Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udhaya
Udhaya
Udhaya
Ebook154 pages1 hour

Udhaya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“தில் குஷ்” ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாக பணி புரிகிறாள் உதயா. மில்டரியிலிருந்து ஓய்வு பெற்ற அவள் தந்தை. தன் சாய்ஸ் தான் பெஸ்ட் சாய்ஸ் என்ற ஆணவத்தில் மற்றவர்கள் பற்றிய மனநிலை பற்றிய கவலையின்றி வாழும் தந்தைக்கும் மகளுக்குமான போராட்டம்.
இந்தப் போராட்டத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் ஒன் லைன் கதை. ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த காரணத்தால் எல்லாவற்றையும் சிரித்தபடி ஏற்றுக் கொள்ளும் உதயா எப்போது திசை மாறுகிறாள்?
உதயாவிற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் நீங்கள் சிந்தினாலே நாவல் வெற்றி பெற்ற அடையாளம்.
மாத நாவல்கள் அறிமுகமான நேரம். என் முதல் நாவல்… பலரின் பாராட்டுக்களைப் பெற்றத் தந்த நாவல்… 1977 இல் வெளிவந்து இன்றும் என் வாசகர்கள் நினைவு கூறும் நாவல்..படியுங்கள்.பாராட்டுவீர்கள்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100806237
Udhaya

Read more from Vimala Ramani

Related to Udhaya

Related ebooks

Reviews for Udhaya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udhaya - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    உதயா

    Udhaya

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    உதயா... பெயருக்கு ஏற்ற மாதிரி தினம் தினம் இவள் உதயம் அதிகாலையிலேயே ஏற்பட்டு விடும். பணிச்சுமை இவளைத் தூங்கவிடாது.

    தன் பாதையைத் தேடாமல் தனக்குத்தானே பாதை அமைத்துக் கொண்டவள் இவள்.

    எல்லாவற்றுடன் தன்னை இரண்டறக் கலந்து கொண்ட காரணத்தால் இவளுக்கு என்றுமே குறை ஒன்றுமில்லை.

    ஒரு ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாக இருக்கிற காரணத்தால் முகத்தில் சிரிப்பும், வார்த்தைகளில் மென்மையும் இவள் அணிகலன்கள்.

    கடலின் நீலத்தையும், மரங்களின் பசுமையையும், காகங்களின் கறுப்பையும் தன்னோடு கலந்து கொள்ளத் தெரிந்தவள். தோகை மயிலின் வண்ணத்தை ரசிக்கக் கற்றவள். பச்சோந்தியாக மாறத் தெரியாதவள்.

    இவளுக்கு வாழ்க்கை வரமாகக் கிடைக்கவில்லை. ஆனால் அதை வரமாக்கிக் கொண்டவள்.

    வேர் இருக்க... வரும் விழுதிருக்க மிச்ச வாழ்விருக்க வாழத்தான் வேண்டும். வாழப் பழகிக் கொண்டாள்.

    இதோ இதோ உதயாவின் பொழுதுகள் ஆரம்பமாகி விட்டன.

    காலை நேர கதகதப்பைப் போர்வைக்குள் காணாதவள்... காகங்களின்... கரைசலையும் மழைக்காலப் பறவையின் கூவல்களையும் பால்காரர்களின் சைக்கள் மணி ஓசையையும் கேட்டே பழக்கப்பட்டவள். இவைகள் தான் இவளின் ஆலய மணி ஓசைகள்.

    உதயா எழுந்தாள். அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து விட்டதால் அலாரத்தைஆப் செய்தாள்.

    தன் காலைக் கடன்களை முடித்து குளித்து உடை மாற்றி விளக்கேற்றி ஸ்வாமி கும்பிட்டு கிளம்பினாள். ஹோட்டலில் காபி குடித்துக் கொள்ளலாம். நடக்க ஆரம்பித்தாள். ஒரு ஸ்கூட்டி இருந்தால் வசதியாகத்தான் இருக்கும்.

    ஹோட்டலில் ஏக பணிகள் காத்திருக்கும். வந்ததும் வராததுமாககஸ்டமர்களின் புகார்கள்.

    ஏஸி ஒர்க் செய்யவில்லை...ரூம் பாய் லேட்டாக வந்தான்...

    டேகை அணிந்துகொண்டு புன்சிரிப்புடன் தன் சீட்டில் அமர்ந்தாள்.

    எல்லா கேள்விகளுக்கும் சிரித்தபடி... பதில் சொல்லியபடி... இவளின் இன்றைய நாள் ஆரம்பமாகி விட்டது...

