Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jenitha Vs Janhvi =???
Jenitha Vs Janhvi =???
Jenitha Vs Janhvi =???
Ebook103 pages36 minutes

Jenitha Vs Janhvi =???

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெனிதா, ஜானவி இருவரும் யார்? அவள் செய்ய நினைத்தது என்ன? அவளோடு துணையாய் இணைந்தவன் அவளுக்கு உதவினானா...? சற்றே க்ரைம் கலந்த அதிரடி நாவல்! முதன்முறையாக இந்த ஸோனரைக் கையிலெடுத்து வடித்துள்ளேன். முற்றிலும் இது எனக்கும் என் வாசகவட்டமான உங்களுக்கும் புதிதே! வாசித்துவிட்டு சொல்லுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580135409491
Jenitha Vs Janhvi =???

Read more from J. Chellam Zarina

Related to Jenitha Vs Janhvi =???

Related ebooks

Related categories

Reviews for Jenitha Vs Janhvi =???

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jenitha Vs Janhvi =??? - J. Chellam Zarina

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஜெனிதா Vs ஜான்வி =???

    Jenitha Vs Janhvi =???

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 1

    இருள் இன்னும் முழுதாக இறங்கவில்லையெனினும் அந்த இடம் சற்று அதிகமாகவே இருளைப் பூசிக்கொண்டிருந்தது. தெருவிளக்குகள் ஒன்றிரண்டேயிருந்தன. ஜெனிதா ஏசிபி ஜீப்பை அந்த கிளைப்பாதையின் ஓரமாகவே நிறுத்தச் சொல்லி குதித்தாள். கூடவே அனைவரும்.

    சுற்றிலும் குத்துச்செடிகள் புதர்களாய் நிறைந்திருக்க அந்த இடமே அலங்கோல கோலாகலமாயிருந்தது.பார்க்கும் இடமெல்லாம் உடைந்த மதுபாட்டில்களும் ஏதேதோ கசடுகளுமாய் நிறைந்திருந்தது.

    இரு பெண்காவலரோடு மொத்தம் அறுவர் குழு அது. அவர்கள் நின்ற இடத்திலிருந்து அந்த இடம் நன்றாகவே தெரிந்தது.

    சந்திரன்! எல்லோரும் அலெர்ட்டா இருக்கனும். உள்ளே எத்தனை பேர் இருக்கிறாங்கன்னு பார்த்துட்டு தாக்குதலைத் தொடரணும். பிடித்து வைத்திருக்கிற குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாம இதை சக்சஸ் ஃபுல்லா முடிக்கனும்

    அவர்கள் நெருங்கி விட்டார்கள்.வாசல் இருளில் மூழ்கிக்கிடக்க மாடியில் ஒரே இடத்தில் மட்டும் விளக்கொளி தெரிந்தது.

    வாசற் புறமாகவும் பக்கவாட்டு சந்திலும் குழு பிரிய எஸ் ஐ சந்திரனின் கண்ணசைவில் காம்பவுண்டு சுவர் மீது ஏறினார் காவலர் ஒருவர்..மெதுவே நடந்து சன்ஷேடின் மீது கால்வைத்து நகர்ந்து கண்ணாடி ஜன்னலை கவனமாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு ஐந்து என்று விரல் விரித்துக் காட்டினார்.

    குழுவிற்கு சைகை காட்ட சந்திரனும் ஜெனிதாவும் வாசல் வழியே நுழைந்தனர். கதவு மூடியிருந்தது. மெதுவே தள்ளிப்பார்க்க அது அசைந்து தர மறுத்தது. ஜெனிதா பின்பக்கம் நகரத் துவங்கினாள். பின்புறம் ஒருஉடைந்து போன ஏணியிருக்க அதைக்கொண்டு மேலேறி பார்க்க ஒரு அறையில் நிறைய குழந்தைகள் தூங்குவது போல் கிடந்தனர். எல்லோருமே ஆறேழு வயது முதல் பன்னிரண்டு பதின் மூன்று வயது சிறுமியர் தாம்.

