Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uzhaipal Uyarntha Uthamar
Uzhaipal Uyarntha Uthamar
Uzhaipal Uyarntha Uthamar
Ebook399 pages2 hours

Uzhaipal Uyarntha Uthamar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைவருக்கும் குவிந்த என் கரங்களின் வணக்கங்கள்.
திருமதி. சிவானந்த விஜயலட்சுமி அம்மா அவர்களின் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்க அருட்செல்வரின் அன்புக் கட்டளையின்படி பொள்ளாச்சி சென்றிருந்த போதுதான் அருட்செல்வர் சொன்னார்கள்.
“என் தந்தையாரின் நூற்றாண்டு விழா வருகிறது. அவரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.”
பிரமித்துப் போனேன்.
நிமிர்ந்து பார்க்கும் பரந்த வானமும், படுத்துப் புரளும் பூமியும் சங்கமிக்கும் ஓரிடம்தான் தொடுவானம்.
தொட முடியாத எட்டத்தில் இருந்தாலும் தொடமுடியும் என்கிற நம்பிக்கையைத் தரும் தொடுவானக் கனவுகள்!
கனவுகள் நனவாகவேண்டும்.
அருட்செல்வர் அவர்கள் சிறப்பு ஆசிரியராக இருக்கும் சிறந்த பத்திரிகையான 'ஓம் சக்தி'யில் கதைகள், கட்டுரைகள் எழுதிய பரிச்சயத்தினால் அருட்செல்வர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை பிறந்தது.
வார்த்தைகளின் கோர்வை அல்ல கதைகள்.
வாழ்க்கையைப் பிழிவதுதான் கதை.
ஆனால், கதையெனும் கற்பனை வானில் பறந்த எனக்கு, அருட்செல்வரின் ஐயா அவர்களின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் சந்தர்ப்பத்தைத் தந்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அற்புதம் இது.
உணர்வுகளின் நெகிழ்ச்சிதான் வாழ்க்கை
சீவிச் சீவி அறிவெனும் கத்தியால் இதய முனையைக் கூர்படுத்திக்கொண்ட அருட்செல்வரின் கட்டளை.
கூட்டினாலும், கழித்தாலும் பூஜ்யம் மாறுவதில்லை.
வாட்டினாலும், வதைப்பட்டாலும் நல்லவர்களின் மனத்தின் நிலை மாறுவதில்லை.
இந்த மாறாத கருணை மனம்தான் அருட்செல்வர் அவர்களின் தனிச்சிறப்பு.
வாழ்வின் நம்பிக்கை நேரங்களை நாம் கற்கலாம். கை கோர்த்து வாருங்கள். இதை வாசித்து அன்பு மனங்களை நேசித்து, மனித நேயங்களைச் சுவாசிப்போம்.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580100806010
Uzhaipal Uyarntha Uthamar

Read more from Vimala Ramani

Related to Uzhaipal Uyarntha Uthamar

Related ebooks

Reviews for Uzhaipal Uyarntha Uthamar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uzhaipal Uyarntha Uthamar - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    உழைப்பால் உயர்ந்த உத்தமர்

    Uzhaipal Uyarntha Uthamar

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பொழுது புலர்ந்தது - யாம் செய்த தவத்தால்

    2. செய்யும் தொழில் உன் தொழிலே காண்

    3. மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்

    4. எடுத்த காரியம் யாவினும் வெற்றி

    5. இளைய பாரதத்தினாய் வா வா வா...

    6. உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்

    7. ஞானத்திலே பர மோனத்திலே - உயர் மானத்திலே அன்ன தானத்திலே

    8. நோக்குந் திசையெல்லாம் இயற்கையன்றி வேறில்லை

    9. மண்ணில் தெரியுது வானம். அது நம் வசப்படலாகாதோ?

    10. பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டும்

    11. வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு...

    12. நெஞ்சு பொறுக்குதில்லையே!

