Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enathu Nila Kanniley...!
Enathu Nila Kanniley...!
Enathu Nila Kanniley...!
Ebook233 pages1 hour

Enathu Nila Kanniley...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்கமித்திரை, கல்யாண் இருவரும் காதலித்து தன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறாள் சந்தனா. யார் இவள்? இதற்கிடையில் தன் அலுவலகத்தில் பணிபுரியும் சுபத்ராவுடன் நட்புடன் பழகுகிறான் கல்யாண். ஆனால் அதை தவறாக நினைக்கும் சங்கமித்திரை. யார் இந்த சுபத்ரா? கல்யாணின் மண வாழ்க்கை எப்படி இருந்தது பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580140608565
Enathu Nila Kanniley...!

Read more from R. Manimala

Related to Enathu Nila Kanniley...!

Related ebooks

Reviews for Enathu Nila Kanniley...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enathu Nila Kanniley...! - R. Manimala

    http://www.pustaka.co.in

    எனது நிலா கண்ணிலே...!

    Enathu Nila Kanniley...!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    சற்றே வேகமாக வீசிய காற்றிற்கு மாமரத்தில் பறவைகள் இடம் மாறி அமர்ந்தன. மணி எட்டைத் தாண்டியிருந்தாலும், மார்கழிக் குளிர் சென்னையைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தது இன்னும்.

    ஈரத் துணிகளை உதறி உலர்த்தி… க்ளிப்புகளை மாட்டிவிட்டு பக்கெட்டுடன் உள்ளே வந்த செந்தாமரை ஐம்பதைத் தாண்டி நான்கு வருடமாகியிருந்தது. காலையிலேயே குளித்து முடித்து நெற்றியில் குங்குமம் திருநீறுமாய் மங்களகரமாய் இருந்தாள். சாத்துக்குடி அளவு கொண்டையில் ஒற்றைச் சாமந்திப் பூ.

    இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டே கம்பீரமாய் நடந்து வந்தான் பாலாஜி. அவளின் சீமந்த புத்திரன். முப்பதை நெருங்கும் வயது. காக்கி யூனிஃபார்மும், மார்பு பேட்ஜும் அவனை இன்ஸ்பெக்டர் என்றன.

    என்ன பாலாஜி, அதுக்குள்ள கிளம்பிட்டே? இன்னும் டிபன் கூடச் சாப்பிடலே?

    மத்திய மந்திரி வர்றார்ம்மா! பாதுகாப்புக்காக ஏர்போர்ட் போகணும்னு உத்தரவு. சாப்பிட நேரமில்லே. போய்ட்டு வர்றேன்ம்மா!

    ஏனப்பா இப்படிச் சொல்றே? உன் தங்கச்சியை ரயில் ஏத்திவிடப் போகலையா?

    அதையெல்லாம் கல்யாண் பார்த்துப்பான். நேரமாயாச்சு… நான் கிளம்பறேன்ம்மா!

    பதிலுக்குக் கூடக் காத்திராமல், ஷூக்கள் முனக, விரைந்து நடந்து… பைக்கை ஆரோகணித்தான். விநாடியில் உயிர் பெற்றுச் சீறிப் பாய்ந்தது.

    மெல்ல… பார்த்துப் போப்பா! தாய் மனசு பதறியது. ஆனால் வார்த்தைகள் அவன் செவிகளைத் தீண்டவில்லை.

    பக்கெட்டைக் குளியலறையில் வைத்துவிட்டு மாடிப்படியேறினாள்.

    கடாமுடாவென்ற சப்தமும், இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கும் மெல்லிய கொலுசொலியின் சப்தமும் மேலே என்ன நடக்கிறது என்பதை உணர்த்தியது.

    அறைக்குள் நுழைந்தாள்.

    ஈரக் கூந்தல் முதுகில் பரந்து விரிந்திருக்க, ஏர் பேக்கினுள்ளே எதையோ திணித்து ஜிப்பை மூடிக்கொண்டிருந்தாள், அந்த இளம் பெண்.

