Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Illai Idaivelai
Ini Illai Idaivelai
Ini Illai Idaivelai
Ebook198 pages1 hour

Ini Illai Idaivelai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

'காதல் செய்வீர் உலகத்தீரே! என்றார் பாரதி. அது மட்டுமல்ல காதலினால் சாகாமல் இருத்தல் கூடும். கவலைபோம், அதனால் மரணம் பொய்யாம்.' என்று காதலின் புகழ் பாடியுள்ளார்.

நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரின் காதல் கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது. அந்தக் கவிதை இதோ:

காதல்
அவன்!
அன்பே,
அன்பழகனைப்போல்
என்னிடம்
அடுக்கு மாடியில்லை;
ஆனால்
அன்பிருக்கிறது.
கதிரேசனைப்போல்
என்னிடம்
காசு இல்லை;
ஆனால்
காதலிருக்கிறது.
தமிழரசனைப்போல்
என்னிடம்
தங்கம் இல்லை;
ஆனால்...
தங்கமனமிருக்கிறது.
சொல் உயிரே,
உனக்காக நான்
எதையும் செய்வேன்.
என்ன செய்ய?
அவள்
நல்லது காதலா,
ஒன்று செய், போதும்
நீ குறிப்பிட்ட
மூவரில்
யாரையாவது
எனக்கு
அறிமுகப்படுத்தேன்.

இது நடைமுறைக் காதல் இந்தக் காதலை தொட்டால் தொடரும் நாவலில் பார்த்தோம்.

இந்த நாவலில் திலகா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு காதல் தியாகம் செய்கிறாள். அதன் விளைவு என்ன? இந்த நாவலைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்களே.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100905590
Ini Illai Idaivelai

Read more from Pattukottai Prabakar

Related to Ini Illai Idaivelai

Related ebooks

Reviews for Ini Illai Idaivelai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Illai Idaivelai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இனி இல்லை இடைவேளை

    Ini Illai Idaivelai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    காதல் பலவிதம்

    'காதல் செய்வீர் உலகத்தீரே! என்றார் பாரதி. அது மட்டுமல்ல காதலினால் சாகாமல் இருத்தல் கூடும். கவலைபோம், அதனால் மரணம் பொய்யாம்.' என்று காதலின் புகழ் பாடியுள்ளார்.

    நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரின் காதல் கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது. அந்தக் கவிதை இதோ:

    காதல்

    அவன்!

    அன்பே,

    அன்பழகனைப்போல்

    என்னிடம்

    அடுக்கு மாடியில்லை;

    ஆனால்

    அன்பிருக்கிறது.

    கதிரேசனைப்போல்

    என்னிடம்

    காசு இல்லை;

    ஆனால்

    காதலிருக்கிறது.

    தமிழரசனைப்போல்

    என்னிடம்

    தங்கம் இல்லை;

    ஆனால்...

    தங்கமனமிருக்கிறது.

    சொல் உயிரே,

    உனக்காக நான்

    எதையும் செய்வேன்.

    என்ன செய்ய?

    அவள்

    நல்லது காதலா,

    ஒன்று செய், போதும்

    நீ குறிப்பிட்ட

    மூவரின்

    யாரையாவது

    எனக்கு

    அறிமுகப்படுத்தேன்.

    இது நடைமுறைக் காதல் இந்தக் காதலை தொட்டால் தொடரும் நாவலில் பார்த்தோம்.

    இந்த நாவலில் திலகா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு காதல் தியாகம் செய்கிறாள்.

    அதன் விளைவு என்ன? இந்த நாவலைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்களே.

    உங்கள்

    புத்தகப்பித்தன்.

    *****

    1

    வானம் கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தது. மேகங்கள் ஒருங்கிணைந்து சப்போர்ட்டாய் நின்றன. இதோ வர இருந்தது முதல் துளி.

    பிளாட்பார வியாபாரிகள் பொருள்களை பாலிதீன் ஷீட் விரித்து, ஒளித்து வைக்க ஆரம்பித்தார்கள். கடைக்காரர்கள் வாசலில் வைத்த பொருள்களை உள்ளே தூக்கி வைத்தார்கள். மழைக்கு முன் சென்றுவிடத் தீர்மானித்து மக்கள் வேகமாக நடந்தார்கள். வேகமாக ஸ்கூட்டர் ஓட்டினார்கள். வீடுகளில் சாரல் அடிக்கும் ஜன்னல்களைச் சாத்தினார்கள். மொட்டை மாடித் துணிகள் அவசரமாக உருவப்பட்டன. திடீர் இருட்டை எதிர்த்து மாலை நாலரைக்கே, ஓய்வில் இருந்த மின்சாரம் வேலைக்கு அழைக்கப்பட்டது.

