Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anubavam Pazhamai
Anubavam Pazhamai
Anubavam Pazhamai
Ebook182 pages1 hour

Anubavam Pazhamai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு சிறு முன்னுரை இது ஒரு வாழ்வியல் தொடர். எனது கடந்த காலத்தில் நான் கடந்து வந்த பாதையின் சிலமுக்கிய நிகழ்வுகள், சில சுவாரசியமான நிகழ்ச்சிகள், சத்தியமாக இது சுய சரிதை அல்ல.சுய சரிதை எழுதும் அளவுக்கு நான் அரசியல்வாதியோ அல்லது சினிமா நட்சத்திரமோ அல்ல. ஒரு சாதாரண மனுஷி. உங்களைப்போல் இன்ப -துன்பங்களை அனுபவிப்பவள். எனது இந்த பாதையில் நீங்கள் சந்திப்பது ஒரு சக தோழியை அவளின் வேதனைகளை ஆசாபாசங்களை பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட அநுபவங்கள் ஒவ்வொரு முயற்சியின் போதும் எனக்கேற்பட்ட சோதனைகள், சிதைந்து போன சின்னச் சின்னக் கனவுகள், கற்பனை கலக்காத அக்மார்க் அனுபவங்கள் இவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கபாலி மகிழ்ச்சி. இனி...?
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100805469
Anubavam Pazhamai

Read more from Vimala Ramani

Related to Anubavam Pazhamai

Related ebooks

Reviews for Anubavam Pazhamai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anubavam Pazhamai - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    அனுபவம் பழமை

    Anubavam Pazhamai

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அனுபவம் பழமை

    (வாழ்வியல் தொடர்)

    ஒரு சிறு முன்னுரை இது ஒரு வாழ்வியல் தொடர். எனது கடந்த காலத்தில் நான் கடந்து வந்த பாதையின் சிலமுக்கிய நிகழ்வுகள், சில சுவாரசியமான நிகழ்ச்சிகள், சத்தியமாக இது சுய சரிதை அல்ல.சுய சரிதை எழுதும் அளவுக்கு நான் அரசியல்வாதியோ அல்லது சினிமா நட்சத்திரமோ அல்ல. ஒரு சாதாரண மனுஷி. உங்களைப்போல் இன்ப துன்பங்களை அனுபவிப்பவள். எனது இந்த பாதையில் நீங்கள் சந்திப்பது ஒரு சக தோழியை அவளின் வேதனைகளை ஆசாபாசங்களை பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட அநுபவங்கள் ஒவ்வொரு முயற்சியின் போதும் எனக்கேற்பட்ட சோதனைகள், சிதைந்து போன சின்னச் சின்னக் கனவுகள், கற்பனை கலக்காத அக்மார்க் அனுபவங்கள் இவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கபாலி மகிழ்ச்சி. இனி...?

    அத்தியாயம் 1

    இரண்டாம் உலகப் போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்த நேரம். ஜப்பான்காரன் சென்னையில் குண்டு போட்டுவிட்டான். தூத்துக்குடியில் குண்டு போட்டுவிட்டான் என்கிற செய்திகள் வானொலிப் பெட்டியின் மூலம் அறிவிக்கப்பட்ட காலம். ஆங்காங்கே பெட்டிக் கடைகளில் மக்கள் வானொலிப் பெட்டிச்செய்தி கேட்டுமெல்ல அரசியல் பேசிக் கொண்டிருந்த காலம். (இப்போது வைபை போல் அப்போது வானொலிப் பெட்டி சில கடைகளில் இருக்கும். இதையெல்லாம் நான் விபரம் தெரிந்த பிறகு என் தாய் எனக்குச் சொன்ன செய்திகள்.)

    சென்னையில் யுத்த பயத்தால் ரொம்பப் பேர் தம் வீடுகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு இடம்பெயர்ந்த காலம். அரசாங்க உத்திரவுப்படி அனைவரும் தம்தம் வீட்டுக் கடிகார நேரத்தை ஒரு மணி நேரம் அதிகமாக்கி வைத்திருந்த காலம். அத்தாவது உண்மையான நேரம் இரவு ஏழு மணி என்றால் புது நேரம் எட்டு மணி.

    எட்டு மணிக்கு ஊரே உறங்கிவிடும். தெருவிளக்குகள் எரியாது. வானத்திலிருந்து ப்ளேனில் பார்க்கும் போது வெளிச்சம் தெரிந்தால், ஏதோ ஒரு ஊர் என்று எதிரி குண்டு போட்டு விடுவான் என்கிற பயம். ஊரே சீக்கிரம் அஸ்தமித்து இருளில் மூழ்கியகாலம். ஊரே ஜன சந்தடி இன்றி விரைவில் உறங்கிய காலம்.

    இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறதே…

    என் தந்தை ஆங்கிலேய அரசாங்கத்தின் காவல் துறையின் உயர் அதிகாரி. சூப்பிரடண்ட் ஆப் போலீஸ். இந்த யுத்த நேரத்தில் எதிரிகள் இந்தியாவில் நுழைந்துவிட்டால் காவல் துறை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து.

