Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Operation Venus
Operation Venus
Operation Venus
Ebook275 pages2 hours

Operation Venus

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580100905042
Operation Venus

Read more from Pattukottai Prabakar

Related to Operation Venus

Related ebooks

Related categories

Reviews for Operation Venus

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Operation Venus - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஆபரேஷன் வீனஸ்

    Operation Venus

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    அரங்கத்தின் வெளியே தூரமாக பார்க்கிங் வசதி செய்திருந்தார்கள். குவாலிஸ் வண்டிக்கு இடம் தேடுவதில் சிரமமிருந்தது.

    ஜென் கொண்டு வந்திருக்கலாம் ஜீரோ என்றான் ஆகாஷ்.

    தப்புதான் என்றான் ஓட்டிக் கொண்டிந்த ஜீரோ.

    அடுத்த வரிக்கு முன் 'ஜீரோ'வுக்கான விளக்கம்; ஜீ ரோஹன் என்கிற உண்மைப் பெயரை 'ப்யூர் இந்தியா' பத்திரிக்கை அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளே 'ஜீரோ' வாக்கியவன் அவன் தலைமை எடிட்டர் ஆகாஷ்தான். வயது இருபத்துச் சொச்சமே என்பதால் எடிட்டன் என்பதே சரி!

    ஒரு மார்ட்டிஸ் மூக்கில் கிட்டத்தட்ட முத்தமிட்டு நிறுத்தி, இறங்கி விரல்களால் கேசம் கோதினான் ஜீரோ. ஆகால் தன் ஜெர்க்கின் அவிழ்த்து அவன் கையில் ஒப்படைத்து சட்டையின் கைமுனைகளில் பட்டன் போட்டுக் கொண்டான்; பெல்ட்டின் பக்கிள்சை நேராக்கிக் கொண்டான்.

    சீஃப்! போதும். மேடையில் உலா வரப் போகிற எந்த தேவதையும் உங்களை காதலிக்க மாட்டாள்.

    ஏண்டா, என் பர்சனாலிட்டிக்கு என்ன?

    பர்சாலிட்டிக்கு கிட்டே வருவாள். எந்த நேரமும் இடுப்பில் லோடு செய்யப்பட்ட பிஸ்டல் வைத்துக் கொண்டு அலைகிற ஆசாமி என்று தெரிந்ததும் ஜூட் விட்டு விடுவாள்.

    ஏன்?

    அணைக்கும் போது உறுத்தாதா?

    சரி, ஜீரோ... அழகிகளின் அறிவை சோதிக்க ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டும். எனி ஐடியா?

    சீஃப், நீங்கள் பைப் திறந்தால் கொட்டுகிற தண்ணீர் இல்லை; அருவி! நடமாடும் என்கார்ட்டா என்சைக்ளோ பீடியா! நீங்கள் போய் என்னை...

    அநியாயத்திற்குப் பூப் போடாதே! வந்து தொலை!

    அரங்கத்தின் வாசலில் காத்திருந்த பேட்ஜ் அணிந்த நிகழ்ச்சி நபர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். ஆகாஷுக்கு ஒரு ஸ்லீவ்லெஸ் பெண், பேட்ஜ் குத்தி விட்டான். வழி நடத்திச் சென்று அவனை அமரவைக்க... இரண்டாம் வரிசையில் ஆகாஷுக்கு நேர் பின்னால் அமர்ந்து கொண்டான் ஜீரோ.

    பூராவும் நரைத்து, நீள முக்கின் விளிம்பில் செயின் கோர்த்த அரைக் கண்ணாடி தொத்தியிருக்க ஆகாஷுக்கு வலம்புறம் அமர்ந்திருந்த தாத்தா. தன்னை ஓவியர் ஓ.கே. மேனன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள ஆகாஷ் தன்னைச் சொல்லி செல்லமாக கை குலுக்கினான்.

    உங்கள் பத்திரிகையை நான் தொடர்ந்து வாசிப்பவன்.

    அப்படியா? ஒரு புகழ்மிக்க ஓவியர் எங்கள் வாசகர் என்பதை அறிய மகிழ்ச்சி.

    பதினைந்து நாட்களுக்கு ஒரு இதழ் என்று இருக்கிறதே, இதை நீங்கள் வார இதழாகவே கொண்டு வரலாமே...?

    ஓவியர் ஒரு பொய்யர் என்பது புரிந்து போனது.

