Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorgathil Kattapatta Thottil
Sorgathil Kattapatta Thottil
Sorgathil Kattapatta Thottil
Ebook123 pages45 minutes

Sorgathil Kattapatta Thottil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நடராஜன் - வாசுகி இவர்களுக்கு இரண்டு ஆண்மகன்களும் ஒரு பெண் மகளும் உள்ளனர். பசங்களுக்கு திருமணம் செய்து தனிக்குடித்தனத்தில் விட்டு விடுகிறார்கள். பேரன் பேத்திகளை பார்த்துக் கொள்வதற்காக நடராஜனும் வாசுகியும் தனித்தனியே மகன்கள் வீட்டில் வசிக்கின்றனர். இந்த இடைவெளி நடராஜன் வாசுகியை புரிந்து கொள்வதற்காக அமையுமா? இந்த இடைவெளி இவர்களின் காதலை வெளிப்படுத்துமா? தொடர்ந்து வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580140610869
Sorgathil Kattapatta Thottil

Read more from R. Manimala

Related to Sorgathil Kattapatta Thottil

Related ebooks

Reviews for Sorgathil Kattapatta Thottil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorgathil Kattapatta Thottil - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சொர்க்கத்தில் கட்டப்பட்டத் தொட்டில்

    Sorgathil Kattapatta Thottil

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 1

    மின்விசிறியின்’கடக்...கடக்’சப்தம் அந்த நிசப்தத்தில் பூதாகரமாய் கேட்க... நறுக்கென நான்கைந்து இடங்களில் கடித்து நடராஜனை உலுக்கி எழுப்பின கொசுக்கள்.

    மசமசப்பான இருட்டில் ஃபேன் தன் கடைசிச் சுற்றை நிறுத்திக் கொண்டது தெரிந்தது.

    ‘கரண்ட் போச்சா?’

    கோடை காலத்தில் அதுவும் உறங்கும் நேரமாய் பார்த்து இந்த கரண்ட் அடிக்கடி உயிரை விட்டு உயிரை வதைப்பது பெருஞ்சித்திரவதை.

    அருகில், வார இதழோ, தினசரியோ இருக்காதா என வலக்கையால் துழாவினார். எதுவும் அகப்படவில்லை.

    ‘அது சரி... முன்பு போல் இதையெல்லாம் யார் காசு கொடுத்து வாங்குறாங்க? எல்லாம் ஆன்லைன்லயே வந்து விடுகிறதே! மொபைலை பயன்படுத்துவதைப் போல... கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதே... ஆன்லைன் தந்த பரிசு!

    ‘ப்ச்...’தூக்கம் கடடறுந்த வெறுப்பில் பாயில் படுத்திருந்தவர் எழுந்தமர்ந்தார்.

    அவர் இருந்த ஹாலை ஒட்டிய இரண்டு அறைகளிலும் சன்னமான நைட் லாம்ப் வெளிச்சம் கதவிடுக்கில் தெரிந்தது.

    இன்வெர்ட்டர் மூலம் இரு அறைகளிலும் தலா ஒரு ஃபேனும், லைட்டும் வேலை செய்யும். ஹாலுக்கு கனெக்சன் தரவில்லை.

    ‘டைம் என்ன?’தலையணை அடியிலிருந்து தன் மொபைலை எடுத்து பார்ப்பதற்குள் வழக்கமாய் ஹாரனை அலற விட்டு உருமிக் கொண்டு செல்லும் பால் லாரியின் தீப்பிடித்தாற் போல் சப்தத்தில் புரிந்தது விடிந்து விட்டது என்று!

    ‘இன்னும் கொஞ்சம் படேன்’என்று அவரை எழுபத்தைந்து வயது முதுமை கெஞ்சியது.

    ஓடாத ஃபேனை வெறித்துப் பார்த்துவிட்டு எழுந்தார். மொபைல் டார்ச் உதவியுடன் பாத்ரூம் சென்று வந்தார்.

    மணி ஐந்து என்றாலும்... பாதி திறந்திருந்த ஜன்னல் வெளியே கருமையை கரைத்து ஊற்றியதுப் போல் துளி வெளிச்சமின்றி அடர் இருட்டு!

    கொஞ்ச நாட்களாக மழை வருவது

    ப்போல் போக்குக் காட்டிக்கொண்டிருந்த அடர்ந்த சாம்பல் நிற மேகங்கள்... இப்பவும் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல்... எப்ப வேணாலும் அழுது விடுவேன் என்று பயமுறுத்தியது.

    ‘எதற்கும் குடை எடுத்துட்டுப் போலாமா? மழை வருமோ?’

    ‘அது வேற சுமை எதுக்கு? வந்தா பாத்துக்கலாம்!’

    ஹாலின் மூலையில் இருந்த சணலாலான பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

    பொட்டு வெளிச்சமில்லை. தெரு விளக்குகளும் கண்மூடி இருந்தன.

    மெட்ரோவிற்காக ஊர் முழுக்க குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.

    ‘எதிலாவது காலை வைத்து விடுவேனோ?’சின்ன பயம் நெஞ்சைத் துழாவியது.

    ‘இன்னும் கொஞ்சம் விடியட்டும்’

    வாசல் படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டார்.

    அதிகாலை காற்றில் பனித்துளிகளும் கைகோர்த்து இருந்தன. தொண்டைக் கமறியது.