    என் மூத்த சகோதரி தலைப் பிரசவத்திற்காகக் காத்திருந்த நேரம். நானோ சிறுமி. அப்போது என் தந்தை திண்டுக்கல்லில் பணி புரிந்து கொண்டிருந்தார். யுத்தம் தீவிரமடைந்ததும் ஐ.ஜி காவல்துறை மற்ற அதிகாரிகளை அழைத்து ஆளாளுக்கு ஒரு ரிவால்வர் பாதுகாப்புகாக தந்து சொன்னாராம்.

    உங்கள் குடும்பத்தை எங்காவது அனுப்பிவிட்டு, நீங்க அனைவரும் மாறுவேடத்தில் எங்காவது தலைமறைவாகி விடுங்கள். நிலமை சரியானதும் திரும்ப அழைக்கிறோம்.

    தந்தை மூலம் செய்தி கேட்டு என் தாய் திகைத்தார். பிரசவத்திற்குக் காத்திருக்கும் பெரிய மகள். இரண்டுங்கெட்டானாக நான்...பள்ளியில் கூடச் சேர்க்கவில்லை. எங்கே போவதுஎன்ன செய்வது?

    என் தாய் ஒரு அம்பாள் பக்தை. எந்த நேரமும் கோவில் பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர். நவராத்திரியும் சிவராத்திரியும் பூஜைகள் வீட்டில் அமர்க்களப்படும். லலிதா சஹஸ்ரநாமம் ருத்ரம்சமகம் என்று மந்திர ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.

    திண்டுக்கல் சூப்பிரண்ட் பங்களாவில்தான் இருந்தோம். ரேஸ் கோர்ஸில் இருந்த அரசாங்கக் குவார்ட்டர்ஸ் அது. (திண்டுக்கல்லில் குதிரைப் பந்தயம் கிடையாது ஆனால் ரேஸ்கோர்ஸ் உண்டு.)

    அந்த பங்களாவில் ஜன்னல்களுக்குக் கம்பிகள் கிடையாது. வாசல் கதவு ஒன்று தான். திறந்து கிடக்கும் ஜன்னல்களை மறைக்க தட்டிகள் உண்டு நீளமான கயிறுகளால் புல்லி மாதிரி இழுத்துக் கட்டி ஜன்னல்களைத் திறக்க வேண்டும். மின் விசிறி கிடையாது... பங்கா தான். பங்கா இழுக்க ஒரு ஆள் எப்போதும் அறைக்கு வெளியே காத்திருப்பார். வீட்டைச் சுற்றி காவல்துறை ஆட்கள் பாதுகாப்பிற்காக நிற்பார்கள். என் தந்தை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வாழ்ந்ததால் அனைவரும் பயத்துடனே இருந்தனர்.

    இனி என்ன செய்வது? என் தாய் ஒரு முடிவு எடுத்தார்.

    தினம் தினம் தன் பிள்ளைத்தாய்ச்சி மகளை வாக் கூட்டிப் போகும் போது அருகிலிருந்த புதூர் பாலகிருஷ்ணாபுரத்தில் அரசமரத்தடியில் ஒரு பிள்ளையார் அனாதையாக இருப்பதைப் பார்த்தவர்...

    பிள்ளையாரப்பா என் குடும்பத்தைச் சிதைத்துவிடாதே... உனக்கொரு சிறுகோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வைக்கிறேன். என்று மானசீகமாக வேண்டிக் கொண்டாராம்.

    அந்த வேழமுகத்தானின் பெரிய காதுகளில் இந்தப் பிரார்த்தனை சென்றடைந்திருக்க வேண்டும்.

    அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.

    அது...?

    அத்தியாயம் 2

    ஆஆ... ஆஆ... ஐயோ

    இந்தக் கதறல் என் சகோதரியின் பிரசவ வேதனைக் கதறல்... இந்தக் காலம் போல் அப்போதெல்லாம் ஸ்கேன் பற்றிய அறிவோ விழிப்புணர்வோ கிடையாது. கிட்டத்தட்ட மூன்று மைல் (அப்போது கிலோ மீட்டர் கிடையாது) தொலைவிலிருந்த மருத்துவமனையிலிருந்து லேடி டாக்டர் எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டார்.

    குழந்தை கட்டுவாயில் இருக்கிறது. கொடி சுற்றி இருக்கிறது. கொடி குழந்தையின் கழுத்தை நெருக்கிவிட்டால் தாய் சேய் இருவருக்குமே ஆபத்து. லேடி டாக்டர் கூறினார்.

    என் தாய்க்கு தெய்வம் தான் துணை. என் தந்தை பதவியில் இருந்திருந்தால் வீட்டைச் சுற்றி போலீஸ்கார்ர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் என் தாயின் ஆலோனைப்படி என் தந்தை வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டார்.

    தன் ராஜினாமா கடிதத்தையும் ரிவால்வரையும் என் தந்தை திருப்பித் தந்தபோது அந்த உயர் அதிகாரியே கண் கலங்கி விட்டாராம்.

