Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Avalin Kathai!
Ithu Avalin Kathai!
Ithu Avalin Kathai!
Ebook103 pages37 minutes

Ithu Avalin Kathai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொள்ளாச்சியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் போல, தன் நண்பர்களுடன் சேர்ந்து, தான் குறி வைக்கும் பெண்களை சாமர்த்தியமாக நாடகமாடி தன் இடத்திற்கு வரவழைத்து பலாத்காரம் செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறான் ஒரு பணக்கார ரவுடி.

‘போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன்’ என்கிற அவனுடைய மிரட்டலுக்குப் பயந்தும், குடும்ப மானம் போய்விடும் என்பதற்காகவும் யாரும் புகார் தர முன்வரவில்லை.

ஒரு பத்திரிகைப் பெண்ணை நேசிக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி ஒருவர், குற்றவாளியைத் தண்டித்தே தீர வேண்டும் என்று போராடுகிறார். அவனோ, ‘முடிந்தால் என்னைப் பிடி’ என்று சவால் விட்டு குற்றங்களைத் தொடர்கிறான்.

அதிகாரி அவனை நீதிக்கு முன்பாக நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதற்காக என்ன செய்தார்? என்கிற கேள்விகளுக்குச் சுவாரசியமான சம்பவங்களுடன் விடை சொல்லும் கதையே ‘இது அவளின் கதை’

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580100908105
Ithu Avalin Kathai!

Read more from Pattukottai Prabakar

Related to Ithu Avalin Kathai!

Related ebooks

Reviews for Ithu Avalin Kathai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Avalin Kathai! - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இது அவளின் கதை!

    Ithu Avalin Kathai!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அன்புள்ள உங்களுக்கு... வணக்கம்!

    பொள்ளாச்சியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் போல, தன் நண்பர்களுடன் சேர்ந்து, தான் குறி வைக்கும் பெண்களை சாமர்த்தியமாக நாடகமாடி தன் இடத்திற்கு வரவழைத்து பலாத்காரம் செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறான் ஒரு பணக்கார ரவுடி.

    ‘போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன்’ என்கிற அவனுடைய மிரட்டலுக்குப் பயந்தும், குடும்ப மானம் போய்விடும் என்பதற்காகவும் யாரும் புகார் தர முன்வரவில்லை.

    ஒரு பத்திரிகைப் பெண்ணை நேசிக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி ஒருவர், குற்றவாளியைத் தண்டித்தே தீர வேண்டும் என்று போராடுகிறார். அவனோ, ‘முடிந்தால் என்னைப் பிடி’ என்று சவால் விட்டு குற்றங்களைத் தொடர்கிறான்.

    அதிகாரி அவனை நீதிக்கு முன்பாக நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதற்காக என்ன செய்தார்? என்கிற கேள்விகளுக்குச் சுவாரசியமான சம்பவங்களுடன் விடை சொல்லும் கதையே ‘இது அவளின் கதை’

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    வணக்கம் இன்ஸ்பெக்டர்!...

    வணக்கம்.

    உட்காரலாமா?

    உட்கார்றதுக்கு முன்னாடி கேக்கணும்.

    என்னை நேதாஜி சார் அனுப்பி வச்சார்.

    எந்த நேதாஜி.

    என்ன தம்பி, விளையாடறீங்களா?

    ஸே இன்ஸ்பெக்டர்! அண்ணா, தம்பின்னு உறவு கொண்டாடற வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.

    பாவம்! உங்களுக்கு நேதாஜி சாரைப் பத்தி இன்னும் தெரியலை!

    தெரியுமே... சுதந்திரத்துக்காகப் போராடின, மர்மமான முறையில் செத்துப்போன சுத்தமான வீரன் நேதாஜி.

    கிண்டல் வேணாம். விஷயத்துக்கு வர்றேன்.

    வாங்க சீக்கிரம். எனக்கு வேலை இருக்கு.

    பார்ல தகராறு செஞ்சதா ரெண்டு பேரைப் பிடிச்சி லாக்கப்ல வெச்சிருக்கீங்களே, அவங்க நேதாஜி சாரோட பிரெண்ட்ஸ்.

    அப்படியா? ரைட்டு. அதுக்கென்ன?

    அவங்களை நீங்க வெளியில் விட்டுடணும்.

