Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennaruge Nee
Ennaruge Nee
Ennaruge Nee
Ebook120 pages44 minutes

Ennaruge Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Ennaruge Nee

Read more from N.C.Mohandass

Related to Ennaruge Nee

Related ebooks

Reviews for Ennaruge Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennaruge Nee - N.C.Mohandass

    1

    திருமணம் என்றால் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்குமிடையே ஒரு த்ரில் இருக்கும். இருக்க வேண்டும். ஒரு எதிர்பார்ப்பு! உறவினர் நண்பர்களின் கேலியுடன் எப்போதும் ஒரு எகத்தாளப் பார்வை அவர்களை தொடர்ந்து கொண்டிருக்கும். புது உறவு - புதிய வீட்டிற்கு போய் - மாமனார் - மாமியார் என்று எதிர்கொள்ள வேண்டிய பதற்றமும் பயமும் பரிதவிப்பும் பெண்ணிற்கு இருக்கும். அத்துடன், உள்ளுக்குள் ஒரு தீ! படபடப்பும், சந்தோஷ ஊஞ்சலும், கிளுகிளுப்பும் தோன்றுவதும் சகஜம்.

    மாப்பிள்ளையைவிட பெண்ணிற்கு த்ரிலும் டென்ஷனும் அதிகமிருப்பது வாஸ்தவம், உடல் போர்த்திய பட்டும், கழுத்து கொள்ளா நகைகளும் (அதில் பெரும்பகுதி இரவல் என்பது வேறு விஷயம்) சந்தோஷ இம்சை!

    எடுத்து, தலை நிமிர்ந்தாலும் - ‘இந்தப் பெண்ணிற்கு வெட்கமேயில்லை பாரேன்’ என்கிற பேச்சு எழும். தலைகுனிந்திருந்தாலோ - ‘கல்யாணத்திற்கு முந்தியே சாந்தி முகூர்த்தக் கனவா?’ என்று இடிவிழும்.

    விசுக் விசுக்கென இளசுகள் இங்குமங்கும் பறத்தலும், தங்களின் உறவுக்கார அல்லது ஜொள் இளைஞர்களுக்கு தரிசனம் தந்து ஈர்த்தலும் வழக்கமான நிகழ்ச்சிகள்.

    ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாய், திகிலுமாய், திகைப்புமாய் இருக்க வேண்டிய மணமகள் நிஷிதா எந்தவித சலனமின்றி அலங்கரிப்பில் இருக்க -

    அவளுக்கு பதில் அவளது தாய் செண்பகமும், தந்தை நீலமேகமும்தான் மிகுந்த த்ரில்லில் இருந்தனர். நீலமேகம் கல்யாண மண்டபத்தின் வாசலுக்கும் ஹாலுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தார். அங்கு யாரையோ ரகசியமாய் அழைத்து என்னவோ கேட்டு, பதில் பெற்று அந்த நிமிஷத்திற்கு நிம்மதி பெற்றார்.

    அதற்குள் செண்பகம், அவரை அழைத்து விசாரிச்சீங்களா? என்றாள். அதட்டினபடி, வெளியே பிறருக்கு புன்னகையை வெளிப்படுத்தி,

    ம். விசாரிச்சுட்டேன்.

    ஒண்ணும் பிரச்சினையில்லையே!

    இல்லை.

    அவன் வந்தானா?

    வந்த மாதிரி தெரியலை!

    அப்போ உறுதியா தெரியலை. நீங்க எதுக்குதான் லாயக்கு!

    இல்லேடி. நாலா பக்கமும் ஆளை நிறுத்திருக்கேன். அவங்களை மீறி அவன் வந்திரமுடியாது!

    அப்ப வந்துட்டான்னா?

    என்ன பண்ணணும்னு சொல்லு! தீர்த்து கட்டிரலாமா?

