Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavondru Kandean...
Nilavondru Kandean...
Nilavondru Kandean...
Ebook73 pages24 minutes

Nilavondru Kandean...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கழுத்தில் மாலைவிழாமல் கையில் குழந்தையுடன் வாழும் பெண்ணுக்குத் திருமணம். ஏனிப்படி? என்ன நடந்தது? அந்த குழந்தையின் தந்தை யார்? அவளுடைய திருமணத்திற்கு பின்னான புதிய உறவுகள் அவளை ஏற்றுக் கொண்டதா? சிக்கலை உண்டாக்கியதா? அவள் நிலைமை என்ன?

இதை காதலாய் திகட்டதிகட்டச் சொல்கிறது இந்தப் புதினம். தாம்பத்யத்தின் ரகசியத்தைக் கூறுகிறது இந்த நாவல்.

இந்த?

"நிலவொன்று கண்டேன்"

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580135410605
Nilavondru Kandean...

Read more from J. Chellam Zarina

Related to Nilavondru Kandean...

Related ebooks

Reviews for Nilavondru Kandean...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavondru Kandean... - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலவொன்று கண்டேன்...

    Nilavondru Kandean...

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    நிலவு - ஒன்று

    நிலவு - இரண்டு

    நிலவு – மூன்று

    நிலவு - நான்கு

    நிலவு - ஐந்து

    நிலவு - ஆறு

    நிலவு - ஏழு

    நிலவு - எட்டு

    நிலவு - ஒன்பது

    நிலவு - பத்து

    நிலவு - பதினொன்று

    நிலவு - பன்னிரெண்டு

    நிலவு - ஒன்று

    சர்வாலங்கார பூஷிதனாய் அருள் பாலித்து நின்ற முத்துக்குமாரசுவாமியின் முன்னே வானதியும் அகிலன் தேவராஜ்ஜும் மாலையும் கழுத்துமாக நின்றனர். குழந்தை ரிஷி அவனுடைய கையைப்பிடித்துக் கொண்டு நின்றிருக்க வானதியின் அப்பாவும் அகிலனின் தாத்தா சிவநேசன் தேவராஜ்ஜும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருவரும் கைகோர்த்துக் கொண்டனர். வானதி எவ்வித உணர்வுகளுமேயின்றி துடைத்துவிட்ட முகத்தோடு கைகூப்பி நின்றிருந்தாள். அருகில் நின்றவனும் அப்படியே! ரிஷி மட்டுமே மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

    அகிலனின் தந்தை சதாசிவம் தேவராஜ் எரிச்சலை அடக்கிக் கொண்டு நின்றார்.

    வசந்தா! ஏதோ வயசுக் கோளாறுல தப்பு நடந்திருக்கு. சின்னாவும் சொல்றதுக்கு சங்கடப்பட்டுருப்பான். கூடவே விபத்து சிகிச்சைன்னு நம்ம சின்னாவுக்கும் என்னாச்சுன்னு யோசி. நடந்ததையெல்லாம் நினைவுலே வச்சுக்கோ. உன் ரெண்டு மருமவளுங்களும் எனக்கு நீ கிடைச்சாமாதிரி இல்லை. ஏமாந்தா வளைச்சு வித்துடுறவளுங்க. உன் புருஷனும் நீயும் செயலா இருக்கிறதனாலே வண்டி ஓடுது. இப்பவே உனக்கும் வயசாச்சு...ஒரு துரும்பை நகர்த்துறாளுகளா...எல்லாமுமே நீதான் பார்க்க வேண்டியிருக்கு சின்னாவோட பொஞ்சாதி நல்ல பொண்ணா தெரியறா. பணங்காசு இல்லைன்னாலும் குணவதியாத் தெரியறா. அத்தோடு உங்க மாமனார் அப்படி லேசுபாசான சம்பந்தமா பார்ப்பாருன்னு நினைக்கிறே...அதுவும் சின்னான்னா உசிரு அவருக்கு...எனக்கென்னமோ இவதான் உன்கைக்கு அடக்கமா காலத்துக்கும் உன்னோடிருந்து குடும்பத்தை காப்பாத்துவான்னு படுது. எதையும் யோசிக்காதே. சின்னா அப்படி கிடந்தப்போ என்னவெல்லாம் பேசுனாங்க. ஞாபகமிருக்கா? இப்போ பாரு முழிச்சுக்கிட்டு நிக்கிறாளுங்க.எதையும் குழப்பிக்காம முழுமனசோடு வானதியை மருமகளா ஏத்துக்க. மகனுக்கு பிடிச்சவ.அவன் வாரிசை சுமந்தவ. அந்த ஒன்னே போதும்

    மாமியார் சொன்னது புத்தியில் ஏறியிருக்க வானதியை நிமிர்ந்து பார்த்தார் வசந்தா.

    குங்குமப் பொட்டோடும் வகிட்டிலிட்ட குங்குமத் தீற்றலோடு பூவோடும் அம்சமாயிருந்தாள். நிதானமும் அமைதியும் இயல்பாக வதனத்தில் வர்ணம் பூசியிருக்க மற்ற இரு மருமகள்களிடம் இல்லாத ஏதோ ஒன்று புதியவளிடம் இருப்பது போல் தோன்றியது. பிரம்மை என்று விட்டுவிட முடியவில்லை...அத்தோடு மாமனார் கொண்டுவந்த மருமகள். அதுவும் நாலுவயது குழந்தையுடன். சின்னாவை ஞாபகப்படுத்துகிறான் தான் அசப்பில் அந்த சிறுவன்...ஆனாலும் சின்னாவின் குணம் இப்படியோர் காதல் உறவுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பதென்பது…. ஆனால் சின்னாவும் சிறுவனும் பழகுவதைப்பார்த்தால்…...? குழப்பங்களையொதுக்கி

    வசந்தா அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளைத் திருத்தமாகவே செய்து கொண்டிருந்தார்.

    இரண்டு மருமகள்களும் யாருக்கு வந்த விருந்தோ என்று தள்ளி நிற்க திருமணம் நிறைவாகவே நடந்து முடிந்தது.

    திருமணத்துக்குப்பின்னான பூஜையை முடித்து தம்பதி கையாலேயே அன்னதானம் ஆரம்பித்து வைத்து விட்டு வீடும் வந்தாகி விட்டது. புதுத் தம்பதியருக்கு ஆரத்தியெடுக்க இருவருமே சுணங்கியபோது மங்கை சொந்தத்தில் இரு சுமங்கலிகளை அழைத்தார்.

    பூஜையறை விளக்கேற்றி பாலும் பழமும் கொடுத்து இருவரையும் தனித்தனியே ஓய்வுக்கு அனுப்ப சின்ன மருமகள் சொன்னாள்.

    தனித்தனி ரூம் எதுக்கு? ஒன்னாவே அனுப்பலாமே! அதான் குழந்தையே பெத்தாச்சு! இன்னும் என்ன?

    மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தவனுக்கும் அறைக்குள் நுழைந்தவளுக்கும் கேட்கவே செய்தது.அவன் திரும்பி ஏதோ பேசத் துவங்குமுன்னே மங்கை முன்னே வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1