    விட்டுடலாமே. நான் - பெயிலபிள் அஃபென்ஸ் எதுவும் இல்லை. நீங்க ஒரு வக்கீலைக் கூட்டிட்டு வந்து தாராளமா பெயில்ல எடுத்துட்டுப் போலாம்.

    அது எங்களுக்குத் தெரியும். அவங்க பேர்ல கேஸ் என்ட்ரி போடக்கூடாது. கோர்ட்டுல கேஸ் தாக்கல் பண்ணக்கூடாது. பேசாம என்னோட அனுப்பி வெச்சிடணும்.

    உங்க பேர் என்ன சொன்னீங்க? எங்க சொன்னீங்க? இத பாருங்க மிஸ்டர் கேர் ஆஃப் நேதாஜி. அவங்க ரெண்டுபேர் பேர்லயும் கேஸ் பதிவு பண்ணியாச்சு. கோர்ட்ல தாக்கல் பண்ணத்தான் போறேன். வக்கீல் வந்து பெயில்ல எடுக்காம, அவங்களை வெளில விடமாட்டேன். அப்புறம்?

    ஆக நேதாஜியைப் பகைச்சிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க?

    யோவ்! எந்திரிய்யா! உங்கூட இவ்வளவு நேரம் பேசிட்டிருந்ததே தப்பு!

    சார்! ஒரு மினிஸ்டர் பையனை மதிக்க நீங்க தயாரா இல்லையா? சிட்டியில் நேதாஜி சாருக்கு பதினாலு வைன்ஷாப் இருக்கு தெரியுமா? அவர்கிட்ட இருக்கிற ஆளுங்களை வெச்சி ஒரு பேரணியே நடத்தலாம். எல்லாம் கோபக்கார ஆளுங்க. உத்தரவு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நேதாஜி சார் ஒருத்தரை லேசா முறைச்சிப் பார்த்தாலே போதும். அந்தாளை பார்ட் பார்ட்டா வெட்டி தந்தூரி அடுப்புல வெச்சி பஸ்பம் பண்ணிடுவாங்க. இதெல்லாம் யோசனை பண்ணிப் பார்த்துட்டு நீங்க முடிவெடுத்தாப் போதும்.

    இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்கே இருந்தா, என்னை கொலை செய்வேன்னு மிரட்டின குற்றத்துக்காக உன்னை அரெஸ்ட் பண்ணி லாக்கப்ல தள்ள வேண்டியதாயிருக்கும். எப்படி வசதி?

    சில பேர் படிச்சித் தெரிஞ்சுக்குவாங்க. சில பேர் பட்டுத்தான் தெரிஞ்சுக்குவாங்க. நான் வர்றேன்.

    சேகர்!

    சொல்லுங்க சார்.

    இப்ப வந்தானே, அவன் எதில வந்தான்?

    அம்பாஸிடர் சார். நேதாஜியோடது சார்.

    என்ன வயசு அந்த நேதாஜியோடது சார்.

    இருபத்தேழு, இருபத்தெட்டு இருக்கும் சார்.

    கல்யாணமாயிடுச்சா?

    இன்னும் இல்லை சார்.

    அவனைப் பத்தி கம்ப்ளீட் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிக் கொடுங்க.

    சரி சார்... சார்... நான் ஒண்ணு சொல்லலாமா?

    சொல்லுங்க சேகர்

    அந்த நேதாஜி பேண்ட், சட்டை போட்ட ஒரு நாகரீகமான பணக்கார ரவுடி சார். ஆசிட் அடிக்கிறவன், பாம் வீசறவன், வெட்டிட்டு வர்றவன்னு பலதரப்பட்ட ஆளுங்கள வெச்சிருக்கான். அரசியல்ல யாரையாவது பழிவாங்கணும்னாலோ வஜ்ரவேல் தன் பையன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவார். மிச்சத்தை நேதாஜி பார்த்துப்பான். அந்த குரூப் சம்பந்தப்பட்ட யார் மேலயும் இதுவரைக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. எடுக்கவிடமாட்டாங்க."

    அப்படியா? அப்ப ஒண்ணு செய்யலாமே சேகர்.

    என்ன சார்?

    "ஒரு பூட்டும் சாவியும் எடுத்துட்டு வாங்க... ஸ்டேஷனை இழுத்து மூடிட்டு ‘வாடகைக்கு விடப்படும்’னு போர்டு மாட்டிட்டு வீட்டுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1