    சங்கமித்ரை…! இன்னுமா ரெடியாகலை? என்றாள் ஆச்சர்யத் தொனியில்.

    அவ்வளவுதான்!

    கோபத்துடன் திரும்பினாள் சங்கமித்ரை.

    அம்மா… உனக்கு எத்தனை முறைதான் சொல்லுவேன்? என்னை இப்படி அழைக்காதே. அழைக்காதேன்னு…

    அதானே உன் பேரு… வேற எப்படிக் கூப்பிடறதாம்?

    ஆமாம்… வேற பேரே கிடைக்கலியா உங்களுக்கு? சங்ககாலத்துப் பெயர். சரி, வச்சாச்சு… அதை நீட்டி முழக்கி முழுசாக் கூப்பிடணுமா? சுருக்கமா மித்ரான்னு கூப்பிடேன்!

    பேரைக் கூப்பிடறதிலே என்னடி கஞ்சத்தனம்? நீ இந்தக் காலப் பெண்ணாச்சே. பிடிக்காது. புரியவும் செய்யாது. இருபத்திரண்டு வருஷத்துக்கு முந்தி நீ பிறந்தப்ப உங்கப்பா ஒரு வாரமா யோசிச்சுத் தேடிப் பார்த்து வச்ச அழகான தமிழ்ப் பெயர். கைக் குழந்தையான உன்கிட்டே கலந்தாலோசிக்காம வச்சிட்டோம். மன்னிச்சிடும்மா

    ஐயோ… அறுக்காதேம்மா… நானே நேரமாகுதுன்னு பதறிக்கிட்டிருக்கேன்!

    தலைமுடி கூட இன்னும் காயலே. அவசரத்துல அப்படியே ஓடிடப் போகிறே! இரு. வந்துட்டேன்!

    இரு… என்று அம்மாவின் கைப்பிடித்துத் தடுத்தாள். எங்கே, ஹேர் டிரையர் எடுத்துட்டு வரப் போறியா? அதுனாலே கூந்தலை உலர்த்தினா முடி உதிரும். நீ போய் டிபன் எடுத்துக்கிட்டு வா… இங்கேயே சாப்பிட்டுக்கறேன்.

    சொல்லியவள் மின் விசிறியின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டுச் சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை எடுத்து மீண்டும் சரிபார்த்து வைத்து விட்டுத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டாள்.

    செந்தாமரை சுடச்சுட ஆப்பமும் தேங்காய்ச் சட்னியும் எடுத்துக் கொண்டு வந்தவள் ஆச்சர்யப்பட்டாள்.

    மெரூன் நிற சல்வார் அணிந்து, அதே நிற பேன்டில் உலர்ந்த கூந்தலை அடக்கி, லேசான பவுடர் பூச்சுடன், உறுத்தாத தெய்வீக அழகுடன் தயாராக இருந்த சங்கமித்ரை, வெட்டிச் சீராக வளர்க்கப்பட்டிருந்த பிறை நகங்களில்… பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள்.

    டிபன் கொண்டு வந்துட்டியா? ப்ளீஸ்… நீயே ஊட்டி விட்டுடேன்… ஆ…! என்று வாயைத் திறந்தாள்.

    செந்தாமரை சிரித்துக் கொண்டே ஊட்டினாள்.

    இன்னும் சின்னக் குழந்தை மாதிரியே நடந்துக்கறே… நீ எப்படித் தனியா மும்பைவரை போய்ட்டு வரப் போறே? பயமாயிருக்குடி!

    நீ பயப்படலேன்னாதான் நான் ஆச்சர்யப்படுவேன். நான் என்ன சின்னக் குழந்தையா? இன்னும் ஒண்ணு, ரெண்டு வருஷத்திலே நீ பாட்டியாகப் போகிற அளவுக்கு எனக்கு வயசாகியாச்சு.