    சென்னை முழுக்க மழையை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்க...

    அவன் அவசரமே இல்லாமல் நடந்தான்.

    முரடான பாண்ட்டின் கீழ் முனைகள் மடித்து விடப்பட்டிருந்தன. லூசான சட்டையை சீராக இன் செய்யவில்லை. இடுப்பில் பெல்ட் இல்லை. தோளில் ஒரு ஜோல்னாப் பை நடைக்குத் தகுந்தபடி அசைந்தது கேட்டால் அதற்குள்ளிருந்து எடுத்து கவிதை தருவான் போலிருந்தது. முகத்தை முதுமையாக்கிக் காட்டும் ஷெல் பிரேமில் கண்ணாடி அணிந்திருந்தான். சில மாதங்களாக பிளேடோடு ஏதோ தகராறு என்பது தெரிந்தது. போன வாரத்துக்கப்புறம் தலை சீவினதாய்த் தெரியவில்லை. மொத்தத்தில் தன் காதலியின் கல்யாணத்திற்குச் சென்று திரும்புபவன் போல இருந்தான்.

    ஒழுங்காக பிளாட்பாரத்திலேயே நடந்தான். கவனமின்றி சாணியை மிதித்து விட்டு பிளாட்பாரத்தின் ஓரக் கூர்மையில் செருப்பைத் தேய்த்து விட்டு, சற்றுத் தள்ளி இருந்த குழாய் பார்த்து நெருங்கிச் சென்று, காலைத் தூக்கி வைத்து, பைப்பை உயர்த்த... சிறைப்படுத்தப் பட்டிருந்த காற்று சீறிக் கொண்டு வெளியேறியது.

    தன் நடையைத் தொடர்ந்தான்.

    பெட்டிக் கடையைப் பார்த்ததும் அணுகினான் சரியான சில்லறை எடுத்து முறுக்கு பாட்டிலின் மூடி மீது வைத்து, சிஸர்ஸ் ஒண்ணு என்றான். தீப்பெட்டி வாங்கிக் கொளுத்திக் கொண்டு சரம் சரமாய்த் தொங்கின புத்தகங்களைப் பார்த்தான். ஒரு புத்தகத்தின் முதல் பக்கம் பார்க்க விரும்பித் தொட்டபோது, சைடில் குத்தியிருந்த பின் தடுத்தது.

    விட்டு, விட்டுப் புறப்பட்டான். சிகரெட் சுமந்த கையின் அத்தனை விரல்களையும் மடக்கிக் கொண்டு, சங்கு ஊதுபவன் போல சிகரெட்டை நேரடியாக உதட்டில் படவிடாமல் புகையை மட்டும் இழுத்தான்.

    சுற்றுலா கண்காட்சி-சீரியல் பல்புகளில் அலங்காரம் செய்து கொண்டு, ஸ்பீக்கர்களில் விளம்பரம் கமறிக் கொண்டிருந்தது. ஏராள கார்கள் மௌனமாய், விசுவாசமாய் காத்திருந்தன.

    டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நடந்தான். மழை எதிர்பார்ப்பு காரணமாக உள்ளே செல்லும் கூட்டத்தைவிட, வெளியே வரும் கூட்டம் அதிகம் இருந்தது

    ஜெயண்ட் சைஸ் அப்பளம், ஐஸ்கிரீம், பஞ்சு மிட்டாய் மிளகாய் பஜ்ஜி, பாப்கார்ன் என்று சகலரும் அழைக்க... காதில் வாங்காமல் நடந்தான். ஆயிரம் வாட்ஸ் வெளிச்சங்களில் ஐம்பது பைசா பொருள்கள் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்க...

