Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru
Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru
Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru
Ebook195 pages1 hour

Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"“ஒரு கவிராஜனின் கதை” என்கிற இந்த நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். கவிராஜனாக விளங்கிய காளமேகப்புலவர் குறித்து தமிழ்கூறும் நல்லுலகம் அறியவேண்டியதும் அவசியம். இந்நூல் காளமேகத்தை நமக்கு இலகுவாக அறிமுகம் செய்கிறது.
திருவானைக்காவில் அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால், பரிசாரகனாக இருந்தவன் கவிசாரகனாக அரசனுடன் சரியாசனம் வைக்குமளவு உயர்ந்து ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகை கவிகளைப் பொழியும் கவி காளமேகமாக ஆன அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் இயற்றிய கவிதைகளில் சில விளக்கத்துடன் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது."

Languageதமிழ்
Release dateJul 25, 2023
ISBN9788179509210
Oru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru

Related to Oru Kavirajanin Kathai

Related ebooks

Related categories

Reviews for Oru Kavirajanin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kavirajanin Kathai - Indira Soundararajan

    ஒரு கவிராஜனின் கதை

    காளமேகப் புலவனின் வரலாறு

    Indira Soundarrajan

    GIRI

    பதிப்புரிமை © 2023 Author

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை

    இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்பட நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.

    ISBN-13: 9788179509210

    ISBN-10: 8179509214

    கவர் வடிவமைப்பு: GIRI

    என்னுரை

    உங்கள் கரங்களில் தவழ்ந்தபடி இருக்கும் இந்த கவிராஜனின் கதை ஒரு வித்தியாசமான புத்தகம். கவிராஜன் என்ற உடனேயே பல கவியரசர்கள் நம் நினைவுகளில் முகம் காட்டுவார்கள். கம்பனில் அது தொடங்கக் கூடும்... நிகழ் காலத்தில் அது கண்ணதாசன், வாலி வரை நீளவும் கூடும்.

    இவர்கள் எல்லோருமே அறியப்பட வேண்டியவர்கள்தான்! இவர்கள் ஒவ்வொருவர் பின்புலத்திலும் ஒரு சுவையான வரலாறும் இருக்கவே செய்கிறது. ஆயினும் இந்த பட்டியலில் பெரிதும் அறியப்பட வேண்டியவனாக நான் கருதுவது காளமேகம் என்கிற புலவனைத்தான்.

    உயர்சாதிக்காரனாக (பிராம்மண குலம்) இவன் இருந்த போதிலும் ஒரு சமையல்காரன் என்பதே இவனுக்கான அடையாளமாக முதலில் இருந்தது. அடுப்படியில் கிடந்து வெந்த இவன் ஒரு கவிஞனாக உருமாற்றம் பெற்ற பின்புலம் மிக அசாதாரணமான ஒன்றாகவும், என்னை பெரிதும் வியக்க வைத்த ஒன்றாகவும் இருந்ததையும் நான் அறிந்தபோது என் வியப்பு பல மடங்கு அதிகமாயிற்று.

    இந்த உலகில் எவ்வளவோ கலை அம்சங்கள் உள்ளன. அதை வரிசைப்படுத்தி அவைகளின் மொத்த எண்ணிக்கை 64 என்று பட்டியலே போட்டுள்ளனர். இதை அறிந்தே கம்பனும் தனது கலைமகள் துதியில் எடுத்த எடுப்பில் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை...!’ என்று தொடங்கிப் பாடினான்.

    இந்த 64 கலைகளில் உடனடி ஈர்ப்பு அளிப்பது இரண்டு தான். ஒன்று இசை, இன்னொன்று சமையல்! மூன்றாவது கவியாற்றல்!

    வரிசையில் இது மூன்றாவதாக இருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்பதில் இதுவே முதலிடத்தில் உள்ளது. இந்த உலகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்து வருகிறது. அதை லட்சக்கணக்கில் கூட சொல்லலாம். இந்த உலகில் பல கோடி பேர் வாழ்ந்து முடித்து விட்டனர் – பல கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், பல கோடிபேர் வாழவும் போகின்றனர்.

