Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முள் இல்லாத கடிகாரம்
முள் இல்லாத கடிகாரம்
முள் இல்லாத கடிகாரம்
Ebook87 pages27 minutes

முள் இல்லாத கடிகாரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மில் வாசலில் கட்சிக் கொடிகள் ஏராளமாய் நடப்பட்டிருக்க - காக்கி யூனிபார்ம்களோடு மில் தொழிலாளர்கள் கும்பல் போட்டிருந்தார்கள். அனைவரின் முகங்களிலும் சிவப்பான கோபம்.
 கும்பலுக்கு மத்தியில் நின்றிருந்த யூனியன் லீடர் ராமபத்ரன் ஆவேசமான குரலில் பேசிக்கொண்டிருந்தான். 'ரீலிங் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் மல்லிகா என்ற பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலி இருந்ததாகவும், அந்த நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மில்லுக்குப் பின்புறமாய் இருக்கும் கிணற்றில் அவள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் மில் நிர்வாகமும் அரசு ஆஸ்பத்திரி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் கூறுகிறது.' ஆனால் நாம் இதை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால் மல்லிகாவோடு பணிபுரியும் மற்ற பெண் தொழிலாளிகள் "மல்லிகா என்றைக்குமே வயிற்றுவலி என்று சொன்னதேயில்லை. அவள் செத்துப் போவதற்கு முதல் தினம் வரை ஆரோக்கியமாகவே இருந்தாள் என்றும், அதுவுமில்லாமல் சந்தோஷமாகவே இருந்தாள் என்றும் கூறுகிறார்கள். சம்பவங்கள் யாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் நடந்துள்ளன. மல்லிகாவின் மரணத்தில் நாம் சந்தேகப்படுகிறோம். சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டியது மில் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும்...''
 படபடவென்று கைதட்டல் எழுந்தது.
 "நீதி கிடைக்கும் வரை..." ஒருவன் கத்தவும் மற்ற எல்லோரும்
 "போராடுவோம்" என்றார்கள்.
 "மில் நிர்வாகமே! மல்லிகாவின் மரணத்தை மூடி மறைக்காதே..."
 கோப முகங்களோட கும்பல் கோஷித்தது

பீங்க்க்... பீங்க்..."
 கார் ஹார்ன் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் திரும்பினார்கள்.
 "முதலாளியோட காரு..."
 "உள்ளாற விடாதீங்கய்யா... அப்படி நிப்பாட்டுங்க...''
 "இன்னிக்கு அவர் பதில் சொல்லிட்டுத் தான் உள்ளாற போகணும்..."
 ஆளுக்கு ஆள் கத்திக் கொண்டு - குபீரென்று காரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
 யூனியன் லீடர் ராமபத்ரன் எல்லோரையும் விலக்கிக் கொண்டு காரின் கதவருகே வந்தான்.
 கார் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த 'முதலாளி' என்றழைக்கப்பட்ட அந்த இளைஞன் கதிர்க்கு முப்பது வயது இருக்கலாம். கொஞ்சம் ஒடிசலான தேகம். நீள்வட்ட முகம். உன்னுடைய முகத்துக்கு தாடி இருந்தால் அழகாக இருக்கும் என்று யாரோ தப்பாய் சொல்லிவிட அதையே பிடிவாதமாய் நினைத்துக் கொண்டு - தாடியைப் பயிர் செய்து ஒழுங்காய் ட்ரிம் பண்ணியிருந்தான். கண்களில் மோனாலிசா கூலிங்க்ளாஸ் தேன் நிறத்தில் தொற்றியிருந்தது.
 "என்ன ராமபத்ரன்... எதுக்காக கும்பல் போட்டிருக்கீங்க...?" காரினின்றும் இறங்காமல் மெல்லிய குரலில் கேட்டான் கதிர்.
 "யோவ்... காரைவிட்டு மொதல்ல இறங்கய்யா. உன்னோட முதலாளித்தனத்தையெல்லாம் மில்லுக்குள்ளாற வெச்சுக்க. நியாயம் கேட்க ஆசைப் பட்டியானா காரை விட்டு கீழே இறங்கு..." யூனியன் லீடர் ராமபத்ரன் தன் முழுக்கை சர்ட்டைச் சுருட்டி விட்டுக் கொண்டே சொன்னான்.
 கதிர் ஒரு புன்னகையோடு காரைவிட்டு இறங்கினான்.
 "ஓ.கே... இறங்கிட்டேன்... என்ன விஷயம் சொல்லுங்க...''
 "ரீலிங் டிபார்ட்மெண்ட் மல்லிகா செத்துப்போன விவகாரத்துல எங்களுக்கு நியாயம் வேணும்..." ராமபத்ரன் குரலை உயர்த்திச் சொன்னான்கதிர் தன் பிடரி கிராப்பைக் கோதிக் கொண்டே சொன்னான். "அதுதான் முடிஞ்சு போன விவகாரமாச்சே... ப்யூர்லி சூசைட் கேஸ்...''
 "அப்படீன்னு நீங்க சொல்றீங்க... ஆனா அதை நாங்க நம்பத் தயாரில்லை... மல்லிகாவோட சாவுக்கு பின்னாடி என்னமோ இருக்கு..."
 "அதான் ஒண்ணுமில்லைன்னு போலீசும் - பி.எம். ரிபோர்ட்டும் துல்லியமா சொல்லிடுச்சே... அப்புறமும் அதை ஏன் கிளறுறீங்க...?"
 "எதையுமே கிளறினாத்தான் உண்மை வரும்..."
 "ராமபத்ரன்! என்னோட கொஞ்சம் உள்ளே வாங்க... உட்கார்ந்து பேசுவோம்... இப்படி மில் வாசல்ல நின்று ஆளுக்கு ஆள் பேசிட்டிருந்தா ஒரு பிரயோசனமும் இல்லே..."
 "ராமபத்ரண்ணே! நீங்க போயிட்டு வாங்க... அவர் என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்..."
 "தொழிலாளர் ஒற்றுமை..."
 "ஓங்குக...''
 "அண்ணன் ராமபத்ரன்..."
 "வாழ்க..."
 கதிர் காருக்குள் ஏறி மில்லுக்குப் போக ராமபத்ரன் செக்யூரிட்டி கேட் வழியாக உள்ளே போனான். தொழிலாளர்கள் வெளியே இன்னமும் கோஷித்துக் கொண்டிருந்தார்கள்.
 ராமபத்ரனை அழைத்துக் கொண்டு தன்னுடைய ப்ரத்யேக ஏ.ஸி. ரூமுக்குள் நுழைந்தான் கதிர். கையில் இருந்த ஃபைலை மேஜையின் மேல் வீசிவிட்டு உட்கார்ந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223995838
முள் இல்லாத கடிகாரம்

