Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aacharyam Aanaal Unmai
Aacharyam Aanaal Unmai
Aacharyam Aanaal Unmai
Ebook197 pages1 hour

Aacharyam Aanaal Unmai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Aacharyam Aanaal Unmai

Read more from Rajeshkumar

Related to Aacharyam Aanaal Unmai

Related ebooks

Related categories

Reviews for Aacharyam Aanaal Unmai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aacharyam Aanaal Unmai - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    கெளதமன், அந்த ஃபைவ்ஸ்டார் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில், தன்னுடைய க்ளாஸிக் கண்டேஸாவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். கதவை லாக் செய்து கொண்டு - கொஞ்சம் தொலைவில் ‘Bar’ என்று நியானில் மின்னிய கண்ணாடி ப்ளாக்கை நோக்கி நடந்தான். காலையிலிருந்து பெய்த மழை காற்றுக்கு ஏராளமான குளிரை கொடுத்திருக்க - அது ஊசியாய் வீசியது. கௌதமன் தன்கோட்டுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கொண்டு மெதுவாய் நடந்து Bar’ன், வாசற்படிகளின் சலவைக்கல் பரப்பில் ஏறினான்.

    குட் ஈவினிங்... ஸார்...

    பேரர் கண்ணாடிக் கதவை திறந்துவிட்டபடி பவ்யமாய் தலைகுனிந்தான். அவனை அலட்சியப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் கௌதமன். ‘பார்’ வெறிச்சோடிப் போயிருந்தது. பிடரி வழிய முடி வைத்திருந்த ஒரு இளைஞன் மட்டும் தன் பெண் ஸ்நேகிதியின் கையிலிருந்த காலியான டம்ளரில் பீரை ஊற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

    ஒன் மோர் க்ளாஸ் ப்ளீஸ்... எனக்காக...

    போதும், போதும்.

    நோ, நோ...

    ஏற்கெனவே போதையில் இருந்த அவன், ‘நான் எந்தவிதமான கெட்ட காரியத்துக்கும் தயார்’ என்று கண்களில் போர்டு எழுதி மாட்டியிருந்தான்.

    கௌதமன் அறையின் கார்னரில் இருந்த பதினோறாம் எண் மேஜைக்கு போய் உட்கார்ந்தான். ப்ளேவர் ஏ.ஸி. நறுமணமாய் இருந்தது. அறையின் ஃபால்ஸ் ரூஃப்பில் ஒளிந்திருந்த ம்யூஸிக் சேனல் ட்ரம்ஸ் ஒத்தையடியாய் ஒலித்துக் கொண்டிருக்க, நடுநடுவே சாஸ் போன் ஊளையிட்டது.

    கௌதமன் சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டில் பொருந்திய விநாடி - புதிதாய் கல்யாணமான கிராமத்துப் பெண்ணைப் போல் - அந்த பேரர் பவ்யமாய் - பயமாய் வந்து நின்றான். ஒன் லார்ஜ் என்றான் கௌதமன்.

    ஸ்காட்ச்?

    ம்...

    அவன் நகர்ந்தான். லைட்டரைத் தட்டிவிட்டு அது உமிழ்ந்த சுடலில் - சிகரெட்டின் தலையை நனைத்து - சிவப்பாக்கிக் கொண்டு முதல் புகையை விட்டான். சிகரெட் பாதி கரைந்திருந்த போது - ஸ்காட்ச் வந்தது.

    கண்ணாடி டம்ளர்க்கு அடியில் பொன்னிறமாய் ஸ்காட்ச் அசைந்தது.

    ஸார், சோடா.

    ம்.

    பேரர் ஸ்காட்ச்சுக்கும் சோடாவுக்கும்... கல்யாணத்தை செய்து வைத்துவிட்டு ஒதுங்க - இடது கையால் டம்ளரை எடுத்துக் கொண்டு, ஒரு வாய் சப்ப அதன் கசப்பை கண்களை மூடி தொண்டைக்குள் இறக்கினான். ரத்த நாளங்களிலும், நரம்புகளிலும் நெருப்பு பரவியது.