    அபத்தமாப் பேசாதீங்க! ஒரு தூசைக்கூட அசைக்க முடியாதவர் தீர்த்துக் கட்டப் போறாராம்! எனக்குன்னு வந்து வாச்சிருக்கீங்களே! எல்லாம் என் தலையெழுத்து! வாங்கம்மா! டிபன் சாப்டீங்களா... உள்ளே போய் உட்காருங்க... என்று செண்பகம் இடையிடையே கும்பிடு போட்டாள்...

    செண்பகம்! நீ எதுக்கும் கவலைப்படாம, போய் நிஷிதாவை ரெடி பண்ணு! வாசல்ல வீடியோ கேமிரா வச்சிருக்கேன். அவன் வந்தான்னா இந்த டி.வி.யில தெரிஞ்சிரும்! எனக்கென்னவோ அவன் வரமாட்டான்னுதான் தோணுது!

    அப்போ உக்காந்து குறட்டைவிடுங்கோ!

    செண்பகம் அவரை நோகடித்துவிட்டு, உள்ளே ஓடினாள். வரவேற்பறையில் பசங்களும் பசுங்கிளியும் பசப்பிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும் மேளமும் மங்களமாய் முழங்க, மணமேடையில் இருந்து புகைத்துக் கொண்டிருந்தார்.

    நேரமாச்சு! பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ! என்றார் குருக்கள்.

    இதோ - வந்திருவா!

    இதையேதான் அரைமணி நேரமா சொல்றேள்! முகூர்த்த நேரம் முடியப் போறது! நான் இத முடிச்சுட்டு இன்னொரு கல்யாணத்துக்குப் போகணும்!

    அப்போ அதான் காரணமாக்கும்! கலிகாலம்! எல்லாமே இப்போ பிசினஸாப் போச்சு!

    செண்பகம், அறைக்குள் புகுந்ததும் அதுவரை அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண்கள் சட்டென விலகி நின்றனர்.

    அலங்காரம் ஆச்சில்ல கிளம்புங்க!

    தோழிகள் பயந்து நழுவ,

    நிஷிதாவும் எழுந்து நடந்தாள்.

    நில்! உங்கிட்ட தனியா பேசணும்!

    என்ன? என்று சுற்றை வெறித்தாள்.

    வருண் வருவானா?

    என்னைக் கேட்டால்...?

    உன்னைக் கேட்காம பின்னே யாரை கேக்கறதாம்? சுத்தறதையும் சுத்திட்டு இப்போ கமுக்கமா இருந்தா எப்படியாம்?

    அம்மா! அவன் கூட சுத்தினாலும் தப்பு, பேசாம இருந்தாலும் குத்தமா... உன்னை புரிஞ்சுக்கவே முடியலை!

    நீ பேசாம இருக்கிறதுதான் பயமுறுத்துது. சொல்லுடி! உன் மௌனத்துக்கு என்ன காரணம்? எந்தவித எதிர்ப்பும் காட்டாம சம்மதிச்சுட்டியே ஏன்?

    அம்மா! நீங்க பாத்த மாப்பிள்ளையை கட்டிக்க சம்மதிச்சது குத்தமா? பெற்றோர் பேச்சை தட்டாமலிருப்பதுகூட பாவமா? ஏன் என்மேல இப்படி சந்தேகப்படறீங்க?

    உள்ளுக்குள்ளே ஏதும் திட்டம் வச்சிருக்கீங்களா? வருண் ரகசியமா ஏதும் செய்யப் போறானா?

    அம்மா! வருண்...! வருண்! அவன் யார்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    நீ காதலிச்சவனாச்சே!

    அதுதான் இல்லேன்னு ஆகிப்போச்சே!

    இல்லேன்னு நாங்க சொன்னாப் போதுமா...? நீ மனசார ஏத்துக்கணும். தோ பார்... உன் நன்மைக்காகத்தான் சொல்றேன். காதல்ங்கிறது ஒரு மாயை. ஒரு பித்தலாட்டம், இனக்கவர்ச்சி. அவ்ளோதான்! தள்ளியிருக்கும்போது பளபளப்பா தெரியும். அருகே வந்ததும் சீ... இவ்ளோதானான்னு வெறுக்க வச்சிரும்!