    குட் மார்னிங்

    ஏ.ஸி. ரூம் இல்லையானா உயிரே போற மாதிரி கத்துவார் அந்த மனுஷர்... நானோ ஊருக்கும் புதுசு...

    மிஸ்டர்...டு ஒன் திங்க்... ரெண்டு மூணு ஹோட்டல்ஸ் தருகிறேன்... அங்கு ஏ.ஸி. காட்டேஜ் இருக்கிறது... டிரை பண்ணுங்கள்...

    குட்மார்னிங்... காப்பி...

    அவள் இருப்பிடம் தேடி காலை காப்பி கொண்டு வந்த பேரரைப் பார்க்கிறாள் அவள்... சின்னப் பையன்...

    குட்மார்னிங், மணி... ஏன் இன்னிக்கு இவ் வளவு லேட்?

    சுற்று முற்றும் பார்த்தபடி அவன் மெல்லச் சொன்னான்: உங்களுக்குக் காப்பி எடுத்துட்டுப் போகணும்னு நான் கேட்டேன்னா உடனே தரமாட்டேங்கறாங்க டைனிங் செக்ஷன்லே. அதுவும் அந்த மீசைக்காரன் இருக்கான் பாருங்க... இருடா... ஓசிக் காப்பிக்கு இப்போ என்ன அவசரம். முதல்லே கஸ்டமர்களைக் கவனி... அப்படீங்கறான்!

    பாதி காப்பி உதயாவின் நெஞ்சுக்குக் கீழே இறங்க மறுத்தது. முகத்தில் ஒரு சுளிப்பு உருவாகவிருந்தது. அதை உறுதியுடன் சிதைத்துவிட்டு, எப்போதும்போல் மலர்ந்த முகத்துடன் இருந்தாள். அவள் ரிஸெப்ஷனிஸ்ட் ஆயிற்றே? அவளுக்குச் சிடுசிடுக்கும் உரிமை கிடையாது.

    போன் மறுபடியும் அலறியது.

    மணி போய்விட்டான்.

    ஹலோ... ரிஸப்ஷன்...

    குட்மார்னிங்... நான் பிரதீப் பேசறேன்... ரூம் நம்பர் ஃபைவ்! அவள் முகம் உண்மையாகவே மலர்ந்தது.

    யெஸ் ஸார்... ரூம் பிடித்திருக்கிறதா ஸார்? யெனி திங் நீடட்?

    நத்திங்... உங்க ஹோட்டல் ரொம்ப நன்றாக இருக்கிறது. எக்ஸ்பெஷலி த காஃபி.

    உதயாவின் எதிரில் காப்பி ஏடு படிந்து கொண்டிருந்தது.

    தேங்க்யூ... இது ஓட்டல் சார்பாக.

    என்னைத் தேடிக்கொண்டு என் பிரண்ட்ஸ் சிலர் வருவார்கள்... அவர்களை ‘கயிட்’ பண்ணுங்கள்...

    அப்கோர்ஸ். ஷியூர்... தென் எனிதிங்?

    இந்த ஊரில் நல்ல ரெடிமேட் ஷாப்ஸ் எந்த ஏரியாவில் இருக்கின்றன?

    ஒன் மினிட் ஸார்...

    இடது கையில் ரிஸீவரைப் பிடித்தபடி, வலது கையால் ஒரு பெரிய புத்தகத்தைப் புரட்டினாள்.

    கையெட்டும் தூரத்தில் டூரிஸம் சம்பந்தப்பட்ட புத்தகம் எப்போதுமே இருக்கும். அதில் முக்கியமான தியேட்டர் நம்பர்கள், முக்கியமான கடைகள் போன்ற குறிப்புகள் இருக்கும். ஒரு ரிஸப்ஷனிஸ்ட் தன்னுடைய விரல் நுனியில் அத்தனை தகவல்களையும் வைத்திருக்க வேண்டும் என்று ஹோட்டல் முதலாளி அடிக்கடி சொல்லுவார்.

    ‘ரிஸப்ஷனிஸ்ட்’, ‘பிரைவேட் செக்ரட்டரி - என்ற கவர்ச்சிகரமான தொழிலுக்குப் பல டிப்ளமா கோர்ஸ் இருக்கின்றன. ஆனால் அந்தக் கோர்ஸ்களில் சொல்லித் தரப்படாத பல அனுபவங்களைத் தனிப்பட்ட முறையில் தொழில் ரீதியாக அனுபவித்திருக்கிறாள் உதயா.

