Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devil Score
Devil Score
Devil Score
Ebook77 pages26 minutes

Devil Score

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நண்பர்கள் இருவருடன் ஒரு பேய் உடன் அமர்ந்து பார்ட்டியில் பங்கு கொள்வதும் தான் ஏன் பேயாக மாறி விட்டேன் என்பதை விளக்குவதும் டெவில் ஸ்கோர் என்றால் என்ன என்று சொல்வதும் அடுத்தப் பிறவி செல்வதற்கான இன்டர்வியூவில் பலமுறை தோற்பதும் என்று பேயின் காமெடி அலப்பறைகள் தான் டெவில் ஸ்கோர்

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507207
Devil Score

Read more from Gavudham Karunanidhi

Related to Devil Score

Related ebooks

Related categories

Reviews for Devil Score

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devil Score - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    டெவில் ஸ்கோர்

    Devil Score

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கோவை.

    இது தான் நம்ம சைக்கோ ரைட்டர் ஊர். அஞ்சு தான் அந்த சைக்கோ ரைட்டர்.

    அஞ்சு வீட்ல இருந்துக் கிளம்பறதுக்கு முன்னாடியே,

    ‘டேய் நான் ரொம்பப் பெரிய ஆள்’ எனும் மாய எண்ணம் அவளுக்கு முன் வீட்டிலிருந்து கிளம்பி அவள் கூடவே வரும்.

    அஞ்சு சிறு வயதில் இருந்தே யாரோடும் சேர்ந்து விளையாட மாட்டாள்.

    என் ரேஞ்ச் என்ன? நான் இவங்க கூட போய் விளையாடறதா? கூடாது.

    தனியாக விளையாடுவாள். பல்லாங்குழியின் இந்தப் பக்கம் புளிய முத்துக்களை வைத்து விளையாடிவிட்டு மறுபக்கம் போய் எதிர்த்து விளையாடுபவரின் ஆட்டத்தையும் தானே விளையாடுவாள்.

    யார் ஜெயித்தாலும் அவள் தானே ஜெயிச்சது. அவளுக்கு அது நிறையப் பிடித்திருந்தது.

    யாராவது அவளிடம் போய் உன் ரோல் மாடல் யார்? என்று கேட்டுவிட்டால் போதும். கேட்டவர்கள் தெறித்து ஓடிவிடுவர்.

    டி. ராஜேந்தர் பரவாயில்லை எனும் கணக்கில் நீண்ட சொற்பொழிவு ஆற்றி நான்தான் மத்தவங்களுக்கு ரோல் மாடல். மத்தவங்க யாரும் என்னோட ரோல் மாடல் இல்லை என்று கதற விடுவாள்.

    அவளுக்கு கொஞ்சம் கதைகள் எழுதத் தெரியும். அவற்றை அவ்வப்போது பதிப்பகம் நடத்துவோரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி வேண்டிக் கேட்டுக் கொள்ள பொண்ணு பாவம். ரொம்ப நாளா கேட்டிட்டிருக்கு என்று ஒரு பதிப்பகத்தின் முதலாளி முதல் முறையாக அவளின் கதையைப் படித்தார். சின்னத்தம்பி படத்தில் இறுதிக் காட்சியில் ஒரு பைத்தியம் ஓடிவரும் எனக்குக் கல்யாணம் என்று. அந்தப் பைத்தியம் பரவாயில்லை எனும் அளவிற்கு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட அவர் வீட்டார் குழம்பிப் போயினர்.

    யாரோ செய்வினை வெச்சிருக்காங்க அவர்கள் செய்வினை வைத்தவர்களை தேட அஞ்சு யாருக்கும் தெரியாமல் தான் படிக்கக் கொடுத்த கதையை ரகசியமாய் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

    எப்படியாவது என் எழுத்துத் திறமையை காட்டி ஆகவேண்டும். உலகை உய்விக்க வந்தது என் எழுத்துக்கள் மட்டுமே.

    அஞ்சுவின் தேடல் தொடர்ந்தது.

    இதற்கிடையில் கல்லூரியில் அஞ்சுவால் எவரோடும் ஒட்ட இயலவில்லை.

    ஏண்டி இப்படி இருக்க? எல்லார்கிட்டயும் சகஜமா பழக வேண்டியது தானே?

    வகுப்புத்தோழி ஒருத்தி கேட்டதற்கு,

    நான் பழகற அளவுக்கு எவளுக்கும் இங்க ஒழுக்கம் இல்லை

    ஏன்? கலை இருக்காளே

    அவளா? அவ டேட்டிங் போறவ?

    அவ போனா போயிட்டு போறா உன்னையா கூப்பிடறா?

    "எனக்குத் தோழியா இருக்கிறவ ஊர் சுத்தக் கூடாது டேட்டிங் போக கூடாது லவ் பண்ணக் கூடாது பசங்க கூட ஃபிரண்ட்ஷிப் வெச்சிக்கக்கூடாது.

    அப்புறம்?"

    கண்கள் மூடி யோசித்த அஞ்சு கண்களைத் திறந்து பார்க்கும்போது அந்த வகுப்புத் தோழி தூரமாய் போய் கொண்டிருந்தாள். கத்தி சொன்னாள்.

    நல்ல வேளை நான் உன்னோட ஃப்ரண்ட் இல்ல.

    இடியட்ஸ் ஒரே ஒரு இன்டலிஜென்ட் அஞ்சு

    Enjoying the preview?
    Page 1 of 1