    தமிழ்நாடு அரசு தனது அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும் பிரம்மாண்டமான வடிவமைப்போடு அரங்கங்கள் நிர்மாணித்திருக்க... இவன் அறிவியல் துறை மட்டும் உள்ளே சென்று நிதானமாகப் பார்த்தான். எலும்புக் கூடு ஹலோ சொன்னது. தொடர்பே இல்லாத குழாயில் இருந்து நிற்காமல் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. ஒரு சின்ன சைஸ் கம்ப்யூட்டர், ஏற்காடு எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு, மயிலாப்பூருக்கு கடைசி பஸ் எப்போது, சென்னையில் எத்தனை ஹோட்டல்கள் உள்ளன, வுட்லண்ட்சில் கட்லெட் என்ன விலை என்று டூரிஸ்ட் சம்பந்தப்பட்ட எந்த கேள்வி கேட்டாலும் பதில் பட்பட் படபட என்று அடித்துத் துப்பிக் கொண்டிருந்தது.

    அதை இயக்குபவனிடம் தன் முறை வந்த போது

    சென்னையில் இதே போல எத்தனை கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன? என்று கேட்டான் இவன்.

    அந்தக் கேள்வியை அவன் அப்படியே டைப் செய்து, ஃபீட் செய்ய...

    ஸம் அதர் கொஸ்சின் ப்ளீஸ் என்று பதில் வந்தது.

    இவன் வெளியே வந்தான். மணம் கமழும் காபிக்கு எதை வாங்க வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டுக்கு எதை உபயோகிக்க வேண்டும். துணிகளில் அழுக்கை விரட்ட என்ன சோப் தேய்க்க வேண்டும், அரசியல் பற்றிய சூடான செய்திகளுக்கு எந்த பத்திரிகை வாங்க வேண்டும் என்று ஸ்பீக்கர் டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தது.

    திறந்தவெளி அரங்கத்தில் என்ன! என் மகள் தேன் மொழி எனக்கு துரோகம் செய்யப் பார்க்கிறாளா? என்று வழக்கில் இல்லாத தமிழில் பத்தே பேருக்காக நாடகம் நடந்து கொண்டிருக்க...

    கண்காட்சியை விட்டு வெளியேறினான். நேரம் பார்த்துக் கொண்டான். எதிர் திசையில் இருந்த பஸ் ஸ்டாப் வந்து நின்று கொண்டான்.

    புரசைவாக்கம் டேங்க் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான். மூக்கில் மழையின் முதல் துளி உணர்ந்தான். கால்களில் விரைவு கூட்டினான்.

    மில்லர்ஸ் ரோட்டில் திரும்பி, சட்டக் கல்லூரி விடுதி தாண்டி நடந்தான். நடந்து நடந்து அந்த குறுக்குச் சந்தில் திரும்பினான். சின்ன வீடுகளும், பெரிய கட்டிடங்களும் கதம்பமாய் மாறி மாறி வந்தன.

    ஒரு மாவு மில் ஏக சத்தத்தில் இயங்கிக் கொண்டிருக்க... நாலு கட்டிடம் தள்ளி இருந்தது லெனின் வாடகை மிதி வண்டி நிலையம். மூன்று வண்டிகள் நின்றிருந்தன. அவற்றின் பின்சக்கர மட்கார்ட்டில், பிலாப்புக்கு மேல் லெனின் -17, லெனின்-21, லெனின்-8 என்று எண்கள் இருந்தன.

    ஒரு சைக்கிளைத் தலைகீழாக நிறுத்தி வைத்து, முன் சக்கரத்தில் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தவன், வா சார், மழைல மாட்டிக்கப் போறேன்னு நினைச்சேன். பழனி, ஏலக்கா போட்டு ரெண்டு டீ வாங்கிட்டு வா என்றான்.

    சைக்கிள் துடைத்துக் கொண்டிருந்த சட்டை போடாத பழனி ஓட்டமாய்ப் போனான். கடைக்குள் சுத்தமாய் சுண்ணாம்பு அடித்து ரஷ்யத் தலைவர்கள் ஆணிகளில் தொங்கினார்கள். காலண்டரில் இன்னும் நேற்றைய தேதியே இருந்தது. மர ஸ்டாண்ட் அடித்து அதன் மேல் அலாரம் டைம்பீஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் ஆயுள் முடிந்த ஊதுபத்திக் குச்சிகள்.

    துரை வந்தானா? என்று கேட்டுக் கொண்டே இவன் ஒன்பது துவாரங்கள் போடப்பட்ட மர ஸ்டூலில் உட்கார்ந்தான்.