    இதழ் துவங்கப்பட்டதிலிருந்தே வார இதழாகத் தான் சார் வருகிறது.

    ஓ... நான் வேறு ஒரு பத்திரிகையைப் போட்டுக் குழப்பிக்கொண்டு விட்டேன். ப்யூர் இந்தியா, வார இதழ் தான். சரிதான். பீகார் அரசின் வெங்காய ஊழலை வெளியில் கொண்டு வந்தது நீங்கள் தானே?

    ஏதோ அவ்வப்போது படிப்பார் என்பது புரிந்தது.

    ஆமாம்.

    இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இன்னும் ராசி பலன் பகுதி வைத்திருக்கிறீர்களே, அதுதான் எனக்குப் பிடிக்க வில்லை.

    ஓவியர் ஒரு குழப்ப ஆசாமியேதான்.

    மன்னிக்க வேண்டும் சார். எங்கள் இதழில் எப்போதும் அந்தப் பகுதி கிடையாது.

    மறுபடியும் குழப்பிக் கொண்டு விட்டேன். எனக்கு வயது...என்ன இருக்கும் சொல்லுங்கள் பார்க்கலாம்?

    எழுபது ப்ளஸ் என்று மதிக்கத் தோன்றுகிறது. அறுபது ப்ளஸ் என்றால் மகிழ்வீர்கள் என்று தோன்றுகிறது.

    சுவையாகப் பேசுகிறீர்கள் மிஸ்டர் அரவிந்த்!

    ஆகாஷ்.

    ஸாரி ஆகாஷ்! எனக்கு வயது எண்பத்தி ஒன்று! இன்னும் விரல்களில் நடுக்கம் வராததால் இப்போதும் படங்கள் வரைகிறேன். கொஞ்சம் காதைக் கொடுங்கள்.

    காது கொடுத்த ஆகாஷிடம் ஒரு வாக்கியம் சொல்லி பின் குறிப்பாக பல்லிச் சத்தம் போல சிரித்தார் மேனன். சொன்ன விஷயம் கண்ணியமாக இல்லை.

    மற்ற சக்தி இருந்து என்ன இந்த ஞாபக சக்திதான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது.

    கிடைத்த இரண்டு விநாடி இடைவெளியில் ஆகாஷ் பின்புறம் திரும்பி, டேய் மடையா, ஏதாவது பேச்சுக் கொடுத்து என்னைக் காப்பாற்றுடா! என்று சன்னக் குரலில் சொல்ல...

    சீஃப் அதோ உங்களுக்கு இடது புறம் வந்து அமரப் போகிற மற்றொரு நடுவர், சென்ற வருடத்தின் மிஸ் டெல்லி தாராசிங் வருகிறாள். இனி நீங்கள் தாத்தா பக்கமே முகத்தைத் திருப்ப மாட்டீர்கள்.

    தாராசிங்குக்கு முன்னால் அவளுடைய பர்ஃப்யூம் வாசனை மிதந்து வந்தது. ஓவர்கோட் இல்லாமல் துப்பட்டா இல்லாமல் சின்ன டாப்சுடன் லாச்சா அணிந்து இடுப்பு வெளீரிட, அலைந்த கூந்தலை பின் தள்ளி வரிசையில் தத்தித் தத்தி வந்து ஆகாஷுக்கு வணக்கம் வைத்து, மேனனுக்கு வணக்கம் வைத்து பிறகுதான் அமர்ந்தாள்.

    மேனன் எக்கி போன வாரம் டி.வி.யில் உங்கள் பரத நாட்டியம் பிரமாதம் என்றார்.

    அவள் அழகாய் விழித்து, நானா? பரத நாட்டியமா? என்றாள்.

    அப்போது அது யார்? என்று ஓவியர் நடுமண்டையில் ஒரு விரலால் சுரண்டிக் கொண்டார்.

    மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் போலிருக்கிறதே? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! என்றான்.

    தேங்ஸ் சார். உங்களுக்கு இன்னொரு தேங்ஸ் நான் சொல்ல வேண்டும்

    எதற்கு?

    நான்கு வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி விழாவில் காம்பயரிங் செய்ததை உங்கள் பத்திரிகையில் கவர் செய்திருந்தீர்கள். என் புகைப்படம் முதன் முதலில் வந்தது ப்யூர் இந்தியாவில் தான்.