    ஸ்காட்ச் பாதி டம்ளராக குறைந்திருந்த போது - பேரர் வந்து பக்கத்தில் நின்றான்.

    ஸார். எனி சைட்டிஷ்?

    ஏதாவது சிக்கன் அயிட்டம் கொண்டா?

    லாலி பப் சிக்கன் ஸார்.

    ம்...

    நகர முயன்ற வெயிட்டரை தன் குரலால் நிறுத்தினான்.

    பேரர்...

    ஸார்...

    கோட்ல, ஜா பட்டுடுச்சு. வாஷ் பண்ணனும். பாத்ரூம் எந்த சைட்ல இருக்கு?

    பின்னாடி ஸார்...

    என்னோட ப்ரீப்கேஸ் இங்கேயே இருக்கட்டும். நான் போய் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.

    போய்ட்டு வாங்க ஸார். நான் பார்த்துக்கிறேன். அதுல கேஷ் ஒண்ணும் இல்லையே?

    இல்ல...

    அப்ப... போய்ட்டு வாங்க சார்.

    கௌதமன் எழுந்து - பாரின் பின்பக்கம் இருந்த டாய்லெட்டை நோக்கிப்போனான். ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த டாய்லெட் ஏரியா நிசப்தமாய் இருக்க, கெளதமன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு - டாய்லெட்டைக் கடந்து - சிறிது தூரத்தில் - பக்க வாட்டில் தெரிந்த இருட்டான படிகளில் தாவி, ஏறினான். ஹோட்டல் அறைகளுக்கு செல்வதற்காக மாடிப் படி வழி அது. வேகமாய் தாவித் தாவி ஏறினான். இரண்டாவது மாடி வந்ததும் நின்றான்.

    இரண்டு பக்கமும் வரிசையாய் அறைகள். எண்களைப் பார்த்துக் கொண்டே வேகமாய் நடந்தவன் 222 எண்ணிட்ட அறை பார்வைக்கு தட்டுப்பட்டதும் நின்றான். மாடி வராந்தாவில் ‘ஹோ’ வென்ற நிசப்தம். கதவின் இடது பக்க சுவரில் இருந்த காலிங் பெல் பொத்தானை அழுத்தினான். உள்ளே அது ‘டிடிங் டிடிங்’ என்றது.

    சில விநாடிகளுக்குப்பின் - கதவு திறக்க - திறந்த கதவுக்குப் பின்னால் அந்த இளம் பெண் நின்றிருந்தாள். மலர்ந்தாள்.

    ஓ...! கெளதம், நீங்களா? வாங்க, வாங்க.

    கெளதம் புன்னகைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

    ஃப்ளைட் ஜர்னி எப்படியிருந்தது. மிருதுளா?

    ஃபைன்...

    நான் ஏர்போர்ட்டுக்கு வரலாம்னுதான் இருந்தேன். மத்தியான சாப்பாடு பலம்... சாப்பிட்டு சாய்ஞ்சேன். தூங்கிட்டேன். என்னோட ஒய்ஃப்பும் எழுப்ப மறந்துட்டா.

    ஸோ வாட். கதவைச் சாத்தி தாழிட்டாள்.

    உட்கார்ங்க.

    கெளதம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே கேட்டான்.

    பம்பாய் டயமண்ட் மார்க்கெட் எப்படி இருக்கு?

    அமோகம்.

    சூரஜ் டயமண்ட் கொண்டு வந்திருக்கியா?

    ம்.

    காட்டு பார்க்கலாம்.

    ஏன் இன்னிக்கு... இவ்வளவு அவசரப்படறீங்க.

    ஒரு பார்ட்டிக்கு விலை பேசிட்டேன். பிசினஸை முடிக்க வேண்டாமா?

    பார்ட்டி யாரு?

    கன்யாலால் முந்திடா.

    ரேட்?