    எத்தனை கோடி பேர் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் ஒரு கால அளவு இருக்கிறது. அதை விஞ்சி ஒருவன் வாழ்ந்ததே இல்லை.

    ‘நெருநல்உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்கிற திருக்குறளை, எந்த ஒருவரும் அழியாமல் வாழ்ந்ததே இல்லை. அழியாதபடி இருப்பது உலகு மட்டும்தான். அதுதான் அதன் பெருமையும் கூட என்பதே அக்குறளுக்கான பொருளாகும்.

    அழியாப் பெருவாழ்வு என்பது உலகுக்கே... அதன் கண் வாழ்ந்திடும் உயிர்களுக்கல்ல என்பது இதன் நுண் பொருள் எனலாம்.

    ஆனால் இந்த உலகுக்கு இணையாக, ஏன் இதைக் கடந்தும் வாழ்ந்திடும் வல்லமை கொண்ட ஒரு விஷயம் உண்டு என்று சொன்னால் அது கவிமயமான இலக்கிய நூலே! இதற்கு சாட்சியாக ராமாயணம், மகாபாரதம் என்கிற இதிகாசங்கள் ஒரு புறம், புராணங்கள் மறுபுறம் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பட்டியலில் திருக்குறள் முதல் சங்க இலக்கியங்கள் வரை சகலமும் அடக்கம். இந்த உலகம் பேரரசர்கள் முதல் பேரழகிகள், பெரும் பணக்காரர்கள், மாவீரர்கள் என்று பல தரப்பட்டவர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமே நினைக்கப்பட்டனர்.

    அவர்கள் மறையவும் அவர்கள் சார்ந்த சகலமும் மறைந்து போனது. ஆனால் ஒரு பெரும் புலவன் எழுதிய எழுத்துக்கள் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், தன்னிலை மாறாது அப்படியே இருந்து அந்த புலவனை நமக்குள் வாழ வைத்துக் கொண்டே இருக்கிறது.

    அப்படி வாழும் புலவர்களில் ஒருவனே காளமேகம். இந்த கவிராஜன் கம்பன் போல், அவ்வை போல், வள்ளுவன் போல் ஒட்டு மொத்த ஜன சமூகத்துக்கென்று அறக்கருத்துகளை பெரிதாக சொல்லவில்லை. அதனால் அவர்கள் போல் இவன் பிரபலமாகவில்லை. ஆனால் இவனைப் போல மொழியை அதன் சொற்களை நுட்பமாய் பயன்படுத்திய புலவன் வேறு எங்கும் இல்லை.

    சந்ததமாய் எழுதுவதிலும் சரி, மறைபொருள் உரைப்பதிலும் சரி, விடுகதையாய், புதிராய் என்று பல தளங்களில் இவன் பாடல்கள் மிளிர்கின்றன.

    ரசங்கள் ஒன்பதிலும் இவன் பாடல் எழுதியுள்ளான். எள்ளல், கோபம், தாபம், வீரம் என்று உணர்ச்சிகளை தன் பாடல்களுக்குள் புகுத்தி இவன் படைத்த பாடல்கள் கவிஞர்கள் உலகில் சாகா வரம் பெற்றவையாகும்.

    மக்கள் கவிஞர்கள் நடுவில் கவிஞர்களின் கவிஞனாய் திகழ்கிறான் காளமேகம். ஒரே ஒரு எழுத்தை மட்டுமே கொண்டு நான்கு வரிகளில் பாடல் பாட முடியுமா? காளமேகம் பாடிக் காட்டியிருக்கிறான்... இவன் போல் சவால்களை சந்தித்த புலவனும் எவனுமில்லை. மேலினும் மேலாக அருள்திறம் மிக உடையவனாகவும் இவன் திகழ்கிறான். வடக்கில் இம்மட்டில் ஒரு காளிதாசனை உதாரணம் காட்டினால் தெற்கில் இவனே நமக்கு நல்ல உதாரணம்.

