Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Kodi Ragasiyam
Aayiram Kodi Ragasiyam
Aayiram Kodi Ragasiyam
Ebook126 pages58 minutes

Aayiram Kodi Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல ரகசியங்களையும் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய சித்தன் மலை. பின்னணியில் எழுதப்பட்ட அமானுஷ்ய நாவல். மலை மீது இருக்கும் சிவாலயம். மலை மீது இருக்கும் சிவாலயத்திற்குள் புதைந்திருக்கும் ஆயிரம் கோடி ரகசியம் எப்படி வெளிப்பட்டது.
சிவாச்சாரியார் சுந்திரமூர்த்தியின் ஓரே மகள் வைதேகி...
சித்தன் மலைக்கு சுற்றுலாவரும் கல்லூரி மாணவ - மாணவியர்கள்... பெண்பார்க்க வந்து வைதேகியைக் கட்டிக்கொள்வதாய் ஆசை வார்த்தை காட்டுகிற கொள்ளையன...
வைதேகி கொள்ளையனிடமிருந்து தப்பினாளா?
ஆயிரம்கோடி ரகசியம் காப்பாற்றப்பட்டதா?
சிவாலயத்தினுள் சிவாச்சாரியாரிடம் வயதான சுமங்கலி உருவில் வந்து தங்க குடத்தை கேட்கும் பெண் யார்...?
பரவசமான நாவல் இது!
படித்துப்பாருங்கள்!
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305667
Aayiram Kodi Ragasiyam

Read more from Maheshwaran

Related to Aayiram Kodi Ragasiyam

Related ebooks

Related categories

Reviews for Aayiram Kodi Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Kodi Ragasiyam - Maheshwaran

    http://www.pustaka.co.in

    ஆயிரம் கோடி ரகசியம்

    Aayiram Kodi Ragasiyam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சித்தன் மலை

    தனக்குள் ஏகப்பட்ட ரகசியங்களையும், அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும், ஆபத்துகளையும், புதிர்களையும் உள்ளடக்கிக் கொண்டு பரமசாது போல படுத்திருந்தது.

    தூரத்தில் இருந்து பார்க்கும்போது சடாமுடி தரித்த சாமியார் ஒருவர் சம்மணமிட்டு அமர்ந்திருப்பதைப் போல தோற்றமளிக்கும். அருகில் நெருங்கி வந்தால்தான் பச்சைப் போர்வையைப் போல செடிகொடிகள் மண்டி கிடக்கும் மலை கண்ணுக்கு தெரியும்.

    சித்தன் மலைக்கு வரமுடியாதவர்கள் தொலைவில் இருந்தபடியே தங்கள் வேண்டுதலை மனசுக்குள் பிரார்த்தனைப் பண்ணிக் கொள்வார்கள். பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.

    நினைத்த விஷயம் நல்ல காரியமாக இருந்தால் அது கண்டிப்பாய் பலிக்கும். இல்லாவிட்டால் பலிக்கவே பலிக்காது.

    சித்தன் மலை அபூர்வ சக்தி வாய்ந்தமலை.

    அங்கிருந்து ஒரு சிறுதுரும்பைக் கூட யாரும் கொண்டுபோக முடியாது. சுற்றுப்புற மற்ற மலைகள் இல்லாமல் கல்குவாரி முதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருந்தாலும் சித்தன் மலையை யாராலும் இன்றுவரை நெருங்க முடியவில்லை.

    தன் ஆட்களுடன் சித்தன் மலையை முற்றுகையிட்டு அதன் ஒருபகுதியை வெடி வைத்து தகர்க்க முயன்ற கல்குவாரி முதலாளி ஒருவர் அங்கேயே விஷப்பாம்பு தீண்டி வாயில் நுரைதள்ளி மாண்டு போனார்.

    பாம்புக்கடித்தது யதார்த்தமான நிகழ்வு. சாதாரண மலைதான் இது. இங்கே மாயுமும் இல்லை மந்திரமும் இல்லை. இந்த சித்தன் மலை என்னை என்ன செய்யுதுன்னு பார்க்கலாம் வீம்பு பேசியபடியே சித்தன் மலையடிவாரத்தில் கூடாரம் போட்டான் இன்னொரு கல்குவாரி முதலாளி.

    திமிர்ப் பிடித்தவன்

    செல்வ செருக்குமிக்கவன்.

    ஆரம்பத்தில் ரௌடித்தனம் பண்ணி கட்டப்பஞ்சாயத்து மூலம் வளர்ந்து இன்று கல்குவாரி மூலம் லட்சங்களை பார்த்துக் கொண்டிருப்பவன்.

    எந்த அசம்பாவிதமும் நிகழாமல் மலையடிவாரத்தில் பாறைகளை தகர்க்கும் பணி நடக்கத் தொடங்கியது.

