Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello Bharath Sugama?
Hello Bharath Sugama?
Hello Bharath Sugama?
Ebook82 pages45 minutes

Hello Bharath Sugama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சார்லஸ் என்ற பத்திரிக்கையாளர், பரத்திற்கு இரவு 1 மணிக்கு போன் செய்து அவசரமாக ஒரு முக்கிய விஷயத்தை உங்களிடம் பேச வேண்டும் என்று அழைக்கிறான். ஆனால் பரத் வருவதற்குள், சார்லஸ் மர்ம நபர்களால் வேறு ஒரு இடத்தில் கொல்லப்படுகிறான். சார்லஸ் ஏன் கொல்லப்பட்டான்? பரத்திற்கும், சார்லஸிற்கும் என்ன சம்பந்தம்? சார்லஸ் பரத்திடம் கூற நினைத்த முக்கியமான விஷயம் என்ன? பரத்தும், சுசிலாவும் அதைக் கண்டுபிடித்தார்களா? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580100908078
Hello Bharath Sugama?

Read more from Pattukottai Prabakar

Related to Hello Bharath Sugama?

Related ebooks

Reviews for Hello Bharath Sugama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello Bharath Sugama? - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹலோ பரத் சுகமா?

    Hello Bharath Sugama?

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அவன் மிகவும் வியர்த்திருந்தான்.

    தன்னை யாரும் தொடரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அருகிலிருந்த தொலைபேசி பூத்துக்குள் நுழைந்தான்.

    தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமிராவை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, பதட்டத்துடன் குறிப்பிட்ட நம்பருக்கு டயல் செய்துக் காத்திருந்தான்.

    மறுமுனையில் ஹலோவ் என்றான் பரத்.

    (இதுவரை எழுதியவர் பா. சிவகுமார், சிதம்பரம்.)

    பரத்தின் கொட்டாவிக் குரலைக் கேட்டதும் முகம் மலர்ந்தான் அவன்.

    முகம் மலர்ந்த போது நேரம் கிருஷ்ண பட்சத்து... வேண்டாம், புரியாது. இரண்டாம் காட்சி முடிந்து மக்கள் புறப்படுகிற நேரம்.

    வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டிருப்பதால் அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் பலமானது வரை மழை பெய்யலாம் என்று முன்னிரவில் ரேடியோவில் சொல்லப்பட்ட வானிலை அறிக்கையின் கற்பை நிரூபிக்கவேண்டிய அவசியத்தில், ஆகாயம் எல்லா நட்சத்திரங்களையும் காலி செய்யச் சொல்லி விட்டு கறுப்பு மேகங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது.

    கடலோரப் பகுதிகளில் ஒன்றான சென்னையில், எந்த திசையில் நின்று பார்த்தாலும் நேர் போஸில் ஒரு சிங்கமும், இட, வல புரொஃபைல்களில் இரண்டு சிங்கங்களும் கொண்ட அசோகரின் ஸ்தூபியும், உதயம் தியேட்டர் காம்ப்ளெக்சும் கொண்ட அசோக் நகரில்...

    பங்களா கமா பங்களா கமாவாக நடப்பட்டிருக்கும் இளங்கோ தெருவின் முனையில், ஒரு பணக்கார பிள்ளையார் கோவில் காம்பௌண்ட் சுவரில் கூட மார்பிள்களும், கிரானைட்டும் ஒட்டிக் கொண்டு தற்சமயம் கோபுரக் கொண்டையில் ஒரே நியான் வெளிச்சத்துடனிருக்க,

    அதனருகில் இருந்த சிகப்பு நிற டெலிபோன் பூத்திலிருந்து தான்... வெய்ட்! இந்த சிகப்பு நிறம் பற்றி அர்ஜெண்டாய் ஒரு கேள்வி.

    போலீஸ் ஸ்டேஷனுக்கு சிகப்பு நிறம் அடிப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ரவுடிகளே, தப்பு செய்பவர்களே, வேண்டாம். டேஞ்சர்! கன்னிப் பெண்களை, வர வேண்டாம். டேஞ்சர்! பல்லவன் பஸ்களில் சிவப்பு நிறம் அடிப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. டேஞ்சர்! தபால் பெட்டிக்கும், டெலிபோன் பூத்துக்கும் எதற்காக சிகப்பு? அதில் என்ன டேஞ்சர்? (பாம் வைத்தால் ஒழிய...)

    ஓக்கே... லெட் அஸ் ஸ்கிப் இட்!

    அதனருகில் இருந்த சிகப்பு நிற டெலிபோன் பூத்திலிருந்துதான் ரேடியம் பூசிய ராத்திரி ஒன்றரை மணிக்கு, மழை சாத்தியமுள்ள கிரைம் கதை முதல் அத்தியாயங்களுக்கே உரிய சூழ்நிலையில், தோளில் தொங்கும் கேமராவுடன் அவன் போனில் பேசினான்.

    பரத். நான் சார்லஸ் பேசறேன். தொந்தரவு பண்ணிட்டேனா?

    சார்லஸ் கறுப்பு ஜெர்கின் போட்டிருந்தான்.

    நடுராத்திரி தூக்கத்திலேர்ந்து எழுப்பிட்டு கேக்கற கேள்வியா இது? ஹா...வ்! என்ன சார்லஸ்? வாட்ச் கட்டிருக்கியா? கொஞ்சம் மணி பார்த்து சொல்லேன்.

    "சார்லஸ் பீக் வைத்த கறுப்புத் தொப்பி அணிந்திருந்தான்.

    நூறு ரூபாய்க்கு சில்லறை வேணும்னு ஜோக் பண்ணலையே... இதே மாதிரி பீச் ரிசார்ட்லேர்ந்து வெறும் ஜட்டியோட நடுராத்திரி போன் செஞ்சியே... ஞாபகமிருக்கா? வாட்ஸ் ஹர் நேம்?

    சார்லஸ் பூமர் ஷூ மாட்டியிருந்தான்.

    பரத். ப்ளீஸ்... அரட்டைக்கு நேரமில்லை. அந்த மாதிரி அல்பமான ப்ராப்ளம் இல்லை.

    சார்லர் கால்குலேட்டருடன் கூடிய டிஜிட்டல் வாட்ச் கட்டியிருந்தான்.

    ஓக்கே. சொல்லுப்பா. என்ன செய்யணும் நான்?

    சார்லஸ் மெல்லிய தங்கச் சங்கிலியில் சிலுவை டாலர் கோர்த்திருந்தான்.

    போனை வெச்சிட்டு உடனே புறப்பட்டு அஷோக் நகர் வரணும்.

    சார்லஸ் கரேலென்ற மீசை வைத்திருந்தான்.

    விளையாடறியா? நியூசன்ஸ்ல புக் பண்ணிடுவாங்க. அலோ மி டு வேர் பேண்ட் அண்ட் ஷர்ட்.

    சாார்லஸ் நெற்றியோரம் தழும்பு சுமந்திருந்தான்.

    "அய்யோ! என் அவசரம் புரியாமப்

    Enjoying the preview?
    Page 1 of 1