    13. நினைச் சரணடைந்தேன் - கண்ணம்மா

    14. காற்று வெளியிடைக் கண்ணம்மா

    15. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

    16. திக்குத் தெரியாத காட்டில்

    17. உறுதி கொண்ட தோளினாய் வா வா வா

    18. நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

    19. கற்பனை யூரென்ற நகருண்டாம்

    20. வல்லமை தாராயோ! இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே!

    21. சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வமெல்லோரையும் வாழ்த்தும்

    22. வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் வலியே சக்தி

    23. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்...

    24. பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது - பாப்பா

    25. துயரில்லை மூப்பில்லை என்றும் சோர்வில்லை நோயொன்றும் தொடுவதில்லை

    26. சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!

    27. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

    28. நம்பற்குரியர் அவ்வீரர் தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

    29. தீ வளர்த்திடுவோம் பெருந் தீ வளர்த்திடுவோம்

    30. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா

    31. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்

    32. உலகத்து நாயகியே - எங்க முத்து மாரியம்மா...

    33. யாதுமாகி நின்றாய் காளி

    34. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே

    35. பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ!

    36. இந்த ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்?

    37. நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும்

    38. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்

    39. "பீடத்திலேறிக் கொண்டார் மனப்பீடத்தில் ஏறிக்கொண்டார்

    40. மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்...

    41. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

    42. எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

    43. மாதா – பராசக்தி ஆதி பரம்பொருளின் ஊக்கம் – அதை அன்னையெனப் பணிதல் ஆக்கம்

    44. எங்கிருந்தோ வந்தார்

    45. திக்குத் தெரியாத காட்டில் உனைத் தேடியலைந்தேனே...

    46. கடமையாவன தன்னைக் கட்டுதல் பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்...

    47. ஏழைகளைத் தோழமை கொள்வான் - செல்வம் ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்...

    48. கண்ணன் எங்கள் அரசன் புகழினைக் கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்...

    49. கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பார் – அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வந்திடுவார்...

    50. அன்பினைக் கைக்கொள் என்பான் - துன்பம் அத்தனையும் அப்போது தீரும் என்பான் - கண்ணன் என் தந்தை!

    51. பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே!

    52. போயின போயின துன்பங்கள் - நினை பெண் எனக் கொண்ட பொழுதிலே!

    53. "செல்வத்திற்கோர் குறையில்லை - எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன்றில்லை!

    54. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்!

    55. வேத முனி போன்றோர் - விருத்தராம் என் தந்தை இரு பாத மலர்கண்டு பரவசம் பெறுவேனோ?

    56. காற்று மெலிய தீயை அணைப்பான்! வலிய தீயை வளர்ப்பான்!

    57. துன்பமெனும் கடலைக் கடக்கும் தோணி அவர் பெயர் சோர்வெனும் பேயை ஓட்டும் மாட்சிமை அவர் பெயர்

    58. எம்முயிராசைகளும் - எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் செம்மையுற்றிட அருள்வாய் - நின்றவன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.

    59. என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ?

    60. கனவென்ன கனவே - என்றன் கண் துயிலாது நனவினிலே உற்ற கனவே.

    61. அன்பென்று கொட்டு முரசே அதில் ஆக்க முண்டாமென்று கொட்டு முரசே

    62. என் உள்ளத் தாசை அறிந்தவன் - மிக இன்புற்று உரைத் திடலாயினன்...

    63. தந்திரங்கள் பலவுஞ் செய்குவான் சவுரியங்கள் பலவுஞ் செய்குவான்.

    64. அன்பு மிக உடையான் தெளிந்த அறிவினால் உயிர்க்குலம் ஏற்றமுறவே...

    65. வேரும் வேரடி மண்ணுமிலாமலே வெந்து போக பகைமை பொசுக்குவான் பாரும் வானமும் ஆயிரமாகி ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்!

    66. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள்

    67. காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்

    68. உயிரே உன் பெருமை யாருக்குத் தெரியும்? நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.

    69. எட்டும் அறிவினில் யாருக்கும் இங்கே பெண் இளப்பில்லை காண் என்று கும்மியடி...

    70. தோன்றி அழிவது வாழ்க்கை. இதில் துன்பத்தோடு இன்பம்...

