Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Last Warning
Last Warning
Last Warning
Ebook252 pages1 hour

Last Warning

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காசி என்னை நேசியில் அனீஷா காசி டிரேவல்ஸில் பணி புரிகிறாள். அதன் உரிமையாளனான காசி இவளை நேசிக்கிறான்.இவளோ வங்கி மேலாளர் ப்ரமோதை காதலிக்க… காசி ,தயாந்த சரஸ்வதியின் ஆஸ்சிரமத்தில் வானப்ரஸ்த நிலையில் வாழும் தன் தந்தையிடம் அனுமதி வாங்க அங்கு செல்ல , தன் நண்பனைச் சந்திக்க அங்கு வந்த அனீஷாவின் தந்தை திருமணத்தை முடிவு செய்கிறார். இதை அறியாத அனீஷும் ப்ரமோதும் பதிவுத் திருமணம் முடிந்த நிலையில் திரும்பி வர.... என்ன நடக்கிறது?
அனீஷாவின் தந்தை தன் நண்பருக்குத் தந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? அனீஷா ப்ரமோத்தின் திருமண நிலை என்ன?
***
நாணல்கள் இக்கதையில் அபிதகுசலாம்பாள் என்கிற தன் பெயரை அபிதா என்று மாற்றுகிறாள் அவள். குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆரம்பப் பள்ளி ஒன்றில் பணி புரிகிறாள்.அங்கு வரும் அருண் அவளை எந்தவித வரதஷிணைம் இன்றி மணக்க முன்வர இவள் அதிர்ஷ்டத்தை அனைவரும் பாராட்ட அதன் பின் வரும் துரதிருஷ்டம் பிறகு தான் புரிகிறது. முதலிரவன்று அந்த உண்மை புரிகிறது.அருணுக்கு இன்னொரு முகம் இருப்பது தெரிகிறது.ஓயாத குடி,பொம்பளைப் பொறுக்கி என்ற பன் முகம் கொண்ட வித்தகன் என்பது தெரியவர... படுக்கையறை பாம்புக் கீறி சண்டையின் மேடையாக..வன் புணர்வின் நிகழிடமாக இவளுக்கு வாழ்க்கை அமைய கூசிக் குறுகிப் போகிறாள் இவள்.. பெயரைத் தான் மாற்ற முடிந்தது இவளால். தலையெழுத்தை மாற்ற முடியவில்லை.பிரபா என்ற பெ ண் இவள் வாழ்வில் குறுக்கிட அவளிடமும் ஒரு திருமண ஆல்பம் இருக்க அருணை விட்டு விலக இவள் தீர்மானிக்க இவள் தங்கையை பெண் பார்க்க வரும் சம்பந்திகளிடம் அருண் தாறுமாகப் பேச… அவமான பட்ட இவள் தங்கை தற்கொலை செய்து கொள்ள...இறுதியாக அபிதா ஒரு முடிவு எடுக்கிறாள்.
அபிதா எடுத்த முடிவு என்ன?
***
ஊனங்கள் இக்கதையில் முருகேசன் ஒரு கட்சித் தொண்டன்.அவன் வாழ்வில் இணைந்தவள் வள்ளி....கனவுகளுடன் வந்தவள் கட்சிப் பணிகளால் புறக்கணிக்கப் படுகிறாள்.கண்ணப்பன் என்கிற நண்பன் உதவிக்கு வர..கட்சிப் பணிகளால் முருகேசனின் கால்கள் உடைய அவனால் கட்சி வேலைகள் செய்ய முடியாத காரணத்தால் அவன் புறக்கணிக்கப் பட... வள்ளி குடும்பத்தைக் காப்பாற்ற..முருகேசன் சந்தேகப் பட....உடைந்த கால்களும் உருக்குலைந்த வாழ்வுமாய்.. பிறந்த குழந்தையான ஜீவாவுடன் வள்ளி தடுமாற.......
இவர்கள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதா?
***
லாஸ்ட் வார்னிங் இக்கதையில் அபூர்வாவிற்கு அபூர்வமாகப் பிறந்தவள். நீலிமா. மருத்துவர்களால் ப்ளூபேபி என்று அழைக்கப் படும் வினோத வியாதி உடையவள்.ரத்தத்தின் சிவப்பு அணுக்களை வெள்ளை அணுக்கள் தின்றுவிட உடலின் ரத்தம் வற்றி.. அடிக்கடி ரத்த மாற்றம் தேவைப்படும் வியாதி...அவள் க்ரூப் ரத்தம் கிடைக்க வேண்டும். நல்ல உள்ளம் படைத்த சில மனிதாபிமானிகளால் ரத்தம் தானமாகக் கிடைக்க அப்படிக் கிடைத்தவள் தான் சாந்தினி என்ற பெண்ணின் நட்பு. ஆனால் சாந்தினி அபூர்வாவின் கணவன் கிரிதரனின் முன்னாள் காதலி என்பது தெரியவர அபூர்வா கிரிதரனை வெறுக்க ஒரு விபத்தில் கிரிதரன் மரிக்க....முடிவு என்ன?
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100805279
Last Warning