    சில நிமிடங்கள் கடந்தன.சில டூவீலர்களும், ஓரிரு குட்டி யானை வண்டிகளும் அன்றைய பணியை துவக்கி வைக்க... ஒரு விதமான சுறுசுறுப்பு உடம்பில் புகுந்து கொள்ள, தெருவில் இறங்கி நடந்தார் நடராஜன்.

    தொடர்ந்து கொஞ்சம்... கொஞ்சமாய் வெளிச்சமும் விழித்துக் கொண்டன.

    பரிச்சயமான தெரு நாய்கள் அவர் பின்னே வாலாட்டிக் கொண்டு வந்தன.

    திரும்ப வரும்போது பொறையும், பிஸ்கட்டும் வாங்கிட்டு வர்றேன் பசங்களா... போங்க போங்க!

    அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு நாய்கள் அப்படியே நிற்க...சமத்து!என்று சிரித்தபடி நடந்தார் நடராஜன்.

    வறட்டு இருமல் சிரிப்புடன் வெளிப்பட... சூடாய் எதையாவது பருகினால் தேவலை என்றிருந்தது.

    தெரு முக்கில் இருந்த டீக்கடையில் பாலா நாயர் அப்போதுதான் ஸ்டவ்வில் பால் பாத்திரம் வைப்பதைப் பார்த்தார்.

    ‘பழக்கமானவர்தான் கொஞ்சம் குடிக்க சுடுதண்ணி கேட்டு பார்க்கலாமா?’

    ‘வேணாம்... இன்னும் போணி ஆகவில்லையே என்று தயங்கலாம். எதற்கு சங்கடம்?’எச்சிலை விழுங்கி தொண்டையை ஈரமாக்கும் முயற்சியோடு பால் பூத் நோக்கி நடையை எட்டி போட்டார்.

    ***

    வீடு திரும்பும் போது முகம் பார்த்து ‘ஹாய்’சொல்லும் அளவிற்கு இருட்டை கழுவி தள்ளி இருந்தார்கள்.

    உள்ளே நுழையும்போதே குக்கர் விசிலடித்தது.

    ‘மருமகள் எழுந்து விட்டால் போலும்’மோட்டார் ஓடும் சத்தம் கேட்டது. ‘கரண்ட் வந்து விட்டதா? அப்பாடா பிள்ளைங்க ஸ்கூலுக்கு வேற போகணும் நல்ல வேளை!’

    கிச்சனுக்கு சென்றவர் பால் பாக்கெட்டுகள் அடங்கிய பேகை பவானி பார்க்கும்படி மேடையில் வைத்தார்.

    அம்மாடி பவானி கொஞ்சம் ஹாட் வாட்டர் கிடைக்குமா? பனிக்காத்து ஒத்துக்கல போல...ட்ரை காஃப் பாடாய் படுத்துதுமா!

    அச்சோ... ஸாரி மாமா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன். மூணு பர்னர்லேயும் சமையல் ஆயிட்டு இருக்கு. சமையல் முடிச்சுட்டு ஆபீஸ்க்கு ஓடணும். அதுக்குள்ள டிபனும் லஞ்சம் ரெடி பண்ணனும். இன்னும் காபி கூட போடல. இதோ இப்பதான் நீங்களும் பால் வாங்கிட்டு வந்து இருக்கீங்க!

    அவள் அவரை நிமிர்ந்து கூட பார்க்காமலேயே வேகவேகமாய் வெங்காயத்தை கட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

    திமிறிக் கொண்டு வந்த இருமலை வாய் திறக்காமல் விழுங்கிக் கொண்டதில் மூச்சு திணறியது.

    ப... பரவாயில்லேம்மா... நான் காய்கறி ஏதாவது கட் பண்ணித் தரவா?

    வேணாம் மாமா... நான் பார்த்துக்கறேன். அந்த காய்கறி கூடையை மட்டும் குடுங்க.

    எந்தக் கூடைம்மா?சுற்றும் மற்றும் தரையில் பார்த்தார்.

    பவானி நிமிர்ந்து பார்த்தவள்... அவர் கையைப் பார்த்தாள்.

    நெற்றி சுருக்கினாள்.

    அப்ப... வாங்கிட்டு வரலையா?

    நீ சொல்லவே இல்லையே பவானி?

    நேத்து நைட் சாப்பிடும் போது நாளைக்கு காய் எல்லாம் வாங்கணும்னு சொன்னேனே மாமா! கூடையில் லிஸ்டும், பணமும் போட்டு இருந்தேனே!

    வார்த்தையில் அழுத்தம் இருந்தது போல் தோன்றியது நடராஜனுக்கு. கோபத்தின் மறு உருவம் அது

    ஆமால்ல... மறந்துட்டேன் பாரு. விடியற்காலையிலேயே கரண்ட் போயிடுச்சு இல்லையா? இருட்டுல கவனிக்கல... பிரிட்ஜில வேற காய்கறி இருக்கான்னு பாக்கட்டா?

    நேத்தே பாத்துட்டு தான்... இல்லைன்னு வாங்கச் சொன்னேன். சரி விடுங்க நான் போய் வாங்கியாறேன்!நிமிர்ந்து சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடி சொன்னாள்.

    அட... இரும்மா... டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அவ்ளோ தூரம் போய் வாங்கிட்டு வர்றதுக்குள்ள நேரமாகிடும்.இந்தா... ஓடிப்போய் வாங்கிட்டு வந்துடறேன்!

    "சரி மாமா... நீங்க வர்றதுக்குள்ள காப்பி போட்டு வச்சிருக்கேன். சீக்கிரமா

    Enjoying the preview?
    Page 1 of 1