    71. துன்பமினி இல்லை. சோர்வில்லை. தோற்பில்லை. அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

    72. வாழ்க நீ எம்மான்

    73. சென்றதினி மீளாது நின் நற்செயல்கள் வாழ்க

    கார்முகிலாய்...

    அருள்புரிதல் வேண்டும் அப்பா!

    என்னுரை

    அனைவருக்கும் குவிந்த என் கரங்களின் வணக்கங்கள்.

    திருமதி. சிவானந்த விஜயலட்சுமி அம்மா அவர்களின் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்க அருட்செல்வரின் அன்புக் கட்டளையின்படி பொள்ளாச்சி சென்றிருந்த போதுதான் அருட்செல்வர் சொன்னார்கள்.

    என் தந்தையாரின் நூற்றாண்டு விழா வருகிறது. அவரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.

    பிரமித்துப் போனேன்.

    நிமிர்ந்து பார்க்கும் பரந்த வானமும், படுத்துப் புரளும் பூமியும் சங்கமிக்கும் ஓரிடம்தான் தொடுவானம்.

    தொட முடியாத எட்டத்தில் இருந்தாலும் தொடமுடியும் என்கிற நம்பிக்கையைத் தரும் தொடுவானக் கனவுகள்!

    கனவுகள் நனவாகவேண்டும்.

    அருட்செல்வர் அவர்கள் சிறப்பு ஆசிரியராக இருக்கும் சிறந்த பத்திரிகையான 'ஓம் சக்தி'யில் கதைகள், கட்டுரைகள் எழுதிய பரிச்சயத்தினால் அருட்செல்வர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை பிறந்தது.

    வார்த்தைகளின் கோர்வை அல்ல கதைகள்.

    வாழ்க்கையைப் பிழிவதுதான் கதை.

    ஆனால், கதையெனும் கற்பனை வானில் பறந்த எனக்கு, அருட்செல்வரின் ஐயா அவர்களின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் சந்தர்ப்பத்தைத் தந்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அற்புதம் இது.

    உணர்வுகளின் நெகிழ்ச்சிதான் வாழ்க்கை

    சீவிச் சீவி அறிவெனும் கத்தியால் இதய முனையைக் கூர்படுத்திக்கொண்ட அருட்செல்வரின் கட்டளை.

    கூட்டினாலும், கழித்தாலும் பூஜ்யம் மாறுவதில்லை.

    வாட்டினாலும், வதைப்பட்டாலும் நல்லவர்களின் மனத்தின் நிலை மாறுவதில்லை.

    இந்த மாறாத கருணை மனம்தான் அருட்செல்வர் அவர்களின் தனிச்சிறப்பு.

    நேற்றைய நினைவுகளின் ஈரத்தை நெஞ்சம் சுமந்தாலும், சிலருக்கு மனம் மட்டும் பாலைவனமாக இருக்கும். ஆனால், அருட்செல்வர் அப்படியல்ல. ஏனெனில் அருட்செல்வர் என்ற பெயரிலே 'அருள்' இருக்கிறது.

    அருட்செல்வர் அவர்கள் தந்த குறிப்புகளைப் படித்தபோது மறைந்த மாமேதை, உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஐயா திரு. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் அருமை, பெருமை, அந்தக் கொங்கர் குலத்தங்கத்தின் தனிச்சிறப்பு அத்தனையும் புரிந்தன.

    படிக்கப் படிக்க - பல விவரங்களைக் கேட்டு அறிய அறிய - பிரமிப்பில் - கூவ முடியாத ஊமைக்குயிலாகிப் போனேன்.

    'அன்பு பேசவைக்கும்' - என்பார்கள்.

    'அன்பு ஊமையாக்கும்' - என்பார்கள்.

    சூரியனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுவதைப் போல, சமுத்திர ராஜனுக்கு அவன் துளிகளாலேயே அபிஷேக ஆராதனை செய்வதைப் போல -

    அருட்செல்வர் தந்த குறிப்புகள், வரலாற்றுச் சிறப்புகள் சம்பந்தப்பட்ட பல நூல்கள் - இவைகளை வைத்துக்கொண்டே இந்த வரலாற்றுச் சிறப்புடைய புத்தகத்தை எழுதி முடித்துள்ளேன்.