Read more from Vimala Ramani

Related to Last Warning

Related ebooks

Reviews for Last Warning

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Last Warning - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    லாஸ்ட் வார்னிங்

    சிறுகதைகள்

    Last Warning

    Sirukathaigal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காசி என்னை நேசி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    ஊனங்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    நாணல்கள்...!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    லாஸ்ட் வார்னிங்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    காசி என்னை நேசி

    1

    அனீஷா தன் அப்பாவிடம் சம்பளக் கவரைத் தந்தபோது ஏனோ அவள் கண்கள் நிறைந்திருந்தன.

    கவரை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட வலம்புரிநாதன் - இந்த மாசம் இன்க்ரிமெண்ட் ஏதும் உண்டா? - என்றார் நோட்டுக்களை எண்ணியபடி

    அனீஷா பதில் ஏதும் சொல்லாமல் முகம் கழுவச் சென்றாள்.

    மூவாயிரத்து சொச்ச ரூபாய். தனியார் நிறுவனம் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் பணிபுரியும் அனீஷாவின் சம்பளம்.

    அது ஒரு டிராவல் ஏஜன்ஸி. கம்ப்யூட்டர் ப்ரோக்கிராமிங் படித்திருந்த அனீஷாவை அந்தக் கம்பெனி ஆவலுடன் ஏற்றுக் கொண்டது.

    'காசி டிராவல்ஸ்' - என்பது அந்தக் கம்பெனியின் பெயர். அதன் உரிமையாளர் காசிநாதன் எப்பவும் ரொம்ப பிஸி. அவன் எதிரில் இருக்கும் டெலிபோன் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். 'பேக்ஸ்' செய்திகள் வந்து கொண்டிருக்கும். போதாக்குறைக்கு நடுவில் 'பேஜர்' வேறு 'பீப்பீப்' என்று சப்தமிடும்.

    வரும் டெலிபோன் அழைப்புக்களை ஏற்று தேவையானதை மட்டும் காசிக்குத் தந்து, பாக்கி கஸ்டமர்களைத் தானே கவனித்து, கம்ப்யூட்டரில் 'ப்ரோக்கிராம்' செய்து, அதன் ‘ப்ளாப்பிகளில்' பதிவு செய்து... 'பேக்ஸ்' செய்தியை பார்த்து தேவையான முடிவு எடுத்து... எல்லாம் எல்லாமே அனீஷாதான்.

    ஏதாவது காசியிடம் கேட்டால்,

    ப்ளீஸ் எல்லாத்தையும் அனீஷாக்கிட்டே கேட்டுக்குங்க... - என்பான்.

    காசிக்கு முப்பத்து ஐந்து வயது இருக்கும். இந்தச் சிறுவயதில் தன் 'பிசினஸ்ஸை’ நன்றாக விரிவு படுத்தி விட்டான். போதாக்குறைக்கு, 'காசி கேப்ஸ்' என்ற பெயரில் டூரிஸ்ட் கார்கள் வேறு ஓடுகின்றன. காசி தன் கஸ்டமர்களுடன் சிங்கப்பூர், ஹாங்காங், பேங்காங் - என்று 'டூர்' போய்க் கொண்டே இருப்பான். பாஸ்போர்ட் விசா என்று ஏற்பாடு பண்ணவே நேரம் சரியாக இருக்கும். இங்கே - 'கார்புக்' செய்கிறவர்களுக்கு, அந்த அந்த விலாசம் மறக்காமல் 'கார்' அனுப்பிவைக்க வேண்டும். 'அட்வான்ஸ்' வாங்கி ரசீது தரவேண்டும். தெரிந்த பார்ட்டியாக இருந்தால் நோ ப்ராப்ளம். இதெல்லாம் அனீஷாவின் வேலைகள்.

    கேரளா, கர்நாடகா, காரைக்கால் என்று டூர் வந்தால் அந்த அந்த ஸ்டேட்டுகளுக்கு உரிய 'லைசன்ஸ்' இருக்கிறதா என்பதைப் பற்றி மறக்காமல் கவனிக்க வேண்டும்.

    இப்படித்தான் ஒரு பார்ட்டி திருநள்ளாறு போக வேண்டும் என்று ‘காசி கேப்ஸில்' கார் புக் பண்ணினார்கள். திருநள்ளாறு காரைக்கால் அருகில் இருக்கிறது. அது புதுவையைச் சேர்ந்தது. யூனியன் டெரிடெரி என்றெல்லாம் தெரியும். இவள் ஏற்கனவே சொல்லி இருந்த 'கார்' ரிப்பேர் ஆகி 'ஒர்க்ஷாப்' போயிருந்தது.

