Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Ondre Pothume
Punnagai Ondre Pothume
Punnagai Ondre Pothume
Ebook102 pages35 minutes

Punnagai Ondre Pothume

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Punnagai Ondre Pothume

Read more from N.C.Mohandass

Related to Punnagai Ondre Pothume

Related ebooks

Related categories

Reviews for Punnagai Ondre Pothume

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Ondre Pothume - N.C.Mohandass

    1

    ஹோட்டல் வாசலில் கார்களெல்லாம், அழகுப் போட்டிக்கு வந்தது போல அணிவகுத்திருந்தன. கார்டனில் இசை முழங்க, கல்யாண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

    பணம் படைத்தவர்களும், பணத்திற்காக படைக்கப்பட்டவர்களும், கோட் சூட், சஃபாரி என்று வலம் வர, அவர்களைக் கவர வேண்டி, (ஃபியூட்டி பார்லருக்கு அதிகாலையிலேயே போய் துண்டு போட்டு சீட் பிடித்து பதினெட்டு மணி நேர மேக்கப்பின்) பளபளப்பில் பதுமைகள் வாசமும் பாசமுமாய் பட்டுப் புடவை கண்காட்சி நடத்தினர். சன்னமான ஒளியில் அவர்களின் கழுத்தும் காதும் மின்னிற்று.

    வீடியோ வெளிச்சத்திலும், மனைவியின் கூச்சத்திலும் மணமகன் புன்னகைத்து, விருந்தினருக்கு கைகொடுத்து, அவர்களின் பரிசுகளைப் பெற்று, போட்டோவுக்கு நடித்துக் கொண்டிருந்தான்.

    ஒரு பக்கம் குளிர்பானங்களும் இன்னொரு பக்கம் உற்சாக பானங்களும் உற்சாகமாயிருக்க,

    தலையில் மத்தாப்பு கொளுத்திக்கொண்டு ஜீப்பும் அதன் பின்னால் நான்கைந்து கார்களும் ஓடிவந்து அவசரமாய் நின்றன. சட்சட்டென கதவுகள் திறக்கப்பட்டு, பட்டு வேஷ்டியுடன், மல்லீஸ்வரன் இறங்கி, அங்கிருந்த மக்களுக்கும், மரங்களுக்கும் கும்பிட்டு, மணமக்களிடம் பரிசைக் கொடுத்து, படம் எடுத்துக்கொண்டு வந்த வேகத்திலேயே ஹோட்டலுக்குள் பிரவேசித்தார்.

    பின்னாலேயே கேமராக்கள் துரத்த, அடப் போதும் போங்கப்பா! என்று முறுக்கினார்.

    சார்! நான் தனியார் டிவி. என்று ஒருவர் தன் அடையாள அட்டையை நீட்டி ஆளும்கட்சியில் அங்கமாயிருக்கும் உங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கசமுசாவென்று செய்தி வந்துள்ளதே... அது உண்மையா? என்றார்.

    தெரியலை. நீங்கதான் விசாரிச்சு சொல்லணும்!

    கூட்டணிக்குள் நீங்கள் குழப்பம் பண்ணுவதாய்...

    இப்போ என் வயிறுதான் குழப்பம் பண்ணுது. டாய்லட் போக அனுமதிப்பீங்களா... இல்லை, அங்கேயும் கேமராவோட வந்திருவீங்களா?

    ஸாரி சார் என்று அவர்கள் ஒதுங்கினர்.

    மல்லீஸ்வரன், தனது தங்கமுலாம் கண்ணாடியைக் கழற்றி கோட்டில் செருகிக்கொண்டு, பாத்ரூமிற்குள் மறைந்தார்.

    அவர் அரசியலுக்கு ஏற்ற மாமனிதர்! எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் அஞ்ஞானமும் மெய்ஞானமும் பெற்றவர். தன் கட்சியின் ஆதாயத்திற்கு வேண்டி, செயல்படும் எந்த மாதிரியான பழிபாவத்திற்கும் அஞ்சாதவர்.

    இப்போதுகூட -

    அதற்குள் செல்போன் ஒலிக்க, எடுத்து எல்லாம் ஓ.கேயா... திட்டம் எதுவும் பிசகாதே! என்றார்.

    இல்லிங்கய்யா...

    என் பையன் அபிஷேக் அங்கிருக்கானா... அவன்ட்ட கொடு

    அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த வாரிசான அபிஷேக் அப்பா! நீங்க கவலைப்பட வேணாம். எல்லாம் நான் பாத்துக்கிறேன். ஊர்வலம் வந்துக்கிட்டிருக்கு. சாமி புறப்பாடு ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர் இழுக்க ஆரம்பிச்சிருவாங்க. என்னது? கூட்டமா... பத்தாயிரம் பேர்களுக்குக் குறையாது. தேர் வேற்று மதத்தினர் வசிக்கும் பகுதியில் நுழைந்தவுடனேயே வெடிக்கும்! நிச்சயம்!