Read more from Rajeshkumar

Related to முள் இல்லாத கடிகாரம்

Related ebooks

Related categories

Reviews for முள் இல்லாத கடிகாரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முள் இல்லாத கடிகாரம் - Rajeshkumar

    1

    லெட்ஜரில் கையெழுத்திட்டு அவர்கள் கொடுத்த ஐம்பத்தொரு ரூபாய் எழுபது பைசாவை வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான் சரவண கணேஷ்.

    "ரொம்ப நன்றி ஸார்... நான் ஜெயிலுக்கு வர்றது இதுதான் கடைசி தடவை... இனிமே வரமாட்டேன்...’’

    போன தடவையும் அப்படித்தான் சொல்லிட்டுப்போனே...? சொல்லிவிட்டு ஜெயில் வார்டன் ருத்ரமூர்த்தி தன் வெற்றிலைக் கறை படிந்த பல்வரிசையைக் காட்டி பக பக வென்று சிரித்தார். தொப்பியைக் கழற்றி மரமண்டையைக் கீறிக் கொண்டார்.

    எஸ் ஸார்... நான் இப்ப சொல்றது சத்தியமான வாக்கியம். வந்து ஆறு மாதத்துல என்னோட மனசு ரொம்பவும் மாறிடுச்சு. அதுக்குக் காரணம்... என்று சொல்ல ஆரம்பித்தான். மேற்கொண்டு பேசவிடாமல் வார்டனின் மேஜையிலிருந்த இண்டர்காம் ‘சர் சர்’ என்று வறட்டு கத்து கத்தியது.

    இண்டர்காமின் ரிஸீவரை எடுத்தார் ருத்ரமூர்த்தி. மறுமுனையில் ஜெயில் சூப்பரின்டென்டெண்ட் ஆரோக்கியராஜ் தன் முரட்டுக் குரலில் கரகரத்தார்.

    மிஸ்டர் ருத்ரமூர்த்தி...

    எஸ் ஸார்...

    சரவணகணேஷ் விடுதலையாகிப் போயிட்டானா?

    இன்னும் போகலை ஸார். லெட்ஜரிலே கையெழுத்து வாங்கிட்டு இப்பத்தான் பணம் கொடுத்தேன். என் முன்னாடி தான் நின்னுட்டிருக்கான்... என்ன ஸார்... என்ன விஷயம்...?

