Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஈரம் தேடும் வேர்கள்
ஈரம் தேடும் வேர்கள்
ஈரம் தேடும் வேர்கள்
Ebook155 pages51 minutes

ஈரம் தேடும் வேர்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த இண்டர்காம் முணுமுணுத்தன. ஃபைல்கள் டேபிள் விட்டு டேபிள் இடம் பெயர்ந்தன. சர்வீஸ் போட்டவர்கள் குனிந்த தலை நிமிராமல் பேனாவால் தடிமனான புத்தகங்களை உழுது கொண்டிருந்தார்கள். செக்ஷன் சூப்ரெண்டுகள் பிசினஸ் சார்ந்த நபர்களிடம் நேரிலும், டெலிபோனிலும் வெண்ணெய்போல மிருதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
 பவித்ரா ஸ்பேர் பார்ட்ஸ் லெட்ஜரை மூடி வைத்து சோம்பல் முறிக்க கைகளை உயர்த்தியபோது - அட்டெண்டர் குரல் கேட்டது.
 "பவித்ராம்மா... உங்களை மேனேஜர் கூப்பிட்டார்."
 பவித்ரா எழுந்தாள்.
 "வர்றப்ப இந்த ஃபைல்களை எடுத்துட்டு வரச் சொன்னார்."
 பவித்ரா காகிதத்தை வாங்கினாள்.
 அவசர ஆங்கிலத்தில் –
 1. பர்ச்சேஸ் ஃபைல்
 2. இன்டென்ட்ஃபைல்
 என்று எழுதப்பட்டிருந்தது.
 இன்டெக்ஸ் வசதியுடனிருந்த கப்போர்டிலிருந்து குறிப்பிட்ட ஃபைல்களை சுலபமாக தேடி எடுத்துக்கொண்டு செக்ஷனின் மறுகோடியிலிருந்த மேனேஜரின் அறையை நோக்கி வேகமாய் நடந்தாள்.

மேஜைகள் இருபுறமும் நழுவின. ஸன் கன்ட்ரோல் பிலிமை ஆடையாய் அணிந்த கண்ணாடிக் கதவில் 'செக்ஷன் மேனேஜர்' என்று தங்க எழுத்துக்கள் மின்னின.
 கதவை லேசாகத் தள்ளி – "எக்ஸ்க்யூஸ்மி ஸார்" என்றாள்.
 "கமின்."
 சம்பிரதாயமாய் "குட்மார்னிங்" தெரிவித்தாள்.
 முப்பத்தைந்து வயது மேனேஜர் ரோலிங் சேரில் தெரிந்தார். நெற்றியில் வியர்வை அழித்தது போக மீதியிருந்த விபூதித் தடயம் மிக லேசாகத் தெரிந்தது.
 கன்னங்களில் அம்மைத் தழும்புகள் நெருக்கமாய் இடம் பிடித்திருந்தன.
 "உக்காரு பவித்ரா."
 "தாங்க்யூ... ஸார்."
 நுனி நாற்காலியில் அமர்ந்தாள்.
 "நான் கேட்ட ஃபைல்ஸ்?"
 "கொண்டு வந்திருக்கேன் சார்!"
 சொல்லிக் கொண்டே அந்த ஃபைல்களை அவர் பார்க்கத் தோதாகத் திருப்பி நீட்டினாள்.
 வாங்கி புரட்டிக்கொண்டே கேட்டார் அவர். "போன மாசத்திலிருந்து உன்னோட டெஸிக்னேஷன் மாறியிருக்கு, இல்லையா?"
 "எஸ் ஸார்."
 "இப்ப நீதான் இன்வென்ட்டரி கன்ட்ரோல் ஆபீஸர்."
 "ஆமா ஸார்."
 "பர்ச்சேஸ் ஆர்டர்சை நீதான் அப்ரூவ் பண்ணணும்?ஆமா ஸார்."
 "ஒரு பர்ச்சேஸ் ஆர்டரை. அப்ரூவ் பண்றதா வேண்டாமான்னு எப்படி தீர்மானிக்கறே?"
 "இன்டென்ட் ஃபைலோட கம்பேர் பண்ணி அப்ரூவ் பண்றேன் ஸார். அப்புறம் பர்ச்சேஸிங் கரெக்டா ஆயிருக்கான்னு கவுண்ட்டர் செக்கிங் பண்றேன்."
 "எஸ். இதுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன். எல்லாரும் சாதாரணமா செய்யக்கூடிய தப்பை நீயும் செய்யறே."
 "ஸார். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை."
 "அப்ரூவ் பண்றதுக்கு முன்னால இன்டென்ட் ஃபைலை க்ராஸ் செக் பண்றியா?"
 "இ... இல்லை ஸார்."
 "அதுதான் முக்கியம் ஷாப் ஃப்போளரைக் கான்டாக்ட் பண்ணி இன்டென்ட் க்வான்ட்டிட்டி சரியா, அந்த ஐட்டம் உடனே தேவையா இதையெல்லாம் செக் பண்றது முக்கியம்."
 "இனிமே பார்த்து பண்றேன் ஸார்."
 "ஒக்கே யுகேன் கோ."
 பவித்ரா எழ எத்தனித்தபோது - சட்டென ஞாபகம் வந்தவராய்க் கேட்டார்.
 "என்னாச்சு பவித்ரா... உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொல்லி போன மாசம் லீவு எடுத்தியே?"
 "முடிவாயிடுச்சு ஸார்?"
 "மாப்பிள்ளைக்கு உன்னைப் பிடிச்சிருக்கா?"
 "பிடிச்சிருக்கு ஸார்."
 "வாட் அபவுட் யூ?"
 "அம்மா, அப்பா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் ஸார்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223296812
ஈரம் தேடும் வேர்கள்