    மிஸ்டர் விஸ்வநாதன் நீங்கள் பிரிட்டீஷ் கவர்ண்மெண்டுக்கு உழைத்தவர். இந்த கிரிடிக்கலான நிலையில் விலகுகிறீர்கள். இதனால் உங்கள் எதிர்காலம் பென்ஷன் எல்லாம் பாதிக்கப்படும். கொஞ்சம் பொறுங்கள் நிலமை மாறும்.

    ஆனால் வேறு வழியில்லாத நிலையில் இந்த முடிவு எடுக்க வேண்டி வந்ததை உணர்ந்த அந்த அதிகாரியும் என் தந்தையின் ராஜினாமாவை ஏற்றார்.

    என் தந்தை சூப்பிரண்ட் பதவியிலிருந்து குடும்ப தலைவரானார்.

    என் தாய் தன் வாக்குறுதிப்படி அரச மரத்தடி பிள்ளையாருக்கு ஒரு சிறு கோவில் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்தார்.

    இது ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் அல்ல. பூசலார் கட்டிய மானசீகக் கோவிலுமல்ல... ஒரு பக்தை ஆத்மார்த்தமாகக் கட்டிய அன்புக் கோவில்.

    கோவில் உருவாக உருவாக அருகிலேயே ஒரு இடம் வாங்கி எங்களுக்கும் ஒரு வீடு கட்டினார்.

    என் தாய் தான் ஆர்க்கிடெக்ட் முக்கியமாக பூஜை அறை நன்கு அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இப்போது போல் எதற்கெடுத்தாலும் வாஸ்து பார்க்கிற காலம் அல்ல அது. ஆனால் என் தாய்க்கு மனையடி சாஸ்திரம் தெரியும்.

    கலைமகள் ஆசிரியர் மறைந்த திரு. கி. வா ஜ சொல்லுவார்.

    சில பேர் வீட்டில் பூஜை அறையே இருக்காது உள்ளத்தில் இருந்தால் தானே இல்லத்தில் வரும்.

    என் தாயின் உள்ளத்திலும் இல்லத்திலும் அம்பாள் வீற்றிருந்தாள். வீட்டின் பெயர் பால விலாஸ்

    பாலா என்பது என் தாய் வணங்கிய பாலாம்பிகை. அதைத் தவிர அதில் இன்னொரு சோகக் கதையும் உண்டு அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

    இருங்கள் என் சகோதரி ரொம்பவும் அலறுகிறாள்.

    கொடி சுற்றிக் குழந்தை பிறந்துவிட்டதா? இல்லை... வேறு ஏதாவது...?

    சற்றுக் காத்திருக்கலாமா...?

    அத்தியாயம் 3

    பெண் குழந்தை. அழகான பெண் குழந்தை. எந்த விதப் பிரச்சனையும் இன்றி நடந்துவிட்ட சுகப் பிரசவம். எல்லோரையும் விட எனக்குத் தான் மகிழ்ச்சி, ஏனெனில் நான் சித்தியாகப் பதவி உயர்வு பெற்றேன். இந்தச் சிறு வயதில் சித்திப் பட்டம். என் தாய் அம்பாள் பக்தை. வீட்டில் எப்போதும் லலிதா சஹஸ்ரநாமப் பாராயணம். எனவே என் தாய் குழந்தைக்கு லலிதா என்று நாமகரணம் சூட்டினார்.

    அந்த பால விலாஸில் நடந்த முதல் பிரசவம்.

    எங்கள் வீட்டில் எப்போதும் விருந்தினருக்குக் குறைவில்லை. என் தாய் வழி சகோதரிகள், என் தந்தை வழி ஒன்றுவிட்ட இரண்டு விட்ட சகோதரர்கள்... திருச்சிக்கு அருகில் இருக்கும் கிருஷ்ண ராயபுரம் தான் என் தந்தையின் ஊர். அங்கிருந்து அடிக்கடி என் தாயை மன்னி என்று அழைத்தபடி விருந்தினரின் வருகை நிகழும். வீட்டில் சமையல் செய்ய கிருஷ்ணன் என்கிற கேரள வாலிபன்... தோட்டம் மற்றும் மாடுகளைக் கவனித்துக் கொள்ள பிச்சை என்கிற ஆள்... நித்ய கல்யாணம் பச்சைத் தோரணம் என்பார்களே அது போன்ற ஒரு வாழ்க்கை

    என் தாய் நிம்மதியாகப் பூஜை செய்தபடி ஜப தபங்களில் மூழ்கிக் கிடப்பார்... என் தாய் உருவாக்கிய பிள்ளையார் கோவில் பூஜை தடபுடலாக நடக்கும். சதுர்த்தி ஸ்பெஷல் வழிபாடு எங்கள் வீட்டிலிருந்து பித்தளைத் தாம்பாளங்களில் அபிஷேக ஆராதனை பொருட்களை மேளதாளத்துடன் எடுத்துச் செல்வோம். பிள்ளையாருக்கு புது வேஷ்டி ஜரிகை அங்கவஸ்திரம், பெரிய பெரிய மாலைகள், உதிரி பூக்கள், ரோஜா, மல்லி போன்றவை கூடை

    Enjoying the preview?
    Page 1 of 1