    சீ… கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அம்மாகிட்டே இப்படிப் பேசுவதா? செல்லமாய்க் கோபித்தாள்.

    பின்னே… என்னைப் போய்ச் சின்னக் குழந்தைங்கறே?

    சரி… இனிச் சொல்லலேடியம்மா! ஆனா, நீ வேலைக்குப் போய்த்தான் ஆகணுங்கிற அவசியம் என்ன? எனக்குப் பிடிக்கலே சங்க…

    மூச்…! மறுபடி நீட்டி முழக்காதே. மித்ரான்னு சொல்லு.

    என்னவோ ஒண்ணு. நீ அவசியம் போய்த்தான் ஆகணுமா? உங்கப்பாவும், உங்கண்ணனும் சம்பாதிக்கிறது போதாதுன்னு நீ வேற சம்பாதிக்கணுமா?

    என்னம்மா தப்பிருக்கு? விளையாட்டா மத்திய அரசு உத்யோகத்துக்குத் தேர்வு எழுத விண்ணப்பிச்சேன். எழுதினேன், பாஸாகிட்டேன். இதோ இன்டர்வியூவிற்கு மும்பை போகிறேன். செலக்ட் ஆகுவேன்ங்கற நம்பிக்கை இருக்கு. போஸ்டிங் சென்னையிலேதான் போடுவாங்க. இதிலே உனக்கென்ன கஷ்டம்?

    சொன்னாப் புரியாது… ஹும்… தண்ணியக் குடி. எங்கே அந்தப் பிள்ளைய இன்னும் காணோம்?

    யாரைச் சொல்றே…? கல்யாணையா?

    ம்…!

    அவர் இந்நேரம் ரயில்வே ஸ்டேஷன்ல காத்துக்கிட்டிருப்பார்.

    நீ புறப்படு…

    அடுத்த பத்தாவது நிமிடம் அம்மாவிற்கு டாட்டா காட்டிவிட்டு ஆட்டோவில் ஏறிப் பறந்தாள், சங்கமித்ரை.

    மகளைப் பிரிந்து இதுவரை ஒரு நாள் கூட இருந்ததில்லை. மனசு ஏனோ கனத்துப் போயிருந்தது.

    சவுந்தரம் - செந்தாமரை தம்பதிக்குப் பாலாஜியும், சங்கமித்ரையும்தான் வாரிசுகள். சவுந்தரம் இருபது வருடமாகவே பக்ரைனில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தாருடன் ஒரு மாதம் இருந்து விட்டுச் செல்வது வாடிக்கை. கை நிறையச் சம்பளம். சொந்த வீடு, வங்கியில் சேமிப்பு என்று சிரமமில்லாத வாழ்க்கை.

    சங்கமித்ரை கடைக்குட்டி என்பதால் ஏகப்பட்ட செல்லம். அதனாலோ என்னவோ நல்ல குணங்கள் பல இருப்பினும், தேவையற்ற பிடிவாதம் அவளிடம் மலிந்திருந்தது. தான் நினைத்தது உடனே நடந்தாக வேண்டும் அவளுக்கு. சிறு தோல்வியைக் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

    ‘இந்த வேலை அவளுக்கு நிராகரிக்கப்பட்டு விட்டால்?’ அதுதான் செந்தாமரைக்கு அச்சத்தைத் தந்தது. தாங்கிக் கொள்வாளா?

    ***

    "இந்த உடையில் என்னைப் பார்த்து அசந்து போகப்போகிறாள்!" ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றிருந்த கல்யாண் தன் உடையைச் சரிப்படுத்திக் கொண்டு திருப்தியுற்றான்.

    மணிக்கட்டைத் திருப்பி வாட்சைப் பார்த்தான்.