    இதுவே ஒரு செய்தி.

    ஓவியர், எக்ஸ்க்யூஸ் மீ தாரா, சேண்ட்ஸ்டேன் ஹோட்டலின் ஹெல்த் கிளப்பில் நீங்கள் மெம்பர் தானே? அங்கே ஒரு தரம் சந்தித்திருக்கிறேன் என்றார் இடையில் புகுந்து.

    அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது? என்றாள் தாராசிங்.

    ஆகாஷ் திரும்பி ஜீரோவிடம், உன் வயசுக்கு மிஸ் டெல்லியை பிராக்கெட் போடப் பார்ப்பது அதிகம் என்று தாத்தாவுக்குச் சொல்லேண்டா! என்றான்.

    கரோல்பாக்கில் இருக்கிறது. அங்கே சேர்கிறீர்களா? எல்லா வசதிகளும் இருக்கிறது நான் அறிமுகப்படுத்தட்டுமா? என்ற மேனன், "என் வீட்டிலேயே சகல வசதிகளும் இருக்கிறது என்று அவள் சொன்னதும் கால் மாற்றி கால் போட்டுக் கொண்டார்.

    போன வருடம் நீங்கள் மிஸ் டெல்லியாக தேர்வு செய்யப்பட்டதை என் டெலிபிரிண்டர் சொன்ன போது என் உதவியாளன் என்ன கமெண்ட் அடித்தான் தெரியுமா? என்றான் ஆகாஷ்.

    என்ன?

    தாராசிங் மல்யுத்த வீரனாச்சே அவன் எப்படி மிஸ் டெல்லியாக....

    முடிப்பதற்குள் குனிந்து நிமிர்ந்து சிரித்தாள். பிங்க் நிற உள்ளாடைப் பட்டி தெரிந்து மறைந்தது.

    அப்பா பெயர் அர்ஜுன் சிங் நான் தான் சுருக்கி வெறும் சிங்காக்கி என் பெயரோடு ஒட்ட வைத்துக் கொண்டேன்.

    ஆகாஷ் ஏதோ சொல்லி அவளை சிரிக்க வைத்து விட்டதில் ஓவியருக்கு காதுகளில் புகை வர மீண்டும் எக்கினாச்.

    யானை சுண்டெலியை வைத்து ஒரு பாப்புலர் ஜோக் இருக்கிறது தெரியுமா? என்றார் முன்கூட்டியே சிரித்தபடி.

    அவரை சொல்லவிடாமல் நல்ல வேளையாக அரங்கத்தில் விளக்குகள் அணைந்து, மேடையின் திரை இரண்டு பக்கமும் விலகி, அங்கே ஒவ்வொரு விளக்காக உயிர் பெற்று, ஒரு வாரம் மெனெக்கெட்டு ஏதோ ஒரு ஆர்ட் டைரக்டர் வடிவமைத்த அழகான செட்டின் ஓரத்தில் விழா தொகுப்பாளினி வயர் இல்லாத மைக்கில் மாலை வணக்கம் சொல்லி ஆரம்பித்தாள்.

    டெல்லியின் கடுமையான சூட்டைத் தணிக்கப் போகிற ஒரு குளிர்விக்கும் நிகழ்ச்சியான இந்த மிஸ் டெல்லி அழகிப் போட்டியை நடத்தும் லவ்லி காஸ் மெடிக்ஸ் நிறுவனம் உங்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறது.

    ஆனால் உடம்பின் சூடு ஏறிவிடுமே? என்று ஆகாஷின் காதுக்குள் சொன்னான் ஜீரோ.

    இந்தப் பெண்ணே ஒரு அழகிதான் என்று சொன்ன மேனனுக்கு கருத்தாதரவாக ஆகாஷும், தாராசிங்கும் ஒரு கீற்று புன்னகைகூட வழங்காததில் அவர் முகம் இருண்டது வெளிச்சக் குறைவால் வெளியே தெரியவில்லை.

    இறுதிக் கட்டப் போட்டிக்கு தேறி வந்திருந்த பனிரெண்டு அழகிகளும், அறிவிக்கப்பட்ட வரிசையில் மிதந்து வந்தார்கள்.

