Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tick.. Tick.. Thik.
Tick.. Tick.. Thik.
Tick.. Tick.. Thik.
Ebook69 pages36 minutes

Tick.. Tick.. Thik.

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மணமகள் மீராவை தீர்த்து கட்டுவதற்காக மணமகள் ஊர்வலத்தில் வைக்கப்படும் வெடிகுண்டு... காளி என்ற கூலிபடையாள்தான் அந்த வெடிகுண்டை வைக்கிறான். அந்த கல்யாணத்திற்கு அவன் மனைவி ஒயிலா தன் குழந்தைகளோடு செல்கிறாள்‌. மணமகள் மீராவை ஒருதலையாய் விரும்பிய வினோத்தின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதா? கல்யாண மண்டபம் வரை மணமகள் ஊர்வலம் பத்திரமாக சென்றதா? வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததா இல்லையா ஒயிலாவும் குழந்தைகளும் தப்பினார்களா? டிக்.. டிக்.. திக். வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580128310158
Tick.. Tick.. Thik.

Read more from Maheshwaran

Related to Tick.. Tick.. Thik.

Related ebooks

Reviews for Tick.. Tick.. Thik.

Rating: 4 out of 5 stars
4/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    G o o o d s t o r y

Book preview

Tick.. Tick.. Thik. - Maheshwaran

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

டிக்.. டிக்.. திக்.

Tick.. Tick.. Thik.

Author:

மகேஷ்வரன்

Maheshwaran

For more books

https://www.pustaka.co.in/home/author/maheshwaran

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

எல்லா... அழைப்பிதழ்களையும்... மஞ்சள் தடவிட்டியா... மீரா...?

வாஞ்சையாய் மகளைப் பார்த்தாள் கல்யாணி...

ம்...

என்னைக்கு... குடுக்க ஆரம்பிக்கப் போறே...?

நாளைக்கே...!

மஞ்சள் தடவிய... அழைப்பிதழ்களை கட்டுகட்டாய் அடுக்கி... சணலில் கட்டி... மேஜைமீது வைத்தாள்... மீரா.

கல்யாணத்துக்கு இன்னும்... பதினைஞ்சே... நாள் தான் இருக்கு... எல்லாத்தையும்... சட்டுபுட்டுன்னு... குடுத்து... முடிச்சிடு...

சரிம்மா...!

யாரோட பேரும் விட்டுப் போயிடக்கூடாது...! பாவம்... உங்கப்பா... பணத்தைப் புரட்டவும்... நகைகள் வாங்கறதுக்கும்... அலைஞ்சுகிட்டிருக்கார்...! பத்திரிகை... குடுக்கறதுக்கு... வீடு வீடா போறதுக்கு... அவரை இழுக்காதே! நீயே... எல்லாத்தையும்... பார்த்துக்க! வேணும்னா... ஆண்டாளை... தொணைக்கு... அழைச்சுக்க... மீரா...

சரிம்மா...!

தலையை பலமாய் ஆட்டினாள் மீரா...

அப்போது... மீராவை நோக்கி... வேகமாய் ஓடிவந்தாள்... ஆண்டாள்!

மீராவின் தங்கை...

மீராவை விட இரண்டுவயது இளையவள்...

அக்கா... உனக்கு போன்...

எனக்கா?

உனக்கேதான்...!

யார்கிட்டேர்ந்து...?

அதை... ரிஸிவரை எடுத்து... நீயே தெரிஞ்சுக்க...!

கேலியாய் சிரித்துக்கொண்டு நகர்ந்தாள்... ஆண்டாள்...

அவர்கள் வீட்டில் போன் இல்லை...

பக்கத்தில் இருக்கிற சேதுமாதவன் வீட்டிற்குத்தான் போகவேண்டும்... மீரா... ஆர்வமாய் ஓடினாள்.

அவர்கள் வீட்டு ஹாலில்... மூலையிலிருந்த டீபாய் மீது... ரிஸீவர் கவிழ்க்கப்படாமல்... மல்லாந்த நிலையில்... இருந்தது.

ரிஸீவரைக் கையிலெடுத்தாள்...

ஹலோ... என்றாள்...

பேசறது... மீராதானே?

மறுமுனையில்... ஒரு ஆண்குரல் கேட்டது...

ஆமா...! நீங்க யாரு?

என்னைத் தெரியலையா... மீரா?

தெரியலை...! சட்டுன்னு... சொல்லுங்க! யாரு... நீங்க? சற்றே கோபமாய்க் கேட்டாள் மீரா...

கிருஷ்ணா...! உன்னோட மயில்கழுத்துல இன்னும்... பதினைஞ்சே நாள்ல... மூணு முடிச்சுப் போடப் போறவன்...!

நீ... நீங்களா! உங்களுக்கு... எ... எப்படி எங்க... பக்கத்து வீட்டு போன் நெம்பர் தெரியும்...?

உன்னைப் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே... கேட்டு வாங்கி வெச்சுக்கிட்டேன்...!

சரி... என்ன விஷயம்னு... சொல்லுங்க...!

"விஷயம்... இருந்தாதான் உன்கூட... நா...

Enjoying the preview?
Page 1 of 1