    தேன்போல் பேசி தீய விஷம் தருகிற இந்த உலகில், ஏனென்று கேட்காமல் அனைவருக்கும் உதவும் நல்லெண்ணம் அனைவருக்கும் வந்துவிடுவதில்லை.

    இந்த நல்லெண்ணம் தந்தை, தனயன் இருவரிடத்திலும் இருந்தது, இருக்கிறது.

    முனைப்போடு தேடியும் கிடைக்காத வெற்றிகளை முன்னின்று தந்தவர் அருட்செல்வர் அவர்கள்.

    ஏழைக்கவிஞன் ஒருவன், அரசனிடம் போய் அரிசி புடைக்கிற முறத்தைப் பரிசாகக் கேட்கலாமா? என்று நினைத்திருந்த நேரத்தில் -

    அந்த அரசனே இவனைத் தேடி வந்து செல்வத்தைத் தந்த மாதிரியான நிலை!

    விசாரத்தைக் குறித்த வேதனையோடு இருந்த மனத்திற்கு வாழ்க்கையையே விசாரித்துப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம்!

    இந்தப் புத்தகம் எழுத எனக்கு வாய்ப்புக் கொடுத்த அருட்செல்வர் அவர்களுக்கு 'நன்றி' - என்கிற மூன்றெழுத்துப் போதாது.

    இந்த நன்றி, என் மனம் ஒன்றிச் சொல்லும் தனிச் சிறப்பெழுத்து!

    இந்தப் புத்தகம் - புனித நேயத்தை மனித நேயமாக மாற்றியவரின் உயிர் எழுத்து!

    முல்லைக்குத் தேர் தந்த பாரி - பழைய கதை.

    கான மயிலுக்குக் கலிங்கம் கொடுத்த பேகனும் - பழைய கதைதான். ஆனால், அந்த வள்ளல்களைப்போல - ஒரு நல்ல எழுத்துக்கு ஏற்றமும், தோற்றமும் தந்தவர் அருட்செல்வர் அவர்கள்.

    இனி நீங்கள் புத்தகத்தினுள் பயணிக்கலாம்.

    கவுண்டர் ஐயா அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் கடல். இந்தக் கடலில் பயணிக்க - இந்த வரலாற்றுச்சித்திரத்தின் உள்ளே வாசகர்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல ஒரு மாபெரும் கப்பலை எனக்கு அருட்செல்வர் தந்திருக்கிறார்!

    வழி தவறாமல், தடம் மாறாமல், புயல் காற்றடிக்காத வேளையில் இந்தக் கப்பல், இலக்கியம் என்ற கரையை அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பூமிக்குள் நீருற்று இருக்கிறது. கண்டுபிடிக்க ஒரு கருவியையும் என் கையில் தந்துள்ளார்கள். அதை வெளிப்படுத்திய பொறுப்புதான் எனக்கு. இந்தப் பொறுப்பை நான் நல்லபடியாகச் செய்து முடித்தேன் என்று நீங்கள் அனைவரும் நினைத்தால் அதுதான் மாபெரும் வெற்றி. இந்த அன்பு நீரூற்றில் நாம் அனைவரும் நனையலாம், வாருங்கள்.

    வாழ்வின் நம்பிக்கை நேரங்களை நாம் கற்கலாம். கை கோர்த்து வாருங்கள். இதை வாசித்து அன்பு மனங்களை நேசித்து, மனித நேயங்களைச் சுவாசிப்போம்.

    நாம் பாடம் கற்போம்.

    நம்பிக்கைகளைக் கற்போம்.

    நல்லவைகளைக் கற்போம்.

    வேண்டாதவற்றைத் தவிர்ப்போம்.

    வாழ்வின் உண்மைகளை உணர்வோம்.

    'ஓம் சக்தி' தந்த இந்த 'ஓம்'காரத்துடன் இந்த நன்றிக் கட்டுரையை முடிக்கிறேன்.