    நடை, உடை, முக அமைப்பு, உடல் அமைப்பு, நளினம், அங்கமொழி என்று தனித்தனியாக பிரித்து மதிப்பெண்கள் விழுந்து கொண்டிருந்தன. மூவரின் பென்சில்களும் அரை இருட்டில் அபிப்ராயங்களை பதிவு செய்ய... அடுத்து அறிவை சோதிக்கும் ரவுண்டில்...

    இந்தப் போட்டியில் நீ கலந்து கொண்டதில் உனக்கு மகிழ்ச்சியா? என்று ஓவியர் - கேனத்தனமாக தன் முதல் கேள்வியை வீச.....

    கேட்கப்பட்ட நம்பர் 2ம் அழகி, கண்டிப்பாக.... நிச்சயமாக... என்ற இரண்டு வார்த்தைகளுக்குப் பின் தவித்தாள்.

    நான் ஒரு பிரபல ஓவியர் என்பது தெரியும் தானே?

    தெரியும்.

    உன்னை நிர்வாணமாக வரைய நான் ஆசைப்பட்டால் நீ போஸ் தருவாயா?

    மாட்டேன்.

    ஏன்?

    எனக்கு இஷ்டம் இல்லை.

    நிர்வாணம் என்பது கேவலமா?

    எனக்கு இஷ்டம் இல்லை என்றுதானே சொன்னேன்?

    ஏன் இஷ்டமில்லை - என்று காரணம் சொல்ல வேண்டாமா?

    தாராசிங் எரிச்சலுற்று, சார், அவளை விட்டுவிடுங்கள் என்றாள், இன்னொரு அழகியை தாராசிங் கேட்டாள். புகழா, பணமா.... எது உன் நோக்கம்? என்று.

    இரண்டும் தான் வேண்டும்...

    நிறைய சம்பாதிக்க முக்கியமானது மூலதனமா, தன்னம்பிக்கையா?

    இரண்டும் தான் வேண்டும்.

    அந்த சொதப்பல் சுந்தரி அகன்றதும் வந்தாள் மஞ்சள் ராணி. ஒன்பதாம் எண் அழகி. ஆகாஷ் அவளுக்குதான் எல்லா அம்சங்களுக்கும் மார்க்குகளை அள்ளி வழங்கியிருந்தான். அறிவில் அசத்திவிட்டால் அவள் தான் மிஸ் டெல்லி என்று உள்கணக்கு செரன்னது.

    ஆகாஷ், உங்களுக்கு மிகவும் பிடித்த மொழி? என்றான்.

    மௌனம் என்றதும் 'அட!' என்றது மனது.

    இந்தப் போட்டியில் கலந்து கொள்வதில் ஒரு சதவிகிதமாவது உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதா?

    ஆமாம். நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். என்னை எல்லாப் பத்திரிகைகளிலும் போடுவார்கள். எல்லா சேனல்களிலும் பேட்டிக்கு அழைப்பார்கள் அதனால் எத்தனையோ லட்சம் இளைஞர்களின் உறக்கத்தைக் கெடுக்கப் போகிறேனே என்கிற குற்ற உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது!"

    ஆகாஷ் உள்பட, மேனன் தவிர அரங்கத்தில் அத்துனைப் பேரும் கைதட்டி அந்தப் பதிலை ரசித்தார்கள்.

    கற்பு என்றால்..... உங்களைப் பொறுத்தவரை என்ன?

    இந்தக் கேள்வியின் மூலமே அதற்கு ஒரே ஒரு அர்த்தம் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனதின் தூய்மையே கற்பு. அது பெண்ணுக்கு மட்டும் பேச வேண்டிய விஷயமில்லை.

    வாழ்க்கையின் லட்சியம் என்ன மிஸ் மோனிகா?

    பத்திரிகைத்துறை மற்றும் விளம்பரத்துறை எனக்குப் பிடிக்கும். இதில் ஒன்றில் அழுத்தமாகச் சாதிக்க வேண்டும். என் சாதனை என் சுயலாபத்திற்காக இல்லாமல் இந்த நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாயும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    இந்த மிஸ் டெல்லி அழகு போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றால் அது ஒரு சாதனைதானே?

    ஆமாம்.

    இந்தச் சாதனையால் இந்தியாவுக்கு என்ன பெருமை சேரும் என்று சொல்கிறீர்கள்?

