Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anjuvatharkku Manju
Anjuvatharkku Manju
Anjuvatharkku Manju
Ebook98 pages1 hour

Anjuvatharkku Manju

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466480
Anjuvatharkku Manju

Read more from Rajendrakumar

Related to Anjuvatharkku Manju

Related ebooks

Related categories

Reviews for Anjuvatharkku Manju

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Anjuvatharkku Manju - Rajendrakumar

15

1

மழை...

பெய்தால் அடை மழை, அல்லது வரண்டால் வறட்சி!

ஆந்திர சீதோஷ்ணம் வினோதமானது.

வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் கேட்டவாறேயிருக்க வேண்டிய மாநிலம்.

அதிகமான சீதோஷ்ணமில்லாத ஒரு பகல் நேரப் பொழுது...

போக்குவரத்து குறைந்த அந்த நெடுஞ்சாலையில் காரை நழுவ விட்டுக் கொண்டிருந்த ரவிசங்கர் மனம் நிரம்பியிருந்தார். திருப்தியாக சிரித்தார். திருப்திக்கு காரணமிருந்தது.

அவரது ஆந்திர பிரதேச சுற்றுப் பயணத்தின் தொழில் ரீதியான வெற்றி.

ஒன்று: வெளிப்படையாக கிடைக்கவிருக்கும் லாபம்.

தவிர: யாருக்கும் தெரியால் வந்து சேர்ந்த கறுப்புப் பணம் - லட்சக்கணக்கில்.

இப்போது தான் ஊர் பெயர் தெரியாத கிராம வங்கி ஒன்றில் மாற்றுப் பெயரில் துவக்கிய கணக்கில் பணத்தைச் சேர்த்து விட்டு வந்தார்.

யார் சார் நீங்க? திடீர்னு இவ்வளவு பணம் போடறீங்க?

லுக் மானேஜர். இது ரகசியம். உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஆட்சேபணையிருந்தால் சொல்லுங்கள். மெட்ராஸில் எனக்குத் தெரியாத மானேஜர்கள் இல்லாமலில்லை.

நோ... நோ... அதற்கில்லை சார். பிக்ஸட்டில் கொஞ்சம் போட்டால் தொல்லை வராது...

டூ இட்.

இன்னும் ஆறு மாச காலத்துக்கு சுற்றுப் பயண தொல்லையில்லை. ஊர் ஊராக அலையும் தொல்லை இல்லை.

மேல் நாட்டு மனைவி மார்கரெட்டுடன் செஸ் விளையாடலாம்.

மலைப் பிரதேசங்களுக்கு போய் தங்கலாம்.

விஸ்கி குடித்து...

தூறல் மழையில் நனைந்து, இரவு நேர குளிருக்கு அடக்கமாக அவள் மேல் படர்ந்து...

பனியில் நனைந்த புல் வெளியில் பூட்ஸை கையில் ஏந்தி சிலிர்க்க சிலிர்க்க நடந்து - கற்பனை வளர்ந்து கொண்டேயிருந்தது.

இருபது நாட்களாவது பிடிக்கும் என்று நினைத்த பயணம் - பதினைந்தே நாட்களுக்குள் முடிந்து விட்டதில் திருப்தி அதிகம் தான். ஐந்து நாட்களுக்கு முன்னதாகப் போய் நின்று அவளை அசத்தலாம்...

அதென்ன அவ்வளவு சீக்கிரம் திரும் பிட்டீ ங்க...?

மஞ்சுவுக்கு இனிய அதிர்ச்சியாக இருக்கும்.

மஞ்சு டியரை நினைச்சேன் பிஸினஸாவது ஒன்றாவது... ஓடி வந்துட்டேன்...

ஐயாம் மார்கரெட்...

இந்த நாட்டு மருமகளாயிட்டே... உன் பேர் மஞ்சுதான்... மஞ்சு ரவிசங்கர்.

இதுவும் ஸ்வீட்டாகத்தானிருக்கிறது.

அவள் திருப்தியுடன் கூடிய அதிர்ச்சியும் அழகாகவேயிருக்கும்.