    கவித்திறம் என்பது வெறும் கற்பனையால் பட்டறிவால் மட்டும் வருவதன்று. அதற்கு இறையருள் பெரிதும் தேவை என்பதே காளமேகம் வாழ்வு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

    தமிழ் கூறும் நல்லுலகம் மறந்துவிடக்கூடாத அருளாளர் வரிசையிலும், பெரும் கவிஞர் வரிசையிலும் இருக்கும் இந்த காளமேகம் குறித்து என்னால் எவ்வளவு அறிந்து கொள்ள முடியுமோ அவ்வளவிற்கு முயன்று இந்த நூலை நான் படைத்துள்ளேன்.

    இதில் உள்ளவைகள் சொல்பமே! விடுபட்டவைகள் ஏராளம். ஆயினும், இந்த நூலை வாசிப்பவர்கள் தமிழின் செழுமையோடு அதன் வலிமையையும் உணரலாம். அப்படியே காளமேகத்தின் வாழ்வை அறிந்து அவனுக்கு தங்கள் மனதில் ஒரு அழியா இடத்தை தரலாம்.

    இது ஒரு எளிய முயற்சி. கருத்துப்பிழைகள் ஏதும் இருப்பின் பொருத்தருள்க. இதை எழுத வாய்ப்பளித்த காமகோடி இதழாளர்களுக்கும் கிரி நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பணிவன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    6.6.2023

    மதுரை-3

    ◆◆◆

    பதிப்புரை

    திருவானைக்காவில் அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால், பரிசாரகனாக இருந்தவன் கவிசாரகனாக அரசனுடன் சரியாசனம் வைக்குமளவு உயர்ந்து ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகை கவிகளைப் பொழியும் கவி காளமேகமாக ஆன அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் இயற்றிய கவிதைகளில் சில விளக்கத்துடன் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ‘காளமேகத்தை காலம் கொண்டு சென்றாலும், அம் மேகம் வர்ஷித்ததை எம்மேகமும் கொண்டு செல்லக்கூடாது’ என்று அப்போதே படியெடுத்து வைத்திருந்த பாடல்களை தற்போது எழுத்துலகில் தனக்கென தனி முத்திரையை பதித்துக் கொண்டிருக்கும் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சேகரித்து அனைவருக்கும் புரியும் வண்ணம், அவருடைய தனிப்பட்ட பாணியில் விளக்கத்துடன் அளித்துள்ள அவரது பிரயத்தனத்தையும், முயற்சியையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கிரி நிறுவனம் வெகுவாக பாராட்டுகிறது. தமிழ் கூறும் நல்லுலகிற்கும், தமிழ் ஆய்வாளர்களுக்கும் அவரது இந்த படைப்பானது நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல் ஒரு தலைசிறந்த கவிஞனின் படைப்புகள், தொடர்ந்து பல படைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கும் இவருக்குத்தான் புரியும் என்பது போல, ஆழ்ந்து பல விஷயங்களை அந்த கவிஞனின் கோணத்திலேயே விளக்கியிருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் புகழ் காலத்தை வென்று இருக்கும் என்ற வாழ்த்துக்களோடு

    ‘ஒரு கவிராஜனின் கதை’ என்ற புத்தகத்தை வெளியிடுவதில் கிரி நிறுவனம் பெருமை கொள்கிறது.

    ‘பட்டுப்பூச்சியின் பறக்கும் திசை கூட அவளருளால் தான் தீர்மானமாகிறது. நம் வசம் எதுவுமில்லை’ என்ற நமது ஆசிரியரின் வார்த்தைகளையே சாசனமாகக் கொண்டு இவ்வுலகிற்கு காளமேகத்தை தந்த அன்னை அகிலாண்டேஸ்வரியின் பொற்பாதங்களில் இப்புத்தகத்தை ஸமர்ப்பிக்கிறோம்.

    பதிப்பகத்தார்

    ◆◆◆

    அத்தியாயம் 1

    திருமோகூர்!

    மதுரையை தலைநகராகக் கொண்ட பாண்டி நாட்டின் திவ்ய தேசங்களில் ஒன்று இது. திருமாலுக்கான திவ்யதேசங்களில் 94-வது திவ்ய தேசமாக விளங்கிடும் இத்தலம் மோகன க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    எம்பெருமான் இங்கே காளமேகப் பெருமாள் என்றும் வழித்துணைப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறான். தாயாரின் திருநாமம் மோகனவல்லி. படிதாண்டாப் பத்தினி என்றும் இவளுக்கொரு சிறப்புப் பெயருண்டு!