    ஏய்... இதெல்லாம் போனில் பேசணுமா, ஜாக்கிரதை! ஏற்பாடுகளை செஞ்சுட்டு நீ வந்திரு. அங்கே காத்திருக்க வேணாம்.

    இல்லேப்பா. இந்த விஷயத்தில் அடுத்தவங்களை நம்பி பிரயோஜனம் இல்லை. எவன் எப்போ ஆள் மாறுவான்னு சொல்ல முடியாது. அதனால நானே எல்லாத்தையும் முடிச்சுட்டு வரேன்!

    மல்லீஸ்வரன் திருப்தியுடன் வெளியே வந்தார். அவரது முகத்தில் ஒரு வைராக்யம் தெரிந்தது.

    என்னை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் இளித்தவாயனா? கூட்டணியில் நான் பிரதான அங்கம். தெருத்தெருவாய் சென்று ஓட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என் சாதியைத் திரட்டி ஆட்சியை நிலை நிறுத்தியிருக்கிறேன். இவர்களுக்கு எல்லாமே மறந்துவிட்டது. திடீரென என்னை ஓரங்கட்டுகிறார்கள். எனக்கு எதிராய் பிற சாதியினரைத் தூண்டுகிறார்கள். நான் யார் என்று இவர்களுக்குக் காட்ட வேண்டும். கலகம் விளைவிக்க வேண்டும். ஆட்சி சுமுகமாய் இருப்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள்... இன்னும் இரண்டே நாள்! அதற்குள் எல்லாம் கலங்கப்போகிறது. இன்று இரவுக்குள் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது. அதில் சாகப்போவது ஆயிரமோ இரண்டாயிரமோ தெரியாது. அந்தப் பழி வேற்று மதத்தினரின் மேல் விழும்.

    இரண்டு மதத்தினரும் அடித்துக் கொள்வர். ஆள்பவர்களுக்கு தர்மசங்கடம். இரண்டு பக்கமும் அவர்களுக்கு இடி இருவரையும் பகைத்துக்கொள்ள முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், கடைசியில் இருதரப்பினரின் விரோதத்தையும் சம்பாதித்து, திண்டாடும்போது, எனது சப்போர்ட் தேவைப்படும். வருவார்கள்! அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன்! வரவேண்டும்! வரட்டும்! அவர் காத்திருந்தார்.

    2

    வீட்டு வாசலில் வருக! வருக! என்று கோலம் வரவேற்புரை நல்கிக் கொண்டிருந்தது. படிகளில் என்றுமில்லாமல் சிவப்பு கார்ப்பெட்! விசாலமான ஹாலில் சோபாக்களும் நாற்காலிகளும் வழக்கத்திற்கு மாறாய் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

    செய்தித்தாள்களும், வார இதழ்களும் டிரேயில் பத்திரப்படுத்தப்பட்டு, பூ ஜாடியில் மலர்கள் சிலிர்த்திருந்தன. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பட்டுப் புடவையும், கண்களில் ஆர்வமுமாய் உள்ளே பிரவேசித்து, மாப்பிள்ளை எத்தனை மணிக்கு வர்றார்? என்று அவசரப்பட்டன.

    தெரியல. பத்து மணின்னு சொன்னாங்க? என்று ஜெயந்தி சொல்லிவிட்டு ஜன்னல் வழியே தெருவை எட்டிப் பார்த்தாள்.

    மணி பத்தேகால் ஆகுது!

    வந்திருவாங்க. ஏண்டி அலையறீங்க? என்று கேட்டபடி அனுஷா அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டாள். பட்டுடுத்தி இருந்த அவள் வயிற்றில் ஒட்டியாணம்! கால்களில் சலக் சலக்! கழுத்தும் காதும் மின்ன, தலையில் மல்லிகைப் பந்தல்! உதடுகளையும் நகங்களையும் பாலீஷ் மெருகேற்றியிருந்தன. கண்களில் மையிட்டு, புருவத்தை ஒழுங்குபடுத்தியிருந்தாள்.

    அக்கா! நீங்க நாட்டியமாடப் போறீங்களா?

    அதிகப்பிரசங்கி! என்று அனுஷா அந்த நண்டின் காதைத் திருகி, தலையில் செல்லமாய் குட்டு ஒன்று வைத்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1