    ஆலயமணியின் ‘ஓங்காரம்’ நீண்ட நேரம் ஒலிப்பதைப்போல் இந்த மணி (விமலாரமணியின்) ஓசையும் உங்கள் அனைவரின் மனத்திலும் ஒலிக்கவேண்டும். அதுதான் எனக்கு வேண்டும். வாழ்க! வளர்க!

    இந்தப் புத்தகத்தை எழுத எனக்குப் பலவிதங்களில் பெரும் உதவியாக இருந்தவர்கள் பலர்.

    முதலில் குறிப்பிடவேண்டியவர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்கள். சென்னையிலிருந்த அவர் அருட்செல்வர் அவர்களின் விருப்பப்படி பொள்ளாச்சி வந்து இந்த வரலாற்றுச் சிறப்புடைய நாவலைப் பற்றிய விவரங்களை நேரில் கேட்டறிந்து, அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று விவரங்கள் சேகரித்து இந்தப் பணியை ஆரம்பித்தார்கள். ஆனால், விதி வலிது. பணி முடியும் முன்பு மரணம் அவரைத் தழுவியது.

    நிறுத்தப்பட்ட பணி அருட்செல்வர் அவர்களின் முயற்சியால் மீண்டும் துவக்கப்பட்டது.

    இந்தத் துவக்கத்தில்தான் இந்த வரலாற்றில் என் எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

    'சின்னச் சின்ன மூக்குத்தியாம்' என்ற பிரசித்தி பெற்ற திரைப்படப் பாடலை எழுதிய கவிஞர் கே.சி. எஸ். அருணாசலம் அவர்களின் எழுத்துக்கும் எண்ணங்களுக்கும் ஒரு தோற்றம் கொடுத்ததுதான் என் பணி.

    அடுத்து கவிஞர் பூபாளம் முருகேச பாண்டியன் அவர்கள், கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்கள் மறைவுக்கு பிறகு இந்நூலினை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டார் எனவும் அறிந்தேன்.

    அதன் பின்னர், கவிஞர் தேனரசன் செய்த பல பணிகள். அப்பணிகளை மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் செயலர் திரு.சி. இராமசாமி அவர்கள் மூன்று பாகங்களாக மின்னச்சு செய்து தந்தார்.

    அடுத்து ‘ஓம் சக்தி' பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பர நாதன் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    ‘கவிதை என்பது கறப்பது அல்ல, சுரப்பது' - என்பார் கவியரசர் வைரமுத்து. கவிஞர் சிதம்பரநாதன் அவர்களிடம் கவிதை மட்டும் சுரக்கவில்லை. அன்பும் சுரக்கிறது.

    என்னை என் உடன்பிறவா சகோதரியாய்ப் பாவித்து இந்த வரலாற்று நூல் எழுத ஆரம்பித்த ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வழிகாட்டி உதவியவர். சில சந்தேகங்கள் வந்து நான் கேள்வி கேட்டபோதெல்லாம் சளைக்காமல் பதில் தந்து என்னை உற்சாகப்படுத்தியவர்.

    'வேர்களை வழியனுப்பி நம்பிக்கையோடு காத்திருந்தால், நாளை பூப்பறிக்கலாம்' - என்ற நம்பிக்கை பாடத்தை எனக்கு உணர்த்தியவர்.

    அவரோடு ஒத்துழைத்த 'ஓம் சக்தி' அலுவலகத்தின் உதவியாளர்கள் திரு. அலெக்சாண்டர், திரு. காமராஜ், திரு. செல்வராஜ், திரு. குமரவேல், திரு. சண்முகம், திரு. மணிகண்டன், திரு. கண்ணன் போன்றோர் பல நிலைகளிலும் உதவியாக இருந்துள்ளார்கள். அத்துணைப் பேரின் அன்பையும் ஒத்துழைப்பையும் நினைவில் கொண்டு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    திருவள்ளுவர், பாரதியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மற்றும் புதுக்கவிதைகள் பல எழுதி என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய இந்தக்கால கவிஞர்கள் திரு. வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், திரு. கவிதாசன், திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரு. கோவைரமேஷ், திரு. சென்னிமலை தண்டபாணி, திரு. கோவை கோகுலன், திரு. நெல்லை நிலவன், இன்னும் நிறைய புத்தகங்கள். நிறைய முகமறியா மனிதர்கள். அவற்றை விவரிப்பின் பட்டியல் பெருகும்.