    மிக விசேஷமான இத்தலத்தின் ஆலயத்து பரிசாரகர் ராகவ நம்பி... இந்த ராகவ நம்பி அன்றைய நைவேத்ய பிரசாதத்தை தயாரித்தபடி இருந்திட அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தான் அவரின் ஒரே பிள்ளையான வரதன் என்கிற காளமேகன்!

    தந்தை நம்பி கச்சம் உடுத்தி அதை இழுத்துக் கட்டிக் கொண்டு வியர்த்து வடிய அடுப்பை ஊதிக் கொண்டிருக்க, உள்ளே திருச்சன்னிதியில் பிரபந்த பாராயணம் ஒலித்தபடி இருந்தது.

    "தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்

    நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்

    தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக்கனிவாய்

    காளமேகத்தையன்றி மற்று ஒன்று இலம் கதியே...!"

    நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தை கோஷ்டியார் ஒலித்தபடி இருக்க, அதைக் கேட்ட வரதனுக்குள் ஒரு கேள்வி. அக்கேள்வியை அப்பனான ராகவ நம்பியிடம் கேட்கத் தொடங்கினான்.

    அப்பா...

    அழைத்தாயா வரதா?

    ஆமாமப்பா... அங்கே கோஷ்டியினர் பாராயணம் செய்து கொண்டிருப்பது நம்மாழ்வார் பாசுரத்தை தானே?

    பரவாயில்லையே... சரியாகச் சொல்லி விட்டாயே?

    தினமும் தான் காதில் விழுகிறதே? ஆமாம் நீங்கள் ஏனப்பா அந்த கோஷ்டியில் சேர்ந்து பாசுரம் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?

    அதற்கு எனக்கு எங்கே இருக்கிறது நேரம்... இந்த அடுப்படியிலேயே சரியாக இருக்கிறதே?

    இதை நீங்கள் தான் செய்ய வேண்டுமா அப்பா... அவர்களில் ஒருவர் வந்து செய்யக் கூடாதா?

    அது எப்படி? மடப்பள்ளி பிராம்மணன் நான். நான் தானே இதை செய்ய வேண்டும்?

    அப்படியானால் மடப்பள்ளி பிராம்மணன் கோஷ்டிப் பாசுரம் சொல்லக் கூடாதா?

    அப்படியெல்லாமில்லை. நான் இங்கிருந்தபடியே மனதுக்குள் சொல்லிக் கொண்டு தானிருக்கிறேன்...

    மனதுக்குள் நான் கூட சொல்லத்தான் செய்கிறேன். முறையாக எம்பெருமான் முன் நின்று கம்பீரமாகச் சொல்வது போல் அது வருமா?

    வரதா... எதற்காக நீ இப்படி எல்லாம் கேட்கிறாய்?

    மனதில் தோன்றியது... கேட்டேன்!

    எம்பெருமானுக்கு அமுது சமைப்பதே நம் பணி. அது வேறு எவர்க்கு வாய்க்கும்? இதை நீ தாழ்வாக கருதிவிடாதே...

    தாழ்வாகக் கருதவில்லை. உயர்வாகவும் கருத என்னால் முடியவில்லை...

    அப்படியெல்லாம் நினைக்காதே... நம் கடமையை நாம் ஆசையாகவும் தூய்மையாகவும் செய்ய வேண்டும். நாம் சமைப்பதே பிரசாதம் என்றாகிறது. பிரசாதத்துக்கு பொருள் தெரியுமா உனக்கு?

    தெரியாது... நீங்களே கூறிவிடுங்கள்...

    " ‘ப்ர’ என்றால் பெரிய என்று ஒரு பொருள் உண்டு. ப்ரகாரம், ப்ரசவம், ப்ரதேசம்... என்கிற சொற்களை எண்ணிப்பார். பெரிதானது என்பதே அதன் உட்பொருள்! அது

    Enjoying the preview?
    Page 1 of 1