    வந்தார் சார். உனக்கு கொடுக்கச் சொல்லி கடுதாசி கொடுத்துட்டுப் போனார்.

    எங்கே?

    கணக்கு நோட்ல சொருகி வச்சிருக்கேன் பாரு.

    நீளமான கணக்கு நோட்டில் அடையாள அட்டை போலத் துருத்திக் கொண்டிருந்த, மடக்கப்பட்ட கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

    'எல்லாம் தயார். ஏழு மணிக்கு போன் செய்து விட்டு என்னை சந்திக்கவும்' - என்று இருந்தது.

    என்ன சார், எதுவும் வேலை விஷயமா?

    ஆமாம் என்று எழுந்து கொண்டான்.

    என்ன எந்திரிச்சிட்டே? டீ வருது

    ரூமுக்குக் கொடுத்தனுப்பிடு ராமன் என்று நகர்ந்தவன் திரும்பி ஸ்டாண்டில் இருந்த டைம்பீசில் மணி ஆறே கால் என்பதைப் பார்த்து, உன் டைம் கரெக்டா ராமன்?

    ரேடியோ டைம் சார். ஒரு நிமிஷம் கூட அப்படி, இப்படி இருக்காது.

    தன் வாட்ச்சைக் கழற்றி, அட்ஜஸ்ட் செய்து வைத்து விட்டு, சைக்கிள் கம்பெனிக்குப் பக்கத்தில் இருந்த மாடிப் படிகளில் ஏறினான். மேலே வரிசையாக இருந்த நான்கு அறைகளில் கடைசி அறைக்கு வந்தான்.

    கதவு திறந்து உள்ளே வந்து சுவிட்ச் போட்டான். பொருள்கள் ஒழுங்கில்லாமல் கிடந்தன. கொடியில் துணிகள் - கும்பலாய்க் கிடந்தன. கட்டிலின் மேல் ஷு பாலிஷ், பென் ஸ்டாண்டில் டூத் பிரஷ். நாற்காலி மேல் இரவு கழட்டிப் போட்ட ஜட்டி. தரையெங்கும் விரிந்த, மூலை மடங்கின, குப்புறப்படுத்த புத்தகங்கள், தீக்குச்சிகள், பிளக்கில் செருகின டேப் ரிக்கார்டரைச் சுற்றி சிதறலாய் கேசட்டுகள். சாத்தியிருந்த ஜன்னலின் கதவில் மட்டும் ஒரே ஒரு கத்தரிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன்.

    அவன் கட்டிலில் உட்கார்ந்து, மேஜை டிராயர் இழுத்து, சிகரெட் எடுத்துக் கொண்டு, பழனி கொண்டு வந்து கொடுத்த டீயைக் குடித்து விட்டு, பற்ற வைத்துக் கொண்டான். நிதானமாகப் புகைத்து முடித்து, செருப்பில் நெருப்பு நசுக்கி, மூலையில் எறிந்தான்.

    கீழே உட்கார்ந்து, கட்டிலுக்கு அடியில் இருந்த சூட்கேசை வெளியே இழுத்துத் திறந்தான். உள்ளே செருகி வைத்திருந்த அந்த இன்லெண்ட் லெட்டரை எடுத்துப் பிரித்தான்

    'அன்புள்ள நடராஜனுக்கு, உன் அம்மா எழுதியது. பத்து தேதி ஆகியும் உன்னிடம் இருந்து பணம் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இங்குள்ள சிரமங்கள் நீ அறிந்ததே. ஒரு மாட்டுக்கு பால் வற்றி விட்டது. விற்று விடப் போகிறேன். மேகலா டைப் கற்றுக் கொள்கிறாள். அதற்கு வேறு செலவாகிறது. இந்தக் கடிதம் கண்டவுடன் மறக்காமல் பணம் அனுப்பவும். உடம்பைப் பார்த்துக் கொள். அதிகமாக ஓவர் டைம் செய்ய வேண்டாம். இப்படிக்கு. உன் அம்மா'

    நடராஜன் எழுந்து கொண்டான். பிளக்கிலிருந்து வயரைப் பிடுங்கி, டேப் ரிக்கார்டரைக் கையில் எடுத்துக் கொண்டான். முன்போல் ஜோல்னாப்

    Enjoying the preview?
    Page 1 of 1