    அனைவருக்கும் என் அன்பு நல விசாரிப்'பூ'க்களுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    அன்புள்ள

    விமலா ரமணி

    புத்தக வெளியீட்டு விழாவின் போது

    1. பொழுது புலர்ந்தது - யாம் செய்த தவத்தால்

    சம்பவங்கள் சரித்திரமாக வேண்டும் என்றால், மனிதன் சரித்திரம் படைக்கவேண்டும். சாதனைகளால்தான் மனிதன் சாதாரணச் சம்பவங்களையும் சரித்திரமாக்குகிறான்.

    வரலாற்றுச் சிறப்புடைய மாமனிதர்கள் தம் பிறப்பால் மட்டுமல்லாது, தம் செயல்களாலும் உயர்ந்து நிற்கின்றனர். ஒரு மரத்தின் வயதை, வெட்டப்பட்ட அந்த மரத்தின் குறுக்குக் கோடுகளை வைத்துக் கண்டுபிடித்தார்களாம். மனிதனின் உயரத்தை அவன் வாழ்ந்த வாழ்க்கையை வைத்துக் கண்டு பிடிப்பார்கள்.

    ஈதல், இசைபட வாழ்தல் நம் தமிழர் மரபு. சத்தத்தையும் சங்கீதமாகக் கற்கத் தெரிந்தவர்கள் அறிவுடை மனிதர்கள்.

    நடை பயின்றபோதே கொடை பயின்றவர்கள் கொங்கு நாட்டின் முன்னோர்கள். இந்த ஈகை நிகழ்ச்சிதான் அழியாப் புகழை கொங்கு வேளாளர்களில் ஒரு குலமான செங்கண்ணர் குலத்துக்குத் தந்துள்ளது. ‘செல் விருந்தோம்பி வருவிருந்து பார்ப்பவர்' கொங்கு வேளாளர்கள்.

    கொங்கு வேளாளக் கவுண்டர்களில் 75 குலங்களில் செங்கண்ணர் குலமும் ஒன்று.

    செங்கண்ணர் என்பவர் யார்? இது சாதாரணக் கேள்வியல்ல. இதற்குப் பதிலாக ஒரு வரலாறே உள்ளது.

    இவர்கள் ஐந்நூறு தலைமுறைகளுக்கு முன்பு கங்காணியான காங்கேயத்திலிருந்து குடிபெயர்ந்து பொள்ளாச்சி வந்து நிலை கொண்டவர் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு.

    வழி வழி மரபுகளோடு, பெருமை கொண்ட குடி, குலம் மேலும் மேலும் வளர்முகம் நோக்கிச் செல்ல, தம் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தவர்தாம், நம் வரலாற்று நாயகர் நாச்சிமுத்து ஐயா அவர்கள். சீர் மிகுந்த செங்கண்ணர் குலத்தில் வந்து உதித்த நல்லமுத்துவின் இந்தச் செங்கண்ணர் குல மரபை கொஞ்சம் நாமும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

    செங்கண்ணர் பதத்தில் சேர்ந்துள்ள ‘செம்மைக்கு’ குளிர்ச்சி என்றொரு பொருளும் உண்டு. இவர்களுடைய குளுமை அருளாகிய குளுமை. செம்மை என்றால் சிறப்பு, ஒழுக்கம், திருத்தம், மிகுதி போன்ற பல்வேறு அர்த்தங்களும் உண்டு. ஆற்றல், பேராண்மை, ஆளுமை மிகுதி கொண்டவர்களாக செங்கண்ணர் குலத்தவர்கள் விளங்கினார்கள்.

