Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhiye Kathai Ezhuthu
Vizhiye Kathai Ezhuthu
Vizhiye Kathai Ezhuthu
Ebook107 pages39 minutes

Vizhiye Kathai Ezhuthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Vizhiye Kathai Ezhuthu

Read more from N.C.Mohandass

Related to Vizhiye Kathai Ezhuthu

Related ebooks

Related categories

Reviews for Vizhiye Kathai Ezhuthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhiye Kathai Ezhuthu - N.C.Mohandass

    1

    கிராமங்கள் மாறவில்லை. விடியலில் பஜனை; கோவிலின் பூஜைமணி; வாசலில் கோலம்! நடுவில் சாணியின் மேல் சம்மணமிட்டிருக்கும் பரங்கிப்பூ! சர்க்கார் கிணற்றில் ரகளை பண்ணும் உருளைகள்! தலையில் சும்மாட்டுடன் குப்பை தூக்கும் ப்ளவுஸில்லாப் பெண்! புதரோரம் பதுங்கும் கால்கள்!

    ம்கூம்... கிராமம் மாறவேயில்லை. அப்படியப்படியேதான் இருக்கின்றன.

    கார் ஒன்று பனியையும் புழுதியையும் குழைத்துக்கொண்டு அப்போது - அந்த வீட்டு வாசலின் முன்பு நிற்க, தண்ணீர்க் குடங்களெல்லாம் திரும்பிப் பார்த்தன.

    வண்டியிலிருந்து இறங்கிய டிரைவர், அன்டர்வேரில் பட்டை தெரியும்படி லுங்கியை சுருட்டிக்கொண்டு உள்ளே ஓடினான். தூணில் மத்தைக் கட்டி மோர் கடைந்து கொண்டிருந்த மூதாட்டியிடம், கண்ணன் இல்லே? என்று அவசரப்பட்டான்.

    அவள் தன் இடுப்பைப் பிடித்தபடி எழுந்து, எதுக்கு? ன்று முறைத்தாள்.

    சேர்மன் அழைச்சு வரச் சொன்னார்!

    விடியரத்துக்குள்ளே ஆரம்பிச்சுட்டீங்களா...?

    வந்தும்மா... அர்ஜென்ட் மேட்டர்! நீங்க வேலையைக் கவனிங்க, நானே கூப்பிட்டுக் கொள்கிறேன் என்று உரிமையுடன் அறை அறையாய் எட்டிப்பார்த்து, கண்ணா... கண்ணா! என்றான்.

    சில அறைகள் காலி. ஏதோ ஒன்றில் கண்ணனின் அண்ணன் தூக்கம் கெட்ட கோபத்தில், யாரது? என்று உறுமினார்.

    அவன் மெல்ல நழுவி, சமையல் கட்டில் எட்டிப் பார்த்து, அங்கே சட்னியாகக் காத்திருந்த பொட்டுக் கடலையை அள்ளி பாக்கெட்டில் போடும்போது வீட்டின் மூத்த மருமகள் பிரத்யட்சமாகி,

    கடவுளே... அங்கே இங்கே கைவைத்து கடைசியில் பொட்டுக்கடலை வரை பதுக்கலா...?

    ஷ்... ஷ்... மெல்லப் பேசுங்க! கண்ணனைப் பார்த்தீங்களா!

    தனம் கறந்து வந்த பாலை வைத்து விட்டு கொழுந்தனுக்கு வீட்டில் எங்கே நேரம்? ஊர்ப் பஞ்சாயத்துதானே அவருக்கு சரியா இருக்கு? என்றாள் சலிப்புடன்.

    இப்போ எங்கே?

    குளிச்சிட்டு வரேன்னு போனார். அதுசரி, பொட்டுக்கடலை ஊழலுக்கு என்ன தண்டனை!

    ஆமாம் பெரிய பொட்டுக்கடலை! பெரிய தண்டனை! கோடி கோடியாய் சொத்து சேர்த்தவங்களுக்கு ஒண்ணுமில்லையாம்! ஜகாவுக்கு மேல ஜகாவாய் வாங்கிட்டு இருக்காங்க. போய் வேலையைப் பாருங்கண்ணி! என்று அங்கு துருவி வைக்கப்பட்டிருந்த தேங்காயையும் அள்ளினான். பொட்டுக்கடலை ஊழலோடு இதையும் சேர்த்துக்கங்க!

    வயல் காட்டில் பம்ப்செட் ஓடிக்கொண்டிருந்தது. தொட்டியில் தண்ணீர் பாய, கண்ணன் இடுப்பில் ஈரத்துணியைக் கட்டியபடி ஆடி, ஆடி ஜட்டியை வெளியேற்றி அலசினான். லுங்கி மாற்றினான். அவனது தலை சிலுப்பியிருந்தது. முதுகில் ஈரத்துளிகள்.

    கண்ணனுக்கு முப்பது வயதிருக்கலாம். சராசரி உயரம். மாநிறம். அவன் சோப்பை இலையில் சுற்றிக்கொண்டு கிளம்பும் போது சைக்கிளில் ஒருவன் ஓடிவந்து அண்ணே! டாங்கில் தண்ணீர் ஏறல. மோட்டார் ரிப்பேர்! என்றான்.