    ஒண்ணுமில்லை மிஸ்டர் ருத்ரமூர்த்தி. அவனைக் கொஞ்சம் கிளியரா வார்ன் பண்ணி வெளியே அனுப்பணும்... போறதுக்கு முன்னாடி அவனை நான் பார்க்கணும்... என்னோட குவார்ட்டர்ஸுக்கு அவனை அனுப்பி வையுங்க...

    இதோ இப்பவே அனுப்பறேன் ஸார்...

    ரிஸீவரைக் கீழே வைத்த ருத்ரமூர்த்தி நகம் கடித்துக் கொண்டு நின்றிருந்த சரவணகணேஷை ஏறிட்டார்.

    சரவணகணேஷ்! உன்னை சூப்பரின்டென்டண்ட் கூப்பிடறார். குவார்ட்டர்ஸுல இருக்கார். போய் பார்த்துட்டு வந்துரு...

    சரி ஸார்

    சரவணகணேஷ் தலையாட்டிக் கொண்டே திரும்பி நடந்தான்.

    வெகு தொலைவில்...

    அந்த காம்ப்பெளண்டையொட்டின மாதிரி, வெள்ளை வெளேரென்று குவார்ட்டர்ஸ் தெரிய அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்த சரவணகணேஷுக்கு இருபத்தாறு வயது. மாநிறத்தில் ஆறடி உயரத்தில் தீர்க்கமாய் வளர்ந்திருந்தான். அம்மா, அப்பா இல்லாத அவனுக்கு சொந்த ஊர் சேலத்துக்குப் பக்கத்திலிருந்த ஜலகண்டபுரம். உறவாய் இருந்த ஒரே அண்ணனும் கல்யாணமானதும் பணத்தை வெட்டிக் கொண்டு பம்பாய் பக்கம் மனைவியோட போய்விட, பி.யூ.ஸி. வரை படித்த சரவணகணேஷ் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு பசித்தீயை அணைப்பதற்காக ஜக்கையாவின் திருட்டுக் கும்பலில் உறுப்பினனாகி சட்டம் தப்பு என்று சொன்ன எல்லாக் காரியங்களையும் (கொலை, கற்பழிப்பு தவிர) செய்து அவ்வப்போது போலீஸில் மாட்டி ஜட்ஜ் வாசித்த மூன்று மாதங்களையும், ஆறு மாதங்களையும் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிறைய தடவை கழித்தான். எத்தனையாவது தடவையாக சிறைக்கு வருகிறான் என்பதை அவனிடம் கேட்க வேண்டும்.

    சரவணகணேஷ் சூரியன் பிறந்து கொண்டிருந்த அந்தக்காலை வேளையில் சிறைத்திடலைச் சுற்றிக் கொண்டு மெதுவாய் நடை போட்டான். இந்த ஆறு மாதகாலம் பழகிய சககைதிகள் கழிப்பறைகளின் வாசல்களிலும் நீர்த்தொட்டியின் அருகிலும் நின்றபடி அவனைப் பார்த்து கையசைத்தனர். நெருங்கிப் பழகின சகா ஒருத்தன் சத்தம் போட்டான்.

    ஏம்பா...! ஜெயிலை விட்டுப் போக இன்னமும் மனசு வரலையா? இங்கியே வந்துகிட்டிருக்கே?

    அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்ட சரவணகணேஷ் நடக்க, பல்லை விளக்கிக் கொண்டிருந்த இன்னொருத்தன் சொன்னான்.

    அவரு ஜெயில் சூப்ரெண்ட் அய்யாவையும் அவரோட மக ரோஸ்லீனாவையும் பார்க்கப் போறாரு டோய்...

    இந்த ஆறு மாசமாய் அவர் வீட்ல வேலை பார்த்த விசுவாசம். அதான் சரவணகணேஷ் சொல்லிக்கப் போறான் போலிருக்கு! டேய்... கொமாரசாமி, அந்த செங்கல்லை எடுத்து என்னோட நடு முதுகைத் தேய்ச்சு விடேண்டா...

    குளித்துக் கொண்டிருந்த இன்னொருத்தன் கத்தினான்.

    சரவணகணேஷ் எல்லோரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வேலியைச் சுற்றிக்கொண்டு ஜெயில் சூப்பிரண்டெண்டண்ட் ஆரோக்கியராஜ் குவார்ட்டர்ஸைத் தொட்டான்.

    குட்டையான காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.

    ஆரோக்கியராஜ் மடக்கு நாற்காலியில் சாய்ந்திருந்தார். ஐம்பது வயதை அடுத்த மாசம் தொடப்போகும் ஆரோக்கியராஜுக்கு நல்ல வளமான ஆகிருதி, சொந்த ஊர் கோட்டயம். தன்னுடைய மனைவி இறந்த

    Enjoying the preview?
    Page 1 of 1