Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhu Valarum Paruvam
Idhu Valarum Paruvam
Idhu Valarum Paruvam
Ebook64 pages37 minutes

Idhu Valarum Paruvam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Idhu Valarum Paruvam

Read more from Rajendrakumar

Related to Idhu Valarum Paruvam

Related ebooks

Related categories

Reviews for Idhu Valarum Paruvam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Idhu Valarum Paruvam - Rajendrakumar

10

1

அன்று விடியும்போதே என் மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகம் இருந்தது.

நான்? என் பெயர் உங்களுக்குத் தெரியாது. பெயர் தெரியுமளவு நான் இன்னமும் பிரபலமாகவில்லை.

கிரிக்கெட்டில் நாட்டமுண்டு. வேகப் பந்து வீச்சாளன் என்கிற பெயருமுண்டு. வருவேன்.

ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் டி.வி.யில் இப்போது சிவராமகிருஷ்ணனை பார்ப்பது போல என்னையும் ஆர்வமாக பாய்ந்து- நான் வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு விசிலடிப்பீர்கள்.

நம்பிக்கையுண்டு.

பெயர் உமாசங்கர்! வயது இப்போதுதான் பதினைந்து. (நம்புங்கள்)

ரெண்டும் கெட்டான்! அடலசண்ட் பீரியர்டு.

காதல் எனக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. ஆனால் பெண்களைப்பற்றி நிறையப் பேசுவேன்.

கோ - எஜுகேஷன் ஸ்கூலானதினால் முன் வரிசை பெண்களிடம் நிறைய குறும்பு செய்வேன்.

அவர்கள் உட்காருமிடத்தில் கிள்ளி கத்த வைப்பேன்,

பீதா என்கிற பணக்கார கழுதை என்னை கன்னத்தில்கூட அறைந்து இருக்கிறாள். பதிலுக்கு நான் அவளை பொது இடத்தில் நிறுத்தி துணிச்சலாக தொட்டேன்.

எங்கே என்று சொல்லட்டுமா?

வேண்டாம் வம்பு. அப்புறம் ஆபாச எழுத்தாளர் என்பீர்கள். (ராஜேந்திரகுமாரை சொன்னேன்).

என்னமோ தெரியவில்லை. என் சயின்ஸ் டீச்சர் மிஸ். சாவித்திரி அருணாசலத்துக்கு (அருணாசலம் அப்பா). என்னைப் பார்த்தாலே பிடிப்பதில்லை. திட்டிக்கொண்டே இருப்பார்.

தவளை பாகங்களை குறிப்பிடச் சொன்னால் உன் படத்தை எழுதியிருக்கிறாய்?

இல்லே மேடம் இதுபற்றி

அதுதான் நீன்னு சொல்லிட்டேன். அப்புறம் ஏன் விளக்கறே?

இல்லே மேடம் சத்தியமாக நான் பன்றிதான் எழுதினேன் மூஞ்சுவரை உங்க படம் வந்துட்டது. ஸாரி, என்று கத்த வைப்பேன்.

க்ளாஸில் பாரதி என்று ஒரு பெண். பார்க்க ஸ்ரீதேவி மாதிரியே இருக்கும். அந்த சின்ன முகத்துக்கு அந்த மூக்கு கொஞ்சம் பெரிசு.

ஆரம்ப நாளில் மூஞ்செல்லாம் மூக்கு என்று சொல்லி வந்தேன். இப்பொழுது நான் சொல்லாதது மட்டுமல்ல பிரண்டுகளையும் சொல்ல விடுவதில்லை.

காரணம்?

இருக்கும்?

நான் அவளை லவ் பண்ண ஆரம்பித்து விட்டேனே என்னவோ?

பார்... என்று வேண்டுமென்றே இடைவெளி விட்டுக் கூப்பிட்டால்.

அழகாகச் சிரிப்பாள். நீதான் என் டாவு என்பேன்.

உதை-உதை விழும் என்று சுட்டு விரலை காட்டி சிரிப்பாள்.

(என்றைக்காவது பேப்பரில் வெண்டைப்பிஞ்சு என்று சுட்டு விரலைக் கடித்து விட்டேன். வாலிபர் சொன்னது. என்று செய்தி வந்ததும் குழம்பாதீர்கள். அது நானே!).

என் ஹெட்மிஸ்டிரஸ். மிஸஸ் ஞானம் சுயம்பிரகாசம் ஒரு முசுடு.

அதை பற்றிய வர்ணணை,

நிரந்தர ஜலதோஷம். அடிக்கடி வகுப்பில் நுழைந்து ‘எட்ட பண்றீங்க?’ என்பார். வெளியே பார்த்தால் எக்க போறே? என்பார்.

கணக்கு பிள்ளைப் செட்டியாரை ‘செத்தியார்’ என்று கூப்பிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

கோபம் வந்தால் ‘கடவுளே நீதான் காப்பத்தணும்’ என்பதாக நினைத்து ‘கடை உள்ளே நீதான் காப்பியாத்தணும்’ என்று வாசகத்தையே மாற்றி விடுவதும் உண்டு.

ஸ்கூலுக்கு வரும் போதும்மா’ என்ற முக்கியமான நபரை பற்றிய விரிவான விபரம் அப்புறம் சொல்கிறேனே.

என் வீட்டைப்

Enjoying the preview?
Page 1 of 1