Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Love You Pei
Love You Pei
Love You Pei
Ebook74 pages24 minutes

Love You Pei

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் ஹாரர் காமெடி.

பேய் என்று தெரியாமல் காதலித்துவிடும் நாயகன் படும் பாடுகளே லவ் யூ பேய் .

வெறும் காமெடி மட்டும் இல்லாமல் பேய் எப்படி இறந்தது? விபத்தா ? கொலையா? கொலை என்றால் யார் கொலையாளி? என்ற சஸ்பென்ஸ் பகுதியும் படிப்பவரை பரபரப்பாக்கும் விதத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹாரர் காமெடி உங்களை மனம் விட்டு சிரித்து மகிழவைக்கும் என்பது உறுதி. படித்து மகிழுங்கள் .

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580145507445
Love You Pei

Read more from Gavudham Karunanidhi

Related to Love You Pei

Related ebooks

Related categories

Reviews for Love You Pei

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Love You Pei - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    லவ் யூ பேய்

    Love You Pei

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    பெங்களூர்.

    மாரத்தஹள்ளியில் இருந்து ஒயிட் ஃபீல்ட் செல்லும் சாலையிலிருந்து இரண்டு நிறுத்தங்கள் தள்ளி இடதுபுறம் திரும்பினால் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் வரும். அங்கிருந்து நான்காவது ப்ளாக்கில் தான் மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் தத்தம் கிளைகளை வைத்திருக்கின்றன.

    சில நிறுவனங்கள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து இயங்குவதால் இரவுப்பொழுது கூட சில நேரங்களில் பகலாகத்தான் .

    கணேஷ் செக்யூரிட்டியாக இணைந்து இன்று இரண்டாவது நாள்.

    இன்று அவனுக்கு இரவுப்பணி..

    கணேஷ் மணி பார்த்தான்.

    பதினொன்றைத் தாண்டியிருக்க கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று எண்ணியவன் இருக்கையிலிருந்து எழுந்தான். தன் யூனிபார்மை சரிசெய்துகொண்டு நடக்க ஆரம்பித்தான்.

    சில நிறுவனங்கள் பூட்டியிருந்தன. சில திறந்திருந்தன.

    அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான்.

    கொஞ்ச தூரம் நடந்திருப்பான்.

    எதிரில் ஏதோ நிழலாடியது போல் தெரிய உன்னிப்பாய் பார்த்தான். ஏதோ ஒரு பெண் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

    யாரிவள்? இந்நேரம் இங்கே என்ன செய்கிறாள்?

    தனக்குள் யோசித்த கணேஷ் அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் பார்க்க அவள் அருகில் வர வரத் தெரிந்தது. அவள் அணிந்திருந்த சுடிதார் முழுவதும் ரத்தக்கறை இருந்தது.

    கணேஷ் பதட்டமானான். அவள் முகத்தை பார்க்க கூந்தலை விரித்துப் போட்டிருந்தாள். உதட்டில் சிரிப்பு உறைந்திருக்க ஒரு துளி ரத்தமும் ஒட்டிக்கொண்டிருந்தது.

    கணேஷுக்குப் புரிந்தது.

    ஐயோ இது வேற ஏதோ

    அவளை பயமாய் பார்த்தான்.

    அவன் பயப்படுவதைப் பார்த்தவள் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். அவள் சிரிப்பதையே பார்த்துக்கொண்டு நின்றவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல் அதே இடத்தில் நின்றான்.

    சட்டென்று சிரிப்பதை நிறுத்தியவள் அவனை நோக்கித் தன் இரு கைகளை நீட்டினாள்.

    வா

    கணேஷிற்குத் தண்டுவடம் உறைந்தது.

    தலைகால் புரியாமல் ஓட ஆரம்பித்தான்.

    பின்னால் அது துரத்த ஆரம்பித்தது.

    அய்யோ யாராவது காப்பாத்துங்க

    கத்தியபடியே ஓடியவன் திறந்திருந்த ஒரு கம்பெனிக்குள் நுழைந்தான்.

    மயக்கம் போட்டு விழுந்தான்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த கணேஷ் எல்லோரையும் மலங்க மலங்கப் பார்த்தான்.

    நான் எங்க இருக்கேன்?

    பாதுகாப்பான இடத்திலதான் இருக்கீங்க வீட்ல இல்ல. பயப்படாதீங்க.

    தேங்க்ஸ் கடவுளுக்கு நன்றி சொன்னவன் தான் நிறுவனத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டான்.

    தன்னை துரத்தி வந்தவள் நினைவு வர உள்ளே நடுங்கியது.

    அப்போது கூட்டத்தின் நடுவில் நின்றபடி அவளும் பார்த்துக் கொண்டிருந்ததை கணேஷ் பார்த்துவிட்டான்.

    அவ.. அவதான் என்னத் தொரத்தினது

    கணேஷ் உரக்கக்கத்தியபடி

    Enjoying the preview?
    Page 1 of 1