    அம்மா! முகூர்த்தத்துக்கு நேரமாகறது!

    ஆமாண்டி. நான் சொல்றதெல்லாம் உனக்கு இப்போ கசப்பாத்தானிருக்கும்.

    அதற்குள் உறவின் பெண்கள் ரெடியாயிட்டாளா... என்று ஓடிவர, இன்னும் கொஞ்சம் பொறுங்க! என்று செண்பகம் அவர்களை அறைக்கு வெளியே நிறுத்தி, நிஷிதா! ஏன் உன் கண்ணெல்லாம் சிகப்பாயிருக்கு? வாயை காட்டு! என்று அவளது கண்களை விரித்து உரித்துப் பார்த்தாள்.

    ஏதும் சாப்பிட்டு கீப்பிட்டு வெக்கலியே!

    இல்லை. பயப்படாத. நான் ஒண்ணும் அந்த அளவுக்கு கோழையில்லை.

    அவன் கல்யாணத்துக்கு வருவானா?

    தெரியாது. பத்திரிகை கொடுத்திருந்தா நிச்சயம் வரணும்!

    அப்போ பத்திரிகை கொடுக்கலேன்னா - வரமாட்டான்! அப்படித்தானே! வாழ்க அவனது ரோஷம்! என்று செண்பகம் நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

    வருண், எம்.காம். படித்த இளைஞன். வெளியே வேலை கிடைக்காத தருணத்தில் போஸ்ட்டாபீஸில் வேலை பார்த்த அப்பா இறந்துவிட, தற்காலிகமாய் அங்கேயே வேலை கிடைக்கப்பெற்று நிஷிதாவின் ஹாஸ்டலுக்கு போஸ்ட்மேனாக வந்திருந்தான். ஒரு நாள் அவன் ஹாஸ்டல் கிளர்க்கிடம், கடிதங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்க ஹாய்! என்னை தெரியுதா? என்றாள் நிஷிதா. அவன் முகம் விரிந்து, சுருங்கி, ம்கூம்."

    புதுசு. அதான் தெரியலே. எனக்கு மணியார்டர் இருக்கா?

    நாளைக்கு நிச்சயம் தரேன்!

    அடுத்த நாள் அவள், வருணை கலாட்டாப் பண்ண வேண்டி வாசலிலேயே காத்திருந்தாள். அவன் வராமல் போகவே - பார்ட்டி வேற ஏரியாவுக்கு மாற்றல் வாங்கி ஓடிருச்சு போல என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கும்போது அவன் வேக வேகமாய் சைக்கிளில் ஓடி வந்து இந்தாங்க! என்று நீட்டினான்.

    அவள் அதை வாங்கிப் பார்த்து என்ன வெறும் ஃபாரத்தை தரீங்க...

    நீங்கதானே மணியார்டர் கேட்டீங்க?

    நான் கேட்டது பணம். கிழவிங்களுக்குத்தான் தருவீங்களோ!

    இல்லை. அப்படின்னா உனக்கும் தந்திருக்கணுமே! என்று சொல்லிவிட்டு ஓடிப் போனான்.

    அப்புறம் மறுநாளே அவள் போஸ்ட்டாபீஸிற்கு வந்துவிட்டாள். வருண் கட்டுக்களை பிரித்துக் கொண்டிருக்க, போஸ்ட்மாஸ்டரிடம் நிஷிதா அவனைக் காட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருக்க, அவனுக்கு வியர்த்துப் போயிற்று.

    விளையாட்டிற்கு கமெண்ட் அடிக்க வினையாக்கிவிடுவாளோ? அதுவும் லேடீஸ் ஹாஸ்டல்! எசகு

    Enjoying the preview?
    Page 1 of 1