    என்னங்க.... சீக்கிரம் கிளம்பி வாங்க... நம்ம நிம்மிக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்து துடிக்கறா.... படபடப்பாய் செல்போன் மூலம் தகவல் சொன்னாள் மனைவி.

    இதோ வர்றேண்டா.... செல்லம்.... பயப்படாம இரு... நிம்மிக்கு ஒண்ணும் ஆகாது....

    நிம்மி என்கிற நிர்மலா ஒரே செல்லமகள்.

    பாசம் பொங்கியது.

    பதற வைத்தது.

    படபடப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் காரை எடுத்துக் கொண்டு சித்தன் மலை அடிவாரத்திலிருந்து கிளம்பினான்.

    எதிரே வந்து கொண்டிருந்தது ஒருலாரி.

    லாரி சீரான வேகத்தில்தான் வந்தது.

    இவனால்தான் நிதானமாக காரை செலுத்த முடியவில்லை.

    ஒரு திருப்பத்தில் லாரியின் மீது காரை மோதிவிட்டான்.

    காரினுள் இருந்தவன் காரோடு சேர்த்து அப்பளமாகிப் போனான். அதே இடத்தில் ஆள் காலி.

    இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகுதான் எல்லோரும் சித்தன் மலையை திகிலாய்ப்பார்க்கத் தொடங்கினார்கள்.

    லட்சம்லட்சமா லாபம் கெடைக்கும்தான். ஆனா உயிர் போனா திரும்பி வருமா?

    சித்தன் மலைப் பக்கம் அடிவைக்கவே யோசித்தார்கள். தயங்கினார்கள்.

    அதனால்தான் சித்தன் மலை மீது சின்னக்கீறல்கூட விழாமல் இருந்தது.

    சித்தன் மலையில் ஒரு சிவன்கோவில்

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவில்.... ஒன்பதடுக்கு ராஜகோபுரம்.

    மூன்று சுற்று பிரகாரம்....

    கம்பீரமான கொடிமரம்... எல்லாமே... இன்றைக்கு சிதில் அடைந்து காணப்பட்டது.

    சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு... வெகு விமரிசையாக திருவிழாக்கள் எல்லாம் நடந்த கோவில். பின்னர் ஜமீன்தார்களாலும் போற்றி பாதுகாக்கப்பட்ட கோவில். இப்போது பராமரிக்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

    இந்திரலோகத்து தேவர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்துச் செல்கிறபோது தவறி கீழே விழுந்த சிறுசிறு துளி அமிர்தமே இங்கே சிவலிங்கமாக மாறிப்போனதாம். இது தல வரலாறு.

    வெள்ளை வெளீரென்ற சிவலிங்கம். மூன்றரையடி உயரம். கீழ்பகுதி ஐந்தரையடி அகலம். வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு பேரழகு. அமிர்தகடேஸ்வரர் என்று பெயர்.

    அம்பாளுக்கு யோகநாயகி என்று பெயர்.

    சுற்றுப்பிரஹாரத்தில் வரிசையாய் பிற சாமிகளுக்கு சன்னதிகள்.

    நவக்கிரஹ மண்டபம்.

    சிற்ப மண்டபம்.

    நாட்டிய அரங்கம் நேர் எதிரே நர்த்தனம் ஆடுகிற பிரமாண்டமான நடராஜர் சிற்பம் ஆயிரம்கால் மண்டபம்.

    நந்தவனம்

    நீர்ச்சுனை எல்லாமே கோவிலுக்குள் இருந்தது.

    கோவிலின் மூன்றாவது பிரஹாரம் ரொம்ப உயரமானது.

    நான்கு வாசல்

    மூன்று வாசல் இன்று செடிகொடிகள் மண்டி இடிந்து போய் ஆட்கள் நுழைய முடியாத அளவிற்கு அடைப்பட்டு கிடந்தது.

    கிழக்கு பக்க வாசல் மட்டும்தான் ஓரளவிற்கு அடைபடாமல் காட்சியளித்தது.

    எப்போதேனும் வெளியூரிலிருந்து வருகிற பக்தர்கள்... பிரதோஷக்காலங்களில் ஓரளவிற்கு கூட்டம் வரும்...

    கோவிலுக்கென்று ஏகப்பட்ட நிலங்கள் இருந்தது. அதை தங்கள் வசம் வைத்து சாகுபடி செய்பவர்கள் தங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அமிர்தகடேஸ்வரசாமிக்கு கொண்டுவந்து படியளந்து விடுவார்கள்.

    மூட்டை மூட்டையாய் நெல், பயிறு, உளுந்து, எள் என வந்து குவியும்.

    வயதான சிவாச்சாரியார் ஒருவர்தான் நாள் தவறாமல் அமிர்தகடேஸ்வர சாமிக்கு ஐந்துகாலப் பூஜைகளையும் செய்துவந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1