    எந்தத் தொழிலுக்கும் அதன் டெக்னிக் மிக முக்கியம். அந்த நுணுக்கத்தைப் புரிந்து கொண்டு விட்டால் படிப்படியாக முன்னேறுவது ரொம்ப சுலபம். உதயாவும் ஓரளவு புரிந்து வைத்துக்கொண்டிருந்தாள்.

    ஹோட்டல் தில்குஷ் பெரிய ஹோட்டல். அது ஒன் ஸ்டாரா, பைவ் ஸ்டாரா என்பது முக்கியமல்ல... அதில் வந்து தங்குபவர்களுக்கு அது தன்னை மீண்டும் நினைவுபடுத்துகிறதா என்பதுதான் முக்கியம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல். எனவே பல வெளிநாட்டுப் பயணிகள், பல நாடுகளில் பலதரப்பட்ட கலாசார மக்கள் அங்கு வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் பழகுவது, பேசுவது, அவர்களைப் புரிந்துகொள்வது இதுவே ஓர் அழகிய அனுபவம். அந்த விஷயத்தில் உதயா அதிர்ஷ்டசாலி. மனிதர்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்கிற பெருமிதம் அவளுக்கு உண்டு. ஒவ்வொரு மனிதனும் ஒரு சுவாரசியமான நாவல்.

    அவளால் புரிந்து கொள்ள முடியாதவை இரண்டு.

    ஒன்று அவள் அதிர்ஷ்டம்.

    மற்றது அவள் தந்தை.

    2

    நாராயணன் ஒரு திடீர்ப் பேர்வழி. குடும்பத்தில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு திடீரென்று ‘மிலிடரியில்’ போய்ச் சேர்ந்தவர்.

    திடீரென்று மிலிடரியில் சேர ஊரைவிட்டு ஓடியது போல், திடீரென்று ஒருநாள் மிலிடரியிலிருந்து விலகிக் கொண்டு வந்துவிட்டார்.

    அவர் ஊர் திரும்பிய போது இருபது வருடங்களில் ஊரே திரும்பி இருந்தது. கிராமம் பாதி நகரமாகி இருந்தது. அவரது அப்பா இறந்த இடத்தில் புல் முளைத்திருந்தது. அம்மா மரணப் படுக்கையில் கிடந்தாள்.

    வந்துட்டியா நாராயணா- என்று தன் கரங்களை நீட்டினாள் அந்த மகராசி. ஊர் வந்ததற்கு ஒரு உருப்படியான காரியம்... அம்மாவிற்குக் கர்மங்கள் செய்ததுதான்.

    தனது ஆசார அனுஷ்டானங்களை விட்டு, பந்த பாசத்தை விட்டு ஊரை விட்டே ஓடியவர் இப்போது முற்றிலும் புதிய மனிதராகி இருந்தார். ஆசார அனுஷ்டானங்களை நியமனங்களை ரொம்பத் தீவிரமாகக் கடை பிடித்தார்.

    சிறுவயதில் பக்தியும், பூஜையுமாக, பட்டினியுமாக இருக்கும் சிலர் வயதான பிறகு வக்கரித்தும் போவது உண்டு. இதற்குக் காரணம் - காலச்சக்கரம் மட்டும் பொறுப்பல்ல. அனுபவித்தவைகள் போக அனுபவிக்காதவைகளில் ஏற்படும் ஒரு வேகம், தீவிரம்.

    இரண்டுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பலன்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ‘அப்படி இப்படி’ வாழ ஆசைப்படவில்லை நாராயணன். நாற்பது வயதுக்கு மேல் சாஸ்திரோக்தமாகத் திருமணமும் செய்து கொண்டார். மனைவியாக வாய்த்தவள் அதிர்ஷ்டசாலியோ இல்லையோ தெரியாது, புத்திசாலி. உதயாவை மட்டும் பெற்றுவிட்டுக் கடமை முடிந்த நிம்மதியில் கண்ணை மூடிவிட்டாள்.

    இறந்த மனைவியின் படத்திற்கு ஒரு முழம் பூவும், வாழ்ந்து கொண்டிருக்கும் மகளைப் பற்றிய ஒரு வண்டி ஆசைகளுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார். அவ்வப்போது தனது பழைய மிலிடரி வாழ்வைப் பற்றி மகளுக்கு வண்டி வண்டியாகக் கதை

    Enjoying the preview?
    Page 1 of 1