    என்னப்பா... எப்போ பார்த்தாலும் ரிப்பேர்! நான் யூனியன் சேர்மனிடம் சொல்றேன்!

    வயலுக்குச் சொந்தக்காரர் அருகில் வந்து, ஏம்ப்பா... நீ இப்படியே சேர்மனுக்கு எடுபிடியா இருந்தாப் போதுமா...? என்றார், வேப்பங்குச்சியால் பல் தேய்த்தபடி... -

    என்ன செய்யணுங்கிறீங்க?

    அரசியல்ல சேர்ந்து அவனவன் எப்படியெல்லாம் பிழைக்கிறான்! நீ எதுக்குமே லாயக்கில்லாமல் இருக்கியே! கான்ட்ராக்ட் எடுக்கணும்

    சரி, எடுத்துடறேன்.

    அது மட்டும் போதாது. இடைத்தேர்தல் வருது போலிருக்கே! சேர்மன்ட்ட சொல்லி எம்.எல்.ஏ. சீட்டு கேளு.

    எம்.எல்.ஏ.வா - அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா - படிப்பு வேணாமா?

    ஏய்... எந்த ஊரில் இருக்கிறாய் நீ...? பெரிசு காவி தெரிய சிரித்தது.

    சேர்மன் உன்னை வசியம் பண்ணி எடுபிடியா வெச்சுகிட்டிருக்கார். அவரோட காரியத்துக்கெல்லாம் உன்னை கருவியா பயன்படுத்திக்கிட்டிருக்கார். விடாதே! சீட்டு தந்தாதான் ஆச்சுன்னு முரண்டு பண்ணு!

    தரலேன்னா?

    முதலில் கல்லெறிஞ்சு வை! மத்ததை பிறகு பார்த்துக்கலாம்! பெரிசு அவனது மனதில் சலனமேற்றின திருப்தியுடன் வாய் கொப்பளிக்க ஆரம்பித்தது.

    கோவிலில் பூஜை மணி கேட்டது.

    கண்ணன் அங்கே ஒதுங்கி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கிளம்பின போது குருக்கள் பிரசாதத்துடன் ஓடிவந்து, வாசலோடு போய் விட்டால் எப்படியாம்... என்றார்.

    உள்ளே வந்து தரிசனம் பண்ணு தம்பி!

    இல்லை நேரமாகறது!

    தம்பி! ஒரு விஷயம்? என்று துளசி இலையை நீட்டிவிட்டு குருக்கள் தலை சொறிந்தார்.

    என்ன...?

    ரெண்டு மாசமாய் சம்பளம் வரலே. அவாவா அதிகமா கொடுத்துண்டிருக்கா. இங்கே உள்ள சம்பளமும் கூட!

    நான் ஏற்பாடு பண்றேன். என்று வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

    கண்ணனுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் போதுவதில்லை. விடிந்ததும் வீட்டை விட்டு இறங்கினான் என்றால், ராத்திரி எப்போது திரும்புவான் என்று சொல்ல முடியாது. ஒரே சுற்றல். எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று வீட்டினருக்குத் தெரியாது.

    அவனுக்கு எப்போதும் ஊர் காரியம் தான் பெரிது. வெளியே யாருக்கு எந்த வேலை என்றாலும் ஓடுவான். வீட்டு விஷயங்களை கவனிப்பதில்லை.

    சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான். படிப்பில் கவனமில்லாததால் பத்தாங்கிளாஸைத் தாண்டவில்லை. சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனை சேர்மன் லட்சுமணன் தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.

    ரேஷன் சரியில்லையா... அவன் அங்கே ஆஜர்! கண்ணன் எப்போது எங்கே இருப்பான் என்று சொல்ல முடியாது. ஒரு சமயம் சினிமா தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொண்டிருப்பான். இன்னொரு சமயம் ஹோட்டல் கல்லா! அப்புறம் ஆர்.டி.ஓ. ஆபீஸ்! வாகன லைசென்ஸ்!

    வீட்டிற்கு அவனால் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் விட்டால் கூட, சாப்பிட ஆட்கள் வருவதிற்கு ஒன்றும் பஞ்சமில்லை. திடீரென ஐந்தாறு ஆட்களுடன் வீட்டிற்கு வந்து, அம்மா! இன்னும் ஒருமணி நேரத்தில் சாப்பாடு தயார் பண்ணி வை - வந்துர்றேன் என்பான்.

    மறுக்க முடியாது. அண்ணன்களெல்லாம் திட்டுவார்கள்.

    எல்லாம் நீ கொடுக்கிற இடம். என்று அம்மாவைச் சாடுவார்கள்.

    அவளோ, போகுது விடுங்கப்பா! வீட்டுக்கு வர்றவங்களுக்கு சாப்பாடுதானே! அது ஒன்றும் தப்பில்லை. நல்ல காரியம் தானே!

    "எது நல்ல காரியம்?

    Enjoying the preview?
    Page 1 of 1