கண்டா? இருக்கலாம் என்றார் சாரதி.

    உங்களுக்கு வட இந்தியா முழுக்க நல்லாத் தெரியுமா?

    வட அமெரிக்கா கூடத் தெரியும் என சொல்ல நினைத்தார் சாரதி. ஆனால் சொல்லவில்லை.

    எனக்குப் பசிக்குதுங்கறதை எப்படி சொல்லனும்?

    வயித்தைப் பிடிச்சுகிட்டு சொல்லனும்

    பாய்லர் குமாரு குறுக்கிட்டான்.

    அண்ணன் ஹிந்தீல புகுந்து விளையாடுவாரு. இப்போ அடக்கி வாசிக்கறாரு

    பேங்க் மேனேஜர் சற்று நேரம் யோசித்தார். பிறகு உங்களுக்கு லோன் அப்ரூவ் செஞ்சிடறேன் என்றார்.

    தாங்க்ஸ் சார்

    "இந்த அசிஸ்டென்ட் உங்களுக்கு அவசியம் வேணுமா?’

    நாளைலேந்து வேணாம் சார்

    வெரி குட். இதைத் தான் நான் எதிர் பார்த்தேன். அடுத்த வாரம் நான் ஃபேமிலியோட வட இந்தியா டூர் போறேன்

    போயிட்டு வாங்க சார்

    எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால ஹிந்தி தெரிஞ்ச இந்த பாண்டேவ எங்க கூட கூட்டிப் போலாம்னு இருக்கேன். அப்படியே டம்ளர், தட்டு எல்லாம் கழுவச் சொன்னா கூட செய்வார் இல்லே

    தட்டாம செய்வார் சார்

    நாளைக்கே பாண்டேவுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடறேன் என்றார் மேனேஜர்.

    வட இந்தியாவா? உங்க கூடவா?

    வட பழனியில் இருக்கும் தன் வீடு நோக்கி வேகமாக ஓடினார் சாரதி.

    டிசைனர் பேபி

    தான் உண்டாகி விட்டோமோ என்று வினோதினிக்கு சந்தேகமாக இருந்தது.

    கணவன் மாதவ் முன்னால் வந்து நின்றாள்.

    என் கிட்டே சேஞ்ச் ஏதாவது தெரியுதா?

    தெரியல்லே

    சேஞ்ச் இருக்குங்க. வாங்க. டாக்டர் கிட்டே போலாம்

    சேஞ்ச் இருந்தா டவுன் பஸ்ல போ. டாக்டர் கிட்டே ஏன் போறே?

    இது லேடீஸ் சம்பந்தப்பட்டது

    லேடீஸ்க்கு பஸ்ல டிக்கெட்டே இல்லே. சேஞ்ச் கூட வேணாம்

    குறுக்க குறுக்க பேசாதீங்க. நான் கொஞ்சமா கர்ப்பம் ஆயிட்டேனோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு

    டாக்டர் கிட்டே போய் கொஞ்ச நஞ்ச சந்தேகத்தை தீர்க்கனும். அப்படிதானே? வா. போலாம்

    காரில் போகும் போது ப்ளம் கேக் சாப்பிட்டுக் கொண்டே வந்தாள்.

    "ஆனாலும் நீ ஒவராத் திங்கறே. உடம்பு எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1