அடுத்து கிடைக்கப் போகும் ‘அந்த’ சந்தோஷமான நிமிடங்கள்...

நினைத்தாலே இனித்தது.

அவரைப் பொறுத்தவரை வயது வித்தியாசமிருந்தாலும் அவள் மனைவி மட்டுமல்ல... இன்னமும் இனிய காதலியாகவே இருக்கிறாள்!

அவள் மனைவியான விதமே அலாதி.

கூசாமல் சொன்ன முதல் வார்த்தை. அப்படி காதல் பார்வையை பார்க்காதே இந்தியனே! உங்கள் கல்சருக்கு ஒத்து வராது டிவோர்ஸி. நான் நாளைக்கு உன் குடும்பத்தில் வந்தால் கவுரவம் பண்பாடு என்று புலம்புவார்கள். நீயும் ‘போய் வா’ என்பாய்... வெறும் உடம்பின் மேல் ஆசையிருந்தால். கோ-அஹெட். நான் தயார்.

மற்றவர்கள் பேச்சுக்கு ஆடும் பொம்மை நானில்லை. எனக்கு நான்தான் நீதிபதி. உன்னோடு குடும்பம் நடத்தத்தான் ஆசை. அரிப்பைத் தவிர்க்க மட்டுமென்றால் நீ வேண்டாம். எனக்கு நிறைய பேர் கிடைப்பார்கள்.

உடனே அவள் கேட்டாள் : எப்போது இந்தியா போகிறோம்? இந்த பிரான்ஸ் எனக்கு அலுத்துப் போய் விட்டது.

என் வயதை அலட்சியப்படுத்தினால் இங்கேயே கல்யாண பதிவு செய்ய நான் தயார்.

வயது லட்சியமில்லை... கண்ணியமான கணவன்தான் என் தேவை...

உனக்கு சின்ன வயது...

நானும் நாளைய கிழவி தானே...?

ஊரில் எத்தனையோ பேர் இவர் காது படவே கேலி செய்திருக்கிறார்கள்.

‘வயதான காலத்தில் கல்யாணம். அடுத்தவர் புரட்டிப் பார்க்க வாங்கும் புத்தகம்..."

ஏழு வருஷ வாழ்க்கையில் அவர்கள் பேச்சு பொய்யாகி விட்டது. சின்ஸியர் ஒய்ஃப்.

எப்போதாவது ஏங்குவதுண்டு. ‘ஒரு குழந்தையிருந்தால்...?’

என் ஆசை என்ன தெரியுமா?

என்ன?

உங்களுக்கு நிரந்தர குழந்தையாக நான் தானிருக்க வேண்டும் சிரிப்பாள்... இப்படியே இளைய காதலியாகவே இருந்தாக வேண்டும் நான். தாயாகவோ... மாமியார்... பாட்டி என்றோ... ஆக எனக்கு விருப்பமில்லை. காதலி! நான் கடைசிவரை காதலி!

ஆதர்ச தம்பதிகள்!

மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு ஆதர்ச தம்பதிகள் தான்!

கார் ரேணிகுண்டாவை நெருங்கும்போதுதான் அந்த எண்ணம் வந்தது.

திருப்பதிக்கு போய் வந்தால் என்ன?

அவளோடு போக முடியாத சங்கதி –

உங்களை சர்ச்சுக்கு வரச் சொல்லி நான் வற்புறுத்துவது கிடையாது. அதே மாதிரி நீங்களும் உங்க கோயிலுக்கு வரச் சொல்லாதீங்க... தெய்வ நம்பிக்கைகள் மானசீகமானவை. கோயிலுக்கோ... சர்ச்சுக்கோ போய் வருவது பக்தியை வெளிச்சம் போட்டுக்காட்டும் பகல் வேஷம் என்கிறது அவளுடைய பாலிஸி.

"கோயிலிலும் சர்ச்சிலும் தான் தெய்வத்தை பார்க்க முடியுமா? காலையில் மொட்டாக இருந்து மாலையில் இதழ் விரித்து சிரிக்கிறதே பூ... அதில் பார்க்க முடியாத தெய்வமா? பனி குளிரில் உணர முடியாத

Enjoying the preview?
Page 1 of 1