Read more from Rajeshkumar

Related to ஈரம் தேடும் வேர்கள்

Related ebooks

Reviews for ஈரம் தேடும் வேர்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஈரம் தேடும் வேர்கள் - Rajeshkumar

    ஈரம் தேடும் வேர்கள்

    1

    இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க –

    சாலையில் போக்குவரத்து கணிசமாய் காணாமல் போயிருந்தது. கடைகளில் ஷட்டர்களை வேகமாய் இழுத்து போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

    சோடியம் வேபர் விளக்குகள் தெரு பூராவும் இலவசமாய் மஞ்சளை இறைத்துக் கொண்டிருந்தது.

    தெரு முனையில் அந்த மாருதி வேன் திரும்பிக் கொண்டிருக்க பின் சீட்டில் உட்கார்ந்திருந்த - பவித்ரா குரல் கொடுத்தாள்.

    ட்ரைவர்! ஒரு நிமிஷம் வேனை நிறுத்துங்க.

    வேன் ரோட்டோரமாய் ஒதுங்கி நின்றது. பவித்ரா கீழே இறங்கி பஸ் ஷெல்டரை நோக்கிப் போனாள்.

    பவித்ராவுக்கு சுமார் இருபது வயது இருக்கலாம்.

    அடிக்கடி பட்டிமண்டபக் கூட்டங்களுக்கு போகிறவர்கள் அவளைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் மனதில் கீழ்க்கண்ட பட்டிமண்டப தலைப்புகள் தோன்றும்.

    1. அழகு என்கிற வார்த்தை பவித்ராவின் வட்ட முகத்திற்கா இல்லை பௌர்ணமி நிலவிற்கா?

    2. பக்கத்தில் சென்றால் பளீரென்று ஈர்த்துக் கொள்வது பவித்ராவின் கண்களா...? அல்லது காந்தமா?

    3. மென்மை என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம் பவித்ராவின் உதடுகளா? அல்லது ரோஜா இதழ்களா...

    பஸ் ஷெல்டரை நெருங்கினாள் பவித்ரா. தோளில் போட்ட துண்டோடு பஸ் வரும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை நெருங்கி மெல்ல குரல் கொடுத்தாள்.

    அப்பா.

    பெரியவர் சட்டென்று திரும்பினார். கண்கள் உடனடி பிரவாகத்திற்கு போயிற்று.

    பவித்ரா.

    எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கிங்களா?

    ஆமாம்மா...

    எவ்வளவு நேரமா நின்னுட்டிருக்கீங்க?

    இப்பத்தாம்மா வந்து நின்னேன். மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் உன்னைக் காணோம்ன்னு பதட்டமாயிருந்துச்சு. வீட்ல உட்கார்ந்துட்டிருக்க முடியலை... பஸ் ஸ்டாப்பிலிருந்து இந்நேரத்துக்கு மேல நீ தனியாத்தானே இருட்லே நடந்து வரணும். துணையா இருக்குமேன்னு பஸ் ஸ்டாப்புல வந்து நின்னேன்.

    உடனே அம்மாவை வீட்ல தனியா விட்டுட்டு வந்துட்டீங்களாக்கும்?

    அப்பா தணிகாசலம் புன்னகைத்தார்.

    பவித்ரா லேசான கோபத்துடன் பொரிந்தாள்.

    குளிர்க்காத்து சில்லுன்னு அடிக்குது. பனி மழை மாதிரி பெய்யுது. தலைக்கு ஒரு மப்ளரைக்கூட கட்டிக்காம இப்படியா வந்து நிக்கிறது.

    இதெல்லாம் ஒரு பனியா?

    உடம்புக்கு ஏதாவது வந்தா தெரியும்.

    இந்த கட்டைக்கு ஒண்ணும் வராதும்மா.

    நான் சொல்லிட்டுத்தானேப்பா போனேன்? ஆபிஸ்ல ஆடிட்டிங் நடக்குது வர லேட்டாகும்ன்னு. இவ்வளவு நேரமா கொட்டற பனியில நின்னிருக்கீங்க. உங்க உடம்புக்கு ஒத்துக்காதே.

    படபடவென்று பொரித்தபடி பவித்ரா கோபித்தாள். தணிகாசலம் புன்னகைத்தார்.

    வயசானாலே ஏதாவது வரத்தாம்மா செய்யும் பொத்திப் பொத்தி வெச்சுகிட்டா மட்டும் உடம்புக்கு ஒண்ணும் வராமப் போயிடுமா?

    நம்ம உடம்பை ஓரளவுக்கு நாம கவனிச்சுக்கத்தான் வேணும். பஸ் ஸ்டாப்புக்கெல்லாம் வந்து நிக்க வேண்டாம்ன்னு நான் திரும்ப திரும்ப சொல்லிட்டுத்தானே போனேன்?

    நீ சொன்னே...! ஆனா எம் மனசு கேக்கலையே.

    நல்லவேளை வேன்ல போகப் போக ஒரு செகண்ட் பஸ் ஸ்டாப்பைத் திரும்பிப் பார்த்தேன். வாங்க வேனுக்கு.

    இருவரும் வேனை நெருங்கினார்கள்.

    உள்ளே உட்கார்ந்து கதவை அறைந்து சாத்தியதும், வேன் மீண்டும் இயக்கம் பெற்றது.

    லேட் ஆயிட்டா லேடி ஸ்டாஃப்பை மட்டும் ஆபீஸ் வேனிலேயே கொண்டு போய் ட்ராப் பண்ண மானேஜர் ஏற்பாடு பண்ணிட்டார். அதனாலதான் உங்களை பஸ் ஸ்டாப்புக்கெல்லாம் வந்து நிக்க வேண்டாம்ன்னு சொன்னேன்.

    அந்தத் தெருவின் அடுத்த முனையைத் தொட்டு இன்னொரு திருப்பம் திரும்பி இரண்டாவது வீட்டின் முன்னால் ஒய்ந்தது வேன்.

    பவித்ராவும், தணிகாசலமும் இறங்கிக் கொண்டார்கள்.

    வாங்க டிரைவர். காபி சாப்பிட்டுப் போகலாம்.

    பரவால்லம்மா டிரைவர் வேனை நகர்த்தினார். வேன் தெருவின் திருப்பத்தில் மறைந்ததும் வீட்டுக்குள் நுழைந்தார்கள் பவித்ராவும் தணிகாசலமும்.

    உள்ளே கட்டிலில் படுத்திருந்த அம்மாக்காரி சுப்புலஷ்மி அவசரமாய் எழுந்தாள். பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல நின்றிருந்தால் மூட்டில் வலி விண் விண்ணென்று தெறித்து, அன்றைக்கு இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்துவிடுகிற நோய்க்கு சொந்தக்காரி அவள்.

    பவித்ரா... தவிப்பாய் எழுந்தாள்.

    உன்னை இன்னும் காணோம்ன்னு தவிச்சுப் போயிட்டேன். கையும் ஓடலை, காலும் ஓடலை. மடியில் நெருப்பைக் கட்டிகிட்ட மாதிரி இருந்துச்சு... இப்படி ஏதாவது சொல்லி நீயும் ஒரு பாட்டம் புலம்பலை ஆரம்பிச்சிடு சொன்ன பவித்ரா வானிடி ஹேண்ட் பேகை சுவர் ஆணியில் மாட்டிக்கொண்டே புன்னகைத்தாள்.

    எங்க தவிப்பு உனக்குப் புரியாது.

    சொல்லிட்டுத்தானே போனேன். லேட்டாகும்ன்னு.

    இருந்தாலும்.

    நான் அஞ்சு வயசுக் குழந்தை இல்லைம்மா... இருபது வயசுப் பொண்ணு. நல்லது கெட்டது தெரிஞ்ச வயசு. ஏன் இப்படி அநாவசியமா கவலைப்படறீங்க.

    எத்தனை வயசானாலும் எங்களுக்கு நீ குழந்தை தான். தணிகாசலம் புன்னகையோடு மகளை ஏறிட்டார்.

    இன்னியோட உனக்கு சரியா பத்தொன்பது வயசு முடியுது. நாளைக்கு உனக்கு இருபதாவது பிறந்தநாள்... அதாவது ஞாபகம் இருக்கா?

    மறப்பேனா? என்றவள், நாசியை உறிஞ்சி இரண்டு முறை மூச்சை இழுத்தாள்.

    என்னவோ ஸ்வீட் வாசம் வருதே?

    சுப்புலக்ஷ்மியின் முகத்தில் புன்னகை.

    உன்னோட பிறந்த நாளுக்காக செஞ்சேன். உனக்குப் பிடிச்ச மைசூர்பாக்.

    ஸ்வீட் நீயாம்மா பண்ணினே?

    ஆமா.

    எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?

    ஏன் கேக்கறே?

    சொல்லு எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?

    ஒரு... அரை மணி நேரம்.

    அந்த ஸ்வீட்டை நீ செய்யத்தான் வேணுமா?

    ஏன் பவித்ரா?

    அரை மணி நேரமும் நீ நின்னுகிட்டேதானே அடுப்புல வேலை செஞ்சு இருப்பே! உனக்கே கால் முடியாம இருக்கு. மூட்டு சுத்தமா தேய்ஞ்சிருக்கு... ஒரு கோர்ஸ் மருந்து சாப்பிட்டு முடியற வரை காலுக்கு ஸ்ட்ரெய்ன் குடுக்க வேண்டாம்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார். டாக்டர் பேச்சை கொஞ்சமாச்சும் நீ சட்டை பண்றியா? அப்புறம் எப்படி உனக்கு கால் நல்லாகறது.

    அதுக்காக... எம்மக பிறந்த நாளை சும்மா விட்டுட முடியுமா?

    "உடம்புக்கு முடியலேன்னா விடத்தான் வேணும். என்கிட்ட சொல்லியிருந்தா நானே செஞ்சிருப்பேனே?

    உன்னோட பிறந்த நாளைக்கு நான் ஸ்வீட் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதுவுமில்லாம் நீ செஞ்சு போடறதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு?

    நிமிர்ந்தாள் பவித்ரா.

    சுப்புலஷ்மி சிரிப்போடு தொடர்ந்தாள்.

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து தேதியைக் குறிச்சு அனுப்பிட்டாங்க. வைகாசி பதினஞ்சாம் தேதி கல்யாணம் வெச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணி வர்ற இருபத்தி நாலாம் தேதி சிம்பிளா நிச்சயதார்த்தம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்லி விட்டிருக்காங்க.

    பவித்ராவின் முகத்தைப் பார்த்த தணிகாசலம் சின்னத் திகைப்போடு கேட்டார்.

    என்னம்மா... இதைக் கேட்டதும் ஒண்ணு சந்தோஷப்படணும் அல்லது வெக்கப்படணும். ரெண்டுமில்லாம நீ இப்படிக் கண் கலங்கிறியே?

    உங்களைப்பிரிஞ்சு போகணுமேங்கறதை நினைச்சா எனக்கு அழுகைதாம்பா வருது.

    பவித்ராவின் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர் சிதற ஆரம்பித்தது. தணிகாசலம் மகளின் தோளைத் தொட்டார்.

    கல்யாணம் பண்ணிட்டு எங்கேம்மா போயிடப் போறே? உள்ளூர்தானே? உன்னை அடிக்கடி பார்த்துக்கணும்ங்கற ஆசையில் உள்ளூர் மாப்பிள்ளையாப் பார்த்துப் பிடிச்சிருக்கேன்.

    அப்பா கல்யாணம்ன்னாலே எனக்கு பயம்மா இருக்கு. அது ஏன்னு தெரியலை.

    2

    ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த இண்டர்காம் முணுமுணுத்தன. ஃபைல்கள் டேபிள் விட்டு டேபிள் இடம் பெயர்ந்தன. சர்வீஸ் போட்டவர்கள் குனிந்த தலை நிமிராமல் பேனாவால் தடிமனான புத்தகங்களை உழுது கொண்டிருந்தார்கள். செக்ஷன் சூப்ரெண்டுகள் பிசினஸ் சார்ந்த நபர்களிடம் நேரிலும், டெலிபோனிலும் வெண்ணெய்போல மிருதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    பவித்ரா ஸ்பேர் பார்ட்ஸ் லெட்ஜரை மூடி வைத்து சோம்பல் முறிக்க கைகளை உயர்த்தியபோது - அட்டெண்டர் குரல் கேட்டது.

    பவித்ராம்மா... உங்களை மேனேஜர் கூப்பிட்டார்.

    பவித்ரா எழுந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1