    சேரும். கண் தானம் என்னும் விஷயத்தில் மக்களுக்கு இன்னும் முழு அளவுக்கு விழிப்புணர்வு வரவில்லை என்பது என் கருத்து. இதே கருத்தை 'அழகி' என்கிற அங்கீகாரத்தோடு எனக்குக் கிடைக்கிற மேடைகளில் எல்லாம் சொல்வேன். விதவிதமாக வலியுறுத்துவேன் பலரை கண்தானம் செய்யத் தூண்டுவேன். இது நாட்டுடிற்கு உதவும் ஒரு பணிதானே?

    மீண்டும் கைதட்டல்கள்!

    அவள் போனதும் ஆகாஷ் திரும்பி தாராசிங்கிடம் புருவங்களை உயர்த்தினான். மூவரின் மதிப்பெண் பட்டியல்களை வாங்கிச் சென்றார்கள். இந்த வருட அழகிக்கு போன வருட அழகி கிரீடம் சூட்டவேண்டுமென தாராசிங்கை மட்டும் மேடைக்கு அழைத்துச் சென்றார்கள்.

    பனிரெண்டு அழகிகளையும் நிற்க வைத்து, தொகுப்பாளினி மைக்கை உதட்டுக்கு உயர்த்தி சஸ்பென்ஸ் வைத்து மிஸ் டெல்லி யார் என்று அறிவித்தபோது... அந்த அழகி தவிர அரங்கத்தில் யாருமே உற்சாகப்பட வில்லை. காரணம் அது எல்லாரும் எதிர்பார்த்த மோனிகா இல்லை!

    ஜீரோ, ஆகாஷின் காதுக்கு வந்து, என்ன சீஃப் இப்படி கவிழ்த்து விட்டீர்கள்? என்றான்.

    நான் இல்லைடா என்றான் ஆகாஷ்.

    மறுபடி அருகில் வந்து அமர்ந்த தாராசிங், ஆகாஷ், இந்தக் கிழம்தான் சொதப்பிவிட்டது. நீங்கள் கேள்வி கேட்ட பெண் என்பதால் மிகக் குறைவான மதிப்பெண்கள் போட்டுவிட்டது என்றாள்.

    அவருக்கு என்மேல் பொறாமை.... காரணம், நீங்கள் தான்.

    வாட் டு டூ? என்றாள்.

    நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது மேனனை கண்டு கொள்ளாமல், ஆகாஷுக்கு மட்டும் தன் விஸிட்டிங்கார்டு தந்து சென்றாள் தாராசிங்.

    காரில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆகாஷ், ஜீரோ, எனக்கு அந்த மோனிகாவின் ஃபோன் நம்பர் வேண்டும் என்றான்.

    உடனடி காதலா, சீஃப்?

    உன் தலை! பேச வேண்டும்.

    நாளைக்குக் காலையில் உங்கள் மேஜையில் இருக்கும் ஆகாஷின் செல்ஃபோன் சிணுங்க, ஹலோ!. என்றான்.

    சீஃப். நமது ரிப்போர்ட்டர் நெல்சன் சுடப்பட்டிருக்கிறார் என்று விக்டோரியா சொல்ல, வாட்? என்று அதிர்ந்தான் ஆகாஷ்.

    2

    அரசாங்க ஆஸ்பத்திரிக்கும் ஆகாஷ் வந்தபோது, அங்கே காத்திருந்த ஒரு கொத்து நிருபர்கள் அவனிடம் மைக்கை நீட்டினார்கள். டேப் ரெக்கார்டரை நீட்டினார்கள்.

    ஆகாஷ் அவர்களை விலக்கியபடி ப்ளீஸ்... நான் முதலில் என் நிருபர் நெல்சனின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்துவிடுகிறேன் என்று நடந்தான்.

    இதை மட்டும் சொல்லுங்கள், இது போலீஸ் தெரிவிப்பது போல விபத்துதானா? இல்லை, திட்டமிட்ட சதியா?

    வந்து சொல்கிறேன்.

    ஆகாஷும், ஜீரோவும் ஆஸ்பத்திரியின் கட்டிடத்திற்குள் நுழைய, ஆங்காங்கே தெரிந்த போலீஸ் தலைகளில் அறிமுகமுள்ள தலைகளுக்கு விஷ் செய்தான்.

    ஆஸ்பத்திரியின் கடைசி பாகத்தில் இருந்தபிணவறை வாசலில் காத்திருந்த நெல்சனின் தம்பி ஓடிவந்து இவன்

    Enjoying the preview?
    Page 1 of 1