Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kanmanikku
En Kanmanikku
En Kanmanikku
Ebook54 pages18 minutes

En Kanmanikku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராகவ் ஸ்வேதா இருவரும் காதலர்கள். ஒரு நாள் கொடைக்கானலுக்குச் செல்லும்பொழுது யானை தாக்க ஸ்வேதா நடக்கமுடியாமல் கிடக்கிறாள். அப்போது அங்கு வந்த கார் ஒன்று இருவருக்கும் லிஃப்ட் கொடுக்கிறது. அந்தக் காரில் இருந்தவன் ராகவைக் கொலை செய்ய முயல்கிறான். யார் அவன்?ஏன்? ராகவ் யார்?

ஆரம்பம் முதல் இறுதிவரை ஜெட் வேகத்தில் பறக்கும் கதையின் இறுதியிலும் ஒரு ட்விஸ்ட் என் கண்மணியின் சிறப்பு

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145507209
En Kanmanikku

Read more from Gavudham Karunanidhi

Related to En Kanmanikku

Related ebooks

Reviews for En Kanmanikku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kanmanikku - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    என் கண்மணிக்கு

    En Kanmanikku

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    கொடைக்கானல்,

    மாலை வேளை. குளிர் நரம்புகளைக் ஊடுருவத் தொடங்கியிருந்தது.

    ஸ்வேதா ஜெர்கின் அணிந்துகொண்டு ராகவை முறைத்தாள்.

    அவள் முறைப்பைக் கண்டு கொள்ளாத ராகவ் அவளைக் காதலுடன் பார்த்து புன்னகைத்தான்.

    ராகவ் ஸ்வேதா அழைக்க,

    ம் என்றான்.

    எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு அறிவே கிடையாதா?

    இல்லை என்பதாகத் தலையாட்டினான்.

    இனிமே என்னை எங்காவது கூப்பிட்டுப் பாரு அப்பத் தெரியும் ஸ்வேதா சொல்ல மீண்டும் புன்னகைத்தான்.

    போலாம் ஏறு பைக்கில் அமர்ந்தான்.

    ஸ்வேதா ஏறி அமர்ந்தாள்.

    பைக் கிளம்பியது.

    ராகவ் ஸ்வேதா இருவரும் காதலர்கள். திண்டுக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கின்றனர். விடுதியில் தங்கிப் படிப்பதால் வார விடுமுறை நாட்களில் ராகவ் ஸ்வேதாவை அடம் பிடித்து எங்காவது கொண்டு போவதும் ஸ்வேதா ‘இனிமே கூப்பிட்டா அவ்வளவு தான்’ என்று திட்டிக்கொண்டே கூடச் செல்வதும் தொடர்கதையானது.

    சில முறை ராகவ் வர இயலாது போன தருணங்களில் ஸ்வேதா ‘இந்த இம்சை எங்கே போனான். காணோம்.’

    என்று தவித்திருந்த தருணங்களும் கடந்து போனது.

    ராகவ் பைக்கை சீரான வேகத்தில் ஓட்டினான். எதிர்க்காற்று குளிராய் முகத்தில் மோத ஜெர்கின் அணிந்திருந்தும் ஸ்வேதா நடுங்கினாள்.

    என்னை வேணும்னா கட்டிப் பிடிச்சுக்கோ நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்.

    ராகவ் குறும்பாகச் சொல்ல,

    ரோட்டப் பார்த்து ஓட்டு. ஏற்கனவே பனியில் ஒண்ணும் தெரிய மாட்டேங்குது.

    ஸ்வேதா புன்னகைத்தபடி பதில் சொன்னாள்.

    ராகவ் மத்தியானமே கிளம்பி இருக்கலாம் உன் பேச்சைக் கேட்டு இவ்வளோ நேரம் லேட் பண்ணது தப்பாப்போச்சு.

    எதுக்கு பேபி பயப்படற? நான்தான் இருக்கேனே?

    ஹாஸ்டல் ரூல்ஸ் உனக்குத் தெரியும்தானே?

    ம்

    "போன வாரமே அந்த பிசாசு என்னை எக்கச்சக்கமா திட்டுச்சு. திரும்ப லேட்டா வந்தா

    Enjoying the preview?
    Page 1 of 1