    கார் புக் பண்ணிய பார்ட்டி லேட்டாகி விட்டது என்று போனில் சப்தம் போடவே, அவசரத்தில் இவள் இன்னொரு காரை அனுப்ப, அந்தக் காருக்கு புதுவை லைசன்ஸ் இல்லை என்பது ரொம்ப நேரத்துக்குப் பிறகுதான் நினைவுக்கு வந்தது.

    திருநள்ளாறு போய்த்திரும்பிய 'கார்' வந்தது. 'கார்' மட்டுமா வந்தது? கூடவே அவனும் வந்தான். அவன் தான் ப்ரமோத்.

    இவர்கள் சந்திப்பு அந்தச் சண்டையில் தான் ஆரம்பமானது.

    அனீஷா முகம் கழுவிக் கொண்டு உள்ளே வந்தபோது வலம்புரிநாதன் தன் மகளைப் பார்த்தார்.

    என்னம்மா உடம்பு சரியில்லையா?

    இல்லேப்பா... ரொம்ப வேலை... டயர்டா இருக்கு...

    சரி... சரி... ப்ளாஸ்க்கிலே காபி வைச்சிருக்கேன்... குடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ...

    வலம்புரிநாதன் வெளியே கிளம்பினார்.

    அனீஷாவுக்குத் தெரியும். இவள் சம்பளம் வந்த நாள் அப்பா வீட்டில் தங்க மாட்டார். வெளியில் அவருக்கு நிறைய ஜோலி இருந்தது.

    வயது இருபத்தி எட்டுக்கு மேலாகியும் இன்னும் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் நினைவில்லாமல், அவள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்தில், தான் இப்படிக் 'குளிர்' காய்வதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

    அவருக்குக் ‘குளிர்’ விட்டுப் போயிற்று.

    தந்தை வெளியே போனதும், கதவைத் தாழ்போட்ட அனீஷா மனக் கதவைக் திறந்தாள்.

    அவள் கனவுகள் கலைந்த இடத்தில் ப்ரமோத் காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

    கடந்த காலக் கனவில் அனீஷா கரைந்து போனாள்.

    2

    ப்ரமோத் அவள் எதிரில் வந்து நின்ற போது அவள் சாதாரணமாகத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.

    மேடம்... பில் செட்டில் பண்ணிடறேன். எவ்வளவு ஆச்சு சொல்லிடுங்க... அவள் புத்தகங்களைப் புரட்டினாள்.

    மொத்தம் 2000 ரூபாய் ஆகி இருக்கு ஸார்... அட்வான்ஸ் 500 போக, பாக்கி 1500 ரூபாய் தரணும்...

    அவன் ரூபாய் நோட்டுக்களை எண்ணி அவள் முன் வைத்தான். அவள் எண்ணிப் பார்த்தாள்.

    ஸார்... இருநூறு ரூபாய் குறையுது...

    திருநள்ளாறு போகும் போது செக் போஸ்டிலே பிடிச்சுட்டாங்க... காருக்கு லைசன்ஸ் இல்லையாம். அதுக்கு நான் அழுத தண்டம்...

    ஸார்... அது வந்து...

    யெஸ்... அது வந்து உங்க ட்யூட்டி. நாங்க எந்த எந்தக் காருக்கு ஸ்டேட் லைசன்ஸ் இருக்கு, ஆல்ஓவர் இண்டியா லைசன்ஸ் இருக்குன்னு பார்த்துட்டு இருக்கு முடியாது. அது உங்க ட்யூட்டி. யூனியன் டெரிடெரிக்கு லைசன்ஸ் இல்லாத காரை அனுப்பினதுலே 200 ரூபாய் மட்டும் நஷ்டம் இல்லை, எங்களோட ரெண்டு மணி நேரமும் நஷ்டம்... பாத்தா நல்லா டீசண்டா இருக்கீங்க... அட்மினிஸ்டிரேஷனும் அப்படி இருக்க வேண்டாமா?

    ப்ளீஸ்... எங்க அட்மினிஸ்டிரேஷனை பத்தி சொல்ல வேண்டாம்... நாங்க...

    தெரியும் மேடம்... இதுக்கு முன்னால ஒரு தடவை காசி டிராவல்லிலே டிக்கெட் புக் பண்ணின அனுபவம் இருக்கு. டிக்கெட் 'கன்பர்ம்' பண்ணித் தரேன் சொல்லி எங்க அம்மாவையும், தங்கச்சியையும் ட்ரெயினிலே ஏத்தி அனுப்பிட்டீங்களாம். இப்ப பர்த் தரேன். அப்ப பர்த் தரேன்னு அந்த டி.டி.ஆர் சொல்லி மெட்ராஸ் வரை உட்கார்ந்துட்டே போயிருக்காங்க... எப்ப டி.டி.ஆர் வந்து பர்த் தரப் போறாரோன்னு ராப்பூரா பாவம் அவங்க முழுச்சட்டே வந்திருக்காங்க... அப்புறம்... ஈ... க்யூ ரிலீஸ் பண்றேன்னு சொல்லி...