    ‘மித்ரா வருமுன்பே அவளுக்காகப் பூங்கொத்துடன் காத்திருக்க வேண்டும். இப்போதே புறப்பட்டால்தான் சரியாக இருக்கும்!’

    சென்ட்டை எடுத்துப் பீய்ச்சிக் கொண்டவன் மாடிப்படிகளில் தடதடத்து இறங்கினான்.

    அம்மா… அம்மா…!

    …..!

    அம்மா… நான் போய்ட்டு வர்றேன். மித்ராவை ரயிலேத்திட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்! அறையின் வெளியே நின்றபடி கத்திக் கூறினான்.

    பதிலே இல்லை.

    புருவம் உயர… சற்றே ஒருக்களித்திருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

    கனகம் கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவள் படுத்திருந்த விதத்தில் இயல்பு இல்லை.

    விரைந்து நெருங்கித் தொட்டுப் பார்த்தான்.

    உடம்பு சில்லிட்டிருந்தது.

    வழக்கம் போல்தான்.

    வேகமாய்ச் செயல்பட்டான் கல்யாண். சமையலறைக்குச் சென்று சர்க்கரை டப்பாவைத் தேடி எடுத்துத் தண்ணீர் கலந்தான்.

    உணர்வின்றியிருந்த அம்மாவைத் தூக்கித் தண்ணீரைப் புகட்டினான். உள்ளங்கையிலும், காலிலும் பரபரவெனச் சூடு பறக்கத் தேய்த்தான்.

    பத்து நிமிடங்களுக்குப் பிறகு கண்கள் துடித்தன. கல்யாண் தெருமுனைக்கு ஓடிவந்து ஆட்டோவை அழைத்து வந்தான்.

    ஆட்டோ கனகத்தைச் சுமந்து கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தது.

    ***

    ஸ்டேஷன்! அதன் பிரத்யேகமான சுறுசுறுப்பில் இருந்து கொஞ்சமும் மாறுபடவில்லை.

    இட்லி, தோசை, காபி, பிஸ்கெட் என்று விற்பவர்கள் நிமிடத்திற்கொருதரம் தரிசனம் தந்தனர். ஆனால், கல்யாணை மட்டும் காணவில்லை. சங்கமித்ரை பதினைந்தாவது முறையாக கம்பார்ட்மென்ட்டை விட்டிறங்கிப் பார்த்தாள்.

    தீ மிதித்த பரபரப்புடன் பார்த்தாள்.

    சில இளைஞர்கள் இவளைப் பார்த்து விட்டு, பரிச்சயமானவர்களைப் போல் கையை அசைப்பதும், கண்ணடிப்பதுமாகச் சேட்டைகள் செய்ய…

    இதுவே நார்மலான சங்கமித்ரையாக இருந்திருந்தால், அவள் அணிந்திருந்த செருப்புக்கு வேலை கொடுத்திருப்பாள். இப்போதோ… அவள் கோபம் முழுக்கக் கல்யாண் மீதுதான்.

    தனக்கு முன்பே வந்து பரிதவிப்புடன் காத்திருந்து, உற்சாகமிழந்த முகத்துடன் பிரியா விடை கொடுத்து…

    இப்படியெல்லாம் கற்பனை பண்ணியிருந்தாள்.

    ம்ஹும். எதுவும் நடக்கவில்லை.

    ஓட்டைப் பானையில் தண்ணீர் இறங்குவது போல் சங்கமித்ரையின் உற்சாகமும், நம்பிக்கையும் இறங்கிக் கொண்டிருந்தது.

    அழுகையும், ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

    ரயில் புறப்பட ஒரு நிமிடமே இருப்பதாகப் பெண் குரல் ஒன்று ஸ்பீக்கரில் வழிய… ஒரு முடிவுடன் ரயிலில் ஏறினாள்.

    ***

    புயல் வேகத்தில் வண்டியை ஓட்டினான் கல்யாண். பல பாதசாரிகளைப் பயமுறுத்தி, அவர்களின் வசைமொழிகளைப் பெற்றும், சற்றும் வேகத்தைக் குறைக்காமல் செலுத்தினான்.