    நீ டெலிபோன்ல சொன்ன அதே ரேட்.

    அம்பது லட்சம்?

    ஆமா.

    டயமண்ட்டை பார்க்காமலேயே கன்யாலால் எப்படி அந்த ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார்?

    அந்த சூரஜ் டயமண்டைப் பத்தி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்காராம். ‘பார்கெய்ன்’ பண்ணாமே - சொன்ன ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார். அந்த நிமிஷத்திலிருந்தே எனக்கு சூரஜ் டயமண்ட்டை பார்க்கணும்ங்கிற ஆர்வம் வந்துடுச்சு.

    மிருதுளா சிரித்தாள்.

    உண்மையிலேயே சூரஜ் ஒரு அற்புதமான வைரம்தான். நேபாள பிரின்ஸ் ஒருத்தர் வெச்சிருந்தாராம். பல கைமாறி இப்ப அது என்னோட கைக்கு வந்திருக்கு.

    காட்டு பார்க்கலாம்.

    மிருதுளா கட்டிலுக்குக் கீழே இருந்த தன் சூட்கேஸை இழுத்து டீபாயின் மேல் வைத்துக் கொண்டு திறந்தாள். நீல நிற வெல்வெட் பாக்ஸை எடுத்து பிரித்தாள்.

    கெளதம்! உங்க வலது உள்ளங்கையை நீட்டுங்க.

    நீட்டினான். பாக்ஸை கவிழ்த்தாள் மிருதுளா. கெளதமனின் உள்ளங்கையில் மொச்சைக் கொட்டை அளவுக்கு தகதகவென்று மின்னிக் கொண்டு ஒரு வைரம் உருண்டது. அறை முழுக்க - வெளிச்சச் சிதறல்கள்... கௌதமன் பிரமித்தான்.

    அற்புதம்.

    கரண்ட் பெயிலியராயிட்டா, வீட்ல கவலையே பட வேண்டாம். இந்த வைரத்தை எடுத்து டேபிள் மேல் வெச்சுட்டா போதும். ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்.

    ரியலி?

    ம்.

    மிருதுளா?

    என்ன... கெளதம்?

    இந்த சூரஜ் வைரத்தை நானே விலைக்கு வாங்கிக்கலாம்ன்னு இருக்கேன்.

    என்ன விளையாடறீங்களா? விலை அம்பது லட்சமாக்கும்.

    தந்துட்டா போகுது.

    ஆர்... யூ... ஜோக்கிங்?

    ஜோக்கில்லை நிஜம்தான். பிஸினஸை இப்பவே முடிச்சுக்கலாம் சொன்ன கெளதமன் கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து அந்த சின்னஞ்சிறு பிஸ்டலை எடுத்தான்.

    மிருதுளா விழிகளை விரித்து திகைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாய் மார்பைப் பார்த்து சுட்டான். சைலன்ஸர் பிஸ்டல் கமுக்கமாய் தோட்டாக்களை அனுப்ப, மிருதுளா ரத்தப் பெருக்கோடு சோபாவுக்கு பக்கத்தில் விழுந்து மடங்கினாள். கைக்கு கர்ச்சீப்பை இறுக்கமாய் சுற்றிக் கொண்ட - கௌதமன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தான்.

    வராந்தாவில் யாருமில்லை. கதவைச் சாத்திவிட்டு - வராந்தாவில் எட்டி நடை போட்டு மாடிப்படிகளுக்கு வந்து வேகமாய் இறங்கி - டாய்லெட் ஏரியாவைக் கடந்து ‘பார்’க்குள் நுழைந்தான். பாரில் இப்போது புதிதாய் நான்கைந்து பேர் உட்கார்ந்து - பீர் பாட்டில்களை கையில் ஏந்தியிருந்தார்கள்.

    கௌதமன் தன்னுடைய மேஜைக்கு வந்தான்.

    டம்ளரில் மிச்சம் வைத்திருந்த ஸ்காட்ச் அப்படியே இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1