    ஒருவன் உள்ளே நுழைந்து சிறுமிகளை நோட்டமிட்டு ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியேறியதும் ஜெனிதாவுக்கு அந்தக் குழந்தைக்கு ஏதோ கெடுதல் செய்யப் போகிறான் என்று உள்ளுணர்வு உணர்த்த..... வழியைத் தேடினாள். அவளிருந்த இடத்துக்கு மேலாக இருந்த கண்ணாடி ஜன்னல் தெரிய மெதுவே கையால் தள்ளிப்பார்க்க நகர்ந்தது.

    உள்ளே குதித்தாள்.

    வெளியேறியவன் எங்கே என்று பார்க்க அடுத்த அறையில் அவன் அந்த சிறுமியின் உடைகளை களைந்து .... ஜெனிதா கதவை மூடினாள். அவனுடைய நெற்றியில் பிஸ்டலை அழுத்த.... அவன் பீதியிலும் போதையிலும் குழறித்தள்ளாட....

    இழுத்துப்போய் அவனை பாத்ரூமில் தள்ளினாள். ஓங்கி இரண்டு அறை விட்டு அவன் சட்டையை உருவி கைகளை பின்பக்கமாய் கட்டிவிட்டு கொடியில் கிடந்த துண்டை அவன் வாயில் திணித்தாள். பிஸ்டலின் பின்பக்கமாய் ஓங்கி அவன் தலையில் அடித்தாள்.

    சிறுமியின் உடையை சரிசெய்தவள் சிறுமியர் இருந்த அறைக்கதவை மூடித் தாழிட்டாள்.

    மற்றோர் அறையில் நால்வர் மயக்கத்திலிருந்தனர். எதிரே காலி பாட்டில்கள் உணவு சொச்சங்கள்...

    அந்த அறையைக் கடந்தால் தான் கீழே போய் கதவைத் திறக்க முடியும்.....

    கீழே சத்தம் கேட்டது. சந்திரன் உள்ளே நுழைந்திருந்தான். ஜெனிதா அறையினுள் நுழைந்தாள் புயலாக.....

    அடுத்த அரைமணி நேரக் களேபரத்தில்......எல்லோரையும் வளைத்துப் பிடித்திருந்தது ஜெனிதா டீம்.

    ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். குழந்தைகள் மயக்கத்திலேயே இருக்க...

    வாசலில் சந்திரனிடம் அடிவாங்கிக் கீழே கிடந்த ரவுடி மெதுவே ஸ்மரணைக்கு வந்திருந்தான்.

    கண்ணைத் திறந்து பார்க்க சகாக்கள் விலங்கிடப்பட்டு ரத்த காயத்தோடு கிடப்பதைக் கண்டதும் வெறியேறியது அவனுக்கு. மொத்தத்தையும் பிடித்துவிட்ட மகிழ்ச்சியிலிருந்தது ஜெனிதா டீம்.

    சந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஜெனிதா…..

    "இல்லை சந்திரன்! இதுல பெரிய கை சம்பந்தப்பட்டிருக்கனும். இவ்ளோ பேரை மயக்கத்துலே வச்சு.... ஊஹும்! இவனுங்க வெறும் அம்புதான். இதுக்குப் பின்னாலே இருக்கிற மூலவேரை கெல்லியெடுத்து வெந்நீர் ஊற்றி அழிக்கனும்.

    எனக்கு வந்த இன்பர்மேஷனிலும் உடலுறுப்புகளுக்காக கடத்தப்படுவதா செய்தி வந்தது. அந்த தகவலின் படி இங்கே அட்டாக் செய்தோம். ஆனா....."

    பிரச்னையில்லை மேடம் இவனுங்களை நம்ம ஸ்டைலில் விசாரிச்சா எல்லாம் வெளியே வந்திடும் மேடம்.

    ம்! சுகுணா! இப்போ எப்படியிருக்கு? ஆம்புலன்ஸ் வந்திடும்.

    நடந்த போராட்டத்தில் அந்தப் பெண்காவலருக்கு கண்ணாடி

    Enjoying the preview?
    Page 1 of 1