    ஸ்டாப்... ஸ்டாப்... இப்ப என்ன... நீங்க 200 ரூபாய் கொடுத்திருக்கீங்க... ஆல்ரைட்... விடுங்க ஸார்... நாங்களும் பாத்துப் பாத்துத் தான் பண்றோம். சில சமயம் தவறது சகஜம்...

    அந்த தப்பெல்லாமே எங்க டிக்கெட் வாங்கும் போதுதான் வருதுன்னு நினைக்கறேன்...

    இவள் கோபமாக அவனைப் பார்க்க நினைத்தாள். ஆனால் இரண்டு விஷயம் அவளைத் தடுத்தன.

    ஒன்று டிராவல் ஏஜன்ஸியில் இருப்பவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே பிரச்சனைகளை கவனிக்க வேண்டும் – என்பான் காசி.

    அடுத்து...

    இந்த ப்ரமோத் ரொம்ப அழகாக இருந்தான்.

    அவன் ரஸீதை வாங்கிக் கொண்டு வெளியே போனபோது இவள் வாசலைப் பார்த்தாள்.

    அவனும் சொல்லி வைத்தாற்போல் திரும்பிப் பார்க்க...

    விளம்பரங்களில் வருவதுபோல், 'பஹ்லா ப்யார்' - என்ற பாட்டு பாடி சோப்பு போட்டு குளிக்காமலே காதல் அரும்பு மெல்ல பூத்தது.

    இத்தனை நாள் இயந்திரத்தனமாக இருந்த உள்ளத்தில் திடீரென்று புதிதாய் ஒரு சின்னமலர் பூத்த மாதிரி ஒரு உணர்வு.

    'காசி கேப்ஸ்', 'காசி டிராவல்ஸ்', 'காசி டூர்' - என்று எப்போதுமே 'காசி, என்னை நேசி’ - என்று தன் கம்பெனியோடு மட்டுமே ஒட்டிக் கிடந்தவளின் உள்ளத்தில் புதிய ஓட்டு! இது விட்டுப் போகாமல் இருக்குமா? இவளால் இதை எட்டிப் பிடிக்க முடியுமா?

    அன்றுதான் –

    வெகு நாட்களுக்குப் பிறகு கண்ணாடி முன் நீண்ட நேரம் நின்று தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் அனீஷா.

    மெல்ல அடிமண்டையில் அங்கொண்ணும் இங்கொண்ணுமாக நரை மயிர் தோன்றட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தன. என்னதான் 'க்ரீமும்', 'ஈ வைட்டமின் ஆயிலும்' போட்டுத் தேய்த்தாலும் கண்களின் அடியில் மெல்ல கருவட்டம் கைகோர்க்க ஆரம்பித்திருந்தது.

    இந்தக் காலத்தில் எல்லாப் பெண்களும் தங்களை அழகுப்படுத்திப் பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். 'ப்யூட்டி பார்லர்' போகிறார்கள்.

    அதுவும் இவள் 'டிராவல்ஸில்' இருப்பதால் அந்த அழகு முக்கியம். ஆனால் திடீரென்று ஒரு விரக்தி...

    இந்த அழகு, இந்த வெளிப்பாடு, இந்த செயற்கைப் புன்னகை, புடவையை 'ப்ளீட்ஸ்' கலையாமல் கட்டும் லாவகமும், கப் வைத்த புல் ஸ்லீவ்ஸ் ப்ளவுஸ்... ரப்பர் பேண்ட் போடப்பட்ட புஸு புஸு முடி... (முன்பிருந்ததில் பாதி கொட்டி விட்டது உண்மை) இதெல்லாம்... இதெல்லாம் இந்த மூவாயிரத்து சொச்சம் ரூபாய்க்கு மட்டும் தானா?

    அம்மா இறந்த பிறகு இவளை ஆளாக்கியது இவள் தந்தைதான். ஆனால் இவளை வளர்த்த அவரின் அன்புக்குப் பின்னால், அன்பை விட சுயநலம் அதிகமாகத் தெரிந்தது!

    பி.காம் படித்து முடித்ததும் வங்கி வேலைக்குப் போக நினைத்தவளை - "வேண்டாம்மா... பேங்க் வேலைன்னா மூணு வருஷத்துக்கு ஒரு தடவை ஊர் ஊரா மாறணும். ஏதோ நமக்கு இந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1