    ‘கடவுளே…! ரயில் புறப்படக் கூடாது. மித்ராவை நான் பார்த்தாக வேண்டும்.’

    சிக்னல் விழுந்தது.

    ‘ச்சை…! இதற்கு நேரம் காலமே கிடையாதா? இன்னும் மூன்று நிமிடம்தானே இருக்கிறது? அதற்குள் போயாகணுமே!’ பதட்டத்தில் முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பின.

    ஒரு வழியாய்ப் பச்சை விளக்கு எரிய… சீறிப் பறந்தான்.

    ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான்.

    பைக்கை பார்க் செய்துவிட்டு, வாங்கி வந்திருந்த பூங்கொத்துடன் ஓட்டமாய் ஓடினான்.

    ஆனால்…!

    தொலைவில் பூரான் போல் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்தது மும்பை எக்ஸ்பிரஸ்.

    நெற்றியில் பட்டென்று அறைந்து கொண்டே திரும்பியவன் ஏகத்துக்கும் அதிர்ந்து போனான்.

    அங்கே…!

    2

    சங்கமித்ரை நின்றிருந்தாள்!

    ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் அவளை நோக்கிச் சென்றான் வேகமாய்.

    மித்ரா! ரயில் போயிடுச்சே. நீ… நீ… போகலே?

    அவனைக் கண்களால் எரித்தவள், பதிலேதும் கூறாமல், திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

    நில்லு மித்ரா. கோபமா இருக்கேன்னு புரியுது. நான் சொல்றதை முதலில் கேள். அவளைப் பிடித்திழுத்து நிறுத்தினான்.

    முதலில் இதைப்பிடி! பூங்கொத்தை நீட்டினான்.

    அடுத்த கணம் அதைப் பறித்து வீசி எறிந்துவிட்டுப் போனாள்.

    திக்பிரமையோடு நின்றான் கல்யாண்.

    வண்ண மலர்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக் கிடந்தன.

    அவன் சுதாரிப்பதற்குள் சங்கமித்ரை வெளியில் போய் விட்டிருந்தாள்.

    கல்யாண் விரைந்தான்.

    அதற்குள் அவள் ஆட்டோவில் கிளம்பி விட்டாள்.

    சற்று நேரத்தில் அவனும் ஆட்டோவினை பைக்கில் தொடர்ந்தான்.

    முகத்தில் கடுமை படர்ந்திருக்க, அவன் இருக்கும் பக்கமே திரும்பவில்லை, சங்கமித்ரை.

    காம்பவுண்ட் தாண்டித் தோட்டத்திற்கு வர முயன்ற ஆட்டுக் குட்டியை விரட்ட வெளியில் வந்த செந்தாமரை வாசலில் வந்து நின்ற ஆட்டோவைப் பார்த்து ஆச்சர்யமானாள்.

    அவளைத் தாண்டிச் செல்ல முயன்ற மகளைக் கைப்பிடித்துத் தடுத்தாள்.

    என்ன, வந்துட்டே? நீ போறதுக்குள்ளே ரயில் போயிடுச்சா?

    இல்லே, நான்தான் ஏறலே…! என்றவள் விடுவிடுவென்று உள்ளே போய்விட்டாள்.

    என்ன சொல்கிறாள் இவள்?

    குழம்பிக் கொண்டிருக்கும் போதே பைக்கை நிறுத்திவிட்டு வந்தான் கல்யாண்.

    வாப்பா கல்யாண்… என்னாச்சு இவளுக்கு? ஏன் திரும்பி வந்துட்டா?

    அதான் எனக்கும் புரியலே, அத்தை. நான் போய்ச் சேரக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ரயில் போயிடுச்சு. இவளும் நின்னுக்கிட்டிருந்தா.

    "ஓ… இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1