Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirindri Uyireduppen
Uyirindri Uyireduppen
Uyirindri Uyireduppen
Ebook53 pages33 minutes

Uyirindri Uyireduppen

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தங்கையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முயன்ற அண்ணனும் கொல்லப்பட, கொன்றவர்கள் என்னவாகின்றனர்?

விஷாலின் அதிரடியில் வாசிப்போமா... 'உயிரின்றி உயிரெடுப்பேன்'?

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580145507385
Uyirindri Uyireduppen

Read more from Gavudham Karunanidhi

Related to Uyirindri Uyireduppen

Related ebooks

Related categories

Reviews for Uyirindri Uyireduppen

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirindri Uyireduppen - Gavudham Karunanidhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிரின்றி உயிரெடுப்பேன்

    Uyirindri Uyireduppen

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    மாலைப் பொழுது

    ஜீப் சின்னமனூரை நெருங்கியிருந்தது. வசந்த் கேட்டான்.

    இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மேகமலை போறதுக்கு?

    முப்பது கிலோமீட்டர் மலை ரோடு. அப்புறம் இருபது கிலோமீட்டர் காட்டு வழில போகணும்.

    ஜோசப் ஜீப்பை ஓட்டியபடியே பதில் சொன்னான்.

    பின்னால் அமர்ந்திருந்த பாலாவும் சரணும் ஆளுக்கொரு பீர் பாட்டிலைக் கையில் வைத்திருந்தனர்.

    இப்பயே பொழுது போயிடுச்சு சரண் சொல்ல

    இருட்டறதுக்குள்ள ரிசார்ட்டுக்குப் போயிடணும்

    பாலா கவலையானான்.

    அவர்கள் நான்கு பேரும் மதுரையில் ஒன்றாக ட்ராவல்ஸ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்குச் சொந்தமாக பனிரெண்டு பேருந்துகள் மட்டும் மதுரையிலிருந்த பல நகரங்களுக்கு தினமும் போய் வருகின்றன.

    ஜீப் மலைப் பாதையில் ஏற ஜோசப் கவனமானான். போகப்போக சாலை குறுக வேகத்தைக் குறைத்தான். மலைப் பாதையில் பயணித்த ஜீப் காட்டில் நுழைவதற்கு முன் அந்த செக் போஸ்ட் இருந்தது.

    ஜீப்பை நிறுத்திய ஜோசப் இறங்கினான்.

    நான்கு பேரின் பெயர் விவரங்களை அங்கிருந்த ரெஜிஸ்டரில் எழுதினான். வனக்காவலர்கள் அவர்களின் முகங்களைப் பார்த்தனர். அனுமதித்தனர். ஜீப் மீண்டும் கிளம்பியது. காட்டு வழியில் போக அனைவர் மனதிலும் ஓர் எச்சரிக்கை உணர்வு. சூழ்ந்திருந்த இருட்டு வேறு பயமுறுத்தியது.

    ஜோசப் இது வேற லெவல் இதை நாம எதிர்பார்க்கவே இல்லை வசந்த் சொல்ல ஜோசப் பயந்தான்.

    சும்மா இருப்பா நானே பயத்துலதான் இருக்கேன்.

    ஜீப் முகப்பு வெளிச்சத்தில் பறவைகள் இங்கும் அங்கும் பறந்தன…

    ஜோசப் மிக மெதுவாக ஜீப்பை ஓட்டினான். ஓரிடத்தில் சிங்க வால் குரங்கு ஒன்று பாறைமீது நின்றிருந்ததைப் பார்த்தனர்.

    காட்டு வழிப்பாதை முடிந்து மேக மலையை அடையும்போதுதான் ஜோசப்பிற்கு உயிர் வந்தது.

    புன்னகைத்தான்.

    ஹில் கார்டன் ரிசார்ட்ஸ்.

    ஜீப்பை பார்க்

    Enjoying the preview?
    Page 1 of 1