    ஓர் அதிசய நிகழ்ச்சியைக் காட்ட சினிமாவாக இருந்தால், பூகம்பங்கள் அக்னிப் பிழம்புகளைக் கொட்டும். பூமியின் வெடிப்பு நிலங்களின் வழியே அந்த அக்னி நதி பிரவாஹம் எடுத்து ஓடும். அப்போது வானம் கறுத்து, மின்னல் பளிச்சிட்டு, இடி முழங்கி... மழை பொழிந்து, பூமி குளிர்ந்து, வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் துளிர்கள் துடிப்போடு மேலெழும்பி வரும். இப்படியெல்லாம் காட்சிகளாகக் காட்டுவார்கள்

    ஆனால், நம் வரலாற்று நாயகர் பிறந்தபோது இதுபோன்ற புற நிகழ்ச்சிகள் நடைபெறாவிட்டாலும், இதனைக் கோடிட்டுக் காட்டிய அக நிகழ்ச்சிகள் நிறைய நடந்தது நிஜம்.

    சுதந்திரப் பூகம்பம் வெடித்த காலகட்டம் அது. அக்னிப் பிழம்பாய் அனைவரின் இதயங்களிலும் தேசபக்தி பெருக்கெடுத்தோடிய நேரம் அது. கருக்கொண்ட மேகம் கருணை மழை பொழிவதைப்போல் பூமி குளிர்ந்து, வெடித்து நிலத்தில் துளிர்கள் விடுவதைப் போல் -

    மிடுக்கான தோற்றமும், நெற்றியில் திருநீறும், கிருதா மீசையும், சிலம்பப் பயிற்சி செய்து வலுவேறிய கட்டான உடலும் கொண்ட, மதிப்பிற்குரிய பழனிக் கவுண்டர் ஐயா அவர்களுக்கும், துணைவியார் செல்லம்மாள் அவர்களுக்கும் மகனாய் வந்து பிறந்தார், நம் காலத்து வரலாற்று நாயகர் நாச்சிமுத்து ஐயா அவர்கள்.

    தேசியமும், காங்கிரஸ் மீது கொண்ட ஈடுபாடும் உள்ள தந்தைக்கு மகனாய்ப் பிறந்த நாச்சிமுத்து ஐயா அவர்களிடமும் இந்தக் குணங்கள் இயல்பாக மிகுந்து இருந்தன.

    தந்தை பழனிக் கவுண்டர் ஊர்ப்பெரிய தனக்காரர். செல்வாக்கு மிக்கவர். காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தேசபக்தி மிக்க 'சுதேசிமித்திரன்' பத்திரிகை வாயிலாக நாட்டு நடப்புக்களைப் புரிந்து கொண்டவர்.

    காந்திஜி தோற்றுவித்த கள்ளுக்கடை மறியல் அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்ததொரு இயக்கம். அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பழனிக்கவுண்டர் ஐயா அவர்கள் அதற்கு முழு ஆதரவும் தந்ததோடு - கள்ளுக்கடை வாயிலில் ஏதாவது ஓர் இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்வாராம். அவரின் கம்பீரமும், வீற்றிருக்கும் கோலமும், கூரிய பார்வையும் குடிக்க வருகிறவர்களுக்குப் போதைக்குப் பதிலாக பயத்தையே தந்தது. கள்ளுக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காணாமல் போய் விடுவார்கள்!

    மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாயில்லாப் பிராணிகளுக்கும் அவர் புரிந்த சேவை அற்புதமானது.

    அந்தக் காலத்தில் பாம்புகள் அதிகம். காடு மேடுகளில் சுற்றித் திரியும். அப்படித் திரியும் பாம்புகளைத் ‘திசைக்கட்டு' செய்து காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்தத் 'திசைக்கட்டு' வித்தையில் கை தேர்ந்தவர் பழனிக்கவுண்டர் அவர்கள்.

    மூன்று திசைகளைக் கட்டி முடக்கிவிட்டு, ஒரு திசையை மட்டும் கட்டாமல் விட்டு, பாம்புகளைக் கொல்லாமல் அங்கு முடுக்கி விடுவதுதான் 'திசைக்கட்டு.' இந்த மந்திர வித்தை அறிந்தவர் பழனிக் கவுண்டர் அவர்கள்.

    மூன்று திசை

    Enjoying the preview?
    Page 1 of 1