Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mosadi Kaadhali
Mosadi Kaadhali
Mosadi Kaadhali
Ebook86 pages30 minutes

Mosadi Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று பேச்சிலர்களும் நல்ல முறையில் பட்ஜெட் போட்டு சிக்கனமாக வாழ்ந்தார்கள். இடையே கேசவன் புறப்பட, மணி, நரசிம்மன் இருவரும் தொடர்ந்தார்கள். திடீரென்று மணியின் மீது திருட்டுப் பட்டம் கட்ட காரணம் என்ன? திருடனை அறிந்து மணியை தேடிச் சென்ற நரசிம்மன், வத்சலாவை மணக்க காரணம் என்ன? திருட்டை மணி ஏற்றுக்கொண்டானா? மணிமீது திருட்டுப் பட்டம் எப்படி வந்தது. வத்சலா யார்? வத்சலா - நரசிம்மன் வாழ்க்கை என்ன ஆனது?

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580100608231
Mosadi Kaadhali

Read more from Devibala

Related to Mosadi Kaadhali

Related ebooks

Reviews for Mosadi Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mosadi Kaadhali - Devibala

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மோசடிக் காதலி

    Mosadi Kaadhali

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    என் பெயர் நரசிம்மன். உங்களுக்கெல்லாம் முகங்களில் என்ன எழுதியிருக்கிறது என படிக்கத் தெரியுமா? மனித முகங்களில்தான். அப்படியானால் என் முகத்தை உற்றுப் பாருங்கள். ‘இவன் ஒரு இளிச்ச வாயன்’ என்று எழுதியிருக்கிறதா? அதை முதலில் படித்துவிட்டு, பிறகு இந்தக் கதையைப் படிக்க ஆரம்பியுங்கள்.

    சார்! அடுத்த மாசமே நீங்க ரூமைக் காலி பண்ண வேண்டி வரலாம்!

    நரசிம்மன் ஆடிப் போனான்.

    ஏன்யா? நான் ஒழுங்கா வாடகை தரலியா? திடீர்னு இப்படி காலி பண்ணச் சொன்னா என்ன அர்த்தம்?

    சார்! இந்த லாட்ஜை இடிச்சு, ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப் போறம்!

    ஏன்?

    இதென்ன சார் கேள்வி? பிஸினஸ்தான்!

    மொத்தம் இந்த மேன்ஷன்ல எத்தனை ரூம்?

    பதினெட்டு ரூம் சார். மாச வாடகை! ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கட்டி விட்டா அவனவன் போட்டி போட்டு பகடி தருவான். உங்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் தந்தாச்சு. வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்குங்க!

    நரசிம்மனுக்கு ஏற்கனவே முட்டை முழி! அது குழப்பத்தில் இன்னும் துருத்திக் கொண்டது.

    எங்கே போவது?

    இந்த மேன்ஷனில் மாத வாடகை! மூன்று பேராக ஒரு அறையைப் பகிர்ந்து கொள்ளும் வசதி... பாத்ரூம், டாய்லட் வெளியேதான்... கொசுவின். ஆதிக்கம் கூடுதலாக இருந்தாலும், சௌகர்யமான மேன்ஷன்... ‘வேறு எங்கே ரூம் தேடுவது?’

    மத்த ரெண்டு பேர்கிட்ட சொல்லிட்டீங்களா?

    ஆச்சு சார்! நீங்க டூர் போயிருந்ததால உங்ககிட்ட உடனடியாக சொல்ல முடியலை! சொந்தக்காரர் போய்விட்டார்.

    நரசிம்மன் பம்பாய் சோப் கம்பெனி ஒன்றில் சென்னைக் கிளையின் சேல்ஸ் ஆபீசர். மாதத்தில் இருபது நாட்கள் டூர். பத்து நாட்கள்தான் சென்னையில். வயதான அம்மா கும்பகோணத்தில், ஒரு ஓட்டு வீட்டில் அவ்வப்போது போய்ப் பார்த்துக் கொள்வதோடு சரி. வேறு உறவுகள் இல்லை.

    வயது முப்பது. இன்னும் கல்யாணத்தைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.

    அதே அறையில் வசிக்கும் இன்னொரு நண்பர் ஒரு வங்கியில் உள்ளூரில் பணிபுரியும் கேசவன். மூன்றாவதாக ஒரு பிரபல இயக்குநரிடம் துணை இயக்குநராகப் பணி புரியும் மணிகண்டன்.

    ‘அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’

    வந்ததும் கேட்க வேண்டும்!

    இரவு ஏழு மணிக்கு கேசவன் வந்தான். குளித்து விட்டு வேட்டி, விபூதி சகிதம் வெளிப்பட்டான்.

    இன்னிக்குத்தான் வந்தீங்களா நரசிம்மன்?

    ஆமாம்!

    சொன்னாரா ஓனர்?

    ம்! நிம்மதியே இல்லை, அதைக் கேட்ட பின்னால், எங்கே போவோம்னு தெரியலியே! கட்டுப்படியாகணுமே!

    எனக்கும் அதே குழப்பம்தான்!

    மணி என்ன சொல்றான்?

    அவன்கிட்ட நான் பேசவே முடியலை இதைப் பற்றி!

    இன்னிக்கு வருவானா? ஏதாவது நைட் ஷூட்டிங் உண்டா?

    பாக்கலாம்! சாப்பிடப் போகலாமா?

    ம்!

    இருவரும் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார்கள். மணி எதிர்ப்பட்டான்.

    அதோ வந்தாச்சே! ஆயுசு நூறு!

    மணி சிரித்தபடி அருகில் வந்தான்.

    வா மணி! இன்னிக்கு ஷூட்டிங் இல்லையா?

    இல்லை. சாப்பிடப் போறீங்களா? கொஞ்சம் இருங்க! நானும் வந்திர்றன்!

    காத்திருந்தார்கள். மூவரும் வழக்கமான அந்த மெஸ்ஸுக்குள் நுழைந்தார்கள். டிபனுக்கு ஆர்டர் செய்துவிட்டு,

    ஓனர் எங்கிட்டேயும் சொல்லிட்டார். என்ன செய்யப் போறம் மணி?

    நான் நிறைய இடங்கள்ல விசாரிச்சிட்டேன். இத்தனை சீப்பா வாடகைக்கு எங்கேயும் ரூம் இல்லை! அதான் ஒரே குழப்பமா இருக்கு!

    இப்ப என்ன செய்யலாம்?

    "ஒரே ஒரு வழி இருக்கு சார்